>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 30 ஏப்ரல், 2018

பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு...

சென்னை, பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இலவச சீருடைகள், புத்தகங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களை, வரும் கல்வியாண்டில், விரைவாக செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 16.16 லட்சம், 'ஜியாமெட்ரி பாக்ஸ்' வாங்க, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.அதேபோல், 15.15 லட்சம் பெட்டி, வண்ண பென்சில் வாங்க, 2.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ - மாணவியருக்கு, 58 லட்சம் ஜோடி, இலவச காலணிகள் வழங்குவதற்காக, 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்கவும், டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை இந்த ஆண்டாவது வழங்கப்படுமா?

அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாகியும் நடை முறைக்கு வராத, பள்ளி மாணவர்களுக்கான, 'ஸ்மார்ட்' அட்டை வழங்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டிலாவது நடைமுறைக்கு வருமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரங்களில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், திட்டங்களை அமல்படுத்துவதும், அவற்றுக்கு நிதி ஒதுக்குவதும் சிக்கலாக உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு விபரங்களை தெரிந்து கொள்ள, ஸ்மார்ட் அட்டை வழங்க, அரசு முடிவு செய்தது.இந்த திட்டம், 2011ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதார் எண்கள், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர் விபரம், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு, 'எமிஸ்' என்ற, கல்வி இணையதள மேலாண்மை எண், உருவாக்கப்பட்டது.இந்த எண், ஒவ்வொரு மாணவருக்கும், பிளஸ் 2 முடிக்கும் வரை, மாறாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண் அடிப்படையில், மாணவர்களுக்கு மின்னணு, 'சிப்' பொருத்தப்பட்ட, ஸ்மார்ட் அட்டை வழங்க முடிவானது.திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும், இன்னும், ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவில்லை. இந்த அட்டை வழங்கப்பட்டால், பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் தர மறுத்தாலும், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி, மாணவர்கள், மற்றொரு பள்ளியில் சேர முடியும்.போலி மாணவர்கள் பெயர்களை, பள்ளிகளின் பதிவேட்டில் சேர்க்க முடியாது. அரசின் திட்டங்களை, போலி மாணவர்களின் பெயரில், யாரும் அபகரிக்க முடியாது. அரசுக்கு ஏற்படும் வீண் செலவுகளும் குறையும். இதுபோன்ற பல நன்மைகள் உள்ளன. 'எனவே, இனியும் தாமதம் செய்யாமல், ஸ்மார்ட் அட்டை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வை யும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.

முயற்சி

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமை குறையும்

இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுமுடிவுகள் நாளை வெளியீடு


மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட உள்ளன.

ஜே.இ.இ. தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் முதல்நிலைத் தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். அதோடு, முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 2 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். 
இதில் முதல்நிலைத் தேர்வில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தாள்-1-ன் நேரடி எழுத்துத்தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை ஜே.இ.இ. இணையதளத்தில் (www.jeemain.nic.in) பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதில், பி.ஆர்க். படிப்புக்கான தாள்-2 தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மே 20-இல் முதன்மைத் தேர்வு: ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது மே 20 இல் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்-லைன் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதற்குரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி, மே 7 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும்.

குறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்


ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும்; குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடங்களில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா அரங்கில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறை, கல்லூரியைத் தேர்வு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து செங்கோட்டையன் பேசியதாவது:
நமது நாட்டின் உயர்கல்வி இலக்கு என்பது 23 சதவீதம். ஆனால், தமிழகத்தின் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.3 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 539 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இதனால் மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது. 
முதல் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 2 ஆண்டுகளில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டு இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.
இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் ரூ.463 கோடி மதிப்பில் இணையதள வசதி ஏற்படுத்தி நவீனப்படுத்தப்படும்.
தற்போது முதியவர்கள் பலர் ஆதரவற்றவர்களாக விடப்படுகின்றனர். இது குறித்து இளையதலைமுறையினருக்கு போதிய அறிவுரை வழங்கப்படுவது இல்லை. எனவே, பெற்றோரைப் பாதுகாப்பது, பராமரிப்பது குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் போதிக்கப்படும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதம் ஆகாது.
ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி ( மே 16-இல் பிளஸ் 2; மே 23-இல் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்) முடிவுகள் வெளியாகும். குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடத்தில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்றார்.

National ICT Award for School Teachers in India: Advertisements released for invitation of nominations/entries for the year 2018



NATIONAL ICT AWARDS FOR SCHOOL TEACHERS-2018

Letter to Secretaries/Commissioners of School Education in States/UTs and Autonomous bodies 

set up under MHRD last date upto 31stJuly, 2018 Click Here

News paper Advertisements English | Hindi
Entry Form and ICT Award Guidelines for 2018  Click Here

பள்ளிகள் மூடும் முடிவு : 7,500 ஆசிரியர் பணியிடங்கள் பறிபோகும்..


மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளை மேலும்  ஊக்குவிக்கும் என்றும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு திருப்பிவிடப்படும் நிதியை தடுத்து அரசுப்பள்ளிகளை  அந்நிதியில் மேம்படுத்தலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூடும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் 15 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப்பை மூட வேண்டும் என்றும், 30 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப் மாணவர்களை  அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், இந்த குரூப்பில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் சென்று பாடம்  எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அரசுப்பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கிலவழிப்பிரிவில் 15க்கும் குறைவான மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க  வேண்டும். அல்லது தமிழ்வழிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பணி நிரவல் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 29  ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மாணவர் குறைவை காரணம் காட்டி மூடப்படும் நிலை ஏற்படும். அதோடு 20க்கும்  குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள 33 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும். 

அதோடு தொடக்கப்பள்ளிகளில் 7,500 ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போவதுடன், அப்படியே பணி நிரவல் செய்யப்பட்டாலும் 5,000 ஆசிரியர்களின்  நிலை கேள்விக்குறியாகும். இது ஒருபுறம் என்றால் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்  எண்ணிக்கை குறைந்தால் அப்பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வலியுறுத்துகிறது. 


இந்த செயல்முறைகள் நடைமுறைக்கு வரும்போது கிராமப்புறங்களில் பள்ளி இடைநிற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். சராசரி  எழுத்தறிவு பெறாதவர் விகிதாச்சாரமும் உயரும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் காமராஜரின் கனவை சிதைக்கும்  முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என்பது கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 300 குடியிருப்புகளுடைய ஊரில் 1 கி.மீ இடைவெளியில் தொடக்கப்பள்ளி, 2 கி.மீ இடைவெளியில் நடுநிலைப்பள்ளி,  32 கி.மீ இடைவெளியில் உயர்நிலைப்பள்ளி, 5 கி.மீ இடைவெளியில் மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும். ஆனால், அரசுப்பள்ளி இருக்கும்  இடத்திலேயே 500 மீட்டர் இடைவெளியில் தனியார் பள்ளிகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளிப்பது புதிராக உள்ளதாக வேதனை  தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.

இதே கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். 10ம் வகுப்பு  பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் ஏழை மாணவர்கள் அவர்கள் விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட வேண்டும். இந்த  விதிகளின் கடந்த ஆண்டு வரை மொத்தம் 60,000 மாணவர்களுக்கு மேல் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டு, அரசின் நிதி ₹60 முதல் ₹90  கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதியை அப்படியே அரசு பள்ளிகளுக்கு திருப்பி மேம்பாட்டுப்பணிகளை செய்திருந்தால் நிதியை பெறும்  அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை மாணவர்களுக்கு தர முடியும். இதை ஏன் அரசு செய்யவில்லை? அப்படியென்றால் அரசுக்கே  அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்க  வேண்டும். அத்துடன் தனியார் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான கட்டுப்பாடுகளையும் கடுமையாக்க வேண்டும்.


இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபுவிடம் கேட்டபோது, ‘பள்ளிக்கல்வி இயக்குனரின் புதிய  செயல்முறைகள் அரசு பள்ளிகளை இழுத்து மூடும் அளவில் உள்ளது. 

