டாஸ்க் மேனேஜர் முதல் பி.டி.எஃப் டவுன்லோட் வரை... அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய குரோம் ஷார்ட்கட்ஸ்!
இன்று நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் இணைய பிரவுசர்களில் ஒன்று கூகுள் குரோம்.யூ-ட்யூபில் சில ஷார்ட்கட்ஸ்களை பயன்படுத்தி, யூ-ட்யூபை எளிமையாக்க முடியும்.அதேபோல் பயன்படுத்த எளிமையாக இருக்கும் பிரவுசரான கூகுள் குரோமில், நாம் சில ஷார்ட்கட் கீகளை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். இது பயன்படுத்த இன்னும் எளிதாக இருக்கும். சிலமுறை பயன்படுத்தினாலே போதும். நம் நினைவில் நின்று விடும். பின்னர் உங்களுக்கு குரோம் முழுவதையும் இயக்க, கீ-போர்டு மட்டுமே போதும். மவுசே தேவையில்லை. பயன்படுத்தும் நேரமும் குறையும். அப்படி அடிக்கடி செய்யும் சில பணிகளுக்கான ஷார்ட்கட் கீகள் இவை:
டேப்ஸ் திறக்க (Tabs):
பிரவுசரில் ஏதேனும் ஒரு விஷயத்தை தேட வேண்டுமென்றால் நாம் முதலில் செய்வது புது டேப் ஓபன் செய்வது. இதனை மவுஸ் உதவியில்லாமல் எளிதாகவே செய்யலாம். டேப்ஸ் தொடர்பான சில ஷாட்கட் கீ-கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய விண்டோவை திறக்க Ctrl + n
புதிய விண்டோவை Incognito மோடில் திறக்க Ctrl + Shift + n
புதிய Tab-ஐ திறக்க Ctrl + t
கடைசியாக மூடிய Tab-ஐ திறக்க Ctrl + Shift + t
டேப்ஸ்-ஐ நிர்வகிக்க:
டேப்ஸ்-ஐ மூடுவது, சிறிதாக்குவது போன்ற விஷயங்களுக்கான ஷார்ட்கட் கீ-கள் இவை...
நீங்கள் பயன்படுத்தும் விண்டோவை மினிமைஸ் செய்ய, Alt + Space + n
நீங்கள் பயன்படுத்தும் விண்டோவை மேக்சிமைஸ் செய்ய, Alt + Space + x
குரோமில் உள்ள கடைசி Tab-க்கு செல்ல Ctrl + 9
இதேபோல ஒவ்வொரு Tab-ஆக செல்ல Ctrl + 1 முதல் Ctrl + 8 வரை பயன்படுத்தலாம்.
தற்போது பயன்படுத்தும் விண்டோவை மூடுவதற்கு Alt + F4- ஐப் பயன்படுத்தலாம்.
குரோம் பிரவுசரை முழுவதுமாக மூடுவதற்கு Ctrl + Shift + q என்ற கீ-களைப் பயன்படுத்தலாம்.
குரோம் இயக்கம்:
டேப்ஸ் மட்டுமல்ல. மெனு பார், புக்மார்க் பார், ஹிஸ்டரி விவரங்கள், டவுன்லோட் ஹிஸ்டரி போன்றவற்றையும் எளிதாக நிர்வகிக்கலாம். அதற்கான ஷார்ட்கட் கீ-கள் இங்கே...
மெனு ஆப்ஷன்களை திறக்க Alt + fஅல்லது Alt + e
உங்கள் புக்மார்க் பாரை மறைக்கவும், காட்டவும் Ctrl + Shift + b
புக்மார்க்ஸ் மேனேஜரைத் திறக்க, Ctrl + Shift + o
ஹிஸ்டரி பக்கத்தை, திறக்க Ctrl + h
டவுன்லோட் செய்த விவரங்களை காண Ctrl + j
மேலும் சில பயனுள்ள ஷார்ட்கட்ஸ்:
உங்கள் இணைய பக்கத்தில் உள்ள ஏதேனும் விஷயங்களை தேட, Find பார் அவசியம். அதற்கு F3 கீ-யை அழுத்துவதன் மூலமாக, Find பார் உங்கள் பிரவுசரில் தோன்றும்.
உங்கள் பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கு, மெனு பார் சென்று, ஹிஸ்டரி ஆப்ஷனை திறக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. Ctrl + Shift + Delete கீ-களை பயன்படுத்தினாலே போதும். ஒரே க்ளிக்கில் அவற்றை அழித்து விடலாம்.
