>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

Useful Educational Websites For Teachers Support...

SOME USEFUL WEBSITES ONLINE EDUCATIONAL SUPPORT

***BOOK SITES****
www.bookboon.com
http://ebookee.org
http://sharebookfree.com
http://m.freebooks.com
www.obooko.com
www.manybooks.net
www.epubbud.com
www.bookyards.com
www.getfreeebooks.com
http://freecomputerbooks.com
www.essays.se
www.sparknotes.com
www.pink.monkey.com
*ONLINE EDUCATIONAL SUPPORT*
http://www.ocwconsortium.org/
http://www.ocwconsortium.org/en/courses/ocwsites
http://ocw.tufts.edu -Tuft University
http://ocw.upm.es -Univesidad Politechnica, Madrid
http://www.open.edu/openlearn/
http://ocw.usu.edu/ -Utah State University
http://open.umich.edu/ -University of Michigan
http://ocw.nd.edu/ -Nore Dame University
*SEARCH SITES*
■ About.com (www.about.com)
■ AllTheWeb (www.alltheweb.com)
■ AltaVista (www.altavista.com)
■ Ask Jeeves! (www.askjeeves.com)
■ Excite (www.excite.com)
■ HotBot (www.hotbot.com)
■ LookSmart (www.looksmart.com)
■ Lycos (www.lycos.com)
■ Open Directory (www.dmoz.org)
■ Google (www.google.com)
■ Mamma (www.mamma.com)
■ Webcrawler (www.webcrawler.com)
■ Aol (www.aol.com)
■ Dogpile (www.dogpile.com)
■ 10pht (www.10pht.com)
*SEARCHING FOR PEOPLE*
■ AnyWho (www.anywho.com)
■ InfoSpace (www.infospace.com)
■ Switchboard (www.switchboard.com)
■ WhitePages.com (www.whitepages.com)
■ WhoWhere (www.whowhere.lycos.com)
*SEARCHING FOR THE LATEST NEWS*
■ ABC News (www.abcnews.com)
■ CBS News (www.cbsnews.com)
■ CNN (www.cnn.com)
■ Fox News (www.foxnews.com)
■ MSNBC (www.msnbc.com)
■ New York Times (www.nytimes.com)
■ USA Today (www.usatoday.com)
*SEARCHING FOR SPORTS HEADLINES AND SCORES*
■ CBS SportsLine (www.sportsline.com)
■ CNN/Sports Illustrated (sportsillustrated.cnn.com)
■ ESPN.com (espn.go.com)
■ FOXSports (foxsports.lycos.com)
■ NBC Sports (www.nbcsports.com)
■ The Sporting News (www.sportingnews.com)
*SEARCHING FOR MEDICAL INFORMATION*
■ healthAtoZ.com (www.healthatoz.com)
■ kidsDoctor (www.kidsdoctor.com)
■ MedExplorer (www.medexplorer.com)
■ MedicineNet (www.medicinenet.com)
■ National Library of Medicine
(www.nlm.nih.gov)
■ Planet Wellness (www.planetwellness.com)
■ WebMD Health (my.webmd.com)
*JOURNALS*
http://www.indexcopernicus.com Multidisciplinary
http://www.ajol.info/ - African Journal Online
www.africanjournalseries.com -
www.devconsortservices.com.ng
www.doaj.org - directory of open access journal
www.sabinet.co.za - South African Journals.
www.oajse.com - Open Access Journal Search Engine
http://www.lub.lu.se/en.html - Lund University
http://www.dovepress.com/ - Free Scientific & Medical Materials
http://www.copernicus.org/ - Access & Publication
ACADEMIC SEARCH/WEB RESEARCH TOOLS/REFERENCE MANAGERS
http://academic.research.microsoft.com - Multidisciplinary
http://www.scirus.com
www.scholar.google.com
http://dbis.uni-trier.de/DBL-Browser/ - Digital Bibliography Library Browser
http://academic.live.com - Live Search Academic
http://www.science.gov/ - USA government for Science
http://citeseerx.ist.psu.edu/index - Computing & Information Sciences
http://www.mendeley.com/ - academic social network/collaboration
http://www.worldcat.org/ - Multidisciplinary
http://libserver.cedefop.europa.eu - Voc & Tech Education
http://inspirehep.net/ - Stanford physics information retrieval system
hsystemv www.ssrn.com/ - Social Science Research Network

