வியாழன், 1 ஜூன், 2017
மகப்பேறு விடுப்பில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் கவனத்திற்கு!!
மகப்பேறுவிடுப்பில் ஆணை பெற்றவர்கள் பணியில் சேராமல் விடுப்புடனே பணியில் இருந்து விடுவிக்கச் செய்து மகப்பேறு விடுப்பில் இருப்பதாக புதிய பணியிடத்தில் பணியில் சேராமல் தகவல் மட்டும் தெரிவித்து விட்டு மகப்பேறு முடிந்தவுடன் புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
பணியில் சேர்ந்து கையெழுத்து இட்டால் விடுப்பு இரத்து செய்யப்பட்டுவிடும்...புதிய பணியிடத்தில் பெயருக்கு நேராக மகப்பேறு விடுப்பு என குறிக்க வேண்டும்..வாக்காளர் பட்டியல் ஜூலையில் திருத்தம்...
சென்னை: விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், தவறுகளை நீக்கவும், ஜூலை, 1 முதல், 31 வரை, சிறப்பு பணி மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, 18 - 19 வயது வாக்காளர்களை சேர்க்க, இவ்வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புப் பணியின் போது, வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில், படிவங்களை சமர்ப்பிக்கலாம். தபால் மூலமாகவும், படிவங்களை அனுப்பலாம். www.elections.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் இ - சேவை மையங்கள் மூலம், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 9 மற்றும், 23ம் தேதி, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும்.
அந்த நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும்.இந்த சிறப்பு பணியின் போது, இறந்தவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இறப்பு பதிவு செய்யப்பட்ட விபரம், உள்ளாட்சி அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டு, அதன் அடிப்படையில், இப்பணி மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
இன்ஜினியரிங் படிக்க தமிழக மாணவர்களுக்கு...ஆர்வமில்லை....
இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. அதில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.50 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறை வாக பதிவு செய்துள்ளனர்; அதே நேரத்தில், கலை, அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், மாணவர்களிடம் இன்ஜி., படிக்கும் ஆர்வம் குறைந்திருப்பது தெரிய வந்துள் ளது. இன்ஜி., முடிக்கும் மாணவர்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் வேலை வாய்ப்பு குறைந்துள் ளது தான் இதற்கு காரணம். ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பில் இறங்கி உள்ளன.
அப்படியே வேலை கிடைத்தாலும், பி.பி.ஓ., என்ற வெளிநாட்டு நிறுவனங்களுக் கான, 'அவுட் சோர் சிங்' பணியாகத் தான் இருக்கிறது. அவற்றிலும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, பல ஆண்டுகளுக்கு பணியில் நீடிக்கும் வாய்ப்பும், சம்பள உயர்வும் கிடைக்கிறது.
மற்றவர்களுக்கு, பணியில் சேர்ந்து, சில ஆண்டுகள் ஆகிவிட்டால், சம்பளம் குறைக்கப் படுவதுடன்,'லே ஆப்' முறையில் வெளி
யேற் றப்படுகின்றனர். அதனால், இன்ஜி., படிப் பில்ஆர்வம் குறைந்து,வணிகம், பொருளியல் மற்றும் ஆசிரியர் பணிக்கான கலை, அறிவி யல் படிப்புகளில், மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்திலும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்திலும், வணிகவியல் பிரிவில்,அதிக மாணவர்கள் படித்ததும், இன்ஜி., மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என,கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஒதுக்கீட்டில் ஆர்வம்
கடந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 97 ஆயிரம் இன்ஜி., இடங்கள், காலியாக இருந்தன. இந்த ஆண்டு, காலியிடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டும் என தெரிகிறது.