உங்கள் பிரவுசரில் ஏதேனும் இணையதளத்தை தேட, www மற்றும் .com போன்றவற்றை ஒவ்வொரு தடவையும் சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பிட்ட சொல்லை அட்ரஸ் பாரில் தேடினாலே, அதுவே அது தொடர்பான இணையதளத்தை காட்டிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதைவிட எளிதாக இன்னும் ஒரு ஷார்ட்கட் கீ இருக்கிறது. இணையதளத்தின் பெயரை மட்டும் அட்ரஸ் பாரில் அடித்து விட்டு, Ctrl + Enter கீ-களை அழுத்தினாலே போதும். குரோம் தானாகவே www மற்றும் .com ஆகிய இரண்டையும் இணைத்துக் கொள்ளும். பிறகு இணையதளம் உங்களது தற்போதைய Tab-ல் திறக்கும். ஒருவேளை நீங்கள் தேடும் தளத்தின் முகவரி .org, .in போன்றவற்றில் முடிந்தால், இந்த ஷார்ட்கட் கீ உதவாது.
அதேபோல நேரடியாக உங்கள் கர்சரை அட்ரஸ் பாருக்கு கொண்டு செல்ல, Ctrl + l அல்லது Alt + d அல்லது F6 கீ-களை பயன்படுத்தலாம்.
இணைய பக்கத்தை PDF-ஆக சேமிக்கலாம்!
நீங்கள் பார்க்கும் இணைய பக்கத்தை பிரின்ட் செய்ய வேண்டுமென்றால் Ctrl + p பயன்படுத்துவீர்கள். அதே பக்கத்தை சேமிக்க வேண்டுமென்றால் Ctrl + s ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் இந்த வழியில், உங்கள் பக்கத்தை PDF ஆக சேமிக்க முடியாது. ஆனால் இதற்கும் ஒருவழி இருக்கிறது.
நீங்கள் பிரின்ட் செய்ய பயன்படுத்தும் Ctrl + p கீ-களையே இதற்கும் பயன்படுத்தலாம். இதனை அழுத்தும் போது, பிரின்ட் ஆப்ஷன் மட்டுமில்லாமல் Save as ஆப்ஷனும் நமக்கு கிடைக்கும். நீங்கள்Change என்பதை தேர்வு செய்து விட்டு, save as PDF என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தால், அந்தப் பக்கத்தை PDF-ஆக டவுன்லோட் செய்துவிடலாம். மொத்த பக்கமும் வேண்டாமென்றால், உங்களுக்கு எத்தனை பக்கங்கள் வேண்டும் என்பதனையும் தேர்வு செய்து டவுன்லோட் செய்ய முடியும்.
சின்ன சின்ன ஷார்ட்கட்ஸ்:
உங்கள் இணையப்பக்கத்தை ரீ-லோட் செய்ய F5 பயன்படும். அதனை நிறுத்த Esc கீ-யை பயன்படுத்தலாம்.
உங்கள் இணையப் பக்கத்தை புக்மார்க் செய்ய Ctrl + d-யை பயன்படுத்தலாம். ஃபுல்ஸ்க்ரீன மோட்-ஐ திறக்க/மூட F11 கீ பயன்படும்.
உங்கள் பக்கத்தில் Zoom செய்ய Ctrl மற்றும் +
உங்கள் பக்கத்தின் அளவை சிறிதாக்க Ctrl மற்றும் -
இப்படி அடிக்கடி பெரிதாக, சிறிதாக என மாற்றினால் சாதாரண அளவு எதுவென்றே தெரியாமல் போகும். அப்படி இல்லாமல், சாதாரண அளவுக்கு மாற்ற Ctrl + 0
விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் போலவே, குரோம் பிரவுசருக்கும் டாஸ்க் மேனேஜர் இருக்கிறது. Shift + Esc கீ-களை அழுத்தினாலே போதும். குரோம் டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும்.
எந்த பக்கத்தில் இருந்தாலும், ஹோம் பேஜ் செல்ல Alt + Home.
இந்த கீ-கள் அனைத்துமே கீ-போர்டு உதவியுடன் மட்டுமே இயக்குவதற்கு உதவுபவை. இது மட்டுமின்றி மவுஸ் மூலம் இயக்கும் ஷார்ட்கட் கீ-களும் இருக்கின்றன.