புதன், 25 ஏப்ரல், 2018
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இன்று பொருளியல் மறு தேர்வு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று, பொருளியல் பாடத்துக்கான மறு
தேர்வு நடக்கிறது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 26ல், பொருளியல்
தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதால், தேர்வை ரத்து
செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது.
மறு தேர்வு, ஏப்., 25ல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,
மறு தேர்வு, ஏப்., 25ல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,
பொருளியல் தேர்வு இன்று நடக்கவுள்ளது. நாடு முழுவதும் ஆறு
Aலட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு.........
இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவை பட்டப் படிப்புகள் வழங்கத் தகுதி இல்லாதவை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) இன் படி, மத்திய அல்லது மாநில அரசு சட்டத்தால் உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்கள், யுஜிசி சட்டம் பிரிவு (3) கீழ் அனுமதிக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே பட்டப் படிப்புகளுக்கான பட்டத்தை வழங்க முடியும்.
இந்தச் சட்டங்களின்படி உருவாக்கப்படாமல், யுஜிசியின் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் இயங்கி வரும் 24 கல்வி நிறுவனங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்படுகின்றன. அக்கல்வி நிறுவனங்கள் பட்டங்கள் வழங்கத் தகுதியில்லாதவை என யுஜிசி அறிவித்துள்ளது.
போலி பல்கலைக்கழகங்கள் எவை?
மைதிலி பல்கலைக்கழகம் (விஷ்வவித்யாலயா), பிகார்.
கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், தரியாகஞ்ச், தில்லி.
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தில்லி.
தொழில்படிப்பு (வொக்கேஷனல்) பல்கலைக்கழகம், தில்லி.
ஏ.டி.ஆர். சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், புதுதில்லி.
இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புதுதில்லி.
விஸ்வகண்ணா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், புதுதில்லி.
அதியாத்மிக் விஷ்வவித்யாலய, ரோஹினி, தில்லி.
பதகன்விசர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சமூகம், பெல்காம், கர்நாடகா.
புனித ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளம்.
ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாகபுரி.
இந்திய மாற்று மருந்து நிறுவனம், சவுரிங்கிசாலை, கோல்கத்தா.
இந்திய மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தகுர்புகுர் , கோல்கத்தா.
வரணசேயா சம்ஸ்க்ருத விஷ்வவித்யாலய, வாராணசி.
மஹிலா கிராம வித்யபீடம் (விஷ்வவித்யாலய - மகளிர் பல்கலைக்கழகம்), அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
காந்தி ஹிந்தி வித்யபீடம், அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப்பிரதேசம்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை பல்கலை.), அலிகார், உத்தரப்பிரதேசம்.
உத்தரப்பிரதேஷ் விசுவ வித்யாலய, மதுரா, உத்தரப்பிரதேசம்.
மஹரானா பிரதாப் சிக் ஷா பரிஷத், பிரதாப்கர், உத்தரப்பிரதேசம்.
இந்திரபிரசாதா ஷிக் ஷ பரிஷத், நொய்டா (பகுதி-2) உத்தரப்பிரதேசம்.
நவபாரத் ஷிக்ஷ பரிக்ஷத், ரூர்கேலா.
வேளாண் மற்றும் தொழில்நுட்ப வடக்கு ஒடிஸா பல்கலைக்கழகம், மயூர்பஞ், ஒடிசா.
ஸ்ரீ போதி உயர் கல்வி அகாதெமி, புதுச்சேரி.
செவ்வாய், 24 ஏப்ரல், 2018
அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு
அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (AIEEA) தேதி குறித்த அறிவிப்பை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) (ICAR) வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட படிப்பில் சேர மாணவர்களுக்கு அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வானது நடத்தப்படுகிறது. இந்த தேர்வை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) (ICAR) நடத்துகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வேளாண் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைப்பது மட்டுமின்றி கல்விச் செலவுகளுக்காக உதவி தொகையும் வழங்கப்படுகிறது.
2018-ம் ஆண்டுக்கான அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.ஏ.ஆர் வெளியிட்டுள்ளது. அதில் +2 முடித்த மாணவர்களுக்கு மே 12 ம் தேதி சனிக்கிழமை தேர்வு நடைபெறும். முதுநிலை படிப்புக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும் மே 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வு நடைபெறும்.
கல்வி தகுதி :
இளநிலை UG படிப்பில் சேர
+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் தற்போது படித்து கொண்டிருக்க வேண்டும்.
மேலும் +2 வகுப்பில் இயற்பியல், வேதிதியல், உயிரியல் அல்லது வேளாண்மை, கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.
