>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 20 ஜூலை, 2017

எச்சரிக்கை.டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்..போலி ஜாதி சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்களுக்கு 'வார்னிங்'

        போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்கள் வேலையில் இருந்துடிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்ஜிதேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்து, மத்திய பணியாளர் மற்றும் குறைதீர் மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று பேசினார். அப்போது அவர்கூறியதாவது-
நேர்மையற்ற முறையில் போலியாக ஜாதிச்சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்ற அதிகாரிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 போலியாக ஜாதிச் சான்று அளித்து அரசு வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து, தகவல்களைத் திரட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜூன்1-ந் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், போலியாக சான்று அளித்து வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களின் விவரங்களையும் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன்படி, தங்களின் அரசு வேலையை தக்கவைத்துக் கொள்ள போலியாக ஜாதிச் சான்று அளித்து, தவறான விவரங்களை அளித்த அதிகாரிகள், ஊழியர்களை தொடர்ந்து பணியில் நீட்டிக்கவிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி, ஊழியர் ஒருவர் போலியாக, அல்லது தவறான ஜாதிச்சான்று அளித்து வேலை பெற்றார் எனத் தெரியவந்தால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த மார்ச் 29-ந்தேதி வரை போலிச் ஜாதிச்சான்று அளித்து 1, 832பேர் வேலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 276 பேர் டிஸ்மிஸ் ெசய்யப்பட்டுள்ளனர், 1,035 பேர்மீது விசாரணை நடந்து வருகிறது.
இதில் நிதித்துறையில் மட்டும் 1,296 பேர் போலிச் சான்று அளித்து வேலை பெற்றுள்ளனர். ஸ்டேட் வங்கியில் 157 பேர், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 135 பேர், இந்திய ஓவர் சீஸ் வங்கியி் 112 பேர், சின்டிகேட் வங்கியில் 103  பேர், நியு இந்தியா அசுரன்ஸ், யுனைடெட் இந்தியா அசுரன்ஸில் 41 பேர் போலியாக சான்று அளித்து வேலை பெற்றுள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் 14வது குடியரசு தலைவரை பற்றி..


இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

65 சதவிகித வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது தலித் குடியரசுத்தலைவர் இவர் தான். பீஹார் ஆளுநராக பணியாற்றிய இவர் கடந்து வந்த பாதை மற்றும் சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...
.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது:
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.
 அக்குழு கடந்த ஜூன் 30-ம் தேதி அறிக்கைஅளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்காத நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புதிய ஊதியம் அமலாகுமா என்ற சந்தேகம் உள்ளது. லோக்பால் சட்டப்படி தமிழகத் தில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. நாடாளு மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அங்கு சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தாவை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ''லோக்பால் சட்டத்தை அமல்படுத்த எந்தப்பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டுவர உள்ளது.
 திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், தமிழகத்தில் லோக்பால் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய வரையறையை நிர்ணயித்த மத்திய அரசு, படிகள் தொடர்பான தெளிவான வரையறையை அளிக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்'' என்றார்.

FLASH NEWS : 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!


# ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது:
அமைச்சர் செங்கோட்டையன்
# 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை:
அமைச்சர் செங்கோட்டையன்.
# புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

25ம் தேதி பதவி ஏற்கிறார் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்!

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்காக கடந்த 17ம் தேதி நடந்த தேர்தலில், அவர் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாரைத் தோற்கடித்துள்ளார்.
வரும் 25ம் தேதி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்றுக் கொள்வார்!

நீட் தேர்வு விவகாரம்: கலந்தாய்வுக்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!..

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.  
அதன்படி, நேற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த இந்த நிகழ்ச்சிக்கு, 2.45 மணியளவில் பாலகிருஷ்ண ரெட்டி வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தார்.

