>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 21 ஏப்ரல், 2018

தொடக்கக் கல்வி - 2018/19 STAFF FIXATION - கட்டாயம் பணிநிரவல் உண்டு, EMIS படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம், உயர் தொடக்க வகுப்பில் 100 மாணவர்களுக்கு கீழ் இருந்தால் 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே - DEEO செயல்முறைகள்


தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல்

























*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:*

*அன்புக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.*

 நமது சேர்மன் அண்ணன் *திரு.சோலை எம்.ராஜா* அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் *மாநில தலைவர்* திரு.வெ.முருகதாஸ்  அவர்கள் தலைமையில் *இன்று  (21/04/2018)* காலை  மாண்புமிகு *பள்ளி கல்வித்துறை அமைச்சர்* அவர்களை  கோபிசெட்டிபாளையம் *தோட்ட இல்லத்தில்* சந்தித்தோம் அப்பொழுது நமது *பணியிட மாறுதல்* மற்றும் *ஊதிய உயர்வு* குறித்து *நினைவுப்படுத்தினோம் இது குறித்து நான் நேற்று கூட நிதித்துறை  செயலாளர்* அவர்களிடம் *விவாதித்ததாகவும்* இதற்கான *அறிவிப்பு மிகவிரைவில் வரும்* என்றும் , *பணியிட மாறுதல் குறித்து கேட்டதற்கு* பொது தேர்வு *விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு* பெற்றதும் அந்தந்த *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தாம் அலுவலக பணிக்கு திரும்பியதும் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்*

இப்படிக்கு

*பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வின் முன்னேற்ற பாதைக்கான களப்பணியில் இன்று கலந்து கொண்டவர்கள்* என்றும் உங்கள் உடன்
*வெ.முருகதாஸ்*
மாநில தலைவர்
*ப.ஜெகதீசன்* மாநில செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள்       *சு.இளவரசன், மாநில அமைப்பு செயலாளர்* *க.பெரியசாமி, சி.ஜவஹர், எஸ்.ஷகிலாதேவி அ.சீனுவாசன்,* மற்றும்
*ஈரோடு மாவட்ட*   *ராதாகிருஷ்ணன், சந்தோஷ்*
*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்*

கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு காய்கறி















வெள்ளரி :

வெள்ளரி ஒரு குறைந்த கலோரி கொண்ட மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேடடே உள்ள ஒரு நீர் காய்கறி
நமது உடலின் உள் மற்றும் வெளி உஷ்ணத்தை  குறைக்கும் சக்தி கொண்ட   96 % சதவிகித நீர் காய்க்கறி இது.

நமது உடலின் உள்ள டாக்சினை வெளியேற்றுகிறது.  ஜிரனத்தை அதிக படுத்துகிறது.. குறைந்த கலோரி யாதலால் உடல் பருமன் குறைகிறது . மூட்டுகளுக்கு மிக நல்லது , உங்கள் மூளையை / .  நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது (fisetin )

உங்களின் நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கிறது இது ஒரு நல்ல ஆண்டி ஆகசிடன்ட்

இதில் இருக்கும் நமது உடலுக்கு தேவையான் ஊட்ட சத்துக்கள்

வைட்டமின் A
வைட்டமின்  B  ( B1, vitamin B5, and vitamin B7 (biotin))  உங்களின் மன அழுத்ததை  குறைக்கிறது.
வைட்டமின்  C
வைட்டமின்  K - எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
மினரல்கள்
எலக்ட்ரோ லைட்
மெக்னிஷியம்
பொட்டாசியம்

ரத்து செய்யப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு ORDER COPY

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

வியாழன், 19 ஏப்ரல், 2018


                   APR
11


உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய 20 படிவங்கள்


Image result for forms

1.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி  பட்டியல் - format -1
2.2017 - 18 ஆம் ஆண்டின்  தேர்ச்சி பட்டியல் கடிதம்
3.2017 - 18 ஆம் ஆண்டின்  தேர்ச்சி விகிதம் கடிதம் 
4.2017 - 18 ஆம் ஆண்டின்  செயல்வழி கற்றல் அடைவு நிலை  விவரம்
5.2017 - 18 ஆம் ஆண்டின்  பருவத்தேர்ச்சி அறிக்கை 
6.2017 - 18 ஆம் ஆண்டின் பருவத்தேர்ச்சி சுருக்கம்
7.2017 - 18 ஆம் ஆண்டின் மாணவர்கள் வாசிப்புத்திறன் மற்றும் அடிப்படைச் செயல்கள்

8.2017 - 18 ஆம் ஆண்டின் மாணவர்கள் வருகை குறைவிற்கு  தவிர்ப்பு வழங்க வேண்டிய மாணவர்கள் பட்டியல்  
9.2017 - 18 ஆம் ஆண்டின் பள்ளி வேலை நாட்கள் விவரம்
10.2018 - 19 ஆம் ஆண்டின் 5+ மாணவர்கள் பட்டியல்
11.2017 - 18 ஆம் ஆண்டின்  அலுவலர்கள் பார்வை விவரம்
12.2017 - 18 ஆம் ஆண்டின் பள்ளியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
13.2017 - 18 ஆம் ஆண்டின்  crc,brc மற்றும் இதர  பயிற்சி விவரம் 
14.2017 - 18 ஆம் ஆண்டின்  ஆசிரியர்கள் விடுப்பு விவரம்
15.2018 -2019 மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் பட்டியல் 
16.2017 - 18 ஆம் ஆண்டின் இடைநின்ற மாணவர்கள் பட்டியல் - (6-14)
17.இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகள் (6-10) பட்டியல்
18.இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகள் (11-14) பட்டியல்
19.குடிமதிப்பு கணக்கு சுருக்கம் 
20.செயல் திட்டங்கள் விவரம் 

பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை


கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை பள்ளி
மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று
 வருகின்றன.

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒரு
 வாரத்திற்கு முன் முடிந்து விட்டன. 10-ம் வகுப்புக்கு நாளை
 (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

தமிழகத்தில் தனியார், நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்
 பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கனவே
 முடிந்து விட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்
 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள்
 நாளையுடன் முடிவடைகிறது. எனவே நாளையுடன்
 மாணவர்களுக்கான பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன.



வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு
 தேர்வுகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக
 அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடித்து விட்டனர்.

அதனால் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அரசு பள்ளி
 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 வழக்கமாக மே மாதம் மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும்
. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களுடன் மே மாதம் விடுமுறை
 சேர்த்து 40 நாட்களுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுமுறை
 கிடைத்துள்ளது. ஜூன் 1-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்பட்ட
போதிலும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ந் தேதி வரை பள்ளிகளுக்கு
வரவேண்டும். அவர்களுக்கு வேலை நாட்கள் அடிப்படையில்
 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது- மாணவ-மாணவிகள் கருத்து

சென்னை:பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் சிலரிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு, ‘3 மதிப்பெண் கேள்விகளில் 3 வினாக்கள் பதில் அளிக்கும்படி இல்லை. அந்த கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டவை. அவை அனைத்தும் சற்று கடினமாக இருந்தன. மற்ற அனைத்து வினாக்களும் எளிதாகத்தான் கேட்கப்பட்டிருந்தன’ என்றனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. இதனால் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். நேற்று நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்ததாக திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்

'மொபைல் ஆப்' வழியே முன்பதிவில்லா டிக்கெட்...........


சென்னை:'மொபைல் ஆப்' வாயிலாக, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுக்கும் வசதி, தெற்கு ரயில்வே முழுவதும், இன்று நடைமுறைக்கு வருகிறது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், டிக்கெட் கவுன்டர்களில், பயணியர் காத்திருப்பதை தவிர்க்கவும், ரயில்வேயில், 'யுடிஎஸ்' என்ற, 'மொபைல் ஆப்' வசதி, சென்னையில், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல்போனில், 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இருந்து, 'யுடிஎஸ் - மொபைல் ஆப்'பை, பதிவிறக்கம் செய்யலாம்.அதிலுள்ள, 'ஆர் வாலட்'டில் இணையதள வங்கி தொடர்பை பயன்படுத்தி, டிக்கெட் பதிவு செய்யலாம்.இதன்படி, சென்னையில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில், முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கான, டிக்கெட் பெறும் வசதி உள்ளது.சென்னையில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த, இந்த, 'மொபைல் ஆப்' வசதி, இன்று முதல், தெற்கு ரயில்வே முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். இவ்வசதியில் டிக்கெட் பதிவு செய்பவர், ரயில் நிலையத்தில் இருந்து, 25 மீட்டரை தாண்டியும், 5 கி.மீ., எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும். மொபைல் போனில் பதிவாகும், 'டிக்கெட்'டை காண்பித்து, ரயிலில் பயணம் செய்யலாம். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது, இந்த பதிவை காட்டினால் போதும்.

தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ் : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி





சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தாம்பூலத்தட்டுகளை வழங்கி ஆண்டு விழாவுக்கு வருமாறு அரசுப்பள்ளி அழைப்பு விடுத்துள்ளது.
எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவை ஏப்.17 ம் தேதி கல்வி கலைத் திருவிழாவாக நடத்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு, அழைப்பிதழுடனும் தாம்பூலத்தட்டையும் மாணவர்களிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.
தலைமையாசிரியர் ஆரோக்கியசெல்வராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் மக்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். இவ்வொன்றியத்திலேயே 250 கல்விப்புரவலர்களை கொண்ட முதன்மைப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. எனவே அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் செய்துள்ளோம். இது பள்ளியின் வளர்ச்சிக்கு மேலும் உதவும், என்றார்.

ஆசிரியர்கள் போராட்டம்: பிளஸ் 2 முடிவு அறிவிப்பில் சிக்கல்

மதுரை:தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், 'ஆசிரியர்கள், 50 சதவீதம் விடைத்தாள் திருத்தும் போராட்டத்தால்' தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதமாகும் என, சந்தேகம் எழுந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, 74 மையங்களில், ஏப்.,11 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாள் ஒன்றுக்கு மொழிப் பாடங்களுக்கு, 24; அறிவியல் பாடங்களுக்கு, 20 என, ஒரு ஆசிரியருக்கு விடைத்தாள் வழங்கப்படும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், 8,000 பேர் உள்ளனர். இச்சங்கம் சார்பில், ஏப்., 11 முதல் நுாதன போராட்டம் நடக்கிறது. இதன்படி ஆசிரியர்கள்,முகாமில் வழங்கப்படும் மொத்த விடைத்தாளில், 50 சதவீதம் மட்டும்திருத்தி, மீதமுள்ளதை நிலுவை வைத்து, மறுநாள் திருத்துகின்றனர். க்ஷ
இதனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருத்தும் பணி முடியாது. இதனால், கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது போல், மே 16ல் முடிவு வெளியிடுமா என, சர்ச்சை எழுந்து உள்ளது. இது குறித்து, சங்கத்தின்மாநில நிர்வாகிகள் கூறுகையில், 'கல்வித் துறை செயலர், பிரதீப் யாதவ் எங்களை அழைத்து பேச வேண்டும். மிரட்டும் செயலில் ஈடுபட்டால் பணியமாட்டோம். போராட்டம் இன்னும் தீவிரமாகும்' என்றனர்.

அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு............

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன. 
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வித்துறையில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா ?

Image may contain: text

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள்அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!


பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது என்றும் கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்ததும் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறினார்

DA 7% EXCEL CALCULATION SHEET WITH SURRENDER ....

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் - தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம்

பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிந்து, நேற்று முன்தினம் முதல், விடைத்தாள் திருத்தும் துவங்கியுள்ளது.
முதல் நாளில், தலைமை விடை திருத்துனர்கள், விடைத்தாள்களை திருத்தம் செய்தனர்.அப்போது, அரசு தேர்வுத்துறை வழங்கிய, புதிய கட்டுப்பாட்டால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவது தெரிய வந்தது.அதாவது, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்யும் போது, விடையையும், அதற்கான குறியீட்டையும் சேர்த்து எழுத வேண்டும்.அவ்வாறு, எழுதாதோருக்கு மதிப்பெண் வழங்க வேண்டாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடு குறித்து, வினாத்தாளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் கவனக்குறைவால், விடை அல்லது குறியீட்டை மட்டுமே எழுதியிருந்தனர்.இது குறித்து, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். இந்த பிரச்னை குறித்து, நமது நாளிதழிலும், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, விடைதிருத்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண், அப்ஜெக்டிவ் வகை வினாக்களில், விடைக்கான குறியீடு அல்லது விடையில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதியிருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.விடைக்குறியீடு மற்றும் விடை என, இரண்டையும் எழுதி, அதில் ஒன்று, விடைக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டால், அந்த கேள்விக்கு, பூஜ்யம் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவிஉத்தரவிட்டுள்ளார்.

சனி, 14 ஏப்ரல், 2018

Quick response code (QR CODE GENERATOR) app intro and guide tutorial


தமிழக அரசின் புதிய பாடநூலில் இடம் பெற இருக்கும் 
QR CODE ஐ SCAN செய்ய தேவையான app மற்றும் அதனை பயன்படுத்தும்
 வழிமுறைகள் அடங்கிய 
வழிகாட்டும் வீடியோ TUTORIAL தமிழில்




Thanks Shanmugasundaram

இளைய ஆசிரியர்கள் யார்? பணி நிரவல் செய்ய பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.....

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது....

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய  அரசு  உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்
துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள்
 அனுப்பவும் மத்திய  அரசு  உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் 
ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், 
அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி
 இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி
 இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு
 முடிவு செய்துள்ளது.


தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி
, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை 
கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில்,
 எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக,
 தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் 
தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய
 பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், 
பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து,
 மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க
 ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது