தமிழக மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!!!
தமிழக மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
செங்கோட்டையன் பெருமிதம்
”தமிழக மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்; எதையும்
சந்திக்கக்கூடிய திறமைசாலிகள்,” என, பள்ளிக்கல்வி துறை
அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம்,
கரட்டடிபாளையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:கோபி
தொகுதியில், ஜூன், இரண்டாவது வாரத்தில், தனியாரும்,
அரசும் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது.
இளைஞர்களின் தகுதிக்கேற்ப, வேலை கிடைக்க, அரசு
முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு தேர்வை சந்திக்கும் வகையில், தமிழக பாடத்
திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.தமிழக மாணவர்களை
பொறுத்தவரை, அறிவாற்றல் மிக்கவர்கள். எதையும்
சந்திக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்கள். கல்வியாளர்கள்,
பெற்றோர்கள், மாணவர்களை கண்டு அச்சப்படத்
தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்
மாணவர்களுடன் போட்டி போட்டு விளையாடிய பொதுமக்கள்! - அரசுப் பள்ளி ஆண்டு விழா ருசிகரம்
அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் நடந்த ஆண்டுவிழா விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியருடன் அவர்களது பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டதால், ஊர்த்திருவிழா போல களைக்கட்டியது ஆண்டுவிழா.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று, ஆண்டுவிழாவும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
இதில், குழந்தைகளின் ஆர்வத்தையும் போட்டி மனப்பான்மையையும் தூண்டும் வகையில், பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில்,மாணவர்களுடன் சரிக்குச் சரி நின்று பெற்றோர்கள் போட்டி போட்டு விளையாடினார்கள். அவர்களுடன் ஊர் பொதுமக்களும், 'எங்க ஊர்...எங்க பள்ளி' என்று உரிமையுடன் போட்டிகளில் கலந்துகொண்டு அசத்தினார்கள். ஏதோ ஊர்த் திருவிழா போல் நடைபெற்ற இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில், குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி, பெரியவர்களும் பெற்றோர்களும் தங்கள் வயதை மறந்தார்கள். அங்கே ஒரு 'ஜாலி ஹோலி'யே கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்சிம்சோன் பாஸ்டீன் சொல்லும்போது, "இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா, குளவாய்ப்பட்டி இளைஞர்கள், பொதுமக்களின் தன்னார்வத்தோடு கொண்டாடப்படுகிறது. ஆண்டு விழா என்று நான் சொன்னவுடன் ஊர்ப் பொதுமக்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் என்னிடம், ' குழந்தைகள் அனைவரும் மேடை ஏற வேண்டும். போட்டிகளை நீங்கள் நடத்துங்கள். அதற்குத் தேவையான உதவிகளையும் செலவுகளையும் நாங்கள் செய்துதருகிறோம் என்று கூறினார்கள். அந்த வார்த்தைகள் என் மனதிற்கு மிகுந்த தெம்பைக் கொடுத்தது. அத்துடன், இப்பள்ளியில் வேலைபார்த்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ள முன்னாள் தலைமை ஆசிரியர்கள் வீரன்,கண்ணன் ஆகியோரையும் மேடையில் பாராட்ட வேண்டும் என்று ஊர்மக்கள் விரும்பினார்கள். அந்தப் பாராட்டு விழாவையும் ஆண்டு விழாவோடு சேர்த்துக்கொண்டோம். நம் பள்ளிக்கு ஊர்ப் பொதுமக்கள் இவ்வளவு ஒத்துழைப்பு தருகிறார்களே, அவர்களை நாம் ஏதாவது ஒரு விதத்தில் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பானை உடைத்தல்,கயிறு இழுத்தல்,கோலப் போட்டி எனப் பல போட்டிகளை நடத்தினோம்.போட்டியில் ஊர்ப் பொதுமக்கள் முழு ஈடுபாடோடு கலந்துகொண்டார்கள். இதுபோன்ற விழாக்கள்மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என்பதே எனது இலக்கு" என்றார்.
