வங்கிகளுக்கு தொடர் விடுமுறை...
இந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் உள்ளது.
வங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதத்தில் குறைந்தபட்சம் 2 முறை சனி, ஞாயிறு என்று ெதாடர்ச்சியாக விடுமுறை நாட்களாக வருகிறது. இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறை விட்டாலே பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காத நிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. மறுபடி திங்கட்கிழமை வங்கிகள் திறந்த பிறகுதான் ஏடிஎம்கள் சரியாகும் நிலை உள்ளது.
இந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது. அதாவது, வருகிற 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ெஜயந்தி, 15ம் தேதி செவ்வாய் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும். மறுபடியும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ம் தேதி 4வது சனிக்கிழமை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள்.
வங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்கூட்டியே பொதுமக்கள் வங்கிகளுக்கோ, ஏடிஎம் மையங்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி நிர்வாகமும் ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.