பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !
பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது.
ஏற்கெனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னை இல்லை. கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை பான்கார்டு இல்லாதவர்களுக்கு, Form 60-ஐ வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் Form-60 படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Form 60 படிவத்தில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் முகவரி தொடர்புடைய சான்றுகள் மற்றும் புகைப்படத்தையும் இணைத்து வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைன் Form 60 படிவத்தை பெற, வங்கியின் பெயருடன் Form 60 என டைப் செய்தால் படிவம் PDF ஆக வரும்