இதனிடையே, நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு, மருத்துவப் படிப்பில் கலந்துகொள்ள முடியாத பலர் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இவர்கள், அமைச்சர் வந்ததும் அவரை முற்றுகையிட்டு, நீட் தேர்வை ரத்து செய் என்று கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், கலந்தாய்வில் கலந்துகொண்ட அமைச்சர் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார். அப்போது பேசிய பாலகிருஷ்ண ரெட்டி, 'தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தரத்துக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

கால்நடைத் துறையில் விரைவில் 900 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்' என்றார்.இதையடுத்து, அமைச்சர் புறப்படும்போது கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவரை மீண்டும் முற்றுகையிட்டனர். நீட் தேர்வு நடைபெற்றதால், மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. என்று தெரிவித்தனர். மக்கள் முற்றுகையிட்டதால், போலீசார் பாதுகாப்புடன் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.

நகையை விற்று ஸ்மார்ட் வகுப்பறை!' - கலங்க வைத்த அரசுப் பள்ளி ஆசிரியை...

கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக சொந்தப் பணத்தில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர். 
'கல்வியை மாணவர்களுக்குத் திணிக்கக் கூடாது என்பதால்தான், இதுபோன்ற புதுமையான முயற்சிகளை மேற்கொள்கிறேன்' என நெகிழ்கிறார் ஆசிரியை ராஜலட்சுமி. 
கடலூர் மாவட்டம், தங்கலிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் ராஜலட்சுமி. அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைக்க வேண்டும் என்பது இவருடைய நீண்டநாள் கனவு.
ஆனால், அதற்கேற்ற பொருளாதார உதவிகள் எதுவும் கிடைக்காததால், தனது நகைகளை அடமானம் வைத்து ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார். பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார். கணிப்பொறி உதவியோடு கற்றல் முறைகளைக் கவனிக்கும், பொது மக்கள் ஆச்சரியத்தோடு தங்கலிகுப்பம் பள்ளியைக் கடந்து செல்கின்றனர்.
ஆசிரியை ராஜலட்சுமியிடம் பேசினோம். "ஸ்மார்ட் வகுப்பறைகளின் பலனை மாணவர்கள் புரிந்துவைத்துள்ளனர். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளைக் கவனிக்கின்றனர்.
தங்கலிகுப்பம் கிராமத்தில் ஏழை மாணவர்கள் மிகுந்து இருந்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். இவர்களின் ஆர்வத்தைப் பார்த்துத்தான், ஸ்மார்ட் வகுப்பறையை அமைக்கும் முடிவுக்கு வந்தேன். வெளியில் எந்த உதவியும் கிடைக்காததால், என்னுடைய நகைகளை விற்றதில் 75 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
பிறகு, என்னுடைய கணவரின் எல்.ஐ.சி பணத்தில் இருந்து 25 ஆயிரத்தை எடுத்து ஒரு லட்ச ரூபாயில் டிஜிட்டல் வகுப்பறையை அமைத்தேன். இப்போது கணினி இயக்குவதிலிருந்து, டிஜிட்டல் பணிகளை என்னுடைய மாணவர்களே பார்த்துக்கொள்கின்றனர்" என்றார் நெகிழ்ச்சியோடு. 

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களில் புதிய பாடத் திட்டம்..

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அந்தத்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் பல புதிய அறிவிப்புகளைக் கூறினார்.அதாவது, பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறினார்.

போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 54,000 கேள்வி தொகுப்பு 15 நாட்களில் வெளியாகும் எனஅவர் கூறியுள்ளார்.பாட திட்டங்களை மாற்ற 3 நாட்கள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். பல்வேறு கல்வி நிபுணர்கள், அறிஞர்கள் இதில்பங்கேற்பார்கள் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.எந்த ஒரு பொதுத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக மாணவர்கள், எந்த போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாற்றிக் காட்டுவோம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். மாணவர்களுக்கு கணினியுடன் வைபை வசதியை செய்து தரவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன்கூறினார்.

ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்களுக்கு மாத ஊதியத்தை குறைக்க வேண்டும் - சட்டமன்றத்தில் தனியரசு MLA அதிரடி பேச்சு.


எம்எல்ஏ ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன்... ஹாட்ஸ் ஆப் வசந்தகுமார்...

எம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார்.



தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த ஊதிய உயர்வு தேவையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் தனக்கு வழங்கப்படவுள்ள ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிட உள்ளதாக நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், காமராஜரின் இலவச கல்வியில் பயின்று முன்னேறிய நான் கடந்த 2006-2011-ஆம் ஆண்டு எம்எல்ஏ-வாக இருந்தபோது பெற்ற ஊதியத்தில் பல கிராமங்களில் இலவச டியூஷன் சென்டர்களை அமைத்ததோடு ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவழித்துள்ளேன்.

 கடந்த முறை எம்எல்ஏ ஆகும் வாய்ப்பை இழந்தாலும் மாதந்தோறும் அந்த தொகையை செலவு செய்து இலவச டியூஷனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் செலவிட்டேன். தற்போது எம்எல்ஏ-க்களின் ஊதியம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் அதை ஏற்கெனவே செய்து வந்த கல்வி வளர்ச்சி திட்டத்துக்கு இரு மடங்காக செலவிடுவேன் என்று தனது அறிக்கையில் வசந்தகுமார் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு: பணியாளர் சட்டத்தில் திருத்தம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு: பணியாளர் சட்டத்தில் திருத்தம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசுப் பணியாளர் பணி நிபந்த னைகள் சட்டம் திருத்தப் பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 19 முதல், அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளி களுக்கு 4% இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது.
இது தொடர் பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி, சட்டத் திருத்த மசோ தாவை பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தாக்கல் செய்தார். அரசால் வரையறுக்கப் பட்ட அளவு ஊனமுள்ளவர் களுக்கான ஒதுக்கீடு, அரசால் ஒவ்வொரு துறையிலும் கண்டறி யப்பட்ட பதவிகள் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.வரையறுக்கப்பட்ட ஊனம் கொண்ட தகுந்த நபர் கிடைக்காத பட்சத்தில், வெவ்வேறு வகை மாற்றுத்திறன் கொண்டவர்களால்அந்தப் பணியிடங்கள் நிரப் பப்பட வேண்டும். அந்த ஆண் டில்அப்பதவிக்கான நபர் கிடைக் காத பட்சத்திலேயே, ஊனமுற்ற வர் அல்லாத பிறரால் நிரப்பப் படவேண்டும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் தொடர்பான புதிய வரையறை களும் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.அதேபோல, அரசின் கொள் முதல் திறனை மேம்படுத்தவும் செலவை குறைக்கவும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதாவையும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு...

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்ந்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வை பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தற்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.55 ஆயிரமாக உள்ளது. தற்போது இருமடங்காக உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!

ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும் ஆதார் எண் எடுக்கவும் வலியுறுத்தி வருகிறது. இதுவரை 80 கோடி பேர் வரை ஆதார் எண் பெற்றுள்ளனர்.மக்களுக்கும் இன்னும் கூடுதல் வசதி அளிக்கும் வகையில், ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு, புதிய ஆப்ஸ்(செயலி) வெளியிட்டுள்ளது. அந்த செயலி மூலம் ஒருவர் தனது ஆதாரை பதவிறக்கம் செய்து கொண்டு தேவைப்படும் போது அதை ஆவணமாக பயன்படுத்தலாம்.
இந்த ஆப்ஸ் தற்போது, ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் சென்று, ‘எம்.ஆதார்’ என்ற ஆப்ஸைபதவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்தபின், அதில் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தபின், நாம் ஆதார் எண்ணில் கொடுத்த செல்போன்எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. பாஸ்வேர்ட் வரும்.
அந்த பாஸ்வேர்டை பதவு செய்தால், ஆதார் குறித்த விவரங்களை காண முடியும். மேலும், இந்த செயலியில் இருந்து ஆதார் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கும் அனுப்பவும் முடியும்.இந்த செயலியை யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு பீட்டா தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால்,இதை பயன்படுத்துவதில் சில பிரச்சினைகள் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதை சரிசெய்து தற்போது நவீனமாக்கப்பட்டுள்ளது.

