வெள்ளி, 29 செப்டம்பர், 2017
செவ்வாய், 26 செப்டம்பர், 2017
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
Tamilnadu Open University - B.Ed - Application - Prospectus - 2018
B.Ed-Application-Prospectus-Full-Final-2018*Tamilnadu Open University*
School of Education
B.ED Admission Notification- CY-2018
Duration - 2years
Medium of Instruction and Examination- Both in Tamil and English Medium
Cost of Application - Rs.500/-
Selection - Selection of candidates will be based on mark basis
அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்
புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும், இத்துறை தேர்வுகளுக்கான பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், டிச., 23 - 31 வரை, அரசு துறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு, நேற்று துவங்கி உள்ளது. தேர்வெழுத விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம். அக்., 31 வரை, விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. டிச., 17 முதல், 'ஹால்டிக்கெட்'டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது
DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்
ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது பணிப்பதிவேடு உள்பட அனைத்து பதிவேடுகளும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து, டிஜிட்டல் முறையில் பராமரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் எவ்வித விடுதலும் இல்லாமல் பதிவுகள் சரி செய்யப்பட வேண்டும் என, தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர்களிடம் பதிவேடு வழங்கப்பட்டு விடுதல்களை சரி செய்யும் முகாம் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பதிவுகள் விடுபட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதிவுகள் இல்லாத காலக்கட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள்தான், பதிவுகளை சரி செய்து தர வேண்டுமென உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை பதிவுகள் சரி செய்யும் பணியே முடிவடையவில்லை. இதனால் கருவூலம் மூலம் கணினிமயமாக்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை நிலவுகிறது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ‘‘பணிப்பதிவேடு என்பது ஊதியம், பணி மாறுதல், பதவி உயர்வு, கல்வித்தகுதி, வாரிசுதாரர் நியமனம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். அதில் பதிவுகள் விடுபட்டதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு. 6 மாதத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டை முறையாக பெற்று நகல் எடுக்கலாம் என்ற விதி உள்ளது. எனினும் பல்வேறு அலுவலகங்களில் இது கடைபிடிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்திருந்தால் விடுதல்கள் அப்போதே சரி செய்யப்பட்டிருக்கும். எனவே, விடுபட்ட பதிவுகள் அனைத்தையும் அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். கணினிமயமாக்கலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
NCERT புத்தகங்கள் மனுவை பரிசீலிக்க உத்தரவு
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி குழு புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் புருஷோத்தமன், தாக்கல் செய்த மனு:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆரம்ப நிலையில் உள்ளகுழந்தைகளுக்கு, மூன்றுஅல்லது நான்கு பாடங்கள்கற்பிக்கப்படுகின்றன.இந்த குழந்தைகளுக்கு,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 6ம் வகுப்பில் இருந்து, வெவ்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை, தனியார் பள்ளி களில் அனுமதிப்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு மனு
அனுப்பினேன்.அதற்கு, ௨௦௧௭ ஜன., முதல், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டும் வாங்க, தனியார்,சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அறிவுறுத்திஇருப்பதாக, பதில்அளிக்கப்பட்டது.என்.சி.இ.ஆர்.டி., நிர்ணயித்த பாடங்களைமட்டுமே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிற்றுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை வாங்கும்படி, பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்கும்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கிருபாகரன்முன், விசாரணைக்குவந்தது. மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் குழந்தை பருவத்தை பாழாக்குவதாக, நீதிபதி வேதனை
தெரிவித்தார்.என்.சி.இ.ஆர்.டி.,புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில்பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்தியஅரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், நீதிபதிஉத்தரவிட்டார்.மனு குறித்து, மத்திய அரசு, உதவி சொலிசிட்டர் ஜெனரல், சீனிவாசன் பதிலளிக்கும்படி
உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கிருபாகரன்முன், விசாரணைக்குவந்தது. மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் குழந்தை பருவத்தை பாழாக்குவதாக, நீதிபதி வேதனை
தெரிவித்தார்.என்.சி.இ.ஆர்.டி.,புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில்பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்தியஅரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், நீதிபதிஉத்தரவிட்டார்.மனு குறித்து, மத்திய அரசு, உதவி சொலிசிட்டர் ஜெனரல், சீனிவாசன் பதிலளிக்கும்படி
உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.
NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்
இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள்
பலர் கலக்கமடைந்து உள்ளனர்.
பலர் கலக்கமடைந்து உள்ளனர்.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.
இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்
சனி, 23 செப்டம்பர், 2017
ஆசிரியர்கள் கவனத்திற்கு.... NIOS தேர்வு ஆசிரியர்கள் எழுத வேண்டுமா?
✅இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற தகவல் தமிழக
ஆசிரியர் களுக்கு பொருந்தாது.
✅கல்வி உரிமை சட்டப்படி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறித்து வெளியிடப்பட்ட உத்தரவு தவறுதலாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுவிட்டது
✅ ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு அந்தந்த காலக்கட்டத்தில் என்னென்ன அடிப்படை கல்வித் தகுதிகள் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததோ அந்த தகுதிகள் இருந்தாலே போதுமானது என்பதற்கான அரசாணைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் நாம் சேர்ந்து தேர்வெழுதி வெற்றிபெற்று உள்ளோம்
✅ உரிய விதிகளைப்பின்பற்றியே நாம் நியமனம் பெற்றுள்ளோம்.
✅நியமனத்தின் போது அளிக்கப்பட்ட நிபந்தனைகளே நமக்கு பொருந்தும்.
✅மேலும் தமிழகத்தில் DTEd என்பது HSC எனப்படும் +2 க்கு சமமானது.
✅DTEd தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி
எனவே 50% மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ள நாம் மீண்டும் NIOS தேர்வு எழுத தேவையில்லை.
எனவே 50% மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ள நாம் மீண்டும் NIOS தேர்வு எழுத தேவையில்லை.
தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு...
தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். இந்த போனஸ் மற்றும் கருணைத் தொகை, போனஸ் சட்டத் திருத்தம் 2015–ன்படி, ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்குக் கிடைக்கும்.
முன்னதாக ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே மாத ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநில போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை உற்பத்திக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வன பயிர்க் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான போனஸ் அறிவிப்பு, தலைமைச் செயலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் கடந்தாண்டு வழங்கப்பட்டதுபோல தனியாக வெளியிடப்படும்.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் தொடர்பாக தனியாக ஆணைகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
JACTTO-GEO போராட்டம் : சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசு.
சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது தமிழக அரசு தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரம் என்பதின் பேரில் நீதிபதிகளையும்
நீதித்துறையும் விமர்சிப்பது ஏற்கத்தக்கதது அல்ல என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போராட்டக் காலத்தில் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுழப்பியுள்ளார். அக்டோபர் 4-ம் தேதி நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளது.
போராட்டக் காலத்தில் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுழப்பியுள்ளார். அக்டோபர் 4-ம் தேதி நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் : பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வு; ஒரே மாதத்தில் முடிவு வெளியிடப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளிகளில் 2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். தேர்வுமுடிவுகள் ஒரே மாதத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-2315 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பணியானது வெறும் 40 நாளில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறோம்.மாணவர்கள், பள்ளிகள் இடையே தேவையற்ற வேறுபாட்டு உணர்வை ஏற்படுத்தக்கூடிய பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ரேங்க் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் எழுதிய 19 லட்சம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ்மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பினோம்.தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இந்த மாத இறுதியில் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளுக்கு கணினிஆசிரியர்கள் (748 காலியிடங்கள்) 2 மாதத்தில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். அதற்காக நடத்தப்படும் தேர்வின் முடிவு ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டும். மேலும் கற்றல்குறைபாடு உடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, “அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.
நீட் போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சியானது வெளிமாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மூலம் அளிக்கப்படும். இதற்கான சிறப்பு நிகழ்ச்சி அண்ணா நூலகத்தில் நடைபெறும். மேலும், மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக பள்ளிகளில் இந்த மாத இறுதியில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்” என்றார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே! பூனைக்கு மணி கட்டுவது யார்?
