பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழங்காசுகள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சி........
Friday, February 21, 2020
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழங்காசுகள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக
தேர்வு நெறியாளர் சீனிவாச ராகவன் கண்காட்சியை திறந்து வைத்தார். வரலாற்றுத்துறை தலைவர் சீனிவாசராவ் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் சேர, சோழ, பாண்டியர், பல்லவர் காசுகளும், பிற்கால சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், ஹெய்சாலர்கள், கொங்கு சேரர்,மதுரை சுல்தான், விஜயநகர், திருமலைராயர் ,மதுரை நாயக்கர், செஞ்சி நாயக்கர், தஞ்சை நாயக்கர், தஞ்சை மராட்டியர், ஆற்காடு நவாப் ,பிரிட்டிஷ் இந்தியா, கிழக்கிந்திய நிறுவனம், சுதந்திர இந்தியா நாணயங்கள், பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அரியலூர் மாவட்ட கடல் படிமங்கள், கற்கால ஆயுதங்கள், புதிய கற்கால ஆயுதங்கள், சங்ககால சங்கு வளையல்கள், சங்க கால கல்பாசி மணிகள், சுடுமண் பொம்மைகள், மண் வடித்தட்டு, சில்லாக்குகள், சுடுமண் காதணிகள், மண் உண்டியல்கள், புகைப்பான்கள், அரண்மனை ஓடுகள், ஓலைச்சுவடி, செங்கல்கள், எடைக்கற்கள், மாவுகல் பொருட்கள் , மண்பானைகள், இரும்பு மற்றும் பீரங்கி குண்டுகள், ஈட்டி, வாள், புகைப்படங்கள்,
மட்கலன்கள், மரப்பாச்சி பொம்மைகள் ,சங்குகள், நிறுத்தல் அளவை தராசு, வானொலி, செய்தித்தாள்கள் உட்பட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கப்பட்டது. நாணயவியல் சேகரிப்பாளர் நாசர், வரலாற்று பேராசிரியர் இராச சேகர தங்கமணி, மகாராஜன், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், முகமது சுபேர், அப்துல் அஜீஸ் , துறையூர் பெரியசாமி, சந்தீப் உட்பட பலர் தனது சேகரிப்புகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள். பேராசிரியர்கள் அசோகன், இலட்சுமணன், மாரிமுத்து, முரளி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். வரலாற்றுத்துறை மாணவ ,மாணவிகள் ஆர்வமாக கண்காட்சியினை கண்டு களித்தார்கள்.
...................................