முதுகலைப்படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு 50% ஒதுக்கீடு
கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு,
அரசு கல்லூரிகளில் முதுகலை மருத்துவப்படிப்பில் 50% இடங்கள் ஒதுக்கீடு வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு, டாக்டர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமப்புற, அரசு சுகாதார மையங்களில் பணியாற்றி இருக்க வேண்டும்.
கிராமங்களில் டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில் 25,300 சுகாதார மையங்களில் 8 சதவீத மையங்களில் டாக்டர்கள் இல்லை என்று கூறப்பட்டது.
மேலும், அந்த சுகாதார மையங்களில் 50 சதவீதம் பெண்களுக்கான பணியிடங்களும், 61 சதவீதம் ஆண்களுக்கான பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.