 விழுப்புரம் மாவட்டத்தில்  மேல்மலையனூர்   ஒன்றியம்   ஆசிரியர்கள்   பெரும் திரளாக      திரண்ட அரசு ஊழியர்கள்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

 விழுப்புரம் மாவட்டத்தில்  மேல்மலையனூர்   ஒன்றியம்   ஆசிரியர்கள்  05.08.2017 அன்று சென்னையில் நடைப்பெற்ற ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டத்தில் சுமார் ஒன்பது வேன்களில் 250 ஆசிரியர்கள் ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

பாதுகாப்பான அப்ளிகேஷன்கள்!

கூகுள் நிறுவனம் தயாரித்த ஆண்ட்ராய்டு OS தற்போது அதிக நபர்களால் ஸ்மார்ட்போன்களில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் IOS-களைக் காட்டிலும், ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அதன்படி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ஆண்ட்ராய்டு OS-ல் உள்ள play store வசதியானது பாதுகாப்பான தகவல்களை வழங்குகிறதா என்ற கேள்வி பெரும்பாலானவர்களிடம் எழத் தொடங்கியது.
அதற்கான தீர்வாக புதிய முயற்சி ஒன்றினை மேற்கொள்ள உள்ளது கூகுள் நிறுவனம். இனி உறுதி செய்யப்படாத பயனர்களின் குறைந்த ரேட்டிங் கொண்ட அப்ளிகேஷன்கள் தேடலில் மேலே வராமல் இருக்கும். உறுதி செய்யப்பட்ட அதிக ரேட்டிங் கொண்ட அப்ளிகேஷன்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் அப்ளிகேஷன்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் பயனர்கள் தேடலில் காண்பிக்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்படும் தானியங்கி செயலியில் புதிய program-கள் சேர்க்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த முயற்சியினால் பயனர்களுக்குப் பாதுகாப்பான, நம்பக தன்மை கொண்ட அப்ளிகேஷன்கள் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்....

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி
கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
விருதுக்கு,ஆசிரியர்களை,தேட,உத்தரவு,முறைகேட்டை,தடுக்க வலியுறுத்தல்
முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத் திய, முன்மாதிரியான ஆசிரியர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.'அவர்கள் விண்ணபிக்க வில்லை என, விட்டு விடக்கூடாது. புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது' என, தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, நல்லாசிரியர் விருது வழங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. அதிகாரிகளின் உறவினர்கள், மேல் அதி காரிகளுக்கு வேண்டியவர்கள், ஆசிரியர் சங்கத் தினருக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு, இந்த விருது வழங்க, சிபாரிசு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நடைமுறை, பள்ளிக்கல்வி செயலர், உதய சந்திரன், இயக்குனர், இளங்கோவன் கூட்டணி யில், மாற்றப்படும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ள னர். அதேபோல, 2016 குழுவில் இடம் பெற்ற அதி காரிகளே, தங்கள் பெயரை சிபாரிசு செய்த
சம்பவங்களும் நடக்காது என, நம்பிக்கையில் உள்ளனர்.  'பாடம் நடத்துவதிலும், மாணவர்கள் மீதும், பள்ளிக்கல்வியின் உண்மையான வளர்ச் சியில் அக்கறை காட்டுவோருக்கும் நல்லா சிரியர் விருது, வழங்கப்பட வேண்டும். ''எனவே, இதற்கான விதிகளை, பொதுமக்களின் கருத்து கேட்டு மாற்றுவது அவசியம்,''

தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அதிசயம்: தரமான கல்வியால் வளரும் செல்வநாயகபுரம் அரசுப் பள்ளி..

ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான விருது (2014), சிறந்த அரசுப் பள்ளிக்கான
காமராசர் விருது (2015) என பல விருதுகளையும், பரிசுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பரிசுகளையெல்லாம் விட மேலாக, சிறந்த பள்ளிக்கூடம் என்று கிராம மக்கள் மனதார இப்பள்ளியை அங்கீகரித்துள்ளனர். அதனாலேயே தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்கள் குழந்தைகளை பல பெற்றோரும் இந்த அரசுப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வரவால் மற்ற ஊர்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததுபோல, இந்தப் பள்ளியிலும் கணிசமாகக் குறைந்தது. 2010-ல் 54 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த ஆண்டில் 117 மாணவர்கள் படிக்கிறார்கள். பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காலகட்டத்தில், குறைந்து போன மாணவர் எண்ணிக்கை இந்தப் பள்ளியில் மட்டும் உயர்ந்துகொண்டே வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கிலவழி வகுப்புகள் செயல்படுகின்றன. இதுபற்றி தலைமை ஆசிரியர் எம்.ஏ.ஜோசப்ராஜ் கூறியதாவது:
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2010-ல் பொறுப்பேற்றேன். அந்த ஆண்டில் 54 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு, பெற்றோரின் ஆங்கிலக் கல்வி மோகம் மட்டுமே காரணம் என நான் நினைக்கவில்லை. ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் பிரதான காரணமாக இருக்கலாம்; எனினும் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளியின் தோற்றத்தை பொலிவோடு வைத்திருப்பது மிக முக்கியம் என்று கருதினேன்.
ஆகவே, பள்ளியின் வசதிகளை மேம்படுத்துவதே முதல் முக்கியப் பணி என கருதி, அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். திறந்து கிடந்த பள்ளி வளாகத்துக்கு முதலில் கம்பி வேலி அமைத்தோம். பிறகு சுற்றுச்சுவர் கட்டினோம். பள்ளி வளாகம் முழுவதும் நிழல் தரும் மரக் கன்றுகள், கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியைத் தரும் மலர்ச் செடிகள், பசுமைத் தோற்றத்தை தரும் விதவிதமான தாவரங்களை நட்டோம். பள்ளி மைதானத்தில் அழகான கற்களை பதித்தோம். வகுப்பறைகள், வராண்டாக்களில் டைல்ஸ் கற்களைப் பதித்து தரைப் பகுதியை மாற்றினோம். எல்லா வகுப்புகளிலும் போதிய மின் விளக்குகள், மின் விசிறிகள் பொருத்தப்பட்டன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. நவீன முறையிலான கழிவறைகளை உருவாக்கினோம். இந்த முயற்சிகள் காரணமாக பள்ளியின் தோற்றத்தில் புத்தம் புதிய பொலிவு ஏற்பட்டது.
பசுமையாக இருக்கும் பள்ளி வளாகத்தில் விளையாடி மகிழும் மாணவர்கள்.
தனியார் பள்ளிகளைப் போலவே மாணவர்களுக்கு அழகான சீருடைகள், பெல்ட், அடையாள அட்டை முதலானவற்றை வழங்கினோம். ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் தினசரி தகவல் தொடர்புக்காக அனைத்து மாணவர்களுக்கும் டைரி விநியோகம் செய்தோம். இதனால் வெளித் தோற்றத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலை ஏற்பட்டது. சொல்லப் போனால் பிற பள்ளி மாணவர்களைவிட எங்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் மிடுக்காகவே காணப்பட்டனர்.
இதே காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான பணிகளையும் தொடங்கினோம். 2013-ம் ஆண்டு முதல் ஆங்கில வழி வகுப்புகளை ஆரம்பித்தோம். தமிழ், ஆங்கிலம் என அனைத்து பாடங்களையும் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் தீவிரமான பயிற்சி தருகிறோம். எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மிக அழகாக இருக்கும். நாங்கள் அளிக்கும் கையெழுத்துப் பயிற்சியே இதற்குக் காரணம்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கியுள்ள அனைத்து கற்றல், கற்பித்தல் உபகரணங்களையும் பயன்படுத்துகிறோம். விளையாட்டுவழிக் கல்வி, மாணவர்களிடத்தில் கற்றல் திறனை அதிகப்படுத்தியுள்ளது.
கல்வி சார்ந்த ஏராளமான பாடல்கள், கதைகள், பட விளக்கங்கள், விளையாட்டுகள் கொண்ட குறுந்தகடுகளை லேப் டாப் மூலம் மாணவர்களுக்கு காண்பித்து, அதன் மூலமாக கற்பிக்கிறோம். வழக்கமாக வகுப்பறையில் நடைபெறும் நிகழ்வுகளை காட்சி வடிவில் பார்க்கும்போது அவர்கள் மனதில் ஆழப் பதிகிறது.
இவை அனைத்தையும் ஒரே ஆண்டில் செய்யவில்லை. 2010 முதல் ஒவ்வொரு முயற்சியாக இத்தனை பணிகளையும் செய்து வருகிறோம். ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிடுவார்கள். இந்த ஒட்டுமொத்த முயற்சியின் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மிக வேகமாக வளர்ந்துள்ளது.
பிற பள்ளி மாணவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் சிறப்பாக இருப்பதை பெற்றோர்களே உணர்ந்துகொண்டனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011-ல் 70 ஆக உயர்ந்த மாணவர் எண்ணிக்கை, 2014-ல் 94 ஆனது. 2015-ல் 101ஆகவும், 2016-ல் 113 ஆகவும் அதிகரித்து, இந்த ஆண்டு 117 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
தலைமை ஆசிரியர் எம்.ஏ.ஜோசப்ராஜ்
எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு என்பது பள்ளி வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. நான் உட்பட எங்கள் ஆசிரியர்கள் பலரும் சொந்த பணத்தை பெருமளவில் பள்ளியின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளோம். அதே போல் கிராம மக்களும், கிராம இளைஞர் மன்றத்தினரும், பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பள்ளிக்குத் தேவையான பல வசதிகளை தொடர்ந்து செய்து தருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை பெற்றோர் உற்று கவனித்தும், கண்காணித்தும் வருகின்றனர். பள்ளியில் மாதந்தோறும் பெற்றோர் கூட்டம், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. உள்ளூர் மக்களின் பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க பள்ளியும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.முன்மாதிரியான இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி இல்லை. அதுவும் இருந்தால் மாணவர்களின் கற்றல் திறனை இன்னும் அதிகரிக்க முடியும் என்பதால், இந்த வசதியை உருவாக்க தலைமை ஆசிரியர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை வசதி வழங்கப்படுகிறது. எனினும், பள்ளியின் வளர்ச்சிப் போக்கை கருத்தில் கொண்டு, செல்வநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை வசதியை ஏற்படுத்தித் தர கல்வித் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க் கின்றனர்.தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94430 05426.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

