100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களை கீழே பார்ப்போம்.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2016- ம் ஆண்டில் 17.7 மில்லியன் ஆக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 17.8 மில்லியனாகவும், 2018-ம் ஆண்டில் 18 மில்லியனாகவும் அதிகரிக்கும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் 3.4% அதிகரிக்கக் கூடும்.
வளர்ந்து வரும் நாடுகளில் வேலையின்மை விகிதம் 3.6 மில்லியன் ஆக உள்ளது. அதே சமயம் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருக்கும் நாடுகளில் இரண்டு பேரில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியா போன்ற நாடுகளில் ஐந்தில் இரண்டு பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளில் வேலையின்மை விகிதம் பன்மடங்கு அதிகமாக உள்ளது.