>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 17 ஏப்ரல், 2017


PF கணக்கில் விரைவில் 5 மாற்றங்கள் (50,000 ரூபாய் போனஸ், புதிய வட்டி விகிதம்)

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதம், ஆதார் இணைப்பு, புதிய போனஸ் திட்டம் எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனைவரும் பிஎப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றுஅறிவுறுத்தியுள்ளது. முன்பு ஆதார் எண்ணை இணைக்க மார் 31-ம் தேதி தான் கடைசித் தேதி என அறிவித்து வருங்கால வைப்பு நிதி ஆணையம் அதனைச் சற்று தளர்த்தி ஏப்ரல் 30-ம் தேதி என அறிவித்தது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இதே போன்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இவை மட்டும் இல்லாமல் அன்மையில் பிஎப் திட்டத்தில் பிற மாற்றங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
வட்டி விகிதம்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள 4 கோடி சந்தாதார்களும் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதமாக 8.65 சதவீதம் அளிக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் கமிட்டி முடிவு செய்துள்ளது, அதனை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசு இன்னும் ஓர் இரு நாளில் 8.65 சதவீதமாக வட்டி விகிதத்தை அறிவிக்கும் என்று அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
50,000 ரூபாய் போனஸ்
வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்து இடையில் எடுப்பதைத் தவிர்க்கும் வண்ணமாக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள பிஎப் கணக்குகளுக்கு 50,000 ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பங்களிப்பு செலுத்தி வந்த பிஎப் கணக்குகளுக்கும் பணத்தைத் திரும்பப் பெறாமல் இருந்தால் 50,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்த பிறகு இந்தத் தொகை வழங்கப்படும்.
 
இறந்த பிஎப் சந்தாதார்களைச் சார்ந்தவர்கள்
வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ள சந்தாதார்கள் இறந்து விட்டால் தற்போது அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது, ஆனால் குறைந்தபட்ச தொகை என்று ஒன்று இல்லை. எனவே புதிதாகக் குறைந்தபட்ச தொகையாக 2.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றது.
 
பங்குச் சந்தை முதலீடு
வருங்கால வைப்பு நிதி ஆணையம் இப்போது 10 சதவீதம் பிஎப் தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றது, இப்போது அதனை 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதனை வர்த்தகச் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன. 2017 பிப்ரவர் 15-ம் தேதி வரை வருங்கால வைப்பு நிதி ஆணையம் 18,069 கோடி ரூபாயை ஈடிஎப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 18.13 சதவீதம் வரை லாபமும் பெற்றுள்ளது.
 
பிஎ பணத்தை எளிதாகத் திரும்பப் பெற செயலி
4 கோடி பேர் பிஎப் சந்தாதார்களாக உள்ள நிலையில் பணத்தை எளிதாகத் திரும்பப் பெற ‘யூமங்' என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதன் மூலம் இணையதளம் மூலம் பிஎ பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை அளிப்பது மிகவும் எளிமைப்படுத்தப்படும்.

குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் வழங்கலாம்!! - மதுரை கோர்ட் கிளை உத்தரவு!!


LAB ASSITANT POST - MERIT LIST PUBLISHED (18 DISTRICTS UPDATED)

CANDIDATE LIST WHO SELECTED FOR LAB ASSISTANT POST



பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்து தற்போது மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.இணையத்தில் வெளியிடப்படும் மாவட்ட பட்டியல் நமது கல்விச்செய்தியில் வெளியிடப்பட்டு வருகிறது.மற்ற மாவட்டங்களுக்கு உங்களது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்து தற்போது மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
தகவல்கள் அவ்வபோது புதுப்பிக்கப்படும்

மாவட்ட வாரியான பட்டியல் 👇


தற்போது பதிவிடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 18



உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும். 👇


  1. CLICK HERE - VIRUDHUNAGAR DIST SELECTION LIST
  2. CLICK HERE - THANJAVUR DIST SELECTION LIST
  3. CLICK HERE - TIRUNELVELI DIST SELECTION LIST
  4. CLICK HERE - ARIYALUR DISTRICT SELECTION LIST
  5. CLICK HERE - COIMBATORE DISTRICT SELECTION LIST
  6. CLICK HERE - RAMANATHAPURAM DISTRICT SELECTION LIST
  7. CLICK HERE - SALEM DISTRICT SELECTION LIST
  8. CLICK HERE - THIRUVARUR DISTRICT SELECTION LIST
  9. CLICK HERE - VILUPPURAM DISTRICT SELECTION LIST
  10. CLICK HERE - SIVAGANGAI DISTRICT SELECTION LIST
  11. CLICK HERE - PUDHUKOTTAI DISTRICT SELECTION LIST
  12. CLICK HERE - OOTY DISTRICT SELECTION LIST
  13. CLICK HERE - TIRUPPUR DISTRICT SELECTION LIST
  14. CLICK HERE - KARUR DISTRICT SELECTION LIST
  15. CLICK HERE - KANYA KUMARI DISTRICT SELECTION LIST
  16. CLICK HERE - TIRUVANNAMALAI DISTRICT SELECTION LIST
  17. CLICK HERE - NAGAPPATTINAM DISTRICT SELECTION LIST
  18. CLICK HERE - ERODE DISTRICT SELECTION LIST


ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு | ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் வெளியாக துவங்கியது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. "ஒரு காலியிடத்துக்கு 5 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 22 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். 

சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. (தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் சென்னை மாவட்டத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை). சான்றிதழ் சரிபார்ப்பின்போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த உடனேயே தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முடிவடைந்துவிட்டதால் தெரிவு பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு கட் ஆப் மதிப்பெண் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் வெளியான அடுத்த சில தினங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளால் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வான ஆய்வக உதவியாளர்களுக்கு தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்!

ஆய்வக உதவியாளருக்கு நாளை நியமன ஆணை



நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதாரில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி இன்று (ஏப்ரல் 17) முதல் வழங்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை  திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை, மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையை பதிவு செய்யவும், 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கை விரல் ரேகை மறு பதிவு செய்வதற்கு கட்டணம் இல்லை. அதே நேரத்தில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட நிலைப்புள்ளி விவரங்களை திருத்தம் செய்வதற்கும் மற்றும் புகைப்படம், கை விரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25 சேவை கட்டணமாகவும், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்று கொள்வதற்கு ₹10ம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.  இது தொடர்பாக 18004252911 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

Digital Library of India - 5376 புத்தகங்கள் டிஜிடல் முறையில் உங்களுக்காக...

* 1887-ல் இருந்து அச்சுப்பதிக்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களும் உள்ளன.

* மொத்தம் - 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளன. 

Digital Library of India - Click here

இயலா குழந்தைகளுக்காக 85 மையங்கள் துவக்கம்.

மாநிலம் முழுவதும் 85 தொடக்க நிலை ஆயத்த மையங்கள் துவக்கப்பட்டு, இயலா குழந்தைகளுக்கு பால், பாதாம், முந்திரி, பிஸ்தாவுடன் நவதானிய கஞ்சி வழங்கப்படுகிறது.
மனவளர்ச்சி குறைவு, பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி பாதிப்பு, மூளை
முடக்குவாதம், செவித்திறன் குறைவு என இயலா குழந்தைகள் உள்ளனர். இத்தகைய குழந்தைகளுக்காக, தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலம் முழுவதும் 85 தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையங்களை துவக்கியுள்ளது.
இம்மையம் காலை 10:00 முதல் மதியம் 3:30 மணி வரை செயல்படும். இங்கு பிறந்தது முதல் ௬ வயதுக்கு உட்பட்ட இயலாக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இவர்களுடன் பெற்றோர் வர வேண்டும். குழந்தையின் குறைபாடுகளை அறிந்து, அதற்கு ஏற்ப சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர்.தினமும் சத்தான உணவுஇங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் காலையில் வேர்க்
கடலை, பொரிகடலை மாவு கலந்து வாழைப்பழம் வழங்கப்படும். மதியம் பால், பிஸ்தா, முந்திரியுடன் நவதானிய கஞ்சி வழங்கப்படும். விளையாட பொம்மைகள், போக்குவரத்து செலவிற்கு மாதம் 300 ரூபாய் வழங்கப்படும். இம்மையத்திற்கு ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குணப்படுத்த முடியும்
இயலா குழந்தைகளுக்கு உள்ள பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் குறைபாடுகளை குறைக்க முடியும். அவர்களது வேலையை, அவர்களே செய்யும் அளவிற்கு கொண்டு வர முடியும். இதுவே மையத்தின் நோக்கம்.
தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம் நகராட்சி 10ம் பகுதி நடுநிலைப் பள்ளியில் இம்மையம் செயல்பட துவங்கியுள்ளது என கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

பிற மாநில மாணவர்களுக்கு தனி விதி இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மாற்றம்.

இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில், வெளி மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு, தனி விதிகள் கொண்டு வருவது குறித்து, உயர் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
அரசு ஒதுக்கீட்டில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., இன்ஜி., படிப்புக்கு அண்ணா பல்கலை மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் மூலமாக கவுன்சிலிங் நடக்கும்.
இதில் பங்கேற்க, தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 2016ல், இன்ஜி., படிப்பிலும், மருத்துவ படிப்பிலும், ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர், தரவரிசையில் முன்னிலை பெற்றனர்.
அவர்கள், ஆந்திரா மற்றும் கேரள எல்லையை ஒட்டிய, தமிழக பகுதிகளில் வசித்ததால், தமிழகத்தில் இட ஒதுக்கீடு கிடைத்தது. அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், 10ம் வகுப்புக்கு பின், கேரளா, ஆந்திராவுக்கு சென்று, அங்கே பிளஸ் 2 படித்து, அதிக மதிப்பெண் பெறுகின்றனர். பின், தமிழகத்தில் படித்த மாணவர்களை பின்னுக்கு தள்ளி, கவுன்சிலிங்கில் இடங்களை பெற்று விடுகின்றனர்.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:
தமிழக பாடத்திட்டத்திற்கும், ஆந்திரா, கேரளா பாடத்திட்டத்திற்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, தமிழகத்தில் படித்த மாணவர்களையும், வெளி மாநிலத்தில் படித்த மாணவர்களையும், ஒரே தரவரிசையில் பட்டியலிடக் கூடாது.
தமிழக அரசின் தேர்வுத் துறை போல, மற்ற மாநிலங்களில் மிகவும் கண்டிப்புடன் தேர்வு நடத்துவதோ, திருத்துவதோ கிடையாது. அதனால், பிற மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள், தமிழகத்தில் படிப்போரை விட, அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.
வெளி மாநிலத்தில் படிக்க, பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பதால், ஏழை மாணவர்கள், தமிழகத்தில் மட்டுமே படிக்க முடிகிறது.
எனவே, தமிழக பாடத் திட்டத்தை நம்பி படிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் பின்னுக்கு தள்ளப்படாமல், அரசு காப்பாற்ற வேண்டும். அதற்கு, வெளி மாநிலத்தில் படிப்போருக்கு, கவுன்சிலிங்கில், தனி விதிகள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், வெளி மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கில் தனியாக விதிகள் கொண்டு வர, உயர்கல்வித் துறையும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கவுன்சிலிங் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017


ஒன்றும் உதவாத சான்றிதழ் படிப்பு மூடும்நிலையில் இசைப் பள்ளிகள்.

சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் சான்றிதழ்களை வேலைவாய்ப்பிற்கு ஏற்று கொள்ளாததால், மாணவர்கள் சேர்க்கை சரிந்துள்ளது. இதனால் அவை மூடும்நிலைக்கு தள்ளப்
பட்டுள்ளன.
தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை உட்பட 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் உள்ளன. இங்கு குரலிசை, பரதம், மிருதங்கம், வயலின், தவில், தேவாரம், நாதஸ்வரம் ஆகிய தமிழிசைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு போன்று இசைப் படிப்புகளும் 3 முதல் 4
ஆண்டுகளுக்கு பயிற்றுவிக்கப் படுகின்றன.தேர்ச்சி பெறுவோருக்கு அரசு தேர்வுத்துறை மூலம் சான்றிதழ் தரப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் தருவதில்லை. அந்த சான்றுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதில்லை. அதேபோல் தனியார் மற்றும் வெளிநாடுகளிலும் ஏற்க மறுக்கின்றனர்.
இதனால் மாவட்ட இசைப் பள்ளிகளில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை சரிய துவங்கியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 10 க்கும் குறைவான மாணவர்களே பயில்கின்றனர். இதனால் அவை மூடும்நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளன. அவற்றை இசை கல்லுாரிகளாக தரம் உயர்த்தி பள்ளிகளை மீட்க வேண்டும்.தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத்துறை ஆசிரியர், ஊழியர் பேரவை மாநில பொதுச் செயலாளர் பா.அய்யனார் கூறியதாவது: மதுரை, கோவை, சென்னை, திருவையாறு ஆகிய 4 இடங்களில் அரசு இசை கல்லுாரிகள்
உள்ளன. இங்கு பயில்வோருக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது.அதே பாடத்திட்டம் தான் மாவட்ட இசைப் பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப் படுகின்றன. ஆனால் சான்றிதழ் மட்டும் மாறுபடுகிறது. இதனை வேலைவாய்ப்பு அளிப்போர் ஏற்க மறுக்கின்றனர். இதனால் இசை பள்ளிகளை கல்லுாரிகளாக தரம் உயர்த்துவதோடு, அனைத்து மாவட்டங்களிலும் துவங்க வேண்டும், என்றார்.

தனியார் பாட புத்தகங்கள்: CBSE., திடீர் தடை

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, தங்களின் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும் என்ற, விதிமுறைகள் உள்ளன. ஆனாலும், பெரும்பாலான பள்ளிகள், தனியார் புத்தக நிறுவனங்களின், பாட புத்தகங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 'நியூ சரஸ்வதி புக் ஹவுஸ்' என்ற நிறுவனம், பிளஸ் 2 வகுப்புக்கு, உடற்கல்வி மற்றும் சுகாதாரம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது.
அதில், பெண்களின் உடல் அழகு எந்த அளவில் இருக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, 'அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகள் இணைப்பு அங்கீகாரம் பெறும் போது, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என, உறுதி அளிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., வாரியம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதை மீறி, தனியார் புத்தகங்களையோ, பாடத்திட்டத்தை தாண்டி, வேறு புத்தகங்களையோ பயன்படுத்தினால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சி.பி.எஸ்.இ., வாரியம் திட்டமிட்டுள்ளது.
2,000 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்த பள்ளிகள், தங்கள் வளாகத்திலும், வகுப்பறையிலும் என்னென்ன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, விதிகள் உள்ளன. சி.பி.எஸ்.இ., இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் போது, இந்த விதிகளை பின்பற்றுவோம் என, விண்ணப்ப படிவத்தில், பள்ளிகள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
அத்துடன், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக, 150 வகையான விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இதைப் பின்பற்றவில்லை. அதனால், உள்கட்டமைப்பு தகவல்களை வெளியிடாத, 2,000 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த தொகையை செலுத்தி விளக்கம் அளிக்கும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் ஆறாவது பாடமாக நடைமுறைபடுத்த வேண்டி-கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம்

கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் ஆறாவது பாடமாக நடைமுறைபடுத்த வேண்டி-கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம்
*மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் ..*
இடம்: சேப்பாக்கம் , சென்னை                                        நாள்:07/05/2017 காலை:9மணி
நமது  கோரிக்கை வெற்றி பெற ஆதரவு தாரீர்:
      அனைத்து ஆசிரியர் தாய் சங்கங்களும், கணினி
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்களும்  மற்றும் ஆசிரியர் சங்கங்களை சார்ந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும் ,  தங்களின் மேலான ஆதரவை நல்கி வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களான எங்களை கணினி பட்டதாரி ஆசிரியர்களாக துணை செய்வதோடு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் கணினி கல்வி பெற மாபெரும் துணை புரிய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..
    அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 4000000  மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 39019க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் கோரிக்கை .
1). அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு மேலாக).
2.) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல்  பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிட்டப்பட்ட (6ம் வகுப்பு முதல் 10ம் வரை) பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
3.) 2006 ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறியவியல் பாடப்பிரிவை  கொண்டுவந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
  4) அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
5).பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்
6).மத்திய அரசின் திட்டத்தின் கீழ்:புதிய கல்விக் கொள்கை ,டிஜிட்டல் இந்தியா, SSA, RMSA திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும். "கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் வாழும் கோடிக்காணக்கான  கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள்பயன்பெறுவார்கள்".
மாநிலப் பொதுச்செயலாளர் .
ச.கார்திதிக் 9789180422 ,
மாநில பொருளாளர்  .  
தமிழ்நாடு பி.எட் க கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014
வெ.குமரேசன் 9626545446 ,

தலைவர்கள் பிறந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறையில்லை'.

தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றுக்காக, பள்ளிகளுக்கு இனி விடுமுறை அளிக்கப்பட மாட்டாது' என, உ.பி., அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
அம்பேத்கரின் 126வது பிறந்த தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது. நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாள் ஆகியவற்றுக் காக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது, சிறிதும் தேவையற்றது.ஏனெனில், பல குழந்தை களுக்கு, பள்ளிக்கு விடுமுறை அளிக் கப்பட்டது ஏன் என்பது கூட தெரியவில்லை.
தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை அறிந்து, குழந்தைகள் ஊக்கம் பெற வேண்டும். அதற்கு அவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, அவர்களை பற்றி குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும்.அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள், பலருக்கு ஊக்க சக்தியாக அமைந்தது. அதனால், இனி, தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள் ஆகியவற்றுக்கு, உ.பி.,யில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட மாட்டாது.
மேலும், பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணி யாற்ற வேண்டும் என, விதிகூறுகின்றன. ஆனால், எந்த பள்ளியும், 220 நாட்கள் பணியாற்றுவது இல்லை. இதற்கு, அதிக விடு முறைகள் தான் காரணம். இதனால், பாடத்தை முடிக்க முடியாமல், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
எந்த மதத்துக்கும், ஜாதிக்கும், மாநில அரசு, விரோதமானதல்ல. வளர்ச்சியில் பின்தங்கி யுள்ள, சமூகங்களைச் சேர்ந்த மக்களை முன் னேற்றுவதே அரசின் லட்சியம். என் ஆட்சியில், பாரபட்சம், தீண்டாமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.இவ்வாறு அவர் பேசினார்

10ம் வகுப்பு சான்றிதழில் நிரந்தர குறியீட்டு எண்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு சான்றிதழில், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண்ணைச் சேர்த்து வழங்க, அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் துவங்கின.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான சான்றிதழ்களில், போலி சான்றிதழ்களை தடுக்க, தமிழக அரசின் தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 2016ம் ஆண்டு முதல், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஹால் டிக்கெட்டில், இந்த எண் இடம் பெற்றது; சான்றிதழிலும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஆதார் எண் மற்றும் கல்வித்துறையின் மின்னணு மேலாண் தகவல் பிரிவின் சார்பில், 'எமிஸ்' எண் வழங்கப்பட்டது. எனவே, எந்த எண்ணை, சான்றிதழில்
பதிவு செய்வது என, தேர்வுத்துறை குழப்பத்தில் இருந்தது.
இந்நிலையில், எமிஸ் எண் மற்றும் ஆதார் எண்களை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், மீண்டும், நிரந்தர குறியீட்டு எண்ணைப் பயன்படுத்த, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டு முதல், மாணவரின் பெயர் மற்றும் இன்ஷியல், தமிழிலும் இடம்பெற உள்ளது. பள்ளியின் பெயர் விபரமும், சான்றிதழில் இருக்கும். இதற்காக, தேர்வு முடிந்ததும், மாணவர்களிடம் அவர்களின் பெயரை, இன்ஷியலுடன் தமிழில் எழுதி, கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த விபரங்கள், ஆன்லைனில் பதிவு செய்யும் பணி, நேற்று துவங்கியது.