கவுன்சிலிங் கில், தாங்கள் விரும்பும் கல்லுாரி யில், விரும் பும் பாடப்பிரிவு கிடைக்காது என்பதால், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட் டில், நேரடியாக, 'அட்மிஷன்' பெற்றுள்ளனர். பல இன்ஜி., கல்லுாரிகள், நன்கொடையை குறைத்துக் கொண்டதும், இதற்கு முக்கிய காரணம்.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழைகளை திருத்த ஏற்பாடு
'ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள பிழைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை; அவற்றை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 'ஸ்மார்ட்' கார்டில் உள்ள, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள், மத்திய அரசின், 'ஆதார்' அட்டையில் இருந்து எடுக்கப்பட்டவை. ஸ்மார்ட் கார்டில் உள்ள விபரங்களை, தமிழில் வழங்குமாறு, அரசு தெரிவித்தது. ஆனால், ஆதார் விபரங்கள், ஆங்கிலத்தில் இருந்தன. அதேசமயம், மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், மக்களின் முகவரி தமிழில் உள்ளன. அவை, ஸ்மார்ட் கார்டில் பதியப்பட்டன. பழைய முகவரியில் இருந்த பலர், தற்போது புதிய முகவரியில் வசிப்பதாக தெரிகிறது. எனவே, முகவரி தவறாக இருந்தால், யாரும் கவலை அடைய தேவையில்லை. கார்டுதாரர், எந்த கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், தங்கள் கார்டை பதிவு செய்தாரோ, அதே கடையில் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம். அந்த கடையில் தான், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு தரும்போது, முகவரி, பிழை இருந்தால், பொது வினியோகத் திட்டத்தின் இணையதளத்தில் சரி செய்து கொள்ளலாம். புது கார்டை, தேவைக்கு ஏற்ப, அரசு இ -சேவை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இ - சேவை மையங்களில் 75 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.....
இ - சேவை மையங்களில், மாணவர்கள் அதிக அளவில் முற்றுகையிடுவதால், ஒரே நாளில், 75 ஆயிரம் மனுக்கள் குவிந்தன. தமிழகத்தில் உள்ள, 9,000க்கும் மேற்பட்ட, இ - சேவை மையங்களில், அரசு சேவைகளை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள், பல்வேறு சான்றிதழ்கள் கோரி, இம்மையங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், சில வாரங்களாக, இ - சேவை மையங்களில் உள்ள கணினிகள் செயலிழந்தன. தற்போது, அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதால், அதிக அளவில் மாணவர்கள் வர துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: இ - சேவை மையங்களில், தினசரி, 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பின், 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வரத் துவங்கின. நேற்று முன்தினம், மிக அதிக அளவாக,
75 ஆயிரம் மனுக்கள் குவிந்தன. அதில், அதிகபட்சமாக, வருமான சான்று கோரி, 25 ஆயிரத்து, 743 பேர்; இருப்பிடச் சான்று, 20 ஆயிரத்து, 300 பேர்; ஜாதிச் சான்று, 15 ஆயிரத்து, 959 பேர்; முதல் தலைமுறை பட்டதாரி சான்றுக்காக, 8,648 பேர் மனு செய்துஉள்ளனர். தேர்வு முடிவு வெளியான பின், இ - சேவை மையங்களில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்' வெளியீடு?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், நேற்று வெளியாவதாக இருந்தது; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நாளை தேர்வு முடிவு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அதிலும் தாமதம் ஏற்பட்டால், ஜூன், 4ல் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.புதிய கல்வி ஆண்டு இன்று துவக்கம் : ஆசிரியர்களுக்கு விடுமுறை முடிந்தது.....
கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணிகள், இன்று துவங்குகின்றன. வரும், 7ம் தேதிக்குள், முன்னேற்பாட்டு பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இன்று, அனைத்து பள்ளிகளும் திறப்பதாக முடிவாகியிருந்தது. ஆனால், கோடை வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பு, ஜூன், 7க்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து, இன்று புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் துவங்குகின்றன. விடுமுறையில் சென்ற ஆசிரியர்கள், ஜூன், 7 வரை காத்திருக்காமல், இன்று முதல் வர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களிடம் இருந்து உத்தரவு கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.
ஆனால், கோவை மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் இன்றே பணிக்கு வர வேண்டும் என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கவுன்சிலிங் மூலம் இட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும், இன்றே பள்ளிகளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சென்னையிலும் அரசு பள்ளி ஆசிரியர்கள், இன்று அல்லது நாளைக் குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஜூன், 7ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளியை தயார் செய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை சரிபார்த்தல், இலவச நோட்டு, புத்தகங்களை, வகுப்பு வாரியாக தயார் செய்து வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி திறக்கும் நாளில் இரண்டு 'செட்' சீருடை....