அதோடு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத  மாணவர் சேர்க்கைக்காக அரசு நிதி இதுவரை ₹90 கோடி வழங்கப்பட்டதை ஆண்டுக்கு 10 பள்ளிகள் வீதம் மேம்படுத்தியிருந்தால் ஏழை  மாணவர்களுக்கு தரமான கல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும். இவ்விஷயத்தில் கல்வியாளர்களும், ஆசிரியர் சங்கங்களும் சரியான முடிவை எடுக்க  வேண்டும். அதற்கு முன்பாக தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்’ என்றார்.

கோடைக்கால விடுமுறையில் சென்னையை சுற்றிப் பார்க்க சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!


கோடை விடுமுறையின் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு

100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருத்தலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக அண்ணாசதுக்கத்துக்கு 50 சிறப்புப் பேருந்துகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 20, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு 10, பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு 8, மாமல்லபுரத்துக்கு 5, சிறுவாபுரி முருகன் திருக்கோயிலுக்கு 4, கோவளத்துக்கு 3 என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம்- சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து..

தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து
அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.


தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கம் சார்பில் ‘தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்ட உருவாக்கம்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. மதிப்பெண்கள் பிரதானப்படுத்தப்படுவதால், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பாடத் திட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மாணவர்கள் படிக்கின்றனர். மற்றவற்றை தவிர்த்துவிடுகின்றனர். ஆழமாக, முழுமையாக மாணவர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை. எனவே, அனைத்தையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் புளூபிரின்ட் அளிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடங்களுக்கு நடுவில் அந்த பாடத்துடன் தொடர்புடைய சுவாரஸ்ய தகவல்களும் பெட்டிச் செய்திகளாக இடம்பெறும். மேலும், அறிவியல் பாடங்களில் வாழ்க்கையோடு தொடர்புடையவற்றை எடுத்துக்காட்டுகளாக குறிப்பிட்டுள்ளோம். பாடத்துக்கும் நடைமுறைக்குமான இடைவெளி முடிந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பக்க வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் QR Code அளிக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து பார்த்தால் அந்த பாடத்தின் விளக்கத்தை ஆசிரியர் ஒருவர் வீடியோவில் விளக்குவார். பாடத் திட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக ஆசிரியர் வழிகாட்டு கையேடும் தயாராகி வருகிறது. பாடங்களை புதுமையாக நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் மூலம் மற்றவர்கள் பயன்பெறும் வகையிலும் ஆசிரியர்கள் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் குறித்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம். இவ்வாறு அறிவொளி பேசினார்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தமிழக பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது என்று கூறி வந்தனர். தற்போது தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டி) தயாரிக்கும் பாடத்திட்டத்தைவிட அதிக தரத்தில் உள்ளது” என்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன், துணைத் தலைவர் ஜி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் ச.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி..


கலசபாக்கம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு பி.யுவராஜ் (வயது 22) என்ற மகனும் செண்பகவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

யுவராஜ் 1-ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை சீட்டம்பட்டு அரசு ஆரம்ப பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 418 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. படித்துவிட்டு, ஓராண்டாக ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் படித்து வந்தார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், பிறந்த கிராமத்துக்கும் பெருமைத் தேடி கொடுத்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தேன். அரசு பள்ளிக்கூடத்தில் படித்து, தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டு இருக்கும்போது, அங்குள்ள பேராசிரியர்கள் ஐ.ஏ.எஸ். படிக்க ஊக்கப்படுத்தினர்.

அதன்படி சகாயம், இறையன்பு போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முன்னுதாரணமாக மனதில் நினைத்து படித்து வந்தேன். முதலில் சென்னையில் உள்ள மனித நேய மையத்தில் 2 மாதம் படித்தேன். நான் பிளஸ்-2 படிக்கும்போது, அரசு சார்பில் வழங்கிய மடிக்கணினியை வைத்து இணையதள வசதியுடன் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் மாநிலத்தில் முதல் இடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன்.