ஃபின்லாந்தில் 7 வயதுக்கு மேல்தான் பள்ளிக் குழந்தைகளின் கைகளில் எழுதுவதற்கு எனப் பென்சில்கள் அளிக்கப்படுகின்றன என்று எப்போதோ வாசித்தேன். இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது பெயருக்குத்தான் மத்திய அரசின் பாடத்திட்டம்.
ஆனால் மாநிலத்தில் பின்பற்றப்படுவது எந்த விதமான சிலபஸ் என்றே பெற்றோர்களுக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. இன்று சென்னையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பல பள்ளிகள் செயல்படுகின்றன. அத்தனை பள்ளிகளும் பின்பற்றுவது சிபிஎஸ்இ சிலபஸைத்தான் என்றால், ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் பாடங்கள் வெவ்வேறு விதமாக இருக்க வேண்டும்.
சில பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகளிலேயே 1 முதல் 150 வரை எண்களை மனப்பாடம் செய்யச் சொல்லி அடையாளம் காண்பிக்கச் சொல்கிறார்கள். சில பள்ளிகளில் யூகேஜி மாணவர்கள் 1 முதல் 50 வரை எண்களை, எழுத்தில் எழுதிக் காட்ட வேண்டுமாம். அதாவது ONE, TWO, THREE, FOUR, FIVE, SIX, SEVEN, EIGHT, என FIFTY வரை. யூ.கே.ஜி பருவத்தில் குழந்தைகள் இந்த எண்களை மனனம் செய்து மனதில் நிறுத்திக் கொள்வதையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதவேறு வேண்டும் என்கிறார்கள். 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு இது ஒருவிதமான சுமையின்றி வேறென்ன? முதலில் அந்தக் குழந்தைகளின் விரல்களில் அதற்கான பலமுண்டா என்று யோசிக்க வேண்டும். விளையும்போதே பயிர்களை உடனடி மரங்களாக்கும் முயற்சிதான் இது!
எண்களை மட்டுமல்ல சில பள்ளிகளில் த்ரீ லெட்டர் வேர்ட்ஸ் என்ற பெயரில் குட்டிக் குட்டி சொற்களையும்கூட யூகேஜி வகுப்புகளுக்கான தேர்வுகளில் எழுதச் சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட இன்னொரு சோகம் என்னவென்றால், ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை. பெரும்பாலான அம்மாக்களுக்கு ஃபோனிக்ஸ் முறையில் கற்பித்தல் என்றால் என்னவென்றே விளங்குவதில்லை. வகுப்பு ஆசிரியைகளிடம் கேட்டால், நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள் யூடியூபில் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து கற்றுக் கொடுத்து பிராக்டிஸ் எடுத்துக்கொள்ளச் செய்யுங்கள். அப்போதுதான் தேர்வு சமயத்தில் எளிதாக இருக்கும் என்கிறார்கள். அந்த ஆசிரியைகளைச் சொல்லியும் பலனில்லை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்?!
ஆனால், இவ்விஷயத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட முறைப்படி வீட்டில் கற்பிப்பது எப்படி? என்று வருடத் துவக்கத்திலேயே மாதம் ஒருமுறையோ அல்லது மும்முறையோ நீங்களே பெற்றோருக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள் ஏதாவது நடத்தினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும்! ஏனென்றால், இன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பேறு கொண்ட குழந்தைகள் அத்தனை பேரின் அம்மாக்களும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வெளிவந்தவர்கள் அல்ல. அவர்களில், கிராமத்துப் பள்ளிகளில் ஆங்கில இலக்கண வாடையே தெரியாமல் படித்து, திக்கி, முக்கித் திணறி நகர வாழ்க்கைக்குள் வந்து, தாங்கள் அடைந்த துயரம் தங்களது பிள்ளைகளும் அடையக் கூடாது என்ற நோக்கில், தரமான கல்விக்காக உங்கள் பள்ளிகளில் தம் வாரிசுகளைச் சேர்த்துவிட்டு, உங்கள் கற்பித்தல் முறையை விளங்கிக்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களும் பலர் இருக்கலாம்.
