தொடக்ககல்வி பட்டயப்படிப்பு கலந்தாய்வு ஆக 31வரை நீட்டிப்பு
கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (எஸ்இஆர்டி) க.அறிவொறி புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு ஒற்றைச் சாளரமுறை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதால் கிராமப்புற ஏழை மக்களின் குழந்தைகள் இந்தப் பயிற்சியில் சேர வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் பயன்பெறத் தக்க வகையில் மீண்டும் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இது ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படவுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தங்களது உண்மைச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உரிய கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கை ஆணை பெறலாம்