முதுநிலை PG படிப்பில் சேர
வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு : http://www.icar.org.in
Keywords : All India Entrance Examination For Agriculture , AIEEA-2018,AIEEA,ICAR,Indian Council of Agricultural Research,
தனியார் பள்ளியில் இலவச கல்வி எனும் மாயையை விடுத்து, அரசு பள்ளியில் தரமான கல்வியினை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வோம்.
சில நாட்களாக தனியார் கல்வி நிறுவனங்களில் 25% இலவச கல்வி எனும் திட்டத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் நிறைய குறைகள் இருந்த போதும் இத்திட்டம் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வது நல்ல விழயம் தான். ஆனால் அதை விட அரசு பள்ளிகளில் பிள்ளைகளை.சேர்க்க விழிப்புணர்வை.அதிகப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தினை அதிகரிக்க நாம் போராட வேண்டும். காரணம், அரசு பள்ளிகளுக்கு ஈடு இணை கிடையாது. அரசு பள்ளிகள் மதிப்பெண் முட்டைகளை மட்டுமே இடும் கோழிகளை உருவாக்கும் இடமல்ல. பன்முகத்தன்மை கொண்ட தளமே அரசு பள்ளிகள்.
தனியார் கல்வி நிறுவனத்தில் 25% பிள்ளைகளுக்கு இலவச கல்வி என்பதே பொய்யான கோஷம். உள்ளே நடக்கும் விழயங்கள் கூட வேண்டாம். மேலோட்டமாக பார்ப்போம். இந்த 25% மாணவர்களின் கல்விக்காகவும் அரசு, அந்த தனியார் பள்ளிக்கு கட்டணத்தை செலுத்தும் என்பதே இதன் சாரம் ஆகும். இப்படி 25% மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு பணத்தை செலவழிப்பதை விட அதனை அரசு பள்ளிகளின் தரத்திற்கு உபயோகப்படுத்தினால் அரசு பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
அரசு பள்ளிகளை புறக்கணித்து தனியாரை நோக்கி நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு அரசு பள்ளி மூடப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தின் ஏழ்மை நிலை மக்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது என்பதை உணர்ந்தோமா? தரமானவற்றை தனியார் தான் அளிக்க முடியும் என்றால் அனைத்து துறைகளையும் தனியாரிடம் தாரை வார்த்து விடலாமா?
நான் அரசு பள்ளியில் படித்தவன் தான். எனது பிள்ளைகளையும் அரசு பள்ளியில் தான் சேர்த்துள்ளேன். அரசு பள்ளிகளில் உள்ள குறைகளை களைய போராடுங்கள். அதை விடுத்து, தனியாருக்கு உங்கள் பிள்ளைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, பின் சமூக மாற்றத்திற்கான போராட்டம் என்பது தொடர் கதையாக மட்டுமே போகும்.
அரசு பள்ளிகள் தரமற்றவை இல்லை. அவை நம்மால் புறக்கணிக்கப்பட்டதால் அவ்வாறாக ஆக்கப்பட்டவைகள்.
தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்...
புதுடில்லி; 'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.
அட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 - 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினசரி ஒரு மணி நேரம், உடற்கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது.இதன்படி, மாணவர்கள், மைதானத்திற்குச் சென்று, தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில், ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும்.
இணையதளம் : இந்த ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. இந்த மதிப்பெண்களை, ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு களில் பங்கேற்கும் தகுதியை பெற, இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இறுதி மதிப்பெண்களில், இது சேர்த்துக் கொள்ளப்படாது.'இதற்காக, தனியாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அவசியமில்லை. 'மற்ற வகுப்பு ஆசிரியரின் உதவியுடனேயே, இந்த வகுப்புகளை நடத்தலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 150 பக்கங்களில், புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.
புதுடில்லி; 'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.
அட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 - 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினசரி ஒரு மணி நேரம், உடற்கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது.இதன்படி, மாணவர்கள், மைதானத்திற்குச் சென்று, தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில், ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும்.
இணையதளம் : இந்த ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. இந்த மதிப்பெண்களை, ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு களில் பங்கேற்கும் தகுதியை பெற, இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இறுதி மதிப்பெண்களில், இது சேர்த்துக் கொள்ளப்படாது.'இதற்காக, தனியாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அவசியமில்லை. 'மற்ற வகுப்பு ஆசிரியரின் உதவியுடனேயே, இந்த வகுப்புகளை நடத்தலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 150 பக்கங்களில், புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.
பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி
கோவை: ''மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெற்றி பெறுவர் : ஒன்பது கல்லுாரிகளில், உணவு, இருப்பிடம் இலவசமாக அளித்து, 3,145 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இம்முறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து, அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெறுவர்.வழக்கமாக பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர். ஆனால், இங்கு எட்டு மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் தயாரித்து, அச்சுக்கு கொண்டு வந்து உள்ளோம். இதன்படி, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்புக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை, மத்திய அரசின் பாடத்திட்ட குழு பாராட்டியுள்ளது.
பல வண்ணம் : வழக்கமாக, 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் தயாரிப்பதற்கு பதில், இம்முறை, 80 ஜி.எஸ்.எம்., காகிதத்தில், தரமாக பல வண்ணத்தில் தயாரித்துள்ளோம்.மேல்நிலை வகுப்புகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை நீக்குவது குறித்த சுற்றறிக்கை, 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும், அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்
அனைத்து தாலுகாவிலும் அரசு கேபிள் சேவை?
தமிழகத்தில், 2007ல், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவக்கப்பட்டது. 2011 முதல், 70 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில், 100 சேனல்களை அளித்து வருகிறது.
2014 முதல், சென்னை உட்பட நான்கு மாநகரங்களில், டிஜிட்டல் முறையில், கேபிள், 'டிவி' சேவை தொடங்கப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும், 22 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்'கள், இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு கேபிள், 'டிவி' சேவை, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைப்பது, மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர், குமரகுருபரன் கூறியதாவது:தமிழகத்தில், 294 தாலுகாக்கள் உள்ளன; அவற்றில், 130ல் மட்டுமே, அரசு கேபிள், 'டிவி' சேவை கிடைக்கிறது. அனைத்து தாலுகாக்களிலும் சேவைகளை வழங்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரயில்டெல், பி.எஸ்.என்.எல்., மற்றும் வோடாபோன் நிறுவனங்களுடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். அனைவருக்கும், குறைந்த கட்டணத்தில், தரமான சேவை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த மாத இறுதிக்குள், 24 லட்சம், செட் -டாப் பாக்ஸ்கள், வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உரிமம் ரத்தாகும் : அரசு கேபிள், 'டிவி' சேவையில், 125 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, 200 சேனல்கள்; 175 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., செலுத்தி, 300 சேனல்கள் பெறும் வசதிகள் உள்ளன. அரசு நிர்ணயித்த, இந்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கும், ஆப்பரேட்டர்கள் குறித்து, புகார்கள் எழுந்தால், அவர்களின் கேபிள், 'டிவி' உரிமம் ரத்து செய்யப்படும் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் எச்சரித்துள்ளது.
'காஸ்ட்லி' ஆகிறது இலவச எல்.கே.ஜி.,! வருமான சான்றிதழுக்கு வசூல் வேட்டை
கோவை:இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, வருமான சான்றிதழ் வாங்கி தருவதாக, சில இடைத்தரகர்கள், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிக்கலாம். இதற்கு தமிழகம் முழுக்ககடந்த, 20ம் தேதி முதல், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி இணையதளத்தில், (www.dge.tn.gov.in) அந்தந்த மாவட்டத்திற்கு தனியாக, மெட்ரிக் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், குடியிருப்பின் அருகாமையில் உள்ள, ஐந்து பள்ளிகளை பெற்றோர் தேர்வு செய்யலாம். ஏதேனும் ஒரு பள்ளியில் அட்மிஷன் உறுதி செய்யப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு, வருமான சான்றிதழ் தேவையில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியோராக இருந்தால், ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம். இதற்கு, வருமான சான்றிதழ் பெறும் நடைமுறைகள், ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து இ - சேவை மையங்களிலும், விண்ணப்ப கட்டணம் செலுத்தினால், 15 நாட்களில், இச்சான்றிதழை இலவசமாக பெற முடியும்.
இதற்காக தகவல் வேண்டி, இ - சேவை மையம் செல்வோரை, இடைத்தரகர்கள் சூழ்ந்து கொண்டு, விரைவில் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'இ - சேவை மையங்களில் விண்ணப்பித்தால், விரைவில் சான்றிதழ் பெற முடியாது என கூறி, இடைத்தரகர்கள் மூளைசலவை செய்கின்றனர். படிக்க தெரியாதவர்கள், வீண் அலைச்சலுக்கு பயந்து, பணம் கொடுக்கின்றனர். இடைத்தரகர்கள் மூலமாக, இ - சேவை மையத்தை அணுகுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உரிய துறை அதிகாரிகள், இ - சேவை மையங்களில் ஆய்வு நடத்தினால், பொதுமக்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருக்காது.
