பாதுகாப்பான அப்ளிகேஷன்கள்!
கூகுள் நிறுவனம் தயாரித்த ஆண்ட்ராய்டு OS தற்போது அதிக நபர்களால் ஸ்மார்ட்போன்களில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் IOS-களைக் காட்டிலும், ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அதன்படி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ஆண்ட்ராய்டு OS-ல் உள்ள play store வசதியானது பாதுகாப்பான தகவல்களை வழங்குகிறதா என்ற கேள்வி பெரும்பாலானவர்களிடம் எழத் தொடங்கியது.

அதற்கான தீர்வாக புதிய முயற்சி ஒன்றினை மேற்கொள்ள உள்ளது கூகுள் நிறுவனம். இனி உறுதி செய்யப்படாத பயனர்களின் குறைந்த ரேட்டிங் கொண்ட அப்ளிகேஷன்கள் தேடலில் மேலே வராமல் இருக்கும். உறுதி செய்யப்பட்ட அதிக ரேட்டிங் கொண்ட அப்ளிகேஷன்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் அப்ளிகேஷன்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் பயனர்கள் தேடலில் காண்பிக்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்படும் தானியங்கி செயலியில் புதிய program-கள் சேர்க்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த முயற்சியினால் பயனர்களுக்குப் பாதுகாப்பான, நம்பக தன்மை கொண்ட அப்ளிகேஷன்கள் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.