>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 30 டிசம்பர், 2017

28 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்த 29 ஆசிரியர்கள்

ஜவ்வாது மலை அத்திப்பட்டு என்ற இடத்தில் 1987-89 ஆம் ஆண்டில்  ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 40 பேர் படித்தனர்.
பயிற்சி முடித்தபின் அவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர்.
கடந்த 2 வருடங்களாக ஒன்று சேர்த்து சந்திக்க முயற்சி எடுத்தனர். ஆனால் சந்திக்க முடியவில்லை.
இரண்டாம் பருவ விடுமுறையில் இவர்கள் சந்திக்க டிசம்பர்  முதல் வாரத்தில் முடிவு செய்து 29-12-2017 அன்று சேலம் ஏற்காட்டில் 29 பேர் சந்தித்தனர்.
பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
1987-89 இல் பயிற்சி அளித்த Principal, ஆசிரியர்கள் இவர்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
பயிற்சியின் போது இரண்டு ஆண்டுகள் உணவு  தயாரித்த கொடுத்த சமையலர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அவரவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடம், தங்களது குடும்பம் பற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
வரும் மே மாதத்தில் அனைவரும் குடும்பத்துடன் சந்திக்க  முடிவு செய்தனர்.
 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை லச்சுமிபதி, ஆரோக்யசாமி, கிருபா,அன்பு,
முகுந்தன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:–
அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) உறுப்பினர் செயலராகவும் மாநில குழு அமைக்கப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மூத்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமை ஆசிரியர், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் 192 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

SSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்: மாநிலதிட்ட இயக்குநர் கே.நந்தகுமார் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்எஸ்ஏ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 3 ஆண்டுக்குமேல் பணியில் உள்ளவர்களை ஆசிரியர்
பயிற்றுநராக
மாற்றிவிட்டு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களில் தகுதியானவர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வுசெய்து அனுப்புமாறு மாநில திட்ட இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள்.

நன்றி : ஆசிரியர்.செல்வகுமார்


வெள்ளி, 29 டிசம்பர், 2017

FLASH NEWS :- CEO'S AND DEO'S TRANSFER & PROMOTION | G.O PUBLISHED

Computer Shortcuts Free PDF (ICT TRANING)



100 keyboard shortcuts for moving faster in Windows 7



Computer Shortcuts Free PDF (ICT TRANING)



கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு ரூ 2.7 கோடியில் பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
மேலும் தமிழகம் முழுவது 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு கான்பிரன்ஸ் மூலம் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
2018 ஆம் அண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். 100 மையங்களில் தமிழக அரசால் பொதுத்தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவிட்டுள்ளார். மேலும் 312 இடங்களில் பயிற்சி மையங்கள் நடத்த தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறியுள்ளார்

ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இதனை அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார். 
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும்.
இந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார். அதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மார்ச் மாதம் 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளன.
குறிப்பாக ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசுவார்கள். இதனால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

CLASSIFICATION ON FAMILY PENSION ADMISSIBLE TO NPS EMPLOYEES

Learning outcomes Training - கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு.

SSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக மாநில திட்ட இயக்குனர் வழங்கி உள்ள அறிவுரைகள்


NEW EMIS SMART CARD APP VIDEO

பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி....

பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் விபரம்: பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம்.
பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம் போன்றவை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும். 
விழா ஏற்பாட்டில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பொறுப்பில் உள்ள கட்சியினர், முக்கிய விருந்தினராக பங்கேற்கலாம். மாணவர்களின் பெற்றோரையும், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவழைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3ஆம் வகுப்பு 3ஆம் பருவம் மாணவர்களுக்கான கடின மற்றும் புதிய வார்த்தைகள்.

தமிழ்

ஆங்கிலம்

January 2018 - School Calendar 


 *EMIS APP தற்போது இயங்கும் நிலையில்  உள்ளது*



🌟 அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் EMIS தளம் பயன்பாட்டில் இருக்கும் அந்த நாட்களில் பயன்படுத்திக்கொண்டு பதிவேற்றம் செய்யவும். 


🌟 மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து

தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து  கொள்ளவும்.



🌟 *STUDENT ID CARD*- ற்கு சென்றால் அதில் *DATA APPROVAL* மற்றும் *STUDENT ID CARD* என்று இரண்டுதலைப்பு இருக்கும்.


🌟 முதலில் *DATA APPOROVAL* ற்கு சென்று அதில் தங்கள் பள்ளியில் வகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.


🌟 அதனுள் சென்றால் ஒரு மாணவனின் பெயரை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் தகவல் விடுபட்டு இருந்தால் மேலே *EDIT* என்பதை கிளிக் செய்து விடுப்பட்டதை பதிவு செய்து கொள்ளவும்.

🌟 Photo  பதிவேற்றம் செய்ய CAMERA வை தொட்டால்


🌟 GALLERY *(ஏற்கனவே எடுத்த வைத்த புகைப்படத்தை தேர்ந்தெடுக்க )*


🌟 Camera *( போட்டோ உடனே எடுத்து அப்போதே பதிவேற்றம் செய்து கொள்ள நினைப்பவர்கள் )*தங்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து புகைப்படம் *UPLOAD* செய்து கொள்ளவும்.


🌟 பின் *DATA  APPROVAL* கொடுக்கவும். அதன் பின் வெளியே வந்து *ID CARD APPROVAL* ற்கு சென்று செய்ததை சரிபார்த்து கொண்டு *APPROVAL*கொடுத்தால் அது *ID CARD* அடிக்க ஏற்றுக்கொள்ளப்படும்.


🌟 இறுதியாக ID APPROVAL கொடுப்பதற்கு முன் சரிபார்த்து கொடுக்கவும்.


🌟 கொடுத்த எண்ணிக்கையை சரிபார்த்து கொள்ளவும்.


🌟 பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


🌟 EMIS APP Download link 👇👇👇


TOUCH HEAR

https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation