>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 24 நவம்பர், 2017

*பாலினச் சமத்துவக் கல்வி: ஆண் - பெண் 

தோழமையைக் கற்பிக்கலாமா?* - நன்றி..'தி இந்து',

 தமிழ் நாளிதழ்

சமூகப் பொறுப்பைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பட்டறை ஒன்றின் தொடக்க விழா அது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேல்நிலை வகுப்பு மாணவர்களைப் பற்றி அப்பள்ளியின் ஆசிரியை முகத்தில் பூரிப்போடும் குரலில் பெருமையோடும் சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது.
“எங்களுடையது ஆணும் பெண்ணும் இணைந்து படிக்கும் பள்ளிதான். ஆனால் கூடவே படிக்கும் மாணவிகள் நேர் எதிரில் நடந்துவந்தால்கூட எங்களுடைய மாணவர்கள் அவர்களைப் பார்க்கவோ, பேசவோ மாட்டார்கள். அத்தனை நல்ல பிள்ளைகள்!”.

இருபாலர் கல்வித் திட்டத்தின் அடிப்படையே ஆணும் பெண்ணும் தோழமையோடு இணைந்து படித்து வளர வேண்டும் என்பதுதான். ஆணையும் பெண்ணையும் தனித் தீவுகளாகப் பிரித்துவைத்துச் சமத்துவத்தை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்? ஆனால் இன்று பெரும்பாலான இருபாலர் பள்ளிகள் மட்டுமல்லாமல் கல்லூரிகளும் இப்படித்தான் மாணவ - மாணவிகளை ‘நல்ல பிள்ளைகள்’ ஆக்கி வெளி உலகத்துக்கு அனுப்புகின்றன. கல்விக்கூடங்களே இப்படி இருக்கும்போது நம்முடைய வீடுகளைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தாய்மை மிக உயர்ந்தது, தாயைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் எனச் சொல்லித்தரும் கலாசாரமும் அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழிமொழியும் நம்முடைய வீடுகளும் பெண்ணை சக மனுஷியாக மதிக்கச் சொல்லித்தரத் தவறிவிடுகின்றன.

*புரியாத புதிர்!*

கூடவே படிக்கும், அருகிலேயே வசிக்கும் பெண் பிள்ளைகளைப் பற்றி எந்தப் புரிதலும் கொடுக்கப்படாத ஆண் குழந்தைகள், இளைஞர்கள் ஆன பிறகு சமூகத்தில் பெண்களை நேருக்கு நேர் சந்திக்கவும் பழகவும் வேண்டிவருகிறது. அப்போது திகைப்பும், தடுமாற்றமும், ஈர்ப்பும் உண்டாகின்றன. ஈர்ப்பை எப்படிக் கண்ணியமாக வெளிப்படுத்துவது என்பதற்கான பயிற்சியோ அனுபவமோ இல்லாததால் இருவருக்கும் சங்கடமான நிலை ஏற்படுகிறது. தங்களது கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதை எதிர்கொள்ளக் கற்றுத்தரப்படாததால் ஈர்ப்பு வெறுப்பாக மாறுகிறது. இது பாலியல் சீண்டல், வன்புணர்வு, அமில வீச்சு, கொலை என்று பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறையாகத் தடம் மாறுகிறது. காதல் விவகாரங்கள் காரணமாக மட்டும் ஆண்டுதோறும் தமிழகத்தில் 150 பெண்கள் கொல்லப்படுவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, ஃபேஸ்புக்கில் ஆபாசமாகப் புகைப்படம் வெளியிடப்பட்ட வினுப்பிரியா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி தேவாலயத்தில் ஆசிரியை பிரான்சினா இப்படிக் காதலின் பெயரால் தமிழகத்தில் சமீபத்தில் கொடூரமாகப் பலியான இளம் பெண்களின் மரணங்கள் எதைக் காட்டுகின்றன?

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் பொருளாதாரம், சாதி, கவுரவம், கலாசாரம் உள்ளிட்ட பல அடுக்குகள் இருந்தாலும் அடிப்படையில் உள்ள சிக்கல் ஆண்-பெண் உறவு நிலையில் புரிதல் இன்மையே. இதில் கவனிக்க வேண்டியது, காதல் மறுக்கப்பட்டதால் கொலை செய்தவர்கள் எல்லாம் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல. சொல்லப்போனால் பலர் அதற்கு முன்பு சிறு வன்முறையில்கூட ஈடுபட்டதில்லை. ஆகவே, ஆண் பெண் உறவு நிலையில் புரிதல் இல்லாததே இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணம்.

வெறும் தண்டனை மூலமாக இந்தப் போக்கை மாற்றி அமைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் இத்தகைய கோரமான சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி, பாலினச் சமத்துவக் கல்விக்கான தேவை உணரப்படுகிறது.ஆனால் நிதர்சனத்தில் நம்முடைய கல்வி நிலையங்களில் இவற்றுக்கான இடம் எங்கே?

*இருபாலருக்கும் நல்லது*

முதலாவதாக, பாலினச் சமத்துவம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணும் பெண்ணும் இச்சமூகத்தில் சமமானவர்கள் என்பதைப் ஏற்றுக்கொள்வதே பாலினச் சமத்துவம். இதைக் கற்றுத்தருவதற்குச் சில பாடங்கள் உள்ளன. ‘ஜெண்டர் ஸ்டடீஸ்’, ‘விமன் ஸ்டடீஸ்’ எனச் சில பெண்கள் கல்லூரிகளில் பாலின விழிப்புணர்வுப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் அவற்றைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்கள் கல்லூரிகளிலோ இந்தப் பாடமே இல்லை. “ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் தாழ்வு இல்லை என்பதைப் பெண்களுக்குக் கற்றுத் தரும்போதே அதை ஆண்களுக்கும் சேர்த்து நிச்சயமாகக் கற்றுத்தர வேண்டும் இல்லையா?” எனக் கேட்கிறார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உளவியல் ஆலோசகர் ஆர்த்தி.

பாலியலுக்கும் (sex) பாலினத்துக்கும் (gender) இடையில் உள்ள வேறுபாட்டைக் கற்றுத்தருவதில் இது தொடங்குகிறது. பாலியல் என்பது உடல் ரீதியானது, இயற்கையானது. ஆனால் பாலினத் தன்மைகள் என்பவை ஆண்மை, பெண்மை எனச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவை. “பெண்ணால் மட்டுமே பிரசவிக்க முடியும், ஆணால் முடியாது என்பது உடல் சார்ந்தது. ஆண்கள் அழக் கூடாது; பெண்கள் மென்மையானவர்கள் என்பவை சமூகத்தால் உருவாக்கப்பட்ட விழுமியங்கள். இவற்றை முதலில் இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும்” என்கிறார் ஆர்த்தி.

அதே நேரத்தில் வழக்கமான பாடங்களைப் போலவே பாலினச் சமத்துவத்தையும் தேர்வுக்கான பாடத் திட்டமாகத் திணித்துவிடக் கூடாது. சொல்லப்போனால் வகுப்பறைக்குள் அவரவர் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு படிக்கும் பாடம் அல்ல இது என்பது பாலினச் சமத்துவப் பயிற்றுனர் இசை பிரகாஷின் கருத்து. “பாலின விழிப்புணர்வை உண்டாக்க முதலில் தங்குதடை இன்றி நினைத்ததை வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

‘மிரரிங்’எனப்படும் ஒருவரைப் போலவே இன்னொருவர் உடல் அசைவுகளால் செய்துகாட்டுவதில் இந்தப் பயிற்சி தொடங்கும். ஆணைப் போலப் பெண்ணும் பெண்ணைப் போல ஆணும் உடல் அசைவுகளால் பிரதிபலிக்கும்போது அங்கு ஆண்மை,பெண்மை என்கிற பிம்பம் தளர்வதற்கான முதல் படியாக உருவாகிறது. அடுத்துத் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆணின் அனுபவத்தைப் பெண்ணும் பெண்ணின் அனுபவத்தை ஆணும் கூடியிருப்பவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோன்ற பயிற்சிகள் ஆண்களைப் பற்றிப் பெண்களும்,பெண்களைப் பற்றி ஆண்களும் புரிந்துகொள்ள உதவுகின்றன” என்கிறார் இசை பிரகாஷ்.

“பாலினச் சமத்துவத்துக்கான பாடப் புத்தகங்கள் மனப்பாடப் பகுதிகளாக இல்லாமல் விவாதப் புள்ளிகளை முன்வைக்க வேண்டும். அதிலிருந்து ஊக்கம் பெற்று மாணவ, மாணவிகள் பாலினம் தொடர்பான பல சிக்கல்களைக் கலந்துரையாட வேண்டும். பாலினப் பாகுபாட்டைத் தகர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள், திரைப்படங்களின் திரையிடலும் கலந்துரையாடலும் வாசக வட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்கிறார் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரும் தத்துவப் பேராசிரியருமான இரா. முரளி.

மொத்தத்தில், என்று நம்முடைய பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ, மாணவிகள் சக தோழர்களாக இணைந்து சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அன்றுதான் பாலினச் சமத்துவச் சமூகத்தை நோக்கி ஒரு படி முன்னேற முடியும். அதற்குக் கல்விக்கூடங்களாலும் கணிசமான பங்காற்ற முடியும் என்பதையே பாலினச் சமத்துவப் பாடங்கள் காட்டுகின்றன.. "சமத்துவ சமுதாய கழகம்" - தலைமை

ரூ. 20 க்கு ஒரு ஜி.பி டேட்டா - செக்க போடு போடும் வை பை டப்பா...!

குறைந்த கட்­ட­ணத்­தில், தொலை தொடர்பு சேவை­களை வழங்கி வரும், ரிலை­யன்ஸ் ஜியோ­வுக்கு போட்டி போடும் வகையில் அதி­ர­டி­ ஆஃபரை இறக்கியுள்ளது பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னம்.

‘வை பை டப்பா’ எனும் நிறுவனத்தை சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகி­யோ­ர் துவங்கியுள்ளனர். இந்­நி­று­வ­னம், 2, 10 மற்­றும் 20 ரூபா­யில், அதி­வேக இன்­டர்­நெட் சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

முதற்­கட்­ட­மாக இந்த சேவையை கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. அதாவது ரூ. 2 க்கு 100 எம்.பி. ரூ. 10 க்கு 500 எம்.பி. ரூ. 20 க்கு 1 ஜி.பி. வீதம் டேட்டா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டி.

தேநீர் விடுதி மற்­றும் பல­த­ரப்­பட்ட கடை­களில், ‘வை பை டப்பா’ டோக்­கன் விற்­கப்­படும் எனவும் இதை வாங்கி மொபைல் எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. நெம்பரை பதிவுசெய்து டேட்டாவை பெற­லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்­க­ளூரு முழு­வ­தும், 350 வழித்­த­டங்­களில், ‘வை பை டப்பா’ பயன்­பாட்­டிற்­கான, ஒருங்­கி­ணைப்பு வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்

மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு  கூடுதல் ஊதியம் பெற்று  வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 


அதிர்ச்சி அளிக்கிறதா ? நண்பர்களே ...

உண்மைதான் ..


🔰மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழக கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டும் என்ற கோரிக்காக பல ஆண்டுகளாக நாம் போராடிவருகிறோம் ...


🔰உண்மையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்குவதைவிட அதிக ஊதியம் வழங்கி வருவது எத்தனை பேருக்கு தெரியும் ?


🔰குழம்ப வேண்டாம் பொறுமையாக படிக்க ..மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200.  தமிழக மாநில இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750(1.1.2011க்கு பிறகு ), 5200+2800(1.1.2011க்கு முன்பு ...


🔰இப்போது மூன்று வித ஊதியங்களில் இருந்து பதவி உயர்வு பெறுவதால் பெறும் ஊதிய நிர்ணயங்களை இங்கே காண்போம் ..

🔥அடிப்படை ஊதியம் மூன்று கணக்கீட்டிற்கும் 10000என்று வைத்துக் கொள்வோம் ..

31.12.2010 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .


அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   2800
--------------------------------
மொத்தம்.      12800
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

12800*3%= 384@390

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        390

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      14990
--------------------------------



🔰  1.1.2011 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .


அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   2800

தனி ஊதியம்.  750
--------------------------------
மொத்தம்.      13550
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

13550*3%= 406.50@410

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        410

தனி ஊதியம்.  750

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      15760
--------------------------------

குறிப்பு :
-------------
பதவி உயர்வில் தனி ஊதியம் அடிப்படை ஊதியத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது .

இதுவே மத்திய அரசைவிட கூடுதல் ஊதியம் பெற வழிவகை செய்கிறது ..


🔰 1.1.2011ல் மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டால்

 9300+4200

பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .

அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   4600

--------------------------------
மொத்தம்.      14600
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

14600*3%= 426@430

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        410

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      15010
--------------------------------

முடிவு :
----------

🔥மத்திய இணை ஊதியம் பெற்று பதவி உயர்வில் சென்றால் பெறும் ஊதியம் 15010

🔥தற்போதைய நிலையில் பதவி உயர்வில் பெறும் ஊதியம் 15760


மத்திய அரசைவிட அதிகமாக வழங்கும் ஊதியம் ..

      15760
      15010
------------------
          750
------------------

🔰தமிழக கல்வித்துறையில் 1.1.2011க்கு பிறகு

 5200+2800+750பெற்று பதவி உயர்வில் செல்பவர்களுக்கு AEEOக்களும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்  மத்திய அரசு தரும் ஊதியத்தைவிட அதிக ஊதியத்தை வழங்கி பெரும் உதவி செய்து வருகிறார்கள் ..



🔥மேலும் ஏழாவது ஊதியக்குழுவிலும் அரசின் பணத்தை தொடர்ந்து  வாரி வழங்கும் கர்ண பிரபுக்களை பாராட்டியே ஆக வேண்டும் ..

🔰இத்தகை நிர்ணயங்களை தணிக்கை அலுவலர்களும் கவனிப்பை எதிர்நோக்கி கண்டும் காணாமல் போவதும் கல்வித்துறையில் பெறும் குழப்பங்களை முரண்பாடுகளையும் உருவாக்கி வருகிறது ..


🔥கர்ண பிரபுக்கள் கைங்கர்யம் மற்றும் தணிக்கை அலுவலர்களின் காட்டில் மழை பெய்யும் வரை அரசு பணம் வீணாகும் ...

🔥தொடரட்டும் மத்திய அரசை விட கூடுதல் மாநில பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் ...

ஆக்கம் 
------------

சுரேஷ் மணி 

நாமக்கல் 

9943790308

How to prepare Tnpsc Group 4 exam?

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?

கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம்.
முதன்முதலாக தேர்வு எழுதுவோர், *6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2* வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். *பொருளாதாரம்* குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.
தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான *கணிதக்* கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.
*நடப்பு நிகழ்வுகள்* குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் *செய்தித்தாள்களைப்* படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.
*அறிவியல்* பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். *கம்ப்யு ட்டர் சயின்சில்* அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.
பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், *10 மாதிரி தேர்வுகளை* எழுத வேண்டும். முந்தைய வினாத்தாளை படிப்பதும் அவசியம்.
*முக்கிய குறிப்புகள்:*
தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.
*அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!*
ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், *மொழியறிவு* நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, *தாய்மொழி, ஆங்கிலம்* மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கப்படும்.
குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம்.
மூன்றாவதாக அடிப்படை *கணித அறிவு* முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.
பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
பொருளாதார சுழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
*வினாத்தாள் பற்றிய விவரங்கள்:*
பொதுத் தமிழ் அல்லது  பொது ஆங்கிலம் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் : *100 வினாக்கள்*
பொது அறிவு பாடப்பகுதியில், எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ளுங்கள்!!!
*1. வரலாறு - 16 வினாக்கள்*
*2.பொருளாதாரம் - 09 வினாக்கள்*
*3. அரசியல் அறிவியல் - 08 வினாக்கள்*
*4. புவியியல் - 06 வினாக்கள்*
*5. இயற்பியல் - 04 வினாக்கள்*
*6. வேதியியல் - 03 வினாக்கள்*
*7.தாவரவியல் - 02 வினாக்கள்*
*8. விலங்கியல் - 06 வினாக்கள்*
*9. முக்கிய தினங்கள், திட்டங்கள்* - *03 வினாக்கள்*
*10. கணிதம் - 25 வினாக்கள்*
*11. நடப்பு நிகழ்வுகள் - 18 வினாக்கள்*

