>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 15 டிசம்பர், 2016

*வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017*

 08.1.2017 ஞாயிறு –வைகுண்ட ஏகாதேசி
09.01.2017-திங்கள்-கர்வீன் முகைதீன் அப்துல் காதர்
11.01.2017-புதன்- ஆருத்ரா தரிசனம்
13.01.2017-வெள்ளி-போகி

09.02.2017-வியாழன்-தைப்பூசம்
24.02.201-வெள்ளி-மகா சிவராத்திரி

01.03.2017-புதன்-சாம்பல் புதன்
04.03.2017-சனி-வைகுண்டர் ஆராதனை
11.03.2017-சனி-மாசிமகம்

13.04.2017-வியாழன்-பெரிய வியாழன்
14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள்
16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர்
25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ்

10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி
12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத்
28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள்

22.06.2017- வியாழன்- ஷபே காதர்

03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு
04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம்
07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா
08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்
25.08.217-வெள்ளி-சாம உபகர்மா
31-08.2017-வியாழன்-அர்ஃபா

04.09.2017-திங்கள்-ஓணம்
22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு

18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு

02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்
04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி
02.12.2017-சனி-திருக்கார்த்திகை

24.12.2017-ஞாயிறு-கிறிஸ்துமஸ் ஈவ்
29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி
31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்
TNPSC மாதிரி வினா-விடை, 

 101 தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்? வாணிதாசன்
102 தமிழ்நாட்டின் பசுமையான கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு        மின்திறன் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது? சூரிய ஆற்றல்
103 TNPL-இன் விரிவாக்கம் என்ன? தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் ((Tamil Nadu News print and Paper Limited))
TNPSC: மாதிரி வினா-விடை, 

  51 தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 2005
52 தமிழக கடற்கரையின் நீளம் எவ்வளவு? 1076கிலோமீட்டர்
53 தமிழகத்தில் உள்ள 3 முக்கிய துறைமுகங்கள் என்ன? சென்னை , எண்ணூர், தூத்துக்குடி
 TNPSC: மாதிரி வினா-விடை, 

 1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது? சென்னை
2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 130058 சதுரகிலோமீட்டர்
3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (2011கணக்கெடுப்பின் படி) எவ்வளவு? 72147030 பேர்
4 தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பின் படி) ஆண்கள் எத்தனை பேர்? 36137975 பேர்

ரூ.600ல் நவீன சிறுநீர் கழிப்பிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது

பள்ளி வளாகத்தில், 600 ரூபாய் செலவில், நவீன சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, ஏ.குரும்பப்பட்டியில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில், 97 மாணவர்கள் படித்து வருகின்றனர்; ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சிறுநீர் கழிக்கும் இடம், சிறுநீர் வெளியேற வடிகால் இன்றி, சுகாதாரமற்ற முறையில் இருந்தது.
இந்நிலையில், அகில இந்திய அளவில், பள்ளிகளின் அடிப்படை தேவைகள் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு போட்டியை, 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற நிறுவனம் நடத்தியது.இந்த போட்டிக்காக, 'பாதுகாப்பான சிறுநீர் கழிப்பிடம்' என்ற தலைப்பில், பள்ளி ஆசிரியர் கேசவன் மற்றும் ஐந்து மாணவர்கள் இணைந்து களத்தில் இறங்கினர்.
இதன்படி, சுகாதாரமற்ற முறையில் இருந்த சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பெயின்ட் அடித்துள்ளனர். நவீன சிறுநீர் பேசின்கள் அமைக்க அதிக செலவாகும் என்பதால், பழைய, 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி, அதை பேசின்கள் போல் வெட்டி, அவற்றில் தண்ணீர் உள்ளே செல்லும் அளவுக்கும், சிறுநீர் வெளியே செல்லும் அளவுக்கும் குழாய்களை பதித்து, பள்ளியின் சிறுநீர் கழிப்பிடத்தில் பொருத்தியுள்ளனர்.
பார்ப்பதற்கு நவீன கழிப்பிடம் போலவே அமைக்கப்பட்ட இது, தற்போது பள்ளி மாணவர்களின் சுகாதார சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது. இதற்கு, 600 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது.
ஆசிரியர் கேசவன் கூறியதாவது: கடந்த, 3, 4ம் தேதிகளில் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடந்த டி.எப்.சி., விழாவில், நாட்டின் சிறந்த, ஐந்து படைப்புகளில், இந்த சிறுநீர் கழிப்பிடமும்
ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாயுடன், விருதும் வழங்கப்பட்டது.
மாணவர்களிடம் சிந்தித்து செயல்படும் திறன் அதிகம் உண்டு. அவற்றை துாண்டுவிடும் பணியை ஆசிரியர்கள் செய்தால் போதும்; அவர்கள் ஜொலிப்பர். இந்த சிறுநீர் கழிப்பிடம் அமைக்க குறைந்த செலவே ஆகும் என்பதால், எந்த இடத்திலும் இதை அமைக்கலாம்.
இதற்காக, எஸ்.எஸ்.ஏ., மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது, என்றார.