JACTTO - GEO : எனதுயிர் உறவே! மாற்றுத்திறனாளி ஆசிரிய நண்பா! சென்னை பேரணியில் உனது வருகையைக் கண்டு மெய் சிலிர்த்தேன்.

  

எனதுயிர் உறவே! மாற்றுத்திறனாளி ஆசிரிய நண்பா!      சென்னை பேரணியில் உனது வருகையைக் கண்டு மெய் சிலிர்த்தேன்.
நண்பா நீ மாற்றுத் திறனாளி அல்லவே.
மாறாக,
ஆண்டவனால் குறைகளின்றி படைக்கப்பட்ட என் போன்ற ஆசிரியர்களிடத்து
 மாற்றத்தை , சுயநலம் விடுத்த தன்னம்பிக்கையை ஊட்டும் உன்னதத் திறனாளி .
உணர்வற்றோரிடத்து
உணர்ச்சி விளக்கேற்றும் ஒளித் தீபம்.

 நண்பா,
         உனக்கும் மனைவி,
குழந்தைகள்,பேரன் பேத்தி  மருமகன் மருமகள் ,உடல் சுகவீனம் ,குடும்பவேலைகள்,உறவு சார்ந்த நடவடிக்கைகள் இருந்தும்,
 எல்லாவற்றிற்கும் மேலாக உடல் உறுப்பு குறைபாட்டையும் வைத்துகாரணம்ஏதும் கூறாமல்
வருகை தந்துபோராட்டக் களத்தில் களமாடினாயே,

உனக்கு என் நன்றிகளை கூற என் தாய் மொழியில் உள்ள வார்த்தைகளும் போதாது நண்பாஎனவே அதற்கு அடையாளமாய்
வணங்கி மகிழ்கிறேன்.

அன்புடன்:-

மத்தூர் சு.சுரேஷ்.
மாவட்ட செயலாளர்.
தமிழக ஆசிரியர் மன்றம்.
கிருஷ்ணகிரி.

