செவ்வாய், 24 ஏப்ரல், 2018
புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் வி
டைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்......
மதுரை: மதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், 'புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,'
என கணித ஆசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வழக்கமான பாடங்களுடன், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம், புவியியல் என மிக குறைந்த எண்ணிக்கையில் எழுதிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.மதுரைக்கு புள்ளியியல் 5000, அரசியல் அறிவியல் 4000 விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்கான ஆசிரியர் மிக குறைவு. இதனால், 'கணிதம் ஆசிரியர்களை புள்ளியியலும், வரலாறு ஆசிரியர்களை அரசியல் அறிவியலும் திருத்த வேண்டும்,' என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: கணிதம் திருத்த வேண்டும் என்றால் அதற்கு முன் புள்ளியியல் திருத்த வற்புறுத்துகின்றனர். ''நடத்தாத பாடங்கள் விடைத்தாளை எவ்வாறு திருத்த முடியும்,'' என கேட்டால் "கீ ஆன்சர் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்," என்கின்றனர். இதேநிலை தான் வரலாறு ஆசிரியர்களுக்கும். மறுகூட்டல்,
விடைத்தாள் நகலில் மதிப்பெண் வித்தியாசம் மற்றும் தவறு ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இப்போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.
பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்.
சிவகங்கை: விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர்.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 210 வேலை நாட்களில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர், மாணவர்களுக்கு நற்சான்று வழங்கப்படும் என, கல்வித்துறை அறிவித்தது.2016-17க்கான வருகைப் பதிவேட்டை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் குழு ஆய்வு செய்தது. மாநிலத்தில் 45 ஆயிரத்து 120 பள்ளிகளில் பணிபுரியும் 2.21 லட்சம் ஆசிரியர்களில் 51 பேர்; 37.81 லட்சம் மாணவர்களில் 20 ஆயிரத்து 739 பேர் விடுப்பு எடுக்காதது கண்டறியப்பட்டன.இதில் பிப்., 12 ல் சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு மட்டும் நற்சான்று வழங்கினார். ஏப்., 20 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், இதுவரை மாணவர்களுக்கு சான்று வழங்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், ' மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தத்தான் 100 சதவீத வருகைக்கு நற்சான்று வழங்கப்படுகிறது. அதை குறித்த காலத்தில் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது,' என்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம்: நள்ளிரவிலும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக் கோரி தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்து இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் நள்ளிரவு கடந்தும் தொடர்ந்தது.
போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் தொடர்ந்து வற்புறுத்தியும் கூட ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியே செல்லவில்லை. மேலும் போலீஸார் கொடுத்த உணவைச் சாப்பிட அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்துக்குக் காரணம் என்ன? தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 30.6.2009-ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் உள்ளது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி; ஆனால், சம்பளத்தில் மட்டும் அதிக வித்தியாசம் உள்ளது.
அதை உடனடியாகக் களைய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏராளமான ஆசிரியர்கள் திங்கள்கிழமை டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். ஆசிரியர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் அவர்களை போராட்டத்தில் ஈடுபட போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸார் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் காவலில் வைத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட் உள்ளிட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் கூறியது:- 'தமிழகத்தில் 6- ஆவது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. 6-வது ஊதியக் குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது.
ரூ. 15,000 வரை ஊதிய முரண்பாடு: 1.6.2009-க்கு முன் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8,370-2,800 எனவும், 1.6.2009- க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5,200-2800 எனவும் அடிப்படை ஊதியத்தில் 3,170 குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு ஒரு நாள் முன்பாக பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தற்போது மாதம் ரூ.42 ஆயிரம் வரையிலும், நாங்கள் (போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்) ரூ.26,500 வரையிலும் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைத்தான் களைய வேண்டும் என்று போராடி வருகிறோம்.