புதன், 14 டிசம்பர், 2016

 SLAS MELMALAYANUR BLOCK SCHOOLS

PANCHAYAT UNION PRIMARY SCHOOL ANNAMANGALAM
PANCHAYAT UNION PRIMARY SCHOOL (BOYS) AVALURPET
PANCHAYAT UNION PRIMARY SCHOOL (GIRS) AVALURPET
PANCHAYAT UNION PRIMARY SCHOOL DEVANUR
PANCHAYAT UNION PRIMARY SCHOOL (HINDU)YATHAPPATU
PANCHAYAT UNION PRIMARY SCHOOL THOPPU
PANCHAYAT UNION PRIMARY SCHOOL KOTTAPOONDI
PANCHAYAT UNION PRIMARY SCHOOL THEPPRAMPATTU
PANCHAYAT UNION PRIMARY SCHOOL VADAPALAI
PANCHAYAT UNION MIDDLE SCHOOL AATHIPATU
PANCHAYAT UNION MIDDLE SCHOOL VALATHI
PANCHAYAT UNION MIDDLE SCHOOL MELMALAYANUR
PANCHAYAT UNION MIDDLE SCHOOL MELACHERY
PANCHAYAT UNION MIDDLE SCHOOL THAYANOOR
PANCHAYAT UNION MIDDLE SCHOOLTHENPALAI
MADRAS DIOCESE AIDED PRIMARY SCHOOL MELVAILAMOOR

SALS 2016-17 SCHOOL LIST VIEW ALL OUR TAMIL NADU PUBLISHED...( PDF format )!

SALS 2016-17 SCHOOL LIST  VIEW  ALL OUR TAMIL NADU  PUBLISHED...( PDF format)
...https://app.box.com/s/6t2z2p4hwd7br8v7q3vwpex1xe04lbgn
NMMS QUESTIONS&ANS

170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171.  . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172.  .       எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
176.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178.  எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181.  எயில் காத்தல் – நொச்சி
182.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187.  ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
188.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
189.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190.  ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191.  ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192.  ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196.  ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197.  ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198.  ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201.  ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217.  ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220.  ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்

அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவி யருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள், உதிரி பாகங்களாக, லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. 
இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார் செய்யும் பணிகள் நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், சைக்கிள் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள் திறந்த பிறகு, இலவச சைக்கிள் வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாநிலப் பாடத்திட்டத்தைப் போலவே, சிபிஎஸ்இ வழிக் கல்வியிலும் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த நடைமுறை கடந்த 2010-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் இருப்பது சிபிஎஸ்இ கல்வியின் தரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். மேலும், நேரடியாக பிளஸ்-2 பொதுத் தேர்வை எதிர்கொள்வது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றைக் கருத்தில் கொண்டே பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது அதேபோல், சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வது குறித்து மத்தியக் கல்வி ஆலோசனை வாரியம் ஏற்கெனவே பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
இம்மாத இறுதியில் சிபிஎஸ்இ வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்மானம் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். எனவே, அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடைமுறை அமலாகும் என்றார் அவர்.

6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்னா

பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கை ஒன்றை மாநில அரசு வெளியிட்டு உறுதி கூறியிருந்தது.
அறிவிக்கை வெளியிட்டு 5 மாதங்கள் ஆகியும் பணியை முறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட காலமாக ஆர்ப்பாட்டம் செய்து வந்த ஒப்பந்தப் பணி ஆசிரியர்கள், நிதியமைச்சர் பிரதீப் குமார் அமத், உள்ளாட்சித் துறை அமைச்சர் அருண் சாஹு, மின் துறை அமைச்சர் பிரணாப் தாஸ், உணவுத் துறை அமைச்சர் சஞ்சய் தாஸ் வர்மா, சட்டப் பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் விக்ரம் கேசரி அரூகா, பள்ளிக் கல்வி அமைச்சர் தேவிபிரசாத் மிஸ்ரா ஆகிய 6 அமைச்சர்களின் இல்லங்களை செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். பணியை உடனடியாக நிரந்தரம் செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மாநிலப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூறியதாவது:
பணிநிரந்தரம் தொடர்பான அறிவிக்கையை அரசு வெளியிட்டு ஐந்து மாதங்களாகிவிட்டன. பணியை முறைப்படுத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பணி வரன்முறைக்கான வழிகாட்டுதல்களில் ஒடிஸா ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அரசு நிபந்தனை விதிக்கிறது. இதனால் ஒப்பந்தப் பணியில் இருக்கும் சுமார் 17 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநிரந்தரம் செய்யப்படாமல் போகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மூன்றடுக்கு ஊராட்சித் தேர்தல் பணியைப் புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

செவ்வாய், 13 டிசம்பர், 2016

NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்


தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்
NMMS...MAT Heading
1.Number Series
2.Identifying The Wrong Number In The Series
3. Letter Series
4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type
SAT Syllables
கணிதம்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
அறிவியல்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
*சமூக அறிவியல்*
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா?

