அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நாமே ஒன்று சேர்ந்து சரி செய்து, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க முன்வந்த கிராம மக்கள் !!
மதுரை, மே 11 (டி.என்.எஸ்) மதுரை மாவட்டம் மேலூரை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல், அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்ப்போம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும், இவர்கள் தங்களது சொந்த செலவிலேயே அப்பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கு புதிய கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்துள்ளனர்.
மேலூரை சுற்றியுள்ள பல கிராமங்களில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. வறட்சி காரணமாக விவசாயத்தை கைவிட்ட அப்பகுதி மக்கள் அரபு நாடுகளில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தங்களது பிள்ளைகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இளைஞர்கள், தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதில்லை என்ற முடிவு எடுத்திருப்பதோடு, அரசு பள்ளிக்கு மக்கள் ஒன்று சேர்ந்து ரூ.7 லட்சம் வரை நிதி திரட்டி அதன் மூலம் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்கள.
அரசு நிர்ணயித்த ஆசிரியர்கள் போக கூடுதலாக, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆசிரியர் ஒருவரையும் நியமித்துள்ளார்கள். இந்த ஆசிரியருக்கு ஊதியத்தை மக்களே கொடுக்கிறார்கள்.
அரசு நிர்ணயித்த ஆசிரியர்கள் போக கூடுதலாக, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆசிரியர் ஒருவரையும் நியமித்துள்ளார்கள். இந்த ஆசிரியருக்கு ஊதியத்தை மக்களே கொடுக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளு பல ஆயிரங்களை கொடுத்து ஏமாறுவதை விட அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நாமே ஒன்று சேர்ந்து சரி செய்து, நமது பிள்ளைகளை அப்பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்ற இவர்களது முயற்சி பல இளைஞர்களை எழுச்சியடை செய்துள்ளது.
மட்டங்கிபட்டி என்ற கிராமத்து இளைஞர்களின் தொடக்கமான இத்தகைய முயற்சி தற்போது மேலூரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.