அப்படிப்பட்ட பெற்றோர்களின் பிரதிநிதியாக புருசோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகம் எனக் கூறி, அதைக் குறைக்கச் சொல்லிக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், குழந்தைகள் விளையாட வேண்டிய வயதில் அவர்களைப் பாடங்களால் திணறடித்து மெளனிகளாக்கி துன்பப்படுத்துகிறோம். அவர்களது பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும். புருசோத்தமனின் கோரிக்கை குறித்து சிபிஎஸ்இயும், மத்திய அரசும் உடனடியாகப் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்.
வாரமொருமுறைகூட விளையாட அனுமதிக்கப்படாமல், அப்படியே அனுமதி இருந்தாலும் அது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டாக இல்லாமல் பன்னிஸ் என்ற பெயரிலோ, ஸ்கவுட் என்ற பெயரிலோ மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைக்கப்படும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் சோகம், இவரது உத்தரவின் மூலமாகவாவது தீர்ந்தால் சரி!
தரமான கல்வி என்றால் கஷ்டப்பட்டுத்தான் பயில வேண்டும் என்று யாராவது சொல்லிவிடாதீர்கள். இதைவிடக் கடினமான பாடத்திட்டங்களைக்கூட செயல்முறையில் மிக எளிதாக்கி தங்கள் மாணவர்களுக்குக் கற்பித்து சாதனையாளர்களாக்கும் நாடுகளும் இந்த உலகில்தான் இருக்கின்றன. அங்கிருந்து ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றி நீங்கள் அறியாமலிருக்க முடியாது.
முதலில் உங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பிக்கும் பெற்றோர்கள், தங்களுக்கு பாடத்திட்டத்தில் ஏதாவது சந்தேகம் அல்லது குழப்பம் என்று உங்களை அணுகினால், எல்லோரிடமும் பொத்தாம் பொதுவாக இணையத்தில் தேடுங்கள் என்ற பதிலைச் சொல்லி வாயை மூடாமல், குறைந்தபட்சம் எல்லாப் பெற்றோர்களுக்கும் மாதம் ஒருமுறையாவது பாடத்திட்டம் குறித்த சந்தேக நிவர்த்திக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பாருங்கள். பெற்றோர்கள் நிச்சயம் மனம் மகிழ்வார்கள்.
வெள்ளி, 22 செப்டம்பர், 2017
உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு விதித்த தடை நீக்கம்.
நாளை நடைபெற உள்ள உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வுக்கான தடையை நீக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு தடை நீக்கம்.இடைக்கால தடை நீக்கத்தை அடுத்து நாளை வழக்கம் போல் தேர்வு நடைபெறும்.
புதன், 20 செப்டம்பர், 2017
உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை
மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, 22 ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன.இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தைவிட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
உத்தரவு : இது குறித்து, 22ம் தேதி, சென்னையில், மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாணவர் சேர்க்கை விபரம், மூடப்பட்ட, செயல்படாத பள்ளிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மின் வசதியில்லாத பள்ளிகள், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை, 'ஸ்மார்ட்' பள்ளிதேர்வு பட்டியல் என, ௩௬ வகை அம்சங்களுடன் கூட்டத்தில்பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாணவர்கள், பெற்றோர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வினால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மாணவர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தி இருந்தால் மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்து இருக்கலாம் என்று கூறி, கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கிருபாகரன், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன? இதில் அரசியல் கட்சியினர் எத்தனை போராட்டங்களை நடத்தி உள்ளனர்? அவை அமைதியான முறையில் நடத்தப்பட்டதா?
மாணவர்கள் ஈடுபட்ட போராட்டங்கள் எத்தனை? இதுதொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? போராட்டத்தை வேறு ஏதேனும் தனியார் அமைப்புகள் தூண்டிவிடுகிறதா?
‘நீட்’ தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழக அரசு மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? போராட்டம் காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏன் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடாது?
