>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 30 மே, 2017

RTE : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜூன் 5ல் பள்ளிகளில் சேர்ப்பு: தமிழக அரசு

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பிருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க 20.04.2017 முதல் 26.05.2017 வரைகால அவகாசம் வழங்கப்பட்டது. சேர்க்கைக்கு மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் இணைய வழியாகப் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிக்கும் விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் 30.05.2017அன்று பதிவிறக்கம் செய்யப்படும். 
நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குச் சமமாகவோ, அதைவிடக்குறைவாகவோ விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின், விண்ணப்பித்துள்ள தகுதியான அனைத்துக் குழந்தைகளுக்கும் சேர்க்கை வழங்கும் பொருட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால், 31.05.2017 அன்று சார்ந்த பள்ளிகளுக்கு குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் வழங்கப்படும். 
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில், 31.05.2017 அன்று குலுக்கல் முறையில் சேர்க்கைகான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். குலுக்கல் நடத்தும் பொருட்டு கல்வித் துறை சார்ந்த பிரதிநிதி ஒருவரும் , மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமனம் செய்யப்படும் பிரதிநிதி ஒருவரும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்படுவர். 
சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் நடைபெறும்போது, மாவட்டக் கல்வித் துறை உயர் அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் சென்று பார்வையிடுவர். 
முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான, ஆதரவற்றவர்கள் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும். அதன்பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்பிடத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும். 
அவ்வாறு குலுக்கல் நடத்தப்பட்டபின்னரும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காலியிருப்பின், ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கும் அதிகமாக இருப்பிடத்தில் வசிக்கும் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக்கொண்டு குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவுநிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்கள் வீதம் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் முறையில் தயார் செய்யப்படும். 
குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் பள்ளியில ்சேரவில்லையெனில் காத்திருப்புப் பட்டியலிலிருந்து சேர்க்கை வழங்கப்படும். 
சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் பட்டியல், காத்திருப்புப் பட்டியலில் கல்வித் துறை சார்ந்த பிரதிநிதி/ வருவாய்த்துறை சார்ந்த பிரிதிநிதி, பள்ளியின் முதல்வர் மற்றும் குலுக்கலில் கலந்துகொண்ட பெற்றோர்கள் கையொப்பமிட்டு 31.05.2017 அன்றே பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும். சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு 05.06.2017க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு குறித்து CM CELL -அளித்த பதில்

உடற்கல்வி ஆய்வாளர் நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு.....

தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மோகன் குமார் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
உடற்கல்வி ஆசிரியர்களாக 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம். நாங்கள் கிரேட் 1 உடற்கல்வி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளோம். கிரேட் 1 உடற்கல்வி இயக்குநர்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுள்ளவர்கள்.
கடந்த 2016 மே 10ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பதவி உயர்வு பெறுபவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடும், நேரடி நியமனம் 50 சதவீதமும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பதவி உயர்வு அடிப்படையில் எங்களுக்கு மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் பதவியில் 50 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும்.
ஆனால், பள்ளிக் கல்வித்துறை அந்த நடைமுறைகளை மறைத்துவிட்டு 2009 ஜூலை 10ம் தேதியிட்ட அரசாணையின் அடிப்படையில் கிரேட் 1 உடல்கல்வி இயக்குநர்களை மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்களாக நேரடியாக நியமனம் செய்து வருகிறார்கள். 
இதனால், எங்களுக்கு வரவேண்டிய 50 சதவீத வாய்ப்பு பறிபோகிறது. எனவே, மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் நியமனம் தொடர்பான பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கோமதிநாயகம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 

இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளை கடைசி நாள்......

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய அவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதைதொடர்ந்து ஜூன் 22ம் தேதி இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. ஜூன் 24ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன் 27ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சலிங் தொடங்குகிறது.

NEET - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும்....

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
சென்னை எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் சுகாதார துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே இருந்ததை விட கூடுதலாக 1000 எம்பிபிஎஸ் சீட்டுகள், முதுநிலையில் 305 எம்டிஎம்எஸ் சீட்டுகள் பெறப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த இடங்களை விட 25 சதவீதம் கூடுதல். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அரசு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை(இன்று) மருந்து சில்லறை விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்தும் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, மாலை 6 மணி வரை நடக்க இருந்த போராட்டத்தை 4 மணி வரை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு 2 மத்திய அமைச்சகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பூர்வ பதில்கள் மத்திய அமைச்சர்களிடம் அளித்துள்ளோம். 
அவர்கள் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளனர். அந்த பதில்களும் உறுதியாக அளிக்கப்படும். தொடர்ந்து டெல்லி சென்றும் வலியுறுத்துவோம். மருத்துவ மாணவர் சேர்க்கை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி  ஜூலை 2வது வாரத்தில் கலந்தாய்வு நடக்க வேண்டும். 
எனினும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்பிபிஎஸ்) குறித்து ஒரு வாரத்திற்குள் தெளிவான கருத்து வெளியிடப்படும். 
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த கோப்புகள் தங்களிடம் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழகத்திற்கு இந்தாண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று நம்பிக்கை   உள்ளது.

பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு.....

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார். 
அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு துறை வாரியாக, ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார். இதில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திங்கள், 29 மே, 2017

ஜூன் 28-ல் 10ம் வகுப்பு துணைத்தேர்வு : அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு...

சென்னை: 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 28-ம் முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. துணைத்தேர்வுக்கு மே 31-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும், தனியார் பிரவுசிங் செண்டர்கள் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழிப்புணர்வு.....

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, ௩௭ ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ௪௧ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளிகளில், இன்னும், 50 சதவீத மாணவர்கள் படிக்கும் வகையில், உள் கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் உள்ளது. ஆனால், ஆங்கில மொழி திறன் வளர்ச்சி, முன்னேறிய கற்பித்தல் முறை இல்லாததால், பெற்றோர், பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.இந்நிலையில், இந்த ஆண்டு முதல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், கற்பித்தல் முறையை முன்னேற்றவும், பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆட்டோ விளம்பரம் செய்யவும், அரசு பள்ளிகள் தரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாடல்கள், குறும்படங்களை ஒளிபரப்பவும், வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மற்றும் தியேட்டர்களில் விளம்பரம் செய்யவும், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி.....

திருவனந்தபுரம்: மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில், ஆசிரியர்களை தயார்படுத்தி வரும் கேரள அரசு, பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் இதற்கான பயிற்சியை அளிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளிகளில், ஐ.டி.,@ஸ்கூல் என்ற புதிய முயற்சியின்படி, மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 
இது குறித்து, கேரள கல்வித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தரும் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 
பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, முதல்கட்டமாக, 200 ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. மேலும், 260 ஆசிரியர்களுக்கு, ஜூன் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் மூலம், பார்வையற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும், தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளித்துள்ள முதல் மாநிலமாக கேரளா விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு - நொய்டா மாணவி முதலிடம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்ச்சி பட்டியலில், மத்திய 
அரசு பள்ளிகள் முதல் இடத்திலும், தனியார் பள்ளிகள் கடைசி இடத்திலும் உள்ளன. 

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்தத் தேர்வை, 10 ஆயிரத்து, 673 பள்ளிகளை சேர்ந்த, 10.20 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இவர்களில், 8.37 லட்சம் பேர், அதாவது, 82.02 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டை விட, இது, 1.03 சதவீதம் குறைவாகும். மாணவர்களில், 78; மாணவியரில், 87.50 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நுாற்றுக்கு நுாறு : உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த, அமிட்டி பள்ளி மாணவி, ரக் ஷா கோபால், 498 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்று உள்ளார். இவர், ஆங்கிலம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியலில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். 
பள்ளிகள் அளவில், மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகள், 95.73; கேந்திரிய 
வித்யாலயா பள்ளிகள், 94.6 சதவீதத்துடன், தேர்ச்சியில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 
அரசு பள்ளிகள், 82.29; அரசு உதவி, 81.63; மத்திய திபெத்திய பள்ளி, 83.57 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 79.27 சதவீதத்துடன், தேர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளன.மொத்த மதிப்பெண்ணில், 95 சதவீதத்திற்கு மேல், 10 ஆயிரத்து 91 பேர்; 90 சதவீதத்திற்கு மேல், 63 ஆயிரம் பேர் பெற்றுஉள்ளனர். மண்டல அளவில், திருவனந்தபுரம் முதல் இடத்திலும், சென்னை மற்றும் டில்லி, இரண்டு, மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளன.

19 கே.வி.,க்கள் 'சென்டம்' : தமிழகத்தில் உள்ள, 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 19 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, கே.வி.,யில், தேவிகா ராதாகிருஷ்ணன், அகிலாண்டேஸ்வரி ஆகியோர், 480 மதிப்பெண்கள் பெற்று, கே.வி., முதன்மை மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அஞ்சனா என்ற மாணவி, பொருளியலில் 'சென்டம்' பெற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாணவி 3ம் இடம் : சி.பி.எஸ்.இ., பிளஸ் ௨ தேர்வில், மாற்று திறனாளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளி மாணவி தர்சனா, 
483 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 
மாணவி தர்சனா கூறுகையில், ''எனக்கு, பிறந்ததில் இருந்த வலது கண் குறைபாடு இருந்தது. இடது கண்ணிலும், இரண்டு வயதில் கார்னியா ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு இருந்தாலும், சாதிக்க முடியும் என, என் பெற்றோர் ஊக்கம் அளித்தனர். நான், பி.காம்., படித்து, பிஸினஸ் மேனேஜ்மென்டில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறேன்,'' என்றார்.

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு ஆதார் யு.பி.எஸ்.சி., அறிவிப்பு.......

புதுடில்லி:'சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அனுமதி அட்டையில், தரமற்ற புகைப்படம் இருந்தால், ஆதார் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்' என, தேர்வர்களுக்கு, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

முதல்நிலை தேர்வு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது. யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வுகள், ஜூன், 18ல் நடக்க உள்ளன. 

