பிளஸ்2 தேர்வுக்கான சிறப்பு அனுமதி திட்டம்: விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...
சிறப்பு அனுமதி திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்தோர் இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை சனிக்கிழமை (பிப்ரவரி 18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் தனித் தேர்வர்கள் பிப்ரவரி 9,10 ஆகிய நாள்களில் தத்கல் மூலம் விண்ணப்பித்தோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதலில் HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் HIGHER SECONDARY EXAM MARCH 2017-PRIVATE CANDIDATE-TATKAL HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தை கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். பின்னர், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதேபோல் மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித் தேர்வர்கள் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
இதுவரையில் மேல்நிலைத் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யாத தனித் தேர்வர்கள், மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.