‘நீட்’ தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்த விவரம் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் உள்ளன. அத்தகைய கேள்விகள் அடங்கிய புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு இன்று(புதன்கிழமை) பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
செவ்வாய், 19 செப்டம்பர், 2017
DEEO MEETING NEWS
DEEO meeting news:
1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
2. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிக்க, சரி செய்ய வேண்டியவைகளை BDO ற்கு தெரியபடுத்தவும். 3. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. ஆபத்தான புளுவேல் விளையாட்டை பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
5. பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் , 31.3.2019 குள் NIOS exam pass செய்ய வேண்டும். இல்லை எனில் அன்று முதல் பணி இழக்க நேரிடும். உடனடியாக தலைமை ஆசிரியர்கள், இ. ஆ. தங்களின் +2 சான்றிதழ் சரிபார்க்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
6. NAS தேர்வு 3,5,8 வகுப்புகளுக்கு இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும். அதற்கு மாணவர்களை தயாரிப்பு செய்ய வேண்டும்.
7. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடுகள்செய்ய வேண்டும்.
8. SMART CLASS தொடக்க நிலையில்4 மற்றும், நடுநிலைப்பள்ளிகளில்3ம்,
9. அறிவியல் கண்காட்சி வட்டாரஅளவில் அனைத்து பள்ளிகளும் கலந்துகொண்டு சிறப்பாக அமைய வேண்டும். அதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயல் பட வேண்டும்.
10. தூய்மை இந்தியா உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும்.
CPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்...
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,” புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா? செலுத்தவில்லை என்றால் ஏன் செலுத்துவதில்லை? எப்போது செலுத்தப்படும்?
2003ம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்படவில்லை என்றால் எப்போது கொடுக்கப்படும்? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 18ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், நிதித்துறை செயலாளர் சித்திக் சார்பில் அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய் காந்தி நீதிமன்ற கேள்விகளுக்கு பதிலளித்து நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2004 ஆகஸ்ட் 4ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவின்படி அரசு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் 10 சதவீதம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
இத்துடன் அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து பொது கணக்கில் செலுத்தப்படுகிறது. மார்ச் 2017 வரை வட்டியுடன் சேர்ந்து ரூ.18,016 கோடி இருப்பு உள்ளது. 2016-17 கணக்கு சீட்டு அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டு, இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியம் தொடர்பாக 2016 பிப்ரவரி 22 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு, மரணம், பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்த தொகை உடனடியாக கொடுக்கிறோம். கருவூலம், கணக்கு துறை ஆணையர் அறிக்கைபடி 2017 ஆகஸ்ட் 31 வரை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கணக்கை முடிக்க கேட்டு 7450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125,24,24,317 வழங்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான ஆவணங்கள் கிடைத்தபிறகு ஒப்புதல் வழங்கப்படும். அரசு தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
* 2003 ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
* 2004 ஆகஸ்ட் 6ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதை பின்பற்றி 2004 ஜனவரி 1 முதல் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்
தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில்,'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தை, ஒவ்வொரு துறைகளிலும் நடை முறைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, செப்., 15 முதல், இத்திட்டம் குறித்து, ஒவ்வொரு துறையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, அக்., 2 வரை, பள்ளிகளில் கட்டாயம் நடத்த வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்
*கடந்த ஆண்டில் 12 ம் வகுப்பு முடித்த அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு*
*கல்வியாளர்கள் சங்கமம்*
ஒருங்கிணைப்பில்
*Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை*
*Seekers கல்வி மையம்*
இணைந்து நடத்தும்
*இலவச நீட் தேர்வுப்பயிற்சி முகாம்*
ஒருங்கிணைப்பில்
*Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை*
*Seekers கல்வி மையம்*
இணைந்து நடத்தும்
*இலவச நீட் தேர்வுப்பயிற்சி முகாம்*
*மாணவர் தேர்வு மற்றும் பயிற்சிக்கான ஆலோசனைக்கூட்டம்*
வரும் 24.09.2017 அன்று ஞாயிறு காலை 9.30 மணி அளவில் திருச்சி- தென்னூரில் அமைந்துள்ள பாபா டவரில் உள்ள *seekers அரங்கில்* நடைபெறும் ..
வரும் 24.09.2017 அன்று ஞாயிறு காலை 9.30 மணி அளவில் திருச்சி- தென்னூரில் அமைந்துள்ள பாபா டவரில் உள்ள *seekers அரங்கில்* நடைபெறும் ..
தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும்
*தங்குமிடம்*
*உணவு*
*6 மாத காலப் பயிற்சி* என அனைத்தும் *இலவசம்*
*தங்குமிடம்*
*உணவு*
*6 மாத காலப் பயிற்சி* என அனைத்தும் *இலவசம்*
மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வருகை தர கேட்டுக்கொள்கிறோம்..
*வாட்ஸ் அப்* தொடர்புக்கு..
9994119002
9994119002
பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பாலியல் தொல்லை குறித்த எச்சரிக்கை: தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவு
மத்திய, மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக அறிவுரைகள் இடம்பெற தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதும், இது தொடர்பாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து அந்த அமைச்சகம் கேட்டுக்கொண்டதின் பேரில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) இயக்குனர் ஹிருஷிகேஷ் சேனாபதி நேற்று அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களின் கடைசி பக்க அட்டையின் உட்பக்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக எது நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பது பற்றிய அறிவுரைகள் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் இடம் பெற்றிருக்கவேண்டும். இதுபற்றி ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறவேண்டும். பாலியல் தொல்லை குறித்து மாணவ-மாணவிகளோ, பெற்றோரோ புகார் தெரிவிக்க அல்லது கவுன்சிலிங் பெற உதவி தொலைபேசி எண்களும் அந்த பக்கத்தில் இடம்பெற வேண்டும். பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும் அதில் சுருக்கமாக தெரிவிக்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள்: அமைச்சர் செங்கொட்டையன்
மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக
மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இது தொடர்பாக இன்று அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மாணவர்களுக்கு கல்வி வினாக்கள் அடங்கிய சி.டி. இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பல்துறை பேராசிரியர்களைக் கொண்டு 412 மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் : சபாநாயகர் தனபால் அறிவிப்பு...
டிடிவி தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநரிடம் மனு கொடுத்ததால் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்களின் விவரம்:
செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), தங்கதமிழ்செல்வன்(ஆண்டிபட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), ரெங்சாமி (தஞ்சை), சுப்பிரமணியன் (சாத்தூர்), கென்னமாரியப்பன் (மானாமதுரை), சுந்தர்ராஜ் (ஒட்டபிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு (பெரியகுளம்), வெற்றிவேல் (பெரம்பூர்), முத்தையா (பரமக்குடி), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்), ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்), கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்), உமாமகேஸ்வரி (விளாத்திக்குளம்) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுமாறு 19 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனிடையே தமது கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக 19 எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரை சந்தித்ததாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து சபாநாயகர் 19 எம்.எல்.ஏ.க்களும் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தினகரன் ஆதரவாளராக இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். இதில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும்கடந்த வாரம் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார். மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவையிலிருந்து கர்நாடகாவின் கூர்க்கில் உள்ள சொகுசுவிடுதியில் தற்போது தங்கியுள்ளனர். இதனிடையே பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல், தங்கதழிச்செல்வன் விளக்க அளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் சபாநாயகர் கால அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி இழப்பு செய்வதாக சபாநாயகர் தனபால்அறிவித்துள்ளார்.
69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50% இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நீட் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்று 1,138-வது இடத்தில் தேர்வு பெற்றுள்ள தமக்கு மருத்துவ சேர்க்கைக்கான தகுதி பட்டியலில் 50% வருவதாகவும், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டினால் தன்னுடைய வாய்ப்பு பறிபோனதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சிவபாலமுருகன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார்.
இதை ஏற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவ கலந்தாய்வு முடிந்து விட்டதாக கூறிய உச்சநீதிமன்றம், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கூடுதல் அவகாசம் தர முடியாது என்று தெரிவித்துள்ளது.
நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
📡நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
📡புதிய பாடத்திட்டம் அமைப்பதற்கான குழுவில் இருந்து உதயசந்திரன் நீக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
📡 புதிய பாடத்திட்டம் அமைப்பது குறித்து அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களை மாற்றக்கூடாது என்ற வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.
*#ஜேக்டோ - ஜியோ தொடர்பான வழக்கில் இன்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள்.
*# அரசு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறது.
*# ஆகஸ்ட் 31 வரை 3288 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க 125.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)