PGTRB OFFICIAL ANSWER KEY PUBLISHED !!!

PGTRB OFFICIAL ANSWER KEY PUBLISHED
...http://trb.tn.nic.in/PG2017/19072017/Msg1.htm

மாணவ-மாணவிகளுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க பள்ளிகளுக்கு தடை அரசு உத்தரவு...

இது தொடர்பாக தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டுள்ள
அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவ மாணவிகள் உடல் ரீதியான, மனரீதியான விளைவுகளை தடுக்கும் வகையில் புத்தகச்சுமையைக் குறைப்பது, வீட்டுப்பாடம் அளிப்பதைத் தடுப்பது குறித்து பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதிக்கப்படுகிறது.
1-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு 1.5 கிலோவுக்கு  மேல் புத்தக பை இருக்க கூடாது. 3-ம் வகுப்பு மற்றும் 4-வகுப்பு குழந்தைகளுக்கு 3 முதல் 5 கிலோவுக்கு மேல் புத்தக பை எடை இருக்க கூடாது.
அடுக்குமாடி கட்டிடங்களில் செயல்படும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புத்தக பையை எடுத்து கொண்டு மாடி ஏறிச்செல்வதால் சோர்வு ஏற்படுகின்றனது. 
மேலும் புத்தக பையில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வருவதால் ஏற்படும் சுமையைக் குறைக்க, பள்ளிகளிலேயே சுத்தமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கு பள்ளிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தேசிய ஓவியப்போட்டி 2017-18ம் கல்வியாண்டு- மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடத்துதல்!!

ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு...

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
டேட்டா ஆஃபர்கள் வழங்குவதில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஜியோ, தற்போதும் அதே யுக்தியைத்தான் கொண்டுள்ளது.
ப்ரீபெய்ட் திட்டத்தில் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், தற்போது புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ரூ.19 முதல் ரூ.9,999 வரை பல ரீசார்ஜ் வாய்ப்புகள் உள்ளன. இதில் எந்த ஒரு ரீசார்ஜையும் வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். ஆனால், சில முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் கால அளவு மட்டும் இரண்டு மடங்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரூ.349 மற்றும் ரூ.399 ஆகிய இரண்டு ரீசார்ஜ்க்கும், ஏற்கனவே இருக்கும் ரூ.309 மற்றும் ரூ.509க்கும் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரூ.309 ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இலவசம். அதே சமயம், அதற்கான வாலிடிட்டி 28 நாட்களுக்கு பதிலாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல, ரூ.509 ரீசார்ஜ் செய்தால், அதற்கான வாலிடிட்டியும் 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபிக்கள் இலவசமாக வழங்கப்படும்.
அதே போல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.349 திட்டத்தில், 56 நாட்களுக்கு தினமும் டேட்டா வழங்கப்படுவதற்கு பதிலாக, 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும்.
அதே சமயம், ரூ.399 திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும், இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள்.
போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.349 மற்றும் 399 திட்டங்கள் உள்ளன. ரூ.349 திட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும். அதே போல ரூ.399 திட்டத்தில் அளவில்லா 4ஜி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FLASH NEWS : PGTRB OFFICIAL ANSWER KEY PUBLISHED

டிஜிட்டல் மயமாகும் அரசுப்பள்ளி

PGTRB 2017 - Tamil Official Answer Key - Claim Details

Official Answer Key - Claim for Dispute Form:
  • PGTRB 2017 - Tamil Official Answer Key - Claim Details | Vidiyal Theni