TN SET - 2017 (தமிழ்நாடு மாநில உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு) - 'ஹால்டிக்கெட்' வெளியீடு.


ICT விருது: ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்.

டிஜிட்டல் கற்பித்தல் முறைக்கான, ஐ.சி.டி., விருதுக்கு,ஜூலை, 31க்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசின், கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஆண்டுதோறும், கணினி வழியில், டிஜிட்டல் கற்பித்தல் மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, ஐ.சி.டி., விருதுகளை வழங்குகிறது.
நடப்பாண்டில், தேசிய அளவில், 87 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, மாநில பள்ளிக்கல்வித் துறையின், ஐ.சி.டி., குழுவுக்கு அனுப்பும்படி, கல்வி தொழிற்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, ஜூலை, 31க்குள் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.பள்ளிக்கல்வித் துறை, ஆக., 31க்குள், சிறந்த விண்ணப்பங்களை தேர்வு செய்து, விருதுக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ளவிகிதாசாரத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவிகிதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவிகிதமும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டை பின்பற்றவில்லை பின்பற்றாதபள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றக்குழுவை உடனே அமைத்து, ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்.

தமிழகம் முழுவதும் ஏப்.25-ம் தேதி தொடங்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதா னத்தில் மாநில அளவிலான ஆயத்த மாநாடு நேற்று நடைபெற்றது.
குழுவின் ஒருங்கிணைப்பாள ரும், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்கூறியபோது, “புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றக்குழுவை உடனே அமைத்து, ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் 61 துறைகளைச் சார்ந்த 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போராட்டத்தால் அரசின் முக்கிய பணிகள் முடங்கும். இதைஉணர்ந்து, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்” என்றார்.
விவசாயிகளுக்கு ஆதரவு
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் வெளியிட்ட அறிக்கை யில், “டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமரும் தமிழக முதல்வரும் சந்திக்கவில்லை. இந்நிலையில் மத்திய, மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தையும், விவசாய தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2011-ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.எனவே, கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டு (2017) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாட்களுக்கு அந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும், அந்தந்த தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
2017-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ம்மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ, மாணவியர் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு (2016) வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏர்டெல் அதிரடி: ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா அறிவிப்பு !!

ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகையை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகைக்கு போட்டியளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும், இதற்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாது. இந்நிலையில், ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏர்டெல் புதிய அறிவிப்புகளின் படி மூன்று சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345 விலையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய ஏர்டெல் சலுகைகளின் கீழ் ரூ.244 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஏர்டெல் சிம் வைத்திருப்போருக்கு மட்டும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துடன் ஏர்டெல் - ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.
வாரம் முழுக்க 1200 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் வழங்கப்படும் நிலையில், இதற்கு பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 0.10 என்ற கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ரூ.399 திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் விலை அதிகம் என்பதால் முந்தைய திட்டத்தில் வழங்கப்படுவதை விட வாய்ஸ் கால் நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்களுக்கு 3000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.244 திட்டத்தை போன்று ஏர்டெல் - ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைுப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.
இறுதியில் ரூ.345 திட்டத்தில் முந்தைய திட்டங்களை விட கூடுதலாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவும் மற்ற சலுகைகள் ரூ.399-இல் வழங்கப்படுவதை போன்றே வழங்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் ஆப் கொண்டு லாக்-இன் செய்து ஏர்டெல் தளத்தில் ரூ.244 மற்றும் ரூ.399 திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆங்கிலம் தெரியாத அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை சரிவதாக புகார் - DINAMALAR

தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், மாணவர் சேர்க்கை கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 37 ஆயிரம் உள்ளன. இவற்றில், 38 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

பல பள்ளிகளில், 20க்கும் குறைவாகவே மாணவர்கள் படிப்பதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரட்டை அடிக்கும் நிலை உள்ளது.
மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி ஆசிரியர்கள், சொந்த விஷயங்களுக்கு நேரத்தை செலவழிப்பதாக புகார் உள்ளது. இதை கட்டுப்படுத்த, பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு முறையை, உடனடியாக அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாததால், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பணி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையும் கடுமையாக சரிந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் மோசஸ் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தி, ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், அதற்கென ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தமிழ் வழி ஆசிரியர்களே, ஆங்கில வழி மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். அதனால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததால், அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் என, இருவழி தொடக்க வகுப்புகளுக்கும், குறைந்தபட்சம், 20 மாணவர்களை சேர்ப்பதே, கஷ்டமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.இன்றைய நிலையில், நகர்ப்புறங்களில், எல்.கே.ஜி., குழந்தைகளே ஆங்கிலம் பேசும் நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
எனவே, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில், ஆங்கில சிறப்பு வகுப்பு எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு - LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST Published