சென்னை: பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு இரண்டு, 'செட்' சீருடைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவு அருந்தும், 45 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு, நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த சீருடைகளை, பள்ளிக்கல்விக்காக, சமூக நலத்துறை தயார் செய்து வழங்குகிறது.புதிய கல்வி ஆண்டு, இன்று துவங்கும் நிலையில், முதற்கட்டமாக, இரண்டு செட் சீருடைகள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் முதல் நாளில், இரண்டு செட் சீருடையும், பின், ஆக., - செப்டம்பரில், மீதமுள்ள இரண்டு செட் சீருடையை வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.வாக்காளர் பட்டியல் ஜூலையில் திருத்தம்....
சென்னை: விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், தவறுகளை நீக்கவும், ஜூலை, 1 முதல், 31 வரை, சிறப்பு பணி மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, 18 - 19 வயது வாக்காளர்களை சேர்க்க, இவ்வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புப் பணியின் போது, வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில், படிவங்களை சமர்ப்பிக்கலாம். தபால் மூலமாகவும், படிவங்களை அனுப்பலாம். www.elections.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் இ - சேவை மையங்கள் மூலம், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 9 மற்றும், 23ம் தேதி, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும். அந்த நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும்.இந்த சிறப்பு பணியின் போது, இறந்தவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இறப்பு பதிவு செய்யப்பட்ட விபரம், உள்ளாட்சி அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டு, அதன் அடிப்படையில், இப்பணி மேற்கொள்ளப்படும்
என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம் பிடித்த கோலார் மாணவிக்கு முதல்வர் பாராட்டு.....
பெங்களூரு: அகில இந்திய அளவிலான, 2016 யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் கெம்பகோடியை சேர்ந்த கே.ஆர்.நந்தினி முதலிடம் பிடித்தார். இவரது தந்தை, ரமேஷ், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், தாய், விமலா, தனியார் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
கோலார் சின்மயா பள்ளியில், பள்ளி படிப்பை முடித்த நந்தினி, மூடபிதரி ஆல்வாஸ் பி.யூ., கல்லூரியில் பி.யூ.சி., முடித்தார். இதன் பின், பெங்களூரின் எம்.எஸ்.ராமையா பொறியியல் கல்லுாரியில் பி.இ., சிவில் பொறியியல் படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றார்.
இதையடுத்து, கர்நாடகா அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. டில்லியில் உள்ள கர்நாடகா பவனில், பொறியாளராக தன் பணியை துவக்கினார்.
கடந்த முறை நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், 642வது இடம் பிடித்து, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக தேர்வானார். இதன் மூலம், பரிதாபாத்தில் சுங்க அதிகாரியாக பயிற்சி பெற்று வந்தார்.
இருந்தும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவதையே, தன் குறிக்கோளாக கொண்டிருந்ததால், 2016ல் மீண்டும், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதினார்.
இதற்கான முடிவுகள், டில்லியில் நேற்று வெளியானது. அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, ஐ.ஏ.எஸ்., ஆகும் தனது கனவை நனவாக்கியுள்ள, நந்தினியை, முதல்வர் சித்தராமையா பாராட்டியுள்ளார். 17 ஆண்டுகளுக்கு பின், கர்நாடகாவை சேர்ந்தவர், முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க எஸ்.எம்.எஸ்., வசதி
பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, எஸ்.எம்.எஸ்., மூலமாக இணைக்கும் வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு இல்லாமல் அதை செய்ய முடியாது.
அந்த பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, வருமான வரித்துறை அறிவித்தது. பின், வருமான வரித்துறையின் இணையதளத்தின் மூலமாக, பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்கும் வசதி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவற்றை, மொபைல் போனில் இருந்து, எஸ்.எம்.எஸ்., வழியாக இணைக்கும் வசதியை, வருமான வரித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, UIDPAN என அடித்து, இடைவெளி விடாமல், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், ஒரு எழுத்து இடைவெளி விட்டு, பான் கார்டு எண்ணையும் டைப் செய்து, அதை, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்
உடனே, பான் கார்டும், ஆதார் கார்டும் இணைக்கப்பட்டு விடும். ஆனால், பான் கார்டில் உள்ள பெயருக்கும், ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் சிறிய வித்தியாசம் இருந்தாலும், எஸ்.எம்.எஸ்., வசதியை பயன்படுத்த முடியாது
அவ்வாறு பெயரில் சிறிய மாற்றம் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அருகில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு செல்ல அறிவுறுத்தி, எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பப்படும்.
ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு)சேர 31 முதல் ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,''2017-2018-ம் கல்வியாண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு) சேர்வதற்கான ஒற்றைச்சாளர முறையிலான மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணங்கள் மே 31 காலை 10 மணி முதல் ஜூன் 21 வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த இணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்களது விவரங்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்த பற்று அட்டை, கடன் அட்டை, இணைய வங்கி சேவை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம். பொதுப்பிரிவு, பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ. 500-ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்தபின்னர், சேவ் என்ற பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர் பணம் செலுத்தும் தளம் தொன்றும். அதில் கட்டணம் செலுத்தலாம். மாணவர்கள் அளிக்கும் விவரங்கள் கலந்தாய்வின்போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே சேர்க்கை உறுதி செய்யப்படும்.
விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள், தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த விவரங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பங்கள் பதிவேற்ற கடைசி நாள், சிறப்பு இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்'' என்று அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்......
'ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வரும் நிலையில், இந்த ஆண்டு, புதிய அம்சங்களை மட்டும், கூடுதல் இணைப்பாக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். எழுத்துத்தேர்வு முடிந்த பின்னரே, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வு, வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், முறையாக நடத்த வேண்டும். பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் மூலம், பள்ளி ஆசிரியர்களுக்கு, பணியிடை பயிற்சி தர வேண்டும்.
வெயில், மழைக்காக அடிக்கடி விடுப்பு அறிவிப்பதால், வேலை நாட்களை சரிகட்ட, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து சனிக்கிழமைகளையும் வேலை நாளாக அறிவிக்க வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நாட்களிலும், விடுமுறையிலும், கூடுதல் பயிற்சி தர வேண்டும்.
அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருந்தால், அங்குள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்தப்படாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து, பாடம் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்
பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாணவ,மாணவியரின் விருப்பம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். ஒரு மாணவன் தன்னுடைய தாயாரின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ குறிப்பிடுவது என்பது மாணவன் அல்லது மாணவியின் விருப்பம். இந்த கருத்தினை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதற்கான பணியை பல்கலை கழக மானிய குழு மேற்கொள்ளும் என கூறினார். மேனகா கடிதம் ஒரு மாணவன் தனது பட்டப்படிப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் என்ற விதி உள்ளது. இதற்கு கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் தாயார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜாவடேகருக்கு கடந்த மாதம் மேனகா காந்தி கடிதம் எழுதினார்.தனது கடிதத்தில், தங்களது கணவர்களிடம் இருந்து பிரிந்து வசிக்கும் பல்வேறு பெண்கள் என்னை அணுகினர். அவர்கள், தங்களது குழந்தைகளின் சான்றிதழ்களை தந்தையின் பெயர் இல்லாமல் பெறுவதில் பல இன்னல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.மேலும், திருமண முறிவுகள் மற்றும் கணவன் மற்றும் மனைவி இடையே பிரிவு என்பது தற்பொழுது உண்மை நிலையாகி விட்டது. இதனை பிரதிபலிக்கும் வகையில் விதிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து விளக்கமுடன் எழுதியிருந்தார்.
மாணவ,மாணவியரின் விருப்பம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். ஒரு மாணவன் தன்னுடைய தாயாரின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ குறிப்பிடுவது என்பது மாணவன் அல்லது மாணவியின் விருப்பம். இந்த கருத்தினை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதற்கான பணியை பல்கலை கழக மானிய குழு மேற்கொள்ளும் என கூறினார். மேனகா கடிதம் ஒரு மாணவன் தனது பட்டப்படிப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் என்ற விதி உள்ளது. இதற்கு கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் தாயார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜாவடேகருக்கு கடந்த மாதம் மேனகா காந்தி கடிதம் எழுதினார்.தனது கடிதத்தில், தங்களது கணவர்களிடம் இருந்து பிரிந்து வசிக்கும் பல்வேறு பெண்கள் என்னை அணுகினர். அவர்கள், தங்களது குழந்தைகளின் சான்றிதழ்களை தந்தையின் பெயர் இல்லாமல் பெறுவதில் பல இன்னல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.மேலும், திருமண முறிவுகள் மற்றும் கணவன் மற்றும் மனைவி இடையே பிரிவு என்பது தற்பொழுது உண்மை நிலையாகி விட்டது. இதனை பிரதிபலிக்கும் வகையில் விதிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து விளக்கமுடன் எழுதியிருந்தார்.
