தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பில்
புதிதாக 'டிவி' சேனல் துவக்கப்பட்டுள்ளது. 'கல்வி சோலை' என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்த சேனலை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிர்வகிக்க உள்ளது.மாணவர்களுக்கான நன்னெறி கதைகள் எளிதாக கணக்கு பாடம் கற்றல் பள்ளி செயல்பாடுகள் சிறந்த பரிசு பெற்ற பள்ளிகளின் செயல் திட்டம் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களின் செயல்பாடுகள் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.இதற்காக தொழில்நுட்ப ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த தொலைக்காட்சிக்கு தமிழக அரசின் கேபிள் 'டிவி' நிறுவனத்தில் 200ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதமாக சோதனை ஒளிபரப்பு நடந்து வருகிறது.ஆனால் இரு தினங்களாக பெரும்பாலான கேபிள் ஆப்பரேட்டர்களின் 'செட் டாப் பாக்ஸ்'களில் கல்வி சோலை சேனல் சேர்க்கப்பட்டு சோதனை ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஜூன் 3 முதல் முழு நேர ஒளிபரப்பை துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 55 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய 'டிவி'க்கள் வாங்கப்பட உள்ளன.