NEET விலக்கு அளிக்க ஒப்புதல். (News Update)
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டவரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அரசு அவசர சட்டம் இயற்றியது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவு 14 ல் மத்திய அரசின் 3 துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அவசர சட்டவரைவு சரியானதே என்று தலைமை வக்கீல் வேணுகோபாலும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். அவசர சட்டவரைவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக நீட் அவசர சட்ட வரைவு 2 நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.