அதோடு தனியாக அல்லது பிரிந்து வாழும் தாயாரின் உணர்வை கருத்தில் கொண்டு, விதிகள் அல்லது வழிகாட்டி முறைகளை மாற்றுவதற்கான வழிகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். திருத்தம் கடந்த வருடம் மேனகா காந்தி முன்வைத்த ஆலோசனையின் பேரில் பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் மத்திய வெளிவிவகார துறை அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்தது. தனியாக அல்லது பிரிந்து வாழும் பெற்றோர் தங்களது குந்தைகளின் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்கும் பொழுது அதில் இருவருக்கு பதிலாக ஒருவரது பெயரை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டது
Success Story of - Thiru K. Nanthakumar.I.A.S | New SPD in SSA
Success Story of K. Nandakumar IAS – A Lorry Driver’s Son
K Nandakumar who always dreamt of reaching the zenith of excellence in Civil Services Examination has come true by securing All India Rank 30th in the year 2006 at the age of 26 years. He is an icon and a true inspiration for the millions of Indian students and showed that nothing is impossible. This was his dream which came true only because of his hard work.
Family Background
K Nandakumar comes from Mamarthapetti village in Tamil Nadu’s Namakkal district. His father M Karuppannan went to work in the paddy fields of his native village which proved a dead end, so his father joined a local lorry service, as a ‘cleaner’. During that stint, which lasted two years, he learnt to drive and got his license; he then got a job as a driver. His mother Lakshmi is a house maker and she invested some amount in buying a sewing machine, and works from home. She make about one hundred rupees a day, and that takes care of the household expenses. The household ran on Karuppannan’s income. He has one younger brother Aravind Kumar and he is an engineering graduate.
Educational Background
K Nandakumar completed his schooling from Namakkal Government South School, an institution where the medium of instruction was Tamil. After completing his schooling he did engineering from the Pollachi Mahalingam College.
Due to economic problem and the feeling that he had to help his father to run the household led him to do a job in private company at Coimbatore. During this period he worked and then did late night studies and the result was extreme tiredness resulting from mental and physical exertion. This began impacting on his studies and he slowly quited focus on the Indian Administrative Service Exams.
Despite the economical challenges K Nandakumar faced, so finally he decided to quit his job at an engineering firm to devote full-time for preparation.
Optional Paper
With Tamil as his language medium, K Nandakumar had Geography and Tamil literature as his optional paper. He was comfortable with Tamil, as he was into this medium of education throughout his school days. K Nandakumar says, “it eased undue apprehension about grammatical and syntax errors and allowed him to focus on the essence of the writing”.
Attempts by K Nandakumar
For the first time when K Nandakumar sat for the UPSC Exams, he failed. On his second attempt, he ranked 350th and K Nandakumar was offered Indian Railway Traffic System (IRTS). He could not ignore this job in because that was the Railways, while dreaming of the IAS he hoped to land some day. So he joined the Railways, and began the required training. Nights, he shrugged off the fatigue, and studied for yet another attempt at the big one. Again he studied with new hope and great enthusiasm and he fetched 30th rank in his third attempt.
Preparation Strategy
“There is no secret to success, as it was his hard work and nothing else”, K Nandakumar says. He used to study in groups with his friends together. The friends went together to trawl through the market, looking for books relating to the Civil Services; they then pored over their finds. Newspapers were devoured cover to back page, with meticulous care. For current affairs, friends used to ask questions about the last one year, so he read a lot of newspapers.
Secondary Grade Teachers Can Get 10% Reservation in PG Direct Requirement - GO Released
G.O. (Ms) No. 110, School Education SE2(1) Department dated 26.05.2017, “ten percent of the Post Graduate Assistant (Languages and Academic subjects) vacancies in School Education Department shall be reserved for thequalified Secondary Grade teachers and other teachers with secondary grade scale of pay working in Government Higher Secondary Schools,
Government High Schools, Recognised Higher Secondary Schools, High Schools, Middle Schools and Elementary Schools under the local bodies (Corporation or Municipal or Panchayat Union) and all Aided Managements. If sufficient number of suitable Secondary Grade Teachers and other teachers with Secondary Grade Scale of Pay working in the above mentioned schools are not available for the direct recruitment, such vacancies shall be filled up from other candidates available for selection in open market”
தூத்துக்குடியில் ஜூன் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் ரவிக்குமார் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று ஆட்சியர்ரவிக்குமார் அறிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)