ஆண்டுவிழாகுறித்து அவ்வூரைச் சேர்ந்த சின்னாத்தாள் என்பவர் ரொம்பவே சிலாகித்துப் பேசினார்."பள்ளியில் ஆண்டுவிழா என்றதும் குழந்தைகளைவிட, நாங்கள்தான் ரொம்பவும் ஆர்வமாக இருந்தோம். காரணம், அன்றைக்கு எங்கள் குழந்தைகளின் தனித்திறமையை நாங்கள் நேரில் பார்க்கவும், பொதுமக்கள் அவர்களைப் பாராட்டுவதைக் கேட்கவும் முடியும். இங்கே வந்ததும் எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் எங்களுக்கும் பல்வேறு போட்டிகளை நடத்தி, ஆசிரியர்கள் அசத்திட்டாங்க. எங்கள் பிள்ளைகளுடன் போட்டிபோட்டதும் அவர்களிடம் விட்டுக்கொடுத்துத் தோற்றதும், அவ்வளவு பெரிய சந்தோஷத்தை எங்களுக்குக் கொடுத்தது" என்றார். 10 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பள்ளியில் சிறப்பாக நடந்தது ஆண்டுவிழா.
TRB தேர்வு மூலம் PG ஆசிரியர்களுக்கான 2000 காலியிடங்களை நிரப்ப கோரிக்கை
Demand to fill 2000 vacancies of PG teachers through TRB exam
ஞாயிறு, 18 மார்ச், 2018
யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?
"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.
சாட்சி கையெழுத்து
சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்
கேரன்டி கையெழுத்து
வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.
கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது.
ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)
சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்?
நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோ நோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது.
அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.
நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?
"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.
சாட்சி கையெழுத்து
சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்
கேரன்டி கையெழுத்து
வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.
கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது.
ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)
சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்?
நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோ நோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது.
அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.
நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?
"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.
சாட்சி கையெழுத்து
சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்
கேரன்டி கையெழுத்து
வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.
கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது.
ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)
சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்?
நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோ நோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது.
அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.
நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை
நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார்.
எல்.ஐ.சி.,யின் புதிய திட்டம் அறிமுகம்....
சென்னை, தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், எல்.ஐ.சி.,யின், 'பீமாஸ்ரீ' எனும் புதிய பாலிசி திட்டம், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.'பீமாஸ்ரீ' திட்டம், பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்கேற்கும், குறிப்பிட்ட காலம் மட்டுமே, பிரீமியம் செலுத்தும் பாலிசியாகும்.
இதில், 8 வயது முதல் 55 வயது வரை, உள்ளவர்கள் சேரலாம். பாலிசி காலம் 14, 16 ,18 மற்றும் 20 ஆண்டுகள்; பிரீமியம் செலுத்தும் காலம், 10,12,14, மற்றும் 16 ஆண்டுகள் ஆகும்.
பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர தவணைகளில் செலுத்தலாம். திட்டத்திற்கான, குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம்; அதிகபட்ச வரம்பு இல்லை.முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், 6வது ஆண்டில் இருந்து, பிரீமியம் செலுத்தும் காலம் வரை, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், விசுவாச தொகையும் அளிக்கப்படுகிறது.மேலும், திட்டத்தில் வாழ்வு கால பயன், முதிர்வு தொகை பயன், இறப்பு தொகை பயன் என, மூன்று விதமான பயன்கள் உள்ளன. வாழ்வு கால பயன்களை, குறித்த காலத்தில் பெற, பணம் தேவைப்படும் நேரத்தில் விண்ணப்பித்தால்,
பணமீட்பு தொகையுடன், வட்டியும் வழங்கப்படும்.
முதிர்வு தொகையை, மொத்தமாக பெற, மாற்றாக ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் அல்லது 15 ஆண்டுகளில், தவணை முறையாக மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தவணையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
அதே போல், இறப்பு உரிம தொகையையும், தவணை முறையிலோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை....
உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவ -மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கலந்துரையாடல் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை மாணவ -மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது:
மனதை ஒருமுகப்படுத்துவதென்பது கற்றலினால் வருவதல்ல. இறந்தகாலம் என்பது ஒரு சுமை; எதிர்காலம் என்பது கனவு; நிகழ்காலத்தில் தற்சிந்தனையுடன் வாழ்வதே மனதே ஒருங்கிணைக்க வழிவகுக்கும்.
உங்களிடமே போட்டி போடுங்கள்: மற்றவர்களை ஒப்பிட்டு அவர்களுடன் போட்டி போடுவதைவிட உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறமை உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்யும் போதுதான், தன்னம்பிக்கை வளர்ந்து சிறந்த சாதனையாளராக உருவாக முடியும்.
மாணவ -மாணவிகள் நேரமே இல்லை என்று ஒருபோதும் கூறக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. ஒருவர் தமக்கு நேரமே இல்லை என்று கூறுவாராயின், அவர் அவருடைய நேரத்தையும் வேலைகளையும் சரிவர திட்டமிடாதவராக கருதப்படுவார் என்று ஆளுநர் புரோஹித் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 50 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன.
இதில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வின்வெளியில் ஒரு வருடம் தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம்..நாசா கண்டுபிடிப்பு
வாஷிங்டன்:
வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.
இரட்டையர்களில் ஒருவரை வின்வெளியில் தங்க வைக்கும் ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. இந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த அஸ்ட்ரோநாட் ஸ்காட் கெல்லி என்பவர் சர்வதேச வின்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கி இருந்தார். கெல்லி இரட்டையர்களில் ஒருவர்.
2016ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பூமிக்கு திரும்பி வந்தார். சர்வதேச வின்வெளி மையத்தில் ஒரு ஆண்டு தங்கியிருந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் கெல்லியின் ரத்த மாதிரி சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அவரது மரபணுவில் 7 சதவீதம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. கெல்லியின் மற்றொரு சகோதரரின் டிஎன்ஏ.வுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாற்றம் உறுதியாகியுள்ளது.
இந்த தகவல் நாசாவின் இரட்டையர் ஆராய்ச்சி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து எனது மரபணுவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அறிந்து கொண்டதாக கெல்லி தெரிவித்துள்ளார்.
பள்ளி விழாவில் அலங்கார மின்விளக்குகளால் மாணவர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு....
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால், விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் உள்பட 130 பேருக்கு கண் அழுத்தம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
ஏர்வாடியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் எஸ்.வி. இந்து தொடக்கப் பள்ளியில் 100}க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற அறையில் அதிக திறன் கொண்ட அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், விழாவில் பங்கேற்ற பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இரவில் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் நீர் வடியத் தொடங்கி, சிவந்தும் காணப்பட்டது.
பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியை (பொறுப்பு) சித்ரா, ஆசிரியர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை காலை 83 குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர் உள்பட 117 பேர் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இதுதவிர பாதிக்கப்பட்ட 13 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக கண் பார்வைத் திறன், கரு விழிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் கண்களில் மருந்திட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வலி நிவாரணம், எதிர்ப்பு சக்திக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டன.
கோட்டாட்சியர் இல. மைதிலி, சார் ஆட்சியர் ஆகாஷ், அரசு மருத்துவமனை டீன் எஸ்.எம். கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், நான்குனேரி வட்டாட்சியர் வர்கிஷ் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆட்சியர் விசாரணை: மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள், பெற்றோர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: ஏர்வாடி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியதால் குழந்தைகள், பெற்றோர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு கண் பார்வையில் எந்தவித பாதிப்பும் இல்லை. 2 தினங்களில் கண்ணில் ஏற்பட்ட எரிச்சல், பாதிப்பு குணமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஏர்வாடியில் அரசு மருத்துவக் குழுவினர் 2 தினங்கள் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களின்போது எந்த மாதிரியான விளக்குகள் பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு துறைகள் மூலம் ஆய்வு செய்து தகுந்த சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார் அவர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர், ஒலி ஒளி அமைத்தவர்கள் மீது ஏர்வாடி போலீஸர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப்பள்ளிக்காண வீடியோ விளம்பரம் வெளியீடு .....
தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு
திருச்சி: பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
ஏப்.,12-ல் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்து தர வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சனி, 17 மார்ச், 2018
19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைப்பு
காலிப்பணியிடங்கள் சரியாக தயாரிக்கப்படவில்லை என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் சரி செய்த பின்னர் கலந்தாய்வு நடைபெறவேண்டும் என்ற கருத்திற்கிணங்க 19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏர்வாடியில் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு
ஏர்வாடியில் மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 60 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.
அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2 நாளில் இது சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கண் எரிச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை சந்தித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்கள் உட்பட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
Tamil Nadu school education invites all the Teachers to watch the updates of school education and to showcase their students talents to the world.
What should you do?
just click the below link and like the official page
1.CLICK the link 2.LIKE the page
share this information with others
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கத்தை நீங்கள் பார்க்கவும் உங்கள் மாணவர்களின் திறமையை உலகறிய செய்ய அருமையான வாய்ப்பு
கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து லைக் பட்டனை அழுத்தவும்.
புறக்கணிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் : பாரபட்சத்தால் அதிருப்தி!!!
பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக
நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.new
பத்தாம் வகுப்பு தேர்வையொட்டி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் நியமிக்கப்படுவர். இரண்டு ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாததால் முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்தில் சிக்கல் நீடித்தது.
இதனால் அப்பணிக்கு மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமிக்கப்பட்டனர். ஆனால் தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது போல் எழுத்தர், அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.,) ஒதுக்கீடு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.இதனால் கண்காணிப்பு பணியுடன் பேப்பர் பண்டல் பிரிப்பது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடிப்பது உட்பட ஓ.ஏ.,க்கள் பணியையும் அவர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.
இதனால் கண்காணிப்பு பணியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "தலைமையாசிரியர் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பட்டதாரி ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. அடுத்தாண்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பற்றாக்குறை இருந்தாலும் கூடுதலாக தின ஊதியம் கொடுத்து, வினாத்தாள் கட்டுக் காப்பு மையத்தில் இரண்டு தலைமையாசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும். அந்த இடத்தில், ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கலாம்," என்றார்.
வெள்ளி, 16 மார்ச், 2018
பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்.....
பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 7ம் தேதி தேர்வுகள் ஆரம்பித்தது. அன்றைய தினம் மொழி பாட தேர்வுகள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 27,994 மையங்களில் 8.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொது தேர்வை எழுதினர். அதில், 1 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கூறினர்.
இதேபோல், இன்று ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 1 பொது தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வி துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நுழைவு தேர்வுக்கு தயார் ஆவதிலேயே முணைப்பு காட்டி வந்தனர். இந்நிலையில், பிளஸ் 1 படிப்பை பொது தேர்வாக நடத்த முடிவு செய்தது அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 பாடத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வைத்துள்ளது.
பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு/.....
பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு, ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.
அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.
அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்-ஆசிரியர்கள் கலந்துரையாடல், பிற திறன்களில் மாணவர்களின் நிலை, கல்விச்சூழலில் சந்திக்கும் சவால் குறித்தும் ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 9.6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 9.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் 2017-18ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,மார்ச் 16 தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களில் 4,81,371 பேர் மாணவிகள், 4,83,120 பேர் மாணவர்கள், மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர். அதே போல், தனித்தேர்வர்களாக 11,098 பெண்கள், 25,546 ஆண்கள், 5 திருநங்கைகள் தேர்வு எழுத உள்ளனர். சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வுமையங்களில் மொத்தம் 26,043 மாணவிகள் மற்றும் 24,713 மாணவர்கள் என 50,756 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மாணவிகள் 8,694 பேர், மாணவர்கள் 8,820 பேர் என மொத்தம் 17,514 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 237 புதிய தேர்வு மையங்கள் மாணவர்கள் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 186 பேர் தேர்வு எழுத 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் 3,659 மாற்றுத்திறனாளிகளில் 1,898 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசமும் அளிக்கப்படுகிறது. 1,067 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகிற 16/03/2018 அன்று துவங்கி 20/04/2018 வரை நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி என இந்தத் தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதில் தேர்வு எழுதும் 186 சிறை கைதிகள் மற்றும் 3,659 மாற்றுத் திறனாளிகளுக்கு எனப் பிரத்தியேக ஏற்பாடுகளைத் தேர்வு துறை செய்துள்ளது.
சிறை கைதிகள்:
இவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 186 சிறைவாசிகள் எழுதுகிறார்கள். இவர்களுக்கான தேர்வு மையங்கள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசு விலக்களித்து உள்ளதால், தமிழ் வழியில் பயின்ற இவர்களிடமும் தேர்வு கட்டணம் வசூலிக்கப் படவில்லை. இவ்வாண்டு தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்த்து 5,55,621 ஆகும்.
மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,659 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 1898 பேருக்குச் சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதைத் தவிர 1067 மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு மொழிப்பாடத்தில் இருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.
வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவம்....
வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனூர்,
திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலையில் அந்த பள்ளியின் மாணவன் வேல்முருகன் (வயது 10), வகுப்பறையில் தூங்கி விட்டான். இது தெரியாமல் பள்ளி நேரம் முடிந்ததும் ஆசிரியர் பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் மாலை 5.30 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்த மாணவன் வேல்முருகன் பள்ளியில் யாரும் இல்லாததைக் கண்டும், பள்ளி கதவு பூட்டி இருப்பதை அறிந்தும் வகுப்பறை கதவில் ஏறி உதவி கேட்டு கூச்சல்போட்டான். சத்தம் கேட்டு அந்தபகுதியைச் சேர்ந்தவர்கள் திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவன் வேல்முருகனை மீட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கியதும், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அவை மூடி மறைக்கப்படுவதாகவும், மாணவ-மாணவிகளை வகுப்பறைகளையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறை 5-ம் வட்ட ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரி பக்கிரிசாமி விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி துறை அதிகாரி உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெற்றோரின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்தி....
சென்னை, தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-
* நிலுவையிலுள்ள பல்வேறு வழக்குகளாலும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறைப் பணிகளை தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையம் செய்து கொண்டிருப்பதாலும், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்த பின்னரே, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட இயலும். எனினும், வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் செலவினங்களுக்காக ரூ.172.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2018-2019-ம் ஆண்டிற்கு, மாநில நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,980.33 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,834.75 கோடியும் பகிர்ந்தளிக்கப்படும். அதேபோல் மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,975.07 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,877.10 கோடியும் பகிர்ந்தளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் 1,496 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை.....
நாட்டில் 1,496 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்குத் தீர்வு காணும் விதமாக கூடுதல் எண்ணிக்கையிலான அதிகாரிகளை தகுதித் தேர்வுகள் மூலம் நியமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் முக்கியப் பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக உரிய முடிவுகள் எடுக்கப்படாமல் சில திட்டங்கள் காலதாமதம் ஏற்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. போதிய அதிகாரிகள் இல்லாததே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: நாடு முழுவதும் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சிப் பணியில் இருக்கலாம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 5,004 அதிகாரிகள் மட்டுமே இருக்கின்றனர். 1,496 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர். காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண்டொன்றுக்கு 180 ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய குடிமைப் பணிகள் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறை 2012-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது வரை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2,490 சொத்துகளுக்கு முடக்கம்: இதனிடையே, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ''தில்லியில் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட 2,490 சொத்துகள் கடந்த 4 மாதங்களில் முடக்கப்பட்டுள்ளன'' என்றார். வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் புது தில்லி பெரு நகர மாநகராட்சிகள் சார்பில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். கங்கை திட்டத்துக்கு ரூ.3,633 கோடி: மக்களவையிலும் கேள்வி நேரத்தின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தகவல்கள் கோரப்பட்டன. அவற்றில் கங்கை நதியின் வழித்தடத்தில் உள்ள படித்துறைகளைத் தூய்மைப்படுத்துவது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கங்கை நதியை ஒட்டியுள்ள 361 படித்துறைகளை அழகுபடுத்தவும், தூய்மைப்படுத்தவும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,633 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 228 படித்துறைகளில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது
PGTRB - வேதியியல் 6 மதிப்பெண் வழங்கிய வழக்கில் 6 வார காலத்திற்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு....
Phonetic method DVD இன்றிலிருந்து தினமும் kalvicikaram இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஐயப்பன் என்ற தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரின் சீரிய உழைப்பாலும்,பயிற்சியாலும் உருவான தொகுப்பே இம்முறை. திருப்போரூர் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும்,அர்ப்பணிப்போடும் இம்முறை பாட அலகுகளாக்கப் பட்டது.
கண்ணன் மற்றும் ஞானசேகர் ஆசிரியர்கள் சூலேரிக்காட்டுக்குப்பம் என்ற கடற்கரை ஓரப் பள்ளியைத் தெரிவு செய்தார்கள். அனைவரும் இணைந்து பல விதமாகத் திட்டமிட்டோம்.பலநாட்கள் இரவு பகல் பாராமல் வகுப்பறையை English Lab போல ஓவியங்களால் வடிவமைத்தோம். தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இன்று காணப்படும் வகுப்பறை ஓவியங்களின் முன்னோடி இந்த வகுப்பறை தான்.
ஆசிரியர் கண்ணன் இதை சிறப்பாகச் செய்து முடித்தார்.மகாபலிபுரம் கடற்கரை அருகில் ஆங்கில படப்பதிவுக்காக உருவான வகுப்பறையை நீங்கள் இதில் பார்க்கலாம்.script, Location, preparation போன்றவற்றை உருவாக்கவே 2 மாதங்கள் யாருமே தூங்கவில்லை.
தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குநராக இருந்த திருமதி. லதா அவர்கள் தான் இத்திட்டத்தின் ஆணிவேர்.படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தையும்,சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார்கள்.
எனது பக்கபலமான தொழில்நுட்பக் கலைஞர்களோடு களம் இறங்கினேன்.அந்தோணி,ஜான் கேமரா.வின்சி அண்ணன் எல்லா வித உதவிகளும் செய்தார்.
ஒரு சினிமா எடுக்க என்னென்ன விஷயங்கள் தேவையோ அந்த தொழில்நுட்பத் தரத்தை மனதில் கொண்டு,குழந்தைகளுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்ற ஈடுபாட்டோடு ஒவ்வொரு நிமிடமும் உன்னிப்பாக இருந்தோம்.
அனுபவம் ஒவ்வொரு நாளும் தொடரும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே உதவி தான்.எப்படியெல்லாம் பகிர முடியுமோ எல்லோருக்கும் பகிருங்கள்.
இதில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய ஆசிரியர்களின் உழைப்பினாலும்,தியாகத்தினாலும் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம்.முதல் நன்றிகள் இவர்களுக்கும்,ஐயப்பன் மற்றும் அமலன் ஜெரோம் ஆசிரியர்க்கும்...
Phonetic method -இன் முதல் unit இது
இந்த முதல் அத்தியாயத்தை நீங்கள் பார்ப்பதற்காய் ஆறு மாதத்திற்கும் மேலான பலருடைய உழைப்பு பின்புலமாய் இருந்துள்ளது...
அப்படி ஆறு மாதமாய் என்னத்த திட்டமிட்டீர்கள் என்று கேட்பவர்களுக்காய்...
