எச்சரிக்கை.டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்..போலி ஜாதி சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்களுக்கு 'வார்னிங்'
போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்கள் வேலையில் இருந்துடிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்ஜிதேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்து, மத்திய பணியாளர் மற்றும் குறைதீர் மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று பேசினார். அப்போது அவர்கூறியதாவது-
நேர்மையற்ற முறையில் போலியாக ஜாதிச்சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்ற அதிகாரிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலியாக ஜாதிச் சான்று அளித்து அரசு வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து, தகவல்களைத் திரட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜூன்1-ந் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், போலியாக சான்று அளித்து வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களின் விவரங்களையும் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன்படி, தங்களின் அரசு வேலையை தக்கவைத்துக் கொள்ள போலியாக ஜாதிச் சான்று அளித்து, தவறான விவரங்களை அளித்த அதிகாரிகள், ஊழியர்களை தொடர்ந்து பணியில் நீட்டிக்கவிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி, ஊழியர் ஒருவர் போலியாக, அல்லது தவறான ஜாதிச்சான்று அளித்து வேலை பெற்றார் எனத் தெரியவந்தால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த மார்ச் 29-ந்தேதி வரை போலிச் ஜாதிச்சான்று அளித்து 1, 832பேர் வேலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 276 பேர் டிஸ்மிஸ் ெசய்யப்பட்டுள்ளனர், 1,035 பேர்மீது விசாரணை நடந்து வருகிறது.
இதில் நிதித்துறையில் மட்டும் 1,296 பேர் போலிச் சான்று அளித்து வேலை பெற்றுள்ளனர். ஸ்டேட் வங்கியில் 157 பேர், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 135 பேர், இந்திய ஓவர் சீஸ் வங்கியி் 112 பேர், சின்டிகேட் வங்கியில் 103 பேர், நியு இந்தியா அசுரன்ஸ், யுனைடெட் இந்தியா அசுரன்ஸில் 41 பேர் போலியாக சான்று அளித்து வேலை பெற்றுள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.