9 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை: மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை நாங்கள் கேட்கவில்லை; மாநில அரசின் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத்தான் கேட்கிறோம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு தற்போது குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
'எட்டாம் வகுப்பு பாடநூலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்'
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், 'எட்டாம் வகுப்புக்கான தமிழக அரசின் சமச்சீர் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'உணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை பெண்கள் உடுத்த வேண்டாம்' என்ற வரிகள் நீக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாடப் புத்தகம் அச்சிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் அனைத்தும் மீண்டும் மறுசீராய்வுக்கு அனுப்பப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள், 23 ஏப்ரல், 2018
ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். எனவே, கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்கான அரசாணையில், 'ஊதிய முரண்பாடுகளுடன், சிறப்பு ஊதியம், படிகள் மற்றும் சலுகைகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான மனுக்களையும், ஒரு நபர் கமிட்டி பரிசீலிக்கும்' என, திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.சனி, 21 ஏப்ரல், 2018
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல்
*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:*
*அன்புக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.*
நமது சேர்மன் அண்ணன் *திரு.சோலை எம்.ராஜா* அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் *மாநில தலைவர்* திரு.வெ.முருகதாஸ் அவர்கள் தலைமையில் *இன்று (21/04/2018)* காலை மாண்புமிகு *பள்ளி கல்வித்துறை அமைச்சர்* அவர்களை கோபிசெட்டிபாளையம் *தோட்ட இல்லத்தில்* சந்தித்தோம் அப்பொழுது நமது *பணியிட மாறுதல்* மற்றும் *ஊதிய உயர்வு* குறித்து *நினைவுப்படுத்தினோம் இது குறித்து நான் நேற்று கூட நிதித்துறை செயலாளர்* அவர்களிடம் *விவாதித்ததாகவும்* இதற்கான *அறிவிப்பு மிகவிரைவில் வரும்* என்றும் , *பணியிட மாறுதல் குறித்து கேட்டதற்கு* பொது தேர்வு *விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு* பெற்றதும் அந்தந்த *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தாம் அலுவலக பணிக்கு திரும்பியதும் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்*
இப்படிக்கு
*பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வின் முன்னேற்ற பாதைக்கான களப்பணியில் இன்று கலந்து கொண்டவர்கள்* என்றும் உங்கள் உடன்
*வெ.முருகதாஸ்*
மாநில தலைவர்
*ப.ஜெகதீசன்* மாநில செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் *சு.இளவரசன், மாநில அமைப்பு செயலாளர்* *க.பெரியசாமி, சி.ஜவஹர், எஸ்.ஷகிலாதேவி அ.சீனுவாசன்,* மற்றும்
*ஈரோடு மாவட்ட* *ராதாகிருஷ்ணன், சந்தோஷ்*
*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்*
*அன்புக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.*
நமது சேர்மன் அண்ணன் *திரு.சோலை எம்.ராஜா* அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் *மாநில தலைவர்* திரு.வெ.முருகதாஸ் அவர்கள் தலைமையில் *இன்று (21/04/2018)* காலை மாண்புமிகு *பள்ளி கல்வித்துறை அமைச்சர்* அவர்களை கோபிசெட்டிபாளையம் *தோட்ட இல்லத்தில்* சந்தித்தோம் அப்பொழுது நமது *பணியிட மாறுதல்* மற்றும் *ஊதிய உயர்வு* குறித்து *நினைவுப்படுத்தினோம் இது குறித்து நான் நேற்று கூட நிதித்துறை செயலாளர்* அவர்களிடம் *விவாதித்ததாகவும்* இதற்கான *அறிவிப்பு மிகவிரைவில் வரும்* என்றும் , *பணியிட மாறுதல் குறித்து கேட்டதற்கு* பொது தேர்வு *விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு* பெற்றதும் அந்தந்த *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தாம் அலுவலக பணிக்கு திரும்பியதும் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்*
இப்படிக்கு
*பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வின் முன்னேற்ற பாதைக்கான களப்பணியில் இன்று கலந்து கொண்டவர்கள்* என்றும் உங்கள் உடன்
*வெ.முருகதாஸ்*
மாநில தலைவர்
*ப.ஜெகதீசன்* மாநில செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் *சு.இளவரசன், மாநில அமைப்பு செயலாளர்* *க.பெரியசாமி, சி.ஜவஹர், எஸ்.ஷகிலாதேவி அ.சீனுவாசன்,* மற்றும்
*ஈரோடு மாவட்ட* *ராதாகிருஷ்ணன், சந்தோஷ்*
*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்*
கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு காய்கறி
வெள்ளரி :
வெள்ளரி ஒரு குறைந்த கலோரி கொண்ட மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேடடே உள்ள ஒரு நீர் காய்கறி
நமது உடலின் உள் மற்றும் வெளி உஷ்ணத்தை குறைக்கும் சக்தி கொண்ட 96 % சதவிகித நீர் காய்க்கறி இது.
நமது உடலின் உள்ள டாக்சினை வெளியேற்றுகிறது. ஜிரனத்தை அதிக படுத்துகிறது.. குறைந்த கலோரி யாதலால் உடல் பருமன் குறைகிறது . மூட்டுகளுக்கு மிக நல்லது , உங்கள் மூளையை / . நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது (fisetin )
உங்களின் நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கிறது இது ஒரு நல்ல ஆண்டி ஆகசிடன்ட்
இதில் இருக்கும் நமது உடலுக்கு தேவையான் ஊட்ட சத்துக்கள்
வைட்டமின் A
வைட்டமின் B ( B1, vitamin B5, and vitamin B7 (biotin)) உங்களின் மன அழுத்ததை குறைக்கிறது.
வைட்டமின் C
வைட்டமின் K - எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
மினரல்கள்
எலக்ட்ரோ லைட்
மெக்னிஷியம்
பொட்டாசியம்
வெள்ளரி ஒரு குறைந்த கலோரி கொண்ட மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேடடே உள்ள ஒரு நீர் காய்கறி
நமது உடலின் உள் மற்றும் வெளி உஷ்ணத்தை குறைக்கும் சக்தி கொண்ட 96 % சதவிகித நீர் காய்க்கறி இது.
நமது உடலின் உள்ள டாக்சினை வெளியேற்றுகிறது. ஜிரனத்தை அதிக படுத்துகிறது.. குறைந்த கலோரி யாதலால் உடல் பருமன் குறைகிறது . மூட்டுகளுக்கு மிக நல்லது , உங்கள் மூளையை / . நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது (fisetin )
உங்களின் நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கிறது இது ஒரு நல்ல ஆண்டி ஆகசிடன்ட்
இதில் இருக்கும் நமது உடலுக்கு தேவையான் ஊட்ட சத்துக்கள்
வைட்டமின் A
வைட்டமின் B ( B1, vitamin B5, and vitamin B7 (biotin)) உங்களின் மன அழுத்ததை குறைக்கிறது.
வைட்டமின் C
வைட்டமின் K - எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
மினரல்கள்
எலக்ட்ரோ லைட்
மெக்னிஷியம்
பொட்டாசியம்
வியாழன், 19 ஏப்ரல், 2018
APR
11
உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய 20 படிவங்கள்
1.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி பட்டியல் - format -1
2.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி பட்டியல் கடிதம்
3.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் கடிதம்
4.2017 - 18 ஆம் ஆண்டின் செயல்வழி கற்றல் அடைவு நிலை விவரம்
5.2017 - 18 ஆம் ஆண்டின் பருவத்தேர்ச்சி அறிக்கை
6.2017 - 18 ஆம் ஆண்டின் பருவத்தேர்ச்சி சுருக்கம்
7.2017 - 18 ஆம் ஆண்டின் மாணவர்கள் வாசிப்புத்திறன் மற்றும் அடிப்படைச் செயல்கள்
8.2017 - 18 ஆம் ஆண்டின் மாணவர்கள் வருகை குறைவிற்கு தவிர்ப்பு வழங்க வேண்டிய மாணவர்கள் பட்டியல்
9.2017 - 18 ஆம் ஆண்டின் பள்ளி வேலை நாட்கள் விவரம்
10.2018 - 19 ஆம் ஆண்டின் 5+ மாணவர்கள் பட்டியல்
11.2017 - 18 ஆம் ஆண்டின் அலுவலர்கள் பார்வை விவரம்
12.2017 - 18 ஆம் ஆண்டின் பள்ளியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
13.2017 - 18 ஆம் ஆண்டின் crc,brc மற்றும் இதர பயிற்சி விவரம்
14.2017 - 18 ஆம் ஆண்டின் ஆசிரியர்கள் விடுப்பு விவரம்
15.2018 -2019 மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் பட்டியல்
16.2017 - 18 ஆம் ஆண்டின் இடைநின்ற மாணவர்கள் பட்டியல் - (6-14)
17.இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகள் (6-10) பட்டியல்
18.இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகள் (11-14) பட்டியல்
19.குடிமதிப்பு கணக்கு சுருக்கம்
20.செயல் திட்டங்கள் விவரம்
பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை பள்ளி
மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று
வருகின்றன.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒரு
வாரத்திற்கு முன் முடிந்து விட்டன. 10-ம் வகுப்புக்கு நாளை
(வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
தமிழகத்தில் தனியார், நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்
பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கனவே
முடிந்து விட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்
தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள்
நாளையுடன் முடிவடைகிறது. எனவே நாளையுடன்
மாணவர்களுக்கான பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன.
வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு
தேர்வுகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக
அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடித்து விட்டனர்.