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு வசதியாகவே ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
மேலும் புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
புயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு ஒரு பெயர் சூட்டும் வழக்கம் 20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது. பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகவும், புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை இதன்மூலம் தவிர்க்கலாம் என்பதற்காக மனிதர்களை போல புயல்களுக்கும் பெயர் சூட்ட தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது. பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953-இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக சென்னையைத் தாக்கிய "நடா' புயலுக்கு ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும், தென் பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள "வர்தா' புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.

தேசிய கல்விக் கொள்கையை வகுக்க விரைவில் குழு அமைப்பு: ஜாவடேகர்

தேசிய கல்விக் கொள்கையை வகுக்க 10 நாள்களில் குழு அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
தில்லியில் திங்கள்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக மாநில அரசுகள், கல்வி நிலையங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் ஏற்கெனவே விவாதம் நடத்தப்பட்டுள்ளது. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அளித்த பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழு அடுத்த 10 நாள்களில் அமைக்கப்படும். இதற்காக பல்வேறு பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இப்பணியில் ஈடுபட அவர்கள் விருப்பதுடன் உள்ளார்களா? என்பதையும் கேட்டுள்ளோம். ஏனெனில், இப்பணி முடிய மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்றார் அவர்.
தங்கள் குழு அளித்த பரிந்துரையை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு வெளியிடவில்லை என்று சுப்பிரமணியன் குறைகூறியுள்ளது குறித்த கேள்விக்கு, "இப்போதைய தேசியக் கல்விக் கொள்கையை மதிப்பீடு செய்வதற்குத்தான் சுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டது.
எனினும், அனைத்துத் தரப்புக் கருத்துகளும் புதிய தேசியக் கொள்கையை வகுக்கும்போது பரிசீலிக்கப்படும்' என்று ஜாவடேகர் பதிலளித்தார்.

சென்னையை 7 மணிநேரமாக இடைவிடாமல் சூறையாடிய வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது!

சென்னை: சென்னை துறைமுகம் அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான வர்தா புயல் நேற்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
பின்னர் அது படிப்படியாக குறைந்து புயல் வலுவிழந்து 60 முதல் 70 கிமீ வேகத்தில் வீசத் தொடங்கியது. அப்போது காற்றுடன் சேர்ந்து பலத்த மழையும் பெய்தது. காற்றின் வேகத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், பேனர்கள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. சாலைகளில் சுமார் 20 ஆயிரம் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன.
இதில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மின்சார ரயில் தடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் ரயில்களும் நிறுத்தப்பட்டன. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன. நகரில் அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியதால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் திணறினர். சென்னை மற்றும் புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நேற்று காலை முதல் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
புயல் கரையை கடந்ததையடுத்து சென்னையில் காற்றின் வேகமும், மழையும் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசி னார்.புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட் டம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.கல்வித் துறை இயக்குனர் குமார் வரவேற்றார்.
அமைச்சர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு செயலர் அருண் தேசாய் வாழ்த்தி பேசினர்.முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை. இது ஆசிரியர் களின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.நம்முடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்.
மற்றவர்களின் பிள்ளைத்தான் அரசு பள்ளிகளில் சேர்க்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான வசதிகள் உள்ளன. திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.கணிப்பொறி ஆய்வகங்களும் உள்ளன.
ஆனால், அவற்றை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.வகுப்புக்கு செல்லும்முன் ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் பாடம் எடுக்கச் செல்வதில்லை. முன் தயாரிப்புடன் போனால், மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள். அகில இந்திய அள வில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. புதுச்சேரியில் 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.கல்வியில் பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகியவை தரமான கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
அங்கெல்லாம் 10 முதல் 15 சதவீதம் வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகி வருகின்றனர். நாமும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பது முக்கியம்.தேர்வில் 100 சதவீத வெற்றி என்பது சாதனை அல்ல. மாணவர்கள் எதைக் கற்றுக் கொண்டனர் என்பதே முக்கியம். இதுவரை நடந்தவற்றை விட்டுவிட்டு, இனிமேல் கல்வித் தரத்தை மேம்படுத்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கிறோம்.
மேலும், சிறப்பாக பணியாற்றினால் இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து கூட்டத் தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், 16 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்து பரிந்துரை அளித்தனர். அந்த பரிந்துரைகளில் தேவையாவற்றை அரசு நிறைவேற்றும்.இதேபோன்ற கலந்துரையாடல் கூட்டங்கள், அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள், 12 டிசம்பர், 2016

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!