Image may contain: 8 people, people smiling, people standing and outdoor



Image may contain: 6 people, people smiling, crowd

TNPSC GROUP - 2A ANSWER KEYS (EXAM DATE : 06/08/2017) - *UPDATED*

TNPSC - 2A  ANSWER KEYS

  • TNPSC GROUP - 2A ORIGINAL QUESTION PAPER - CLICK HERE
  • TNPSC GROUP - 2A TAMIL ANSWER KEY - APPOLO STUDY CENTER  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A GENERAL STUDIES  KEY - APPOLO STUDY CENTER  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A TAMIL ANSWER KEY - SHINE ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A ENGLISH ANSWER KEY - SHINE ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A GENRAL STUDIES  KEY - SHINE ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A TAMIL ANSWER KEY - VIDIYAL VELLORE  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A TAMIL ANSWER KEY - INNOVATION ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A ENGLISH ANSWER KEY - INNOVATION ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A MATHS ANSWER KEY -  IYACHAMY ACADEMY -  CLICK HERE

TNPSC GROUP - 2A ANSWER KEYS (EXAM DATE : 06/08/2017) - *UPDATED*



  • TNPSC GROUP - 2A ORIGINAL QUESTION PAPER - CLICK HERE
  • TNPSC GROUP - 2A TAMIL ANSWER KEY - APPOLO STUDY CENTER  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A GENERAL STUDIES  KEY - APPOLO STUDY CENTER  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A TAMIL ANSWER KEY - SHINE ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A ENGLISH ANSWER KEY - SHINE ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A GENRAL STUDIES  KEY - SHINE ACADEMY  - CLICK HERE
  •  TNPSC GROUP - 2A TAMIL ANSWER KEY - INNOVATION ACADEMY  - CLICK HERE
  • TNPSC GROUP - 2A ENGLISH ANSWER KEY - INNOVATION ACADEMY  - CLICK HERE

JACTTO GEO : போராட்டத்தின் மொத்த எண்ணிக்கையையும், தலைகடலையும் மெட்ரோவிலிருந்து பதிந்த காட்சி (வீடியோ) .

60 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை: 6 நாள்களில் முடிகிறது கலந்தாய்வு...

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஆறு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுபோல், பி.இ. இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் (சிவில்) படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துள்ளது.
கணினி அறிவியல், மின்னணுவியல் -தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிகமானோர் சேர்ந்துள்ளனர் என்றபோதும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதுவும் குறைவுதான் என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக இந்த முறை 570 -க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.75 லட்சம் பி.இ. இடங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஜூலை 17 கலந்தாய்வு தொடங்கியது. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கியதுமுதல் கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்தனர். கடந்த ஆண்டுகளில், இதுபோன்று கலந்தாய்வு தொடக்கத்தில் கணினி அறிவியல், மின்னணுவியல் - தொடர்பியல் பொறியியல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும். பின்னர், படிப்படியாக அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக இயந்திரவியல் பிரிவு மாறிவிடும்.கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் நீடித்து வந்தது.
இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் குறைந்தது ஆர்வம்: இந்த நிலையில், 2017 -18 பி.இ. கலந்தாய்வு முடியஇன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், தொடக்க நாள் முதல் அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவுகளாக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவுகளேஇருந்து வருகின்றன. பி.இ. கணினி அறிவியல் பிரிவில் மொத்தமுள்ள 27,695 இடங்களில் இதுவரை 9,500 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 33,881 இடங்களில் இதுவரை 12,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், பி.இ. இயந்திரவியல் பிரிவில் மிக அதிகமாக 38,333 இடங்கள் உள்ளன. இதில் 11,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதுபோல பி.இ. சிவில் பிரிவில் 25,237 இடங்களில் 5,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்...:
ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவடைய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள்.மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.இ. இயந்திரவியல், பி.இ. சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 115 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 116 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 120 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 122 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 140 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 65 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. கன்னியாகுமரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 111 இடங்களும், சிவில் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 72 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 38 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 73 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 74 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. இதேபோல, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும் நடைபெற்றிருப்பது அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

Bank holidays in August 2017

*12.08.17* (2nd Saturday)
*13.08.17* Sunday
*14.08.17* Monday (Krishna Jayanthi)
*15.08.17* Tuesday (Independence day)
And again
*25.08.17* Friday (Vinayaka Chathurthi)
*26.08.17* (4th Saturday)
*27.08.17* Sunday.
Plan your Banking work accordingly 

துணைத் தேர்வு விடைத்தாள் நகல் : இன்று பதிவிறக்கம் செய்யலாம்....

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று காலை 11 மணி முதல் அரசுத் தேர்வுத்துறை இணைய தளமான scan.tndge.inல் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணைய தள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பில் கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.