மே 18ம் தேதி வரை மட்டுமே, இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இயலும். எனவே, சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை, துரிதப்படுத்த வேண்டும்' என்றனர்.
10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு............
மானாமதுரை: சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை 24 ந் தேதி சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் நடக்க உள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு சிவகங்கை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் 10ம் வகுப்பிற்கு பாடம் நடத்தாத ஆசிரியர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 10ம் வகுப்பிற்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்கள் எழுதிய கருத்தை உள்வாங்கி மதிப்பெண்களை வழங்குவர். ஆனால் பாடம் எடுக்காத ஆசிரியர்கள் 'கீ ஆன்சர்களை' மட்டும் கொண்டு மதிப்பெண் வழங்குவதால், மாணவர்கள் உரிய பதிலை கருத்தோடு எழுதியிருந்தாலும் குறைவான மதிப்பெண்கள் கிடைக்கவாய்ப்புள்ளது. ஆங்கிலத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லாமல் வேறு பாடங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் திருத்த வாய்ப்புள்ளதால் மதிப்பெண் குறைய வாய்ப்புஉள்ளது, என்றார்.
பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது: விடைத்தாள்களுக்கு ஏற்பபட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது, பாடம் எடுக்காத ஆசிரியர்கள் இருந்தால்திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆங்கில பாடத்திற்கு ஆங்கில ஆசிரியர்களைகொண்டு திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது, என்றார்.
சீரானது அரசின் இணையதளம்
சென்னை: பராமரிப்பு பணி முடிந்த நிலையில், தமிழக அரசின் இணையதளம், நேற்று சீரானது.
தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான, www.tn.gov.in ஏப்ரல், 20ல் முடங்கியது.
இதனால், அரசின், 'ஆன்லைன்' சேவைகளை பெற முடியாமலும், அரசின் அறிவிப்புகள், உத்தரவுகள், முக்கிய தகவல்களை அறிய முடியாமலும், மக்கள் தவித்தனர். தொழில்நுட்ப ரீதியான சில பிரச்னைகளே, அரசின் இணைய தளம் முடங்க காரணம் என, தெரிய வந்தது.இந்நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி முடிந்து, அரசின் இணைய தளம், நேற்று மீண்டும் செயல்பாட்டிற்குவந்தது.
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்!
நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், பல்வேறு பிரிவுகளும் பலதரப்பட்ட சங்கங்களும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை, ஜாக்டோ-ஜியோ அமைப்பில் ஒருங்கிணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது வழக்கம்.
சில அமைப்புகள் அதில் சேராமல் தாங்களாகவே சுயமாக, தனித்துப் போராடுவதும் வழக்கம். அப்படியொரு அமைப்புதான் தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்காக, தங்களது குடும்பத்துடன் சென்னையை நோக்கி ஏப்ரல் 22-ம் தேதி படையெடுக்க உள்ளனர். மறுநாள் காலை முதல், அதாவது, 23-ம் தேதி முதல் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.
30.6.2009-ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம்செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருக்கிறது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி. ஆனால், சம்பளத்தில் மட்டும் ஏன் இந்த இமாலய வித்தியாசம்? அதை, உடனடியாகக் களைய வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவு இடைநிலை ஆசிரியர்களின் கேள்வி.
இதற்காக, இவர்கள் கடந்த 9 வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இது இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவதில் மனம் வெறுத்துதான், தங்களின் இறுதி முயற்சியாக குடும்பத்துடன் சாகும் வரை போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட், "தமிழகத்தில் 6- வது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்தது. 6-வது ஊதியக்குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தற்போது வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில், 10-ம் வகுப்பு கல்வித் தகுதி மட்டுமே கொண்ட ஏனைய அரசு ஊழியர்களுக்குக்கூட ரூபாய் 9300-4200, 4400 என வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், மாநில அரசு நியமிக்கும் ஒருநபர் அல்லது இருநபர் குழுக்களிடம் எங்களது ஊதியமுரண்பாட்டை விளக்கி ஊதியம் கோரும்போது, அவர்கள் 'இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம். அவர்களுக்கு இந்தி தெரியாது; கணினி கற்றுக்கொள்ளவில்லை எனப் பல காரணங்களைக் கூறி, எங்களது நியாயமான கோரிக்கைகளை நிராகரித்துவிடுகிறார்கள்.
புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் வி
டைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்......
