சுதந்திர தினம்!
KALVICIKARAM.COM - ன் 71 வது இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
வரலாறு இதுவரை கண்டிராத பாதுகாப்பு கண்ணுக்கெட்டிய துாரம் வரை காவல் துறையினரின் காக்கிச்சட்டை அணிவகுப்பு கறுப்பு பூனைகளின், 'இசட்' பாதுகாப்பு வளையம் கணக்கில் அடங்காத கண்காணிப்பு அடங்காத கண்காணிப்பு கோபுரங்கள் கண்ட இடமெல்லாம் ரகசிய கேமராக்கள் குண்டு துளைக்காத மேடை - அதில் புல்லட் புரூப் ஜாக்கெட்டணிந்து தலைவர் வருகிறார் தேசியக்கொடியை ஏற்றி வைக்க!l சுதந்திரமாக தேசியக் கொடியை ஏற்ற முடியாத தினம் இதன் பெயர் சுதந்திர தினம்!l
காட்டிலே புள்ளிமான்கள் கண்ணில் படவில்லையென்றால் கட்டாயம் தெரிந்திருக்கும் - காட்டில் கண்ணி விரிக்கும் வேடர்களின் சுதந்திரம்!l
வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களும் வருவார் பார்ப்பார் யாருமின்றி வெறிச்சோடி கிடக்குமென்றால் திண்ணமாக தெரியும் அங்கே தீவரவாதிகளின் சுதந்திரம்!l
வானில் பறந்து திரியும் வண்ணப்பறவை கூட்டம் வலையில் சிக்கிக் கொள்ளவா வாங்கி வந்தோம் சுதந்திரம்!l
குடிநீருக்கும் காற்றுக்கும் கூட மாநிலங்களுக்கிடையே சண்டையிட்டுச் சாகவா வாங்கி வந்தோம் சுதந்திரம்?l
வாக்குகளை சேகரிக்க - அபத்தமாய் வாக்குறுதிகளை கொட்டி விட்டு வாய்மையை மறந்து வாழும் வஞ்சமனம் படைத்தோரின் வசதிகளுக்காகவா நாம் வாங்கி வந்தோம் சுதந்திரம்!l
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி சத்தியத்தை மட்டும் நம்பி எங்கள் அண்ணல் காந்தி மகான் வாங்கித்தந்த சுதந்திரத்தை புத்தியில்லா கயவர் கையில் கொடுத்தல் தகுமோ?-ப.சரவணன், கல்பாக்கம்.'சுதந்திரம்'
போராடிப் பெற்ற சுதந்திரத்தைசீராட்டி நாளும் மகிழ்ந்திருப்போம்!வீரத்தால் விளைந்த விடுதலை இதனைவிண்ணதிர நாமும் வெளிப்படுத்துவோம்!
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு இறுதி மூச்சு வரையில் முயன்றிடுவோம்!இன்னல்கள் இல்லா இத்திருநாட்டை இமயத்தில் நின்று போற்றிடுவோம்!
அழகாய் பெற்ற சுதந்திரத்தைநேர் திசையில் செலுத்திடுவோம்!
சுதந்திரத்திற்காக இன்னுயிர் தந்ததியாகிகளை நினைவில் நிறுத்திடுவோம்!
எவ்விதச் சண்டைகளும் இல்லா நாட்டைஅமைதிப் பூங்காவாய் மாற்றிடுவோம்!நாட்டு மக்கள் அனைவருடனும்அன்பெனும் மொழியில் பேசிடுவோம்!பிறந்த நாட்டையே பிரித்துப் பார்க்கும் எவரையும்இரும்புக் கரத்தால் அடக்கிடுவோம்!
தாய்த்திரு நாட்டையே தாங்கிப் பிடிக்கும்தியாகக் கரங்களை வலுவேற்றுவோம்!