நான் ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த பின்னர், என்னை பொதுப்பணி துறை செயலாளராக நியமித்தால், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுப்பதுடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 510 குளங்கள் காணாமல்போய் உள்ளதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பேன். எனது சொந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நூலகம் அமைத்து என்னை போன்ற மாணவர்கள் அதிக புத்தகங்களை படித்து அரசு தேர்வுகளில் வெற்றி பெற ஊக்குவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்று இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். குடிசை வீட்டில் வாழும் யுவராஜீக்கு உடனடியாக பசுமை வீடு கட்டித்தரப்படும். அவருக்கு, டெல்லி சென்று பயிற்சி பெற தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும், என்றார்.

'இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’ - கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு...



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை பார்வையிடப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் அனுமதித்தால் விண்வெளி துறையில் இவர்களுக்கு ஆர்வம் உருவாகும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உலக அளவில் முதன்மையான இடம் வகிக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் இஸ்ரோ ஆறாவது இடம் வகிக்கிறது. பெரும் சவாலான பல செயற்கை கோள்களை விண்ணில் பாய்ச்சி சாதனைகள் படைத்து வருகிறது. இங்கு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகிறார்கள்.

இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற பெரும்பாலான மாணவர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில்தான் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளி பயிலும் 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை பார்வையிடுவதற்கான அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் திறன் சார்ந்த புதுமை படைப்புகளுக்கான கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை நேரில் பார்வையிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர்கள் ‘’இது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் இதோடு நின்றுவிடக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இஸ்ரோவை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனால் மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சித்துறையில் ஆர்வமும் ஆரம்பநிலை புரிதலும் ஏற்படும், இதனால் இத்துறையில் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.” என்கிறார்கள்.

BE - அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே கலந்தாய்வு : சுனில் பாலிவால் அறிவிப்பு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துதறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக கலந்தாய்வு நடந்தது. 

தமிழ் நாட்டில் தொடக்கப் பள்ளிகள் எத்தனை, உயர் நிலைப் பள்ளிகள் எத்தனை, மேல் நிலைப் பள்ளிகள் எத்தனை என்ற தகவல்கள்



..........................................................................................END....................................................................................................................

இணையத்தில் பள்ளிகள் ஒருங்கிணைப்பு ; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

கோவை: ''ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை நடத்த, அனைத்து அரசு பள்ளிகளும் இணையதளம் வாயிலாக இணைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கான 'ஆன்-லைன்' விண்ணப்ப முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்திய அளவில், உயர்கல்வித்துறையில் வளர்ச்சி, 23 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் தான், 44.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுஉள்ளது.பொறியியல் கல்லுாரிகளில், ஆன்லைனில், வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு பாடத்திட்டம், ஒரு வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக அமைய உள்ளது. ஆறு, ஒன்பது, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அத்தனை பேருக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்தை மிஞ்சும் வகையில், புதிய திட்டம் இருக்கும். 

இந்த ஆண்டில், 3,000 பள்ளி களில், 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்துக்கு, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக, 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும். ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை, இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அண்ணா பல்கலை, இன்ஜினியரிங் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் வெளியாகுது விபரம்..

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை. கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன் பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்' என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்.

Pay Matrix colorful table and 5 pages (new)

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

திருப்பதி செல்ல புதிய விதிமுறை...! ஒரு முறை இதை படித்துவிட்டு செல்லுங்கள்..!




திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் குறிப்பிட்ட அனுமதி அட்டை வழங்கும் பணி தற்போது பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது

முன்பு போன்று நீங்க காத்திருந்த ஏழுமலையானை தரிசிக்கும் காலம் சென்று அதிக நேரம் காத்திருக்காமல் எளிதில் சாமியை தரிசனம் செய்ய டைம் ஸ்லாட் போட்ட அட்டை நேற்று முன்தினம் முதல் சோதனையில் தொடங்கப்பட்டு உள்ளது



டைம் ஸ்லாட் முறையயான தரிசன அட்டை

டைம் ஸ்லாட் முறையிலான தரிசன அனுமதியை பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்களார் அட்டை இவை இரண்டில் ஏதாவது ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்கிறது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்



இந்த இரண்டு அட்டைகளும் இல்லை என்றால், திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்பிளக்ஸில் தங்கி ஓய்வெடுத்து வழக்கம் போல இலவச தரிசனம் செய்யலாம்