மதுரை: மதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், 'புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,'
என கணித ஆசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வழக்கமான பாடங்களுடன், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம், புவியியல் என மிக குறைந்த எண்ணிக்கையில் எழுதிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.மதுரைக்கு புள்ளியியல் 5000, அரசியல் அறிவியல் 4000 விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்கான ஆசிரியர் மிக குறைவு. இதனால், 'கணிதம் ஆசிரியர்களை புள்ளியியலும், வரலாறு ஆசிரியர்களை அரசியல் அறிவியலும் திருத்த வேண்டும்,' என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: கணிதம் திருத்த வேண்டும் என்றால் அதற்கு முன் புள்ளியியல் திருத்த வற்புறுத்துகின்றனர். ''நடத்தாத பாடங்கள் விடைத்தாளை எவ்வாறு திருத்த முடியும்,'' என கேட்டால் "கீ ஆன்சர் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்," என்கின்றனர். இதேநிலை தான் வரலாறு ஆசிரியர்களுக்கும். மறுகூட்டல்,
விடைத்தாள் நகலில் மதிப்பெண் வித்தியாசம் மற்றும் தவறு ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இப்போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.
பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்.
சிவகங்கை: விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர்.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 210 வேலை நாட்களில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர், மாணவர்களுக்கு நற்சான்று வழங்கப்படும் என, கல்வித்துறை அறிவித்தது.2016-17க்கான வருகைப் பதிவேட்டை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் குழு ஆய்வு செய்தது. மாநிலத்தில் 45 ஆயிரத்து 120 பள்ளிகளில் பணிபுரியும் 2.21 லட்சம் ஆசிரியர்களில் 51 பேர்; 37.81 லட்சம் மாணவர்களில் 20 ஆயிரத்து 739 பேர் விடுப்பு எடுக்காதது கண்டறியப்பட்டன.இதில் பிப்., 12 ல் சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு மட்டும் நற்சான்று வழங்கினார். ஏப்., 20 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், இதுவரை மாணவர்களுக்கு சான்று வழங்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், ' மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தத்தான் 100 சதவீத வருகைக்கு நற்சான்று வழங்கப்படுகிறது. அதை குறித்த காலத்தில் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது,' என்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம்: நள்ளிரவிலும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக் கோரி தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்து இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் நள்ளிரவு கடந்தும் தொடர்ந்தது.
போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் தொடர்ந்து வற்புறுத்தியும் கூட ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியே செல்லவில்லை. மேலும் போலீஸார் கொடுத்த உணவைச் சாப்பிட அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்துக்குக் காரணம் என்ன? தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 30.6.2009-ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் உள்ளது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி; ஆனால், சம்பளத்தில் மட்டும் அதிக வித்தியாசம் உள்ளது.
அதை உடனடியாகக் களைய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏராளமான ஆசிரியர்கள் திங்கள்கிழமை டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். ஆசிரியர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் அவர்களை போராட்டத்தில் ஈடுபட போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸார் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் காவலில் வைத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட் உள்ளிட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் கூறியது:- 'தமிழகத்தில் 6- ஆவது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. 6-வது ஊதியக் குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது.
ரூ. 15,000 வரை ஊதிய முரண்பாடு: 1.6.2009-க்கு முன் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8,370-2,800 எனவும், 1.6.2009- க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5,200-2800 எனவும் அடிப்படை ஊதியத்தில் 3,170 குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு ஒரு நாள் முன்பாக பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தற்போது மாதம் ரூ.42 ஆயிரம் வரையிலும், நாங்கள் (போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்) ரூ.26,500 வரையிலும் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைத்தான் களைய வேண்டும் என்று போராடி வருகிறோம்.
9 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை: மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை நாங்கள் கேட்கவில்லை; மாநில அரசின் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத்தான் கேட்கிறோம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு தற்போது குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
'எட்டாம் வகுப்பு பாடநூலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்'
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், 'எட்டாம் வகுப்புக்கான தமிழக அரசின் சமச்சீர் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'உணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை பெண்கள் உடுத்த வேண்டாம்' என்ற வரிகள் நீக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாடப் புத்தகம் அச்சிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் அனைத்தும் மீண்டும் மறுசீராய்வுக்கு அனுப்பப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள், 23 ஏப்ரல், 2018
ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். எனவே, கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்கான அரசாணையில், 'ஊதிய முரண்பாடுகளுடன், சிறப்பு ஊதியம், படிகள் மற்றும் சலுகைகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான மனுக்களையும், ஒரு நபர் கமிட்டி பரிசீலிக்கும்' என, திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)