சுதந்திரக் காற்றில் உன்னத மணத்தைநன்றாய் நாளும் சுவாசிப்போம்!சுதந்திரத்தின் உண்மைப் பொருளைஅடுத்த தலைமுறைக்கு தந்திடுவோம்!-
ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னைஅந்த நாளை எண்ணி...l கண்ணால பாக்கல காதால கேட்டோம் நம்மள நாமே ஆளும் சுதந்திரம் உன்னால என்ன செய்ய முடிஞ்சுது? உண்மை நிலைய அலசிப்பாரு பொன்னான இளைஞரே நம்ம நாட்டப்பத்தி!l அத செய்யறோம் இத செய்யறோம் என்று அரசியல் செய்யறாங்க ஆனாலும் அறிவியல்ல முன்னோடி ஆகலையே உலகத்திலே அடுத்தவர் செஞ்சத மார்தட்டி சொல்கிறாயே!l சட்டமும் இருக்குது ஒழுங்கும் இருக்குது சரியா கடைப்பிடிக்கிறோமா என்பது கேள்வி! சமய சாத்திரப்படி நடந்தாலும் சரித்திரப்படி கேட்டாலும் ஒவ்வொரு மனிதனும் ஒழுங்கா நடந்தா தான் ஒன்றுபடும் சமூகம் உயர்ந்துவிடும் நம்நாடு!l பெத்தவங்க நல்லா படிக்கல என்று பிள்ளைகளை நம்பி பேராசைக் கொள்ளுறாங்க உன்னாசை இருக்கட்டும் ஒருபக்கம் அவங்க ஆசை நிலைக்கட்டும் என்றைக்கும்l சுதந்திரம் அடைந்தோம் என சொல்லிக் கொள்கிறோம் சுகமாய் கடந்தது பல ஆண்டு - என்று தான் கல்லாமை இல்லாமை நீங்கி வல்லமை பெறுவோமோ என்று எண்ணி... அந்த நாளை எதிர்நோக்கி அன்பு நேசம் அயராத உழைப்பு நற்சிந்தனையோடு! தினந்தினம் ஆக்கமும் ஊக்கமும் செலுத்தி ஆக்குவோம் பாரதத்தை அகிலத்தில் முதலாய் அந்த நாளை எண்ணி...-க.தாமோதரன், உளுந்துார்பேட்டை.ஆண்டின் தலைத் திருநாள்!l ஆண்டின் தலைத்திருநாள் அன்னை பாரத விடுதலை நாள் அகிம்சை நெறி நடந்து அவள் வாழ்வை வழிபடும் நாள்!l அன்னியர் ஆட்சியிலே அவள் அடைந்த இன்னல்களை தலைமுறை தலைமுறையாய் மக்கள் தகவல்கள் பெறும் திருநாள்!l உதயத்தில் கொடி ஏற்றி அன்பு இதயத்தில் விளக்கேற்றி யாவரும் ஒளிபெறும் நாள் நம்விடுதலைத் திருப்பெரு நாள்!l தொழிற்துறை சிறந்திடவும் துன்பம் தொல்லைகள் ஒழிந்திடவும் திட்டங்கள் செயல் பெறும் நாள் திகட்டா இன்பத்தை தரும் திரு நாள்!l கல்வியில் பலம் பெறவும் கைத்தொழில்களில் நலம் பெறவும் உயர்வினைப் புகழ்கிற நாள் உயிர்உறைகிற விடுதலைநாள்!l சத்ய சன்மார்க்கம் மக்கள் யாவரும் ஒருவர்க்கம் எனச்சாற்றிடும் தவத்திருநாள் இந்த சுதந்திர விடுதலை நாள்!l காந்தியும் நேருஜியும் பல கவன்மிகு தலைவர்களும் சேர்ந்ததன் திருப்பயனே கிடைத்தது சுதந்திரமே!l ஒருமைக்கு ஒருநாடு உலக அரங்கினில் உயர்நாடு நம் பாரத திருநாடு என்று புகழ்ந்ததை பாடிடுவோம்!l வறுமைகள் ஒழிந்திடவும் கொடும் வன்முறை மறைந்திடவும் திறமையால் உயர்ந்திடவும் உள்ளத் திணவினை நாடிடுவோம்!l பெண்ணினம் எழுச்சி பெற பேதமை வீழ்ச்சியுற கண்ணியம் காப்பதற்கு கைதொழுதிதை வணங்கிடுவோம்!l ஆண்டுகள் பல கோடி அன்னை பாரத புகழ்பாடி வணங்குவோம் அவள் பாதம் அவள் அவனியில் உயர்வேதம்!l வரும் தலைமுறை வாழ்ந்திடவும் அவர் வாழ்விலே ஒளிபெறவும் யாவரும் ஒருசேர்வோம்!
எட்டுத்திக்கும் புகழ் சேர்ப்போம்!