விண்வெளி பயணத்தால் மரபணு மாற்றம் நிகழும்! - நாசா !!
விண்வெளி ஆராய்ச்சிக்காக மனிதர்கள் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு பூமிக்கு திரும்புவது வழக்கம். இதனால், மனிதர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக வைக்கப்படுகின்றது. ஒரு தரப்பு இருக்கின்றது என்றும், மற்றொரு தரப்பு இல்லை என்றும் இரண்டு வித பதில்கள் உலாவி வருகின்றன.
இந்நிலையில் விண்வெளிப் பயணங்களால் மனிதர்களின் மரபணு அளவில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஒருவருடத்துக்கு மேல் செலவிட்ட அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் அவருடன் பிறந்த இரட்டையரான மார்க் கெல்லி ஆகியோரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் நாசா இவ்வாறு தெரிவித்துள்ளது. ஸ்காட் கெல்லி, கடந்த 2015-16ம் ஆண்டுகளில் சுமர் 340 நாட்களை விண்வெளியில் ஆராய்ச்சியின் காரணமாக பயணித்துள்ளார். இது பூமியில் அவரது வாழ்நாளில் 520 நாட்களுக்கு சமமானதாகும்.
இதுகுறித்து பேசிய நியூயார்க்கின் வீல் கார்னர் பல்கலைக்கழக மரபணு ஆய்வுத்துறை தலைவர் கிறிஸ்டோபர் மேசன், விண்வெளிப் பயணத்தால் ஸ்காட் மற்றும் அவரது சகோதரர் இடையிலான குரோசோம் அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டறியப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல டிஎன்ஏ செயல்பாட்டிலும் மாறுபட்டு காணப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மேரிலேண்ட்டில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ பீன்பெர்க் கூறியுள்ளார்.