ரொக்கம் இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி.

THANKS :MR.JAYAPRAKASH
CPS எனப்படும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதியை பற்றியும், எத்தனை பக்க அறிக்கை தயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்துபெறப்பட்ட கருத்துக்களை

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் இன்று காலை 8.30 மணி

'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்

புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் முறையிலும், எலக்ட்ரானிக் முறை யிலும் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்ப தில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என, அரசு நம்புகிறது.
இந்நிலையில், டிஜிட்டல் முறையில், பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கும்படி, என். பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணம் செலுத்து தல் கழகத்திடம், அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பான, 'நிடி ஆயோக்' கேட்டுக்கொண்டுள்ளது.
'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்த னைகள் சிறப்பான வகையில் அதிகரித்துள்ளன. அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசுத் திட்டங் களை, அரசு அறிவிக்கும். டிஜிட்டல் முறையில் பரி வர்த்தனை செய்வோருக்கு, இரு கட்டமாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும், குலுக் கல் முறையில், பரிசுக்கு உரியோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மற்றொரு கட்டமாக, காலாண்டுக்கு ஒரு முறை, பெரியளவில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
ஏழைகள், நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்களை குறிவைத்து, இந்த திட்டங்கள் தயாரிக்கப்படும்.
பரிசுத் திட்டங்கள் குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நவ., 8க்கு பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் அனை வருக்கும், பரிசு பெறத் தகுதி உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற முடியாது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு:
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இத்துணை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது. ஆனால் இன்று நடந்த விவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதி விசாரணையாக விசாரிக்கப்படும். 
இறுதி விசாரணை வரை தற்போதுள்ள தடையாணை உள்ளபடியே தொடரும். இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும். இதன் மூலம், புதிதாக தடையாணை ஏதும் இவ்வழக்கில் பெற இயலாது. அதே சமயம், இருக்கின்ற தடையாணையை யாராலும் நீக்க முடியாது. இனி ஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே. ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம் லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்கு வர சில மாதங்கள் ஆகும். 
இன்னும் சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல் கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை. தங்கள் உண்மையுள்ள, ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் ,தருமபுரி மாவட்டம்.

வர்தா புயல் - 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 12.12.2016 விடுமுறை

1.சென்னை  (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
4.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)
5.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
6.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)
7.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

🌷நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் :👇👇👇🌷

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

🌹7வது இடம்

2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

🌹23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

🌹16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

🌹15வது இடம்

தமிழக புதிய அமைச்சரவை விவரம்:

1. ஓ.பன்னீர் செல்வம் - பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
3. செல்லுார் ராஜூ - கூட்டுறவுத் துறை
4. தங்க மணி - மின்சாரம், மதுவிலக்குத் துறை
5.வேலு மணி - நகர வளர்ச்சி துறை
6.ஜெயகுமார் - மீன்வளத் துறை

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.


1)ஏ. சுப்பராயலு-
17.12.1920 - 11.07.1921.

2) பனகல் ராஜா 
11.07.1921- 3.12.1926.

3) பி. சுப்பராயன்
04 .12.1926- 27.10.1930

4)பி. முனுசுவாமி நாயுடு 
27.10.1930 -4.11.1932

5) ராமகிருஷ்ண ரங்காராவ்
5.11.1932 -04.04.1936

11.12.1882: மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினம் இன்று!


சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.
பாரதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் - இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882ல்  பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று வீட்டில் அழைக்கப்பட்டார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே தனக்கு உள்ள கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். பாரதி 1897 ஆம் ஆண்டு தனது 15-ஆம் வயதில் செல்லம்மாளை மணந்தார்.
எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சிப் பாரதி என்ற பட்டம் வழங்கினார். தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். அத்துடன் பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
உடல் நிலை சரியில்லாத நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் செப்டம்பர் 11, 1921 அன்று இயற்கை எய்தினார்.
பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கிய படைப்புகள் என்பது பாரதியாருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி வெளியேற்றம் : ஆசிரியை இடமாற்றம்

சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவியை, பள்ளியை விட்டு வெளியேற்றிய தமிழ் ஆசிரியை, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். வேலுார் மாவட்டம், திம்மணாமுத்துார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின், 12 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 


ரமேசும், மகளும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். நவ., 24ல், பள்ளிக்கு மாலை அணிந்து வந்த மாணவியை, தமிழ் ஆசிரியை மணிமேகலை, பள்ளியை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. மாணவியின் தந்தை ரமேஷ், வேலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் புகார் செய்தார். திருப்பத்துார் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி விசாரணையில், சம்பவம் உண்மை என, தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை மணிமேகலை, திருப்பத்துார் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.