அதனால் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அரசு பள்ளி
மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மே மாதம் மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும்
. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களுடன் மே மாதம் விடுமுறை
சேர்த்து 40 நாட்களுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுமுறை
கிடைத்துள்ளது. ஜூன் 1-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்பட்ட
போதிலும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ந் தேதி வரை பள்ளிகளுக்கு
வரவேண்டும். அவர்களுக்கு வேலை நாட்கள் அடிப்படையில்
10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஞாயிறு, 15 ஏப்ரல், 2018
பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது- மாணவ-மாணவிகள் கருத்து
சென்னை:பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் சிலரிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு, ‘3 மதிப்பெண் கேள்விகளில் 3 வினாக்கள் பதில் அளிக்கும்படி இல்லை. அந்த கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டவை. அவை அனைத்தும் சற்று கடினமாக இருந்தன. மற்ற அனைத்து வினாக்களும் எளிதாகத்தான் கேட்கப்பட்டிருந்தன’ என்றனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. இதனால் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். நேற்று நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்ததாக திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்
'மொபைல் ஆப்' வழியே முன்பதிவில்லா டிக்கெட்...........
சென்னை:'மொபைல் ஆப்' வாயிலாக, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுக்கும் வசதி, தெற்கு ரயில்வே முழுவதும், இன்று நடைமுறைக்கு வருகிறது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், டிக்கெட் கவுன்டர்களில், பயணியர் காத்திருப்பதை தவிர்க்கவும், ரயில்வேயில், 'யுடிஎஸ்' என்ற, 'மொபைல் ஆப்' வசதி, சென்னையில், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல்போனில், 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இருந்து, 'யுடிஎஸ் - மொபைல் ஆப்'பை, பதிவிறக்கம் செய்யலாம்.அதிலுள்ள, 'ஆர் வாலட்'டில் இணையதள வங்கி தொடர்பை பயன்படுத்தி, டிக்கெட் பதிவு செய்யலாம்.இதன்படி, சென்னையில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில், முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கான, டிக்கெட் பெறும் வசதி உள்ளது.சென்னையில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த, இந்த, 'மொபைல் ஆப்' வசதி, இன்று முதல், தெற்கு ரயில்வே முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். இவ்வசதியில் டிக்கெட் பதிவு செய்பவர், ரயில் நிலையத்தில் இருந்து, 25 மீட்டரை தாண்டியும், 5 கி.மீ., எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும். மொபைல் போனில் பதிவாகும், 'டிக்கெட்'டை காண்பித்து, ரயிலில் பயணம் செய்யலாம். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது, இந்த பதிவை காட்டினால் போதும்.
தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ் : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தாம்பூலத்தட்டுகளை வழங்கி ஆண்டு விழாவுக்கு வருமாறு அரசுப்பள்ளி அழைப்பு விடுத்துள்ளது.
எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவை ஏப்.17 ம் தேதி கல்வி கலைத் திருவிழாவாக நடத்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு, அழைப்பிதழுடனும் தாம்பூலத்தட்டையும் மாணவர்களிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.
தலைமையாசிரியர் ஆரோக்கியசெல்வராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் மக்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். இவ்வொன்றியத்திலேயே 250 கல்விப்புரவலர்களை கொண்ட முதன்மைப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. எனவே அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் செய்துள்ளோம். இது பள்ளியின் வளர்ச்சிக்கு மேலும் உதவும், என்றார்.
ஆசிரியர்கள் போராட்டம்: பிளஸ் 2 முடிவு அறிவிப்பில் சிக்கல்
மதுரை:தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், 'ஆசிரியர்கள், 50 சதவீதம் விடைத்தாள் திருத்தும் போராட்டத்தால்' தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதமாகும் என, சந்தேகம் எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, 74 மையங்களில், ஏப்.,11 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாள் ஒன்றுக்கு மொழிப் பாடங்களுக்கு, 24; அறிவியல் பாடங்களுக்கு, 20 என, ஒரு ஆசிரியருக்கு விடைத்தாள் வழங்கப்படும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், 8,000 பேர் உள்ளனர். இச்சங்கம் சார்பில், ஏப்., 11 முதல் நுாதன போராட்டம் நடக்கிறது. இதன்படி ஆசிரியர்கள்,முகாமில் வழங்கப்படும் மொத்த விடைத்தாளில், 50 சதவீதம் மட்டும்திருத்தி, மீதமுள்ளதை நிலுவை வைத்து, மறுநாள் திருத்துகின்றனர். க்ஷ
இதனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருத்தும் பணி முடியாது. இதனால், கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது போல், மே 16ல் முடிவு வெளியிடுமா என, சர்ச்சை எழுந்து உள்ளது. இது குறித்து, சங்கத்தின்மாநில நிர்வாகிகள் கூறுகையில், 'கல்வித் துறை செயலர், பிரதீப் யாதவ் எங்களை அழைத்து பேச வேண்டும். மிரட்டும் செயலில் ஈடுபட்டால் பணியமாட்டோம். போராட்டம் இன்னும் தீவிரமாகும்' என்றனர்.
அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு............
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)