உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து துணைவேந்தர்களிடம் கவர்னர் ஆலோசனை.
உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, பல்கலை துணைவேந்தர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சார்பில், கவர்னர் அலுவலக முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:
புத்தாண்டு பிறந்த பின், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஜன., 4, இரவில் சென்னைக்கு வந்தார். புத்தாண்டை ஒட்டி, அதிகாரிகள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், கவர்னரை சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அதன்படி, ஜன., 5ல், பல்கலைகளின் வேந்தரான, தமிழக கவர்னரை, பல்கலைகளின் துணைவேந்தர்கள் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, ராஜ் பவனின் காலண்டர் வெளியிடப்பட்டது.தமிழக பல்கலைகளின் மேம்பாடு, உயர்கல்வி தரத்தை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும், துணைவேந்தர்களிடம், கவர்னர் ஆலோசித்தார். இதை, அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவை, பல்கலைகளின் துணைவேந்தர்கள் சந்தித்தது குறித்து, கவர்னர் விசாரணை நடத்தினார் என கூற முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.