7 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: திட்டத்தைத் தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்
இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள இந்தியா, அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான இந்தத் திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தேசிய நோய் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்து அவர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இணையமைச்சர்கள் அனுப்ரியா படேல், ஃபக்கன் சிங் குலஸ்தே ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா பேசியதாவது: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் போலியோ நோய் ஒழிக்கப்படாமல், அந்த வைரஸ் இன்னமும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில், முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்ட இந்தியாவுக்குள் அந்த நோய் மீண்டும் நுழைவதைத் தடுக்கும் வகையில், வரும் முன் காக்கும் தடுப்பு மருந்துத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் போலியோ நோய் கண்காணிப்பு தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் நோய்த் தடுப்பு மருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விரைவில், தட்டம்மை - மணல்வாரியம்மை நோய்களுக்கான தடுப்பு மருந்தும், வயிற்றுப்போக்கு, விஷக் காய்ச்சல் (நிமோனியா), மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பு மருந்தும் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்றார் நட்டா