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்து தற்போது மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.இணையத்தில் வெளியிடப்படும் மாவட்ட பட்டியல் நமது கல்விச்சிறகுகள் வெளியிடப்பட்டு வருகிறது.மற்ற மாவட்டங்களுக்கு உங்களது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
1.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_TIRUPPUR DISTRICT - Click here
2.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_  VILUPPURAM DISTRICT Click here
3.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ ARIYALUR DISTRICT - Click here
4.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ Coimbatore DISTRICT - Click here
5.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ KARUR DISTRICT -  Click here
6.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ PUDUKKOTTAI DISTRICT - Click here
7.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ Ooty DISTRICT - Click here
8.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ RAMANATHAPURAM DISTRICT - Click here
9.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ SALEM DISTRICT - Click here
10.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ SIVAGANGAI DISTRICT - Click here
11.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ THIRUVARUR DISTRICT - Click here
12.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ TIRUNELVELI DISTRICT - Click here
13.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ ERODE DISTRICT - Click here
14.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ NAGAPATTINAM DISTRICT - Click here
15.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ KANYA KUMARI DISTRICT - Click here
16.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_  VIRUDHUNAGAR DISTRICT - Click here
17.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_  THANJAVUR DISTRICT - Click here
திருவண்ணாமலை மாவட்ட ஆய்வக உதவியாளர் தேர்வு - 2017 இறுதிப் பட்டியல் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை. இறுதிப் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் இறுதிப்பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிடப்பட்டு 17.04.2017முதல் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்'

தனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது; 9.33 லட்சம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.
ஆனால், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களை பொறுத்தவரை, கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, நான்கு முகாம்கள் அமைத்து, விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி போன்ற முக்கிய மாவட்டங்களில், விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை, திருத்தும் பணிக்கு அனுப்புவதில்லை. குறிப்பாக, பிளஸ் 2 ஆசிரியர்களை, அடுத்த ஆண்டுக்கான பாடம் எடுக்க வைக்கின்றனர். 
எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளை, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியுமா என, அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளி
களுக்கு, முதன்மை கல்வி அதிகாரி உஷா, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், 'தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பள்ளியின் கடிதத்துடன், விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும். 
மருத்துவ பிரச்னை அல்லது வேறு பிரச்னைகளை கூறி, வர மறுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர் எச்சரித்துள்ளார். இதே போல், ஈரோடு, தர்மபுரி, கடலுார், கோவை உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளும், தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தவும், இணை இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.

இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள
விகிதாசாரத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவிகிதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவிகிதமும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டை பின்பற்றவில்லை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.1.04 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 
பெட்ரோல், டீசலின் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கிடையே, மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் கொண்டு வரும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டணம்,  ஆந்திரா,  உதய்பூர்,  ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் வருகிறது. இதன் பிறகு மற்ற பகுதிகளுக்கும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.
இந்நிலையில், தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.39 பைசாவும், டீசல் விலை ரூ. 1.04 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 31-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன், பிழைகளை சரி செய்ய, ரேஷன் கார்டு தாரருக்கு, உணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது. 
தமிழக அரசு, மக்களிடம் இருந்து, 'ஆதார்' எண்ணை பெற்று, அவற்றில் உள்ள விபரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. அந்த கார்டில் பிழை இருப்பதாக, சிலர் புகார் எழுப்பினர். சுற்றறிக்கைஇதையடுத்து, ரேஷன் கார்டுதாரர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றில், பிழைகளை சரி செய்த பின், ஸ்மார்ட் கார்டு அச்சிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. 
இது குறித்து, ரேஷன் கடைகளில், மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டி வைக்குமாறு அறிவுறுத்தி, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* ஸ்மார்ட் கார்டு வினியோக பணியில், கம்ப்யூட்டர் தொகுப்பில் புகைப்படம் இடம் பெறாத கார்டுதாரரின் விபரம், இந்த ரேஷன் கடை ஊழியரிடம் உள்ளது. 
அந்த பட்டியலில் உள்ள குடும்ப தலைவரின் புகைப்படத்தை, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற மொபைல் ஆப் அல்லது www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 
* ரேஷன் கார்டுதாரரின் அனைத்து விபரங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழில், கம்ப்யூட்டர் தொகுப்பில் இடம் 
பெற்றுள்ளதை சரிபார்த்து, உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த விபரங்களில், ஏதேனும் விடுபட்டு இருப்பின், மேற்கூறிய இணையதள வசதி மூலம் சரி செய்து கொள்ளலாம் 
* அந்த விபரங்கள் சரி செய்யப்பட்ட பின்பே, ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்க இயலும். இது தொடர்பாக, ரேஷன் கார்டுதாரர், முழு ஒத்துழைப்பை வழங்கி, விரைவில் ஸ்மார்ட் கார்டு பெறும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
மொபைல் ஆப்
இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிழை திருத்தம் செய்ய விரும்புவோர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது மொபைல் ஆப் பயன்படுத்த வேண்டும். அதில், திருத்தம் செய்யும் பகுதிக்கு சென்று, ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அந்த எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அதை செலுத்தி, பிழைகளை சரி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். 

தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசு தொடக்கப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!

லட்சங்களைக் கொட்டி கொடுத்து, எல்.கே.ஜி அட்மிஷன் பெறுவதற்காக, தனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப் போட்டு படுத்திருக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக, போட்டி போட்ட அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 
அட்மிஷனுக்காக காத்திருக்கும் குழந்தைகள்
நூற்றுக்கணக்கான பிள்ளைகளுடன் அந்த அரசுப் பள்ளியில் பெற்றோர்கள் குவிய, ''மன்னிச்சுக்கங்க... 75 பிள்ளைகளுக்குத்தான் இடம் இருக்கு. மத்தவங்க கோவிச்சுக்காம வேற பள்ளியில் முயற்சி செய்து பாருங்க'' எனச் சொல்லிக்கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
பள்ளியில் இடம் கிடைக்காதவர்கள் வருத்தமான முகத்துடன் கிளம்ப, அட்மிஷன் முடிந்த 75 குழந்தைகளோடும் பல்சுவை நிகழ்ச்சிகளோடும் உற்சாகமான தொடக்க விழா நடந்தது. அந்தப் பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விழாவைத் தொடங்கி வைக்க, 75 மாணவர்களுக்கும் வண்ண வண்ண பலூன்கள், ஆளுக்கொரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் விழாவில் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இத்தனை அதிசயங்களும். 
அரசுப் பள்ளி குழந்தைகள்
"நாங்கள் இந்தப் பள்ளியில் வேலைப் பார்த்தபோது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையே பத்து பேருதான். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன வித்தைகளையோ செய்துப்பார்த்தோம். இந்தப் பள்ளி கரூர் நகரில் இருந்து மூன்று கிலோமீட்டரில் துரத்திலேயே இருப்பதால், எல்லோருமே நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத்தான் சென்றார்கள். இந்தப் பள்ளியையே 'சிங்கிள் டிஜிட் பள்ளி' என்றுதான் அழைப்பார்கள். சேர்க்கை குறைவாக இருக்கிறது எனச் சொல்லி அதிகாரிகளும் பள்ளியை மூடிவிட இருந்தார்கள். ஆனால், இன்று மொத்தமாக 300 பிள்ளைகளைப் பார்க்கும்போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது. தனியார் பள்ளி மாயையை கிழித்தெறிந்திருக்கும் நாள் இது'' என்று மகிழ்ந்தார்கள் முன்னாள் ஆசிரியர்கள். 
பெற்றோர்
கூட்டத்தில் பேசிய சில பெற்றோர்கள், "பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்தப் பள்ளியை கடந்துசெல்லும்போதுகூட நிமிர்ந்து பார்த்ததில்லை. ஆனால், பள்ளியில் நடந்த மாற்றங்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள், கற்பிக்கும் முறைகள் பற்றி மெல்ல பிரின்ஸிபால்மெல்ல கேள்விப்பட்டு எங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆரம்பித்தோம். எங்கள் பிள்ளைகள் அழகாக ஆங்கிலம் பேசுவதையும், தெளிவாகத் தமிழ் எழுதுவதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கம்ப்யூட்டர், யோகா, இசை, விளையாட்டு, நடனம் என எல்லா வகையிலும் எங்கள் பிள்ளைகளின் திறமைகளை வளர்த்தெடுக்கிறார்கள். எங்களுக்கு ஒரு ரூபாய் செலவில்லை'' என்று நெகிழ்ந்தார்கள். 
அரசுப் பள்ளியின் மீது 200 சதவிகித நம்பிக்கையைச் சாத்தியமாக்கிய இந்த மாயம் நிகழ்ந்தது எப்படி? 
பள்ளியின் தலைமை ஆசிரியையான விஜயலலிதா, ''அர்ப்பணிப்பும் சக ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும்தான் காரணம். ஒவ்வொரு ஆண்டும் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசுவோம். அவர்களுக்குப் பள்ளியின் மீது நம்பிக்கை வருவதற்காக, அரசு மற்றும் தனியார் ஆர்வலர்களின் நிதியுதவியில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினோம். குழந்தைகளைக் கவரும் வகையில் வகுப்பறைகளிலும் ஓவியங்கள் வரைந்தோம். ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையையும் ஊக்கப்படுத்தி, நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கினோம். இவையெல்லாம் சேர்ந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியது. இப்போது, ஆண்டுதோறும் பெற்றோர்களே பள்ளிக்கு சீர் வரிசை எனச் சொல்லி விழா நடத்தி உதவி வழங்கும் அளவுக்கு மாற்றி இருக்கிறோம். இந்தப் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையையும் எங்கள் குழந்தையாக நினைத்து அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுகிறோம்'' என்கிறார் புன்னகையுடன். 
ஒவ்வொரு அரசுப் பள்ளியும் இதுபோன்ற முயற்சியில் இறங்கினால், ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும்

சனி, 15 ஏப்ரல், 2017


அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளம் நிறுத்தம்.

