>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 10 நவம்பர், 2016

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி அளிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதி: இதுவரை 350 பேர் பயனடைந்துள்ளனர்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/03075/teacher_3075179d.jpg
ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார். | படங்கள்:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும்: மாஃபா.பாண்டியராஜன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயார் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

4ஜி என்ட்ரி கொடுக்கிறது பி.எஸ்.என்.எல்

அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ், ஒன்றுக்கு ரூ.11,485 கோடி  நிர்ணயிக்கப்பட்டது.

கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் சிரமம்

கோவை: பொதுத்தேர்வுக்கு முன்பு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதால், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த,

அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை ’சீட்’ அதிகரிப்பு

கோவை: கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ - கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

பல்கலை தமிழ்த்துறை ஆய்வு; ரூ.55.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

கோவை: பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்: மத்திய வருவாய்த்துறை அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு

மின் கட்டணம் செலுத்த அவகாசம்

சென்னை: மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாததால், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த, மின் வாரியம், கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

டாக்டர்களைபோலி  கட்டுப்படுத்த தீவிரம் :நிபுணர் குழு அமைத்து அரசு உத்தரவு

சென்னை: போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில், நிபுணர் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை தடுப்பது குறித்து, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், இயக்குனர் தலைமையில், ஜூன் 1ல், ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில், போலி டாக்டர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க,

ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! மத்திய அரசு 2011ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதி தேர்வு நடத்தி பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும் & திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 500 மற்றும்
ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது..

வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்.

வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்..வருமானத்துக்கு பொருந்தாத தொகையை டெபாசிட் செய்தால் அபராதம்...
- வருவாய் துறை செயலாளர்..

TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி

மத்திய அரசு 2011ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதி தேர்வு நடத்தி பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது.
அதற்காக தமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் துரதிஷ்டவசமாக 2 ஆயிரத்து 448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். இது ஆசிரியர்களின் தரம் பற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று மீண்டும் மற்றொரு தகுதி தேர்வை நடத்தும்படி உத்தரவிட்டார். இன்னொரு தகுதித்தேர்வு 14.10.12ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த முறையை விட இந்த தேர்வில் 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றார்கள். அடுத்தடுத்து தகுதித்தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.
இந்நிலையில் கடினமான இந்த தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மதிப்பெண்களில் சலுகைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசு தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை வழங்க முடிவு செய்தது. 2014ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.2014ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு இந்த சலுகையின் படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்பு நடந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதை ஏற்கவில்லை. எங்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கவில்லை.
இதையடுத்து தேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்றுவழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக தகுதித்தேர்வை நடத்தவில்லை. ஆயிரக்கணக்கானோர் எப்போது தகுதித்தேர்வு நடக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
தமிழக அரசின் சார்பில் 2014ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி விவாதித்து வந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பு இறுதி வாதத்தை கேட்ட பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகை குறித்து உச்சநீதிமன்றம் இன்று காலையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய5 சதவீத மதிப்பெண் சலுகை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தேர்வு எழுதாத ஆசிரியர்கள், பட்டதாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சி சலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்த தகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி விட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ் முறையும் அமல்படுத்தப்படும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள் , பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு 15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு 25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வுமதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 'இவ்வாறு அவர் கூறினார்.

TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின்ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.
இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறியதாவது : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்பானது அரசுக்கு சாதகமான வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள்  வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

TRB- TNTET : போலி சான்றிதழ் - 2012 & 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்று வந்த TET ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு - செயல்முறைகள்


புதன், 9 நவம்பர், 2016

சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும் & திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 500 மற்றும்
ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது..

           OLD 500,1000 EXCHANGE SLIP     ANNEX 5 FORM

*🅱BREAKING NEWS*

*வங்கிகளுக்கு விடுமுறை இல்லை!*

*வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.*

*தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கக் சாவடிகளில் கட்டணம் தற்காலிகமாக ரத்து: நிதின்கட்காரி அறிவிப்பு*

*டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்லகளை சந்தித்தார்.*

*அப்போது அவர், தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நவம்பர் 11ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்ற புதிய அறிவிப்பால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்*