காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் 24-02-2020. தொகுப்பு தென்னரசு ஆசிரியர்......
காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
24-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண் - 1048
அதிகாரம் : நல்குரவு
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
பொருள்:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றைப் பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
- சாணக்யா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Agriculture - வேளாண்மை
1. அறுவடை - Harvest
2. வைக்கோல் - Straw
3. நாற்றங்கால் - Nursery
4. நாற்று - Seedling
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. திருச்சியில் இரயில்வே தொழிற்சாலை எங்குள்ளது ?
பொன்மலை
2. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ?
திருச்சி
✡✡✡✡✡✡✡✡
Daily English
Tetra syllabic words
1. biology - bi-o-lo-gy
2. calculation - cal-cu-la-tion
3. astrology - as-trol-o-gy
4. economy - e-con-o-my
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
வாத்து
🐤 வாத்து ஒரு பறவை இனமாகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
🐤 வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. இவை நல்ல நீரிலும், உப்பு கொண்ட கடல் நீரிலும் வாழக்கூடியவை.
🐤 பெரும்பாலான வாத்து வகைகளில் அதன் அலகு அகண்டு தட்டையாகவும், இறையைத் தோண்டி எடுப்பதற்கு ஏற்றவாறு இருக்கும்.
🐤புற்கள், நீர்த்தாவரங்கள், மீன்கள், புழுக்கள், சிறுநத்தைகள், தவளை போன்ற பலவகை உயிரிகளை உணவாக உண்கின்றன.
🐤கோழி வளர்ப்பிற்கு அடுத்தபடியாக வாத்து வளர்ப்பு நம் நாட்டில் முக்கியமான ஒன்றாகும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
Beg Your Pardon Mrs Hardin
One afternoon, a little boy had lost his kitten. He looked under his bed. He looked all over his house. But still there was no puppy. Finally, he looked for his puppy in the garden. After a few hours, he still could not find the puppy.
The little boy was tired and was about to give up. Then he saw his neighbour, Mrs Hardin.
“I beg your pardon, Mrs Hardin. Is my puppy in your garden?" asked the little boy.
“Oh yes, she is. She is chewing on a mutton bone," replied Mrs Hardin.
The little boy climbed the fence and saw his puppy chewing on a mutton bone. He was so happy that his puppy was not lost but had only gone to his good neighbor’s house to eat.
Moral :
Do not give up searching for something you have lost too soon.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ள நாமக்கல்லை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி அபிநயாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
🔮கொரோனா பாதிப்பு எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலையை சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
🔮இத்தாலியில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
🔮அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை வரவேற்க இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
🔮கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை எளிமையாக்கும் முக்கிய கட்டளைகளின் ஒன்றான கட், காபி, பேஸ்ட் வசதியை கண்டுபிடித்த லாரி டெஸ்லர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
🔮நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 39 ரன்கள் பின்தங்கி உள்ளது.
🔮மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவ்வையார் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.
HEADLINES
🔮US President Donald Trump leaves for maiden visit to India.
🔮The Huddle 2020 | Regional integration pegged to SAARC revival, says Ranil Wickremesinghe.
🔮India’s biodiversity is a ‘unique treasure’ for entire humankind: PM Modi in Mann ki Baat.
🔮Navy MiG-29K crashes off Goa, pilot ejects safely.
🔮Four Indians on board cruise ship test positive for COVID-19, total number of infected Indians rises to 12: Embassy.
🔮T.N. cancels notification on petrochem investment region.
🌴🌴🌴🌴🌴🌴🌴
.................................................................