அரசு நிதி ஒதுக்காததால், மார்ச் மாத சம்பளம் இன்னும் கிடைக்காமல், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான சம்பளம், மாத இறுதி நாளில், அவர்களது வங்கி கணக்கில், வரவு வைக்கப்படும். ஆனால், மார்ச் மாத சம்பளம் மட்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முடிந்ததும், பட்ஜெட்டில் அறிவித்தபடி, பள்ளி கல்வித்துறை பணிகளுக்கு, நிதி ஒதுக்கப்படும். அதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த பணியானது, நிதித்துறையின் செலவின பிரிவில் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டுக்கான, சம்பள ஒதுக்கீடு உத்தரவை, அரசு இன்னும் வெளியிடவில்லை. அதனால், மார்ச் சம்பளம், இன்னும் வழங்கப்படவில்லை. குழந்தைகளின் கல்விக் கட்டணம், தனிநபர் மற்றும் வீட்டுக்கடன்களை கட்ட முடியவில்லை; நகைகளை அடகு வைத்து, அன்றாட செலவுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - பள்ளிக்கல்விச் செயலர் உதயச்சந்திரன் உத்தரவு .

அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2006 முதல், 7,979 ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும், பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படும்.அதன்பின்னரே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கும்.
இதன்படி, ௭,௯௭௯ ஆசிரியர்களுக்கும், ௨௦௧௮ மார்ச் வரை, பணிக்கால நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்விச் செயலர் உதயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஓய்வு பெறும் ஆசிரியர் பட்டியல் சேகரிப்பு -பள்ளிக்கல்வி உத்தரவு.

பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
அதன்படி, மே மாதம் ஓய்வு பெறும் உத்தரவு வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர். ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஓய்வு பெற்றதும் அந்த இடங்கள் மீண்டும் நிரப்பப்படாது. ஆனால், இந்த ஆண்டு, காலியிடங்களின் பட்டியலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா? என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, என கூறினர்

TN SET - 2017 (தமிழ்நாடு மாநில உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு) - 'ஹால்டிக்கெட்' வெளியீடு.


ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி

உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
2016 அக்டோபரில் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை, மே, 14க்குள் நடத்தி முடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. 
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. ஆசிரியர்கள் கோடை விடுமுறையை கழிக்க, வெளியூர்களுக்கு சென்றுவிட்டால் சிக்கல் ஏற்படும். எனவே, ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்த, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

PF எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு காலக்கெடு நீட்டிப்பு

பிஎப் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஒ) தெரிவித்துள்ளது.
முன்னதாக இபிஎப்ஒ ஆணையம் பிஎப் எண்ணுடன் ஆதாரை இணைப் பதற்கு கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இபிஎப்ஒ ஆணையம் தெரிவித் துள்ளது. அதுமட்டுமல்லாமல் 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய் வூதிய கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து டிஜிட்டல் லைப் சான்றிதழை ஒப்படைப்பதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பல முறை ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லைப் சான்றிதழை டிஜிட்டலில் சமர்பிக்க முடியாத ஓய்வூதிய தாரர்கள் வங்கிகளின் சென்று சமர்பிக்கலாம் எனசமீபத்தில் இபிஎப்ஒ ஆணையம் உத்தர விட்டது. மேலும் டிஜிட்டலில் ஏன் சமர்பிக்கமுடியவில்லை என்பதற்கு காரணத்தை கூற வேண்டும் என்று கூறியிருந்தது.

வியாழன், 13 ஏப்ரல், 2017


எம்.பி.பி.எஸ்., சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையா? : 'நீட்' தேர்வால் மாணவர்கள் குழப்பம்.

நீட்' தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப் பட்டது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் இன்னும் கிடைக்க வில்லை. 'நீட்' தேர்வுக்கு இன்னும், 25 நாட்களே உள்ளன. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில், 'நீட்' தேர்வு மதிப்பெண்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவரா; பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கிடப்படுமா என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.மாநிலங்களே முடிவு செய்யலாம்
இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: 'நீட்' நுழைவுத் தேர்வு என்பது, தகுதியை முடிவு செய்யும் தேர்வாகவே கருதப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். கடந்த ஆண்டில், 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மேல், எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச மதிப்பெண் : தமிழகத்தில், 'நீட்' தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள், முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது போன்று, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், 'நீட்' தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெறலாம்.
அவர்களில், பிளஸ் 2வில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கின்றனரோ, அவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை கொடுத்து, 'அட்மிஷன்' நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், 'நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அட்மிஷன் குறித்த வழிமுறைகளை, தமிழக சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.