இதில் பங்கேற்கும் தேர்வர்களின்அனுமதி அட் டையில், அவர்களின் புகைப்படங்கள் தெளி வின்றி இருந்தால், ஆதார், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை

மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங் கள் போன்றவற்றை எடுத்து வரும்படி, யு.பி.எஸ்.சி., கூறியுள்ளது. இந்த அடையாள

அட்டையுடன், உறுதிமொழிக் கடிதத்தையும், தேர் வர்கள் அளிக்க வேண்டும்என, கூறப்பட்டுள்ளது.

இணையதளம்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அனுமதி அட்டை களை, யு.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில்

Advertisement
பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வின்போது, மொபைல் போன், கால்குலேட்டர், மின்னணு வியல் சாதனங்கள், புளுடூத் போன்ற, பிற தக வல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை, அனு மதிக்கப்பட மாட்டாது. விதிகளை மீறும் தேர் வர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும், யு.பி.எஸ்.சி., எச்சரித்து உள்ளது.

ஆசிரியர்களின் உரிமைகள் பறிப்பு -ஆசிரியர்கள் குற்றச்சாட்டு......

பள்ளிக்கல்வி செயல்முறைகள்- இடைநிலை / சிறப்பு / உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து அறிவியல் பட்டதாரி பதவி உயர்வு - இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு



DEE - தீவிர மாணவர் சேர்க்கை -பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் -அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்த அறிவுரைகள் வழங்குதல்.....




DEE - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் -பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு!


தேர்ச்சி இலக்கு நீக்கத்தால் தலைமை ஆசிரியர்கள் நிம்மதி -அரசு பள்ளிகள் கற்பித்தலில் கவனம் செலுத்த உத்தரவு.......

கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!.....

கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்காக, வங்கிகளை அணுக துவங்கியுள்ளனர். அவ்வாறு அணுகுவோருக்கு, சில அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை என, வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, மாணவர்கள், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பான் கார்டும் தேவை.
பான் கார்டு இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தால், ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என, ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கருணை மதிப்பெண் தரலாமா? : அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்....

 ''சி.பி.எஸ்.இ., பாடத்தேர்வில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
பள்ளித் தேர்வில் மிகக் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டால், கருணை மதிப்பெண்கள் வழங்கும் நடவடிக்கையை கைவிடுவதென, சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட, 32 பள்ளி தேர்வு வாரியங்கள், கடந்த மாதம், ஒரு மனதாக தீர்மானித்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, டில்லி ஐகோர்ட், கருணை மதிப்பெண் வழங்கும் நடைமுறையை தொடரும்படி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.எஸ்.இ., மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகள் மேலும் தாமதம் ஆகும் என்பதால், மேல் முறையீடு செய்யும் யோசனை கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2, தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கும் கொள்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தலையிடாது. எந்த மாற்றத்தையும், கல்வி ஆண்டுக்கு இடையில், திடீரென அமல்படுத்தக் கூடாது. இதுதொடர்பாக, கல்வி வாரியங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பல லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 
இந்த பள்ளிகளில், இன்னும், 50 சதவீத மாணவர்கள் படிக்கும் வகையில், உள் கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் உள்ளது. ஆனால், ஆங்கில மொழி திறன் வளர்ச்சி, முன்னேறிய கற்பித்தல் முறை இல்லாததால், பெற்றோர், பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், கற்பித்தல் முறையை முன்னேற்றவும், பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆட்டோ விளம்பரம் செய்யவும், அரசு பள்ளிகள் தரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாடல்கள், குறும்படங்களை ஒளிபரப்பவும், வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மற்றும் தியேட்டர்களில் விளம்பரம் செய்யவும், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்........


I  முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 7ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள், நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. 

பல தனியார் பள்ளிகள், புத்தகங்களை மாணவர்களே வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளன. எனவே, மாணவர்களுக்கு நேரடியாக புத்தகம் விற்பனை செய்யும் பணியை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவக்கி உள்ளது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து பாடப்பிரிவுகளுக்கான புத்தகங்களின் விற்பனையும் துவங்கி உள்ளது.
பாடநுால் கழக விற்பனை மையங்களிலும், மாவட்ட பாடநுால் கழக மண்டல கிடங்குகளிலும், ரொக்க பணம் செலுத்தி, புத்தகங்கள் வாங்கலாம். தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், www.textbookcorp.tn.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு மூலமும், புத்தகங்களை கொள்முதல் செய்யலாம். 
ஆன்லைனில் பதிவு செய்யும் போது, புத்தகங்களுக்கான தொகையை, 'நெட் பேங்கிங்' மூலம் செலுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள், கூரியர் மூலம், மாணவர்கள் பதிவு செய்த முகவரிக்கு, இரண்டு நாட்களில் அனுப்பப்படும். 
இதுகுறித்து, தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன் கூறியதாவது:
தற்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ பாட புத்தகங்களும்; 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான புத்தகங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எந்த பாடப்பிரிவு புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் விலை கொடுத்து, வேறு யாரிடமும் புத்தகங்கள் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்......