வீட்டில் பணம் அதிகமாக சேரவும், பணத்தை கையாளும் முறைகளை என்ன? என்ன? என்பது பற்றி அறிவோம்..
வீட்டில் பணம் அதிகமாக சேரவும்,
பணத்தை கையாளும் முறைகளை என்ன? என்ன? என்பது பற்றி அறிவோம்..
1.பணம் எப்போது வந்தாலும் அதை எந்த காரணத்தை கொண்டும் நீங்கள் பூஜையறையில் வைக்காதீர்கள்.
2. பணம் ஆனது நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்கு சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத்தன்மையுடன் வைத்திருப்பதால் அதை பூஜையறையில் கண்டிப்பாக வைக்க கூடாது.
3.உங்களுக்கு வருகிற பணத்தை சுத்தமான சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் மேலும் பல மடங்காக பெருகும்.
4.பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டிற்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியை போன்றது. அதை நன்கு சுதந்திரமாக பறக்கவிடுங்கள். 5.நல்ல விஷயங்களுக்கு தாராளமாக நீங்கள் செலவு செய்யுங்கள்.
உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களை தேடி மீண்டும் மீண்டும் கண்டிப்பாக வரும்.
6. அளவுக்கு மீறி பணம் வந்தாலும் 'சிக்கனமாக இருக்கிறேன்" என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் சிறிது கூட அனுபவிக்கமாட்டார்கள். வேறொருவர்தான் அந்த பணத்தை செலவு செய்து வாழ்வார்.
7.பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். 8.மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள்.
9.பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும், குறை குறையோடு சேரும் என்பதால், 2000 ரூபாய் நோட்டாக வைப்பது நல்லது.
10.பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
பணத்திற்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், போதும் பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.
மேலே சொன்னதை விட மிக முக்கியமானது அந்த மகா லெட்சமி தேவியை தினமும் உங்கள் வீட்டில் வணங்க வேண்டும்.
நீங்களும் மாகா சொரூபமான லட்சுமியின் ஆசீர்வாதங்களைப் பெற விரும்பினால், கீழேயுள்ள கருத்துப் பிரிவில் "ஜெய் மா லட்சுமி" என்று எழுத மறக்காதீர்கள்.
.....................