28 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்த 29 ஆசிரியர்கள்
ஜவ்வாது மலை அத்திப்பட்டு என்ற இடத்தில் 1987-89 ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 40 பேர் படித்தனர்.
பயிற்சி முடித்தபின் அவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர்.
கடந்த 2 வருடங்களாக ஒன்று சேர்த்து சந்திக்க முயற்சி எடுத்தனர். ஆனால் சந்திக்க முடியவில்லை.
இரண்டாம் பருவ விடுமுறையில் இவர்கள் சந்திக்க டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு செய்து 29-12-2017 அன்று சேலம் ஏற்காட்டில் 29 பேர் சந்தித்தனர்.
பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
1987-89 இல் பயிற்சி அளித்த Principal, ஆசிரியர்கள் இவர்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
பயிற்சியின் போது இரண்டு ஆண்டுகள் உணவு தயாரித்த கொடுத்த சமையலர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அவரவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடம், தங்களது குடும்பம் பற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
வரும் மே மாதத்தில் அனைவரும் குடும்பத்துடன் சந்திக்க முடிவு செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை லச்சுமிபதி, ஆரோக்யசாமி, கிருபா,அன்பு,
முகுந்தன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை லச்சுமிபதி, ஆரோக்யசாமி, கிருபா,அன்பு,
முகுந்தன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.