பல முக்கிய திட்டங்கள் மற்றும் அரசு நல திட்டங்கள் வரையிலும், வங்கி கணக்கு முதல் அனைத்தும் ஆதார் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் என கூற முடியாது என்பதால், தற்போது வாக்களர் அட்டை இருந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கில் சோதனை முறையில் இந்த திட்டம் நடை முறையில் உள்ளது



எனவே பக்தர்கள் திருப்பதிக்கு செல்லும் போது மறக்காமல் ஆதார் அட்டை அல்லது வாக்களார் அட்டை எடுத்து செல்வது நல்லது.

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்! ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!


கோவை:மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.

விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது.பள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர். தனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் என்கின்றனர், அப்பகுதி வாசிகள்.
இவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி தவறாமல் இடம்பெற்ற பெயர், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். பரபரப்பாக விழிப்புணர்வு பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியபோது...
தொடக்கப்பள்ளி தான், கல்வியின் அடித்தளம். இங்கு சரியாக வழிநடத்தப்படுபவர்கள், எத்தகைய சூழலிலும், எதிர்நீச்சல் போடுவார்கள். வார்த்தையும், எழுத்தும் உச்சரிக்க தெரிந்தபின், மனப்பாடம் செய்விப்பது தவறு.
புத்தகத்தில் உள்ளதை தாண்டி, என்ன கற்று கொடுக்கிறோம் என்பதில் தான், ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படும். எனக்கு, தனித்துவமான ஆசிரியராக இருக்க வேண்டுமென்பதே விருப்பம். இதற்காக, வகுப்பு நிகழ்வுகள் முழுவதும், செயல்வழி கற்றலாக மாற்றி விட்டோம். இப்படி சொல்லி கொடுப்பது, ஆயுள் முழுக்க மறக்காது.எல்லா பாடங்களுக்கும், செயல்திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை மாணவர்களே தயாரித்து, வகுப்பறையில் வைக்கின்றனர். 

கணிதத்தில் கொள்ளளவு என்ற பாடத்திற்கு, ஒரு லிட்டர், அரை லிட்டர் என அளவைகள் கொண்ட, பாட்டில்கள் சேகரித்து, எப்படி அளப்பது என்பதை சொல்லி கொடுக்கிறேன். குழுவாக பிரித்து, லிட்டர் அளவீடு குறித்து, வினாடி-வினா நடத்தப்படுவதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்கின்றனர். ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், பட்டம் குறித்த பாடம் உள்ளது. இதை செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கியதோடு, பட்டம் திருவிழாவை பள்ளியில் நடத்தினோம்.
இதுபோன்ற செயல்பாடுகளை,பெற்றோர் அறிந்து கொள்ள மாதந்தோறும் கூட்டம் நடத்துகிறோம். பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு, மாதந்தோறும் பரிசுகள் வழங்குகிறோம்.தலைமையாசிரியர் விசாலாட்சி,ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பள்ளி சார் செயல்பாடுகளுக்கு,பள்ளி மேலாண்மை குழுவின் ஆலோசனைகளையும் பெறுகிறார்.
ஒரு பள்ளியின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்கும் இருந்தால், மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பே இல்லைஎன்றார் ஆசிரியர் கிறிஸ்டோபர்.
பெண்கல்வி குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடத்தி, மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான, சிறுமுயற்சி என்ற ஆசிரியருக்கு, கைக்குலுக்கி விடைபெற்றோம்.

'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

சென்னை, உயர் கல்வி நிறுவனங்களில், 'டிஜிட்டல்' கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பல்கலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும், அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கும் வகையில், 'டிஜிட்டல்' கல்வி முறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, 'ஆன்லைன்' சான்றிதழ் படிப்புகள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகின்றன.இந்நிலையில், 'மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளும், டிஜிட்டல் கல்வி திட்டத்தை, கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டும்' என, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கையை, அரசுக்கு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், ஜூலை, 27ல், மத்திய மனிதள மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள, துணை வேந்தர்கள் கூட்டத்திலும், இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.