நிறையக் கேள்விகள் எங்களுக்குள்... கேமரா வைக்குமளவுக்கு அறை நீளமாக வேண்டுமே,சுவற்றில் flex வைப்பதா அல்லது ஓவியம் வரைவதா? Flex வைத்து reflect ஆனால் என்ன செய்ய? எனவே ஒரு இடம் விடாமல் ஓவியம் வரைய முடியுமா? அவ்வளவு பெரிய அறைக்கு lightings எப்படி arrange பண்ணுவது? எல்லா சன்னல்களையும்,கதவையும் அடைத்தால் தான் lightings சீராக இருக்கும். அப்படியென்றால் 10,000 வாட்ஸ் வெளிச்ச வெப்பத்தில் நடிக்கும் ஆசிரியர்கள் தாங்குவார்களா? ஒவ்வொரு ஆசிரியர்களும் தினசரி அதிகாலை ஒவ்வொரு இடத்திலிருந்தும் பல கிலோ மீட்டர் பயணித்து வர வேண்டும், மாலை தான் படப்பிடிப்பு முடிந்து செல்ல வேண்டும், 4 மாதம் இப்படியே தொடர்ந்து வருவார்களா? Script முழுக்க முழுக்க ஆங்கிலமா அல்லது தமிழா அல்லது இரண்டும் கலந்துமா? ஆசிரியர்களுக்கு எது புரியும்? குழந்தைகளுக்கு எது படிக்கப் பிடிக்கும்? Screenplay ல் ஒரு தொய்வில்லாமல் dialogue எப்படி எழுதுவது? நெல்லிக்குப்பம் ஊருக்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் 30 கிலோ மீட்டர். சின்ன இடையூறின்றி தினசரி குழந்தைகளை யார், எப்படிக் கூட்டி வருவது? எல்லா ஆசிரியர்களையும் ஒரே மாதிரியான சேலை 2 எடுக்கச் சொல்லி,எடுத்து விட்டார்கள்? 4 மாதங்கள் ஒரே சேலை தினசரி உடுத்துதல் சாத்தியமாகுமா? தரையில் உட்கார வைத்தா?chair போடுவதா? தரையில் என்ன விரிக்க?விரிப்புக்கு என்ன செய்ய? 4 மாதங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் சாப்பாட்டுக்கு எப்படி ஏற்பாடு செய்வது?தொழில் நுட்ப கலைஞர்கள் தங்கி,சாப்பிட என்ன செய்வது? தினசரி அனைத்தையும் காலை தயார் செய்ய வேண்டும்.மாலையில் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இதற்கு என்ன பண்ணுவது? Live sound recording-ல் நாய் குலைத்தால் கூட Re-take எடுக்க வேண்டும். சாத்தியமாகுமா?
இப்படி சின்னச்சின்னக் கேள்விகள். கேள்விகள் சிறிதாயினும் நடைமுறையில் இது எவ்வளவு பிரச்சினை என்பதை அணு அணுவாய் அனுபவித்தோம்.
ஒரு நாளில் இது சுலபம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு கடினம் என்று தெரிந்தும் போராடினோம். விளைவு முதல் unit தற்போது நீங்கள் பார்க்கும்படியாக. கொஞ்சம் தான் சொல்லியிருக்கிறேன்... அனுபவம் தொடரும்...
இது ஆங்கில பயம் போக்கும் அட்சயம். பார்ப்போம்...ஆசிரியர்கள் இதை எவ்வளவு பயன்படுத்தப் போகிறார்கள்? எத்தனை பேருக்கு share செய்து மானுடம் பயனுற வாழ வைக்கப் போகிறார்கள் என்று. நல்லபடி நடந்தால் அரசுப்பள்ளிகள் தப்பிக்கும்.ஆங்கில பயம் அகலும். Cbse க்கு நிகரான உச்சரிப்பு நிகழும்.அடுத்த ஆண்டு சேர்க்கை அதிகரிக்கும். கொஞ்சம் முன் வருவோம்...வெறும் 43 நாட்கள் மட்டுமே போதும்.இன்றிலிருந்து ஒரு முயற்சி... முனைவோம்.
வியாழன், 15 மார்ச், 2018
Budget Speech for the year 2018-2019 - Tamil Version