10th,11th,12th - Half yearly Exam 2017 - Time Table ( single page )

12th Accountancy - Centum Question Papers

12th Accountancy - Centum Question Papers:
  1. 12th Accountancy - Centum Question | Mr. Muhammed Ebrahim - English Medium
Prepared by Mr. MUHAMMAD EBRAHIM SHAMEEM,

BCom, CA Inter, Chennai. 



10th Half Yearly Exam Previous Year Question Papers and Answer Keys - Download

Hi Teachers & Students,

             Now a days Department of School Education Conducts Quarterly Exam & Half Yearly Exam as a common exams to all districts of Tamil Nadu. So Our Team will give Instant Key Answers for 10th Standard Half Yearly Exam Question Papers. We think this Key Answers are very useful to all teachers & students.

10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2016
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2015
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2014
  • 10th Standard Half Yearly Exam Question Papers & Key Answers - Click Here and Download Here
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2013
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2012
10th Standard Important Collections
  • 10th Standard | Previous Year Quarterly Exam Question Papers & Answer Keys - Click Here
  • 10th Standard | Previous Year Half Yearly Exam Question Papers & Answer Keys - Click Here
  • 10th Standard | Previous Year Public Exam Question Papers & Answer Keys - Click Here
  • 10th Standard | Quarterly / Half Yearly / Public Exam | Syllabus - Click Here
  • 10th Standard | Quarterly / Half Yearly / Public Exam | Time Table - Click Here
  • 10th Standard | Latest Study Materials - Full Collection - Click Here
  • 10th Standard | Padasalai.Net's Special - Centum Coaching Team Questions - Click Here
  • 10th Standard | Padasalai.Net's Special - Creative Questions - Click Here
  • 10th Standard | Free Online Test Questions For Tamil Medium - Click Here
  • 10th Standard | Free Online Test Questions For English Medium- Click Here

முதல்வருக்கு பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை!

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொது,நிகழ்ச்சியில்,மாணவர்கள்,பங்கேற்க,55கட்டுப்பாடுகள் ,: அரசியல்,நிகழ்ச்சிக்கு,அனுமதி,இல்லை
தமிழக அரசின், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அரசியல் நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் தடை விதித்ததோடு, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, வழிகாட்டுதல் வழங்க உத்தரவிடப்பட்டது. 
பின், அரசின் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம், உறுப்பினர் செயலராக, 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைகளை, 55 கட்டளைகளாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
* மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் கல்வித்துறை இயக்குனர்களும், மாணவர்களின் பங்கேற்புக்கு அனுமதி அளிக் கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், இணைந்து செயல்பட வேண்டும்
* அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும், மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள், பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை
* அரசியல்வாதிகளை வாழ்த்தவோ, வழியில் நின்று வரவேற்கவோ அனுமதி கூடாது. 
நிகழ்ச்சி துவங்கும் முன், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, மாணவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது 
* தேசிய, மாநில முக்கியத்துவமான நாட்களை தவிர, மற்ற விடுமுறை நாட்களில் பொது நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியாது
* போராட்டம், வேலை நிறுத்தத்திற்கு மாணவர் களை பங்கேற்க வைக்க அனுமதி இல்லை. உடல் நலம் பாதித்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. போக்கு வரத்து நெருக்கடி உள்ள பகுதிகளின் பேரணியில், மாணவர்கள் பங்கேற்கக் கூடாது
* மாணவர்கள் புறப்படும் இடம் முதல், வீடு திரும்பும் வரை, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்
* கூட்டத்தை ஒழுங்குபடுத்த, மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தக் கூடாது. போலீஸ் வாகனங்களில், மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. தீயணைப்பு துறையினர், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
* மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி கள் அனுமதிக்காத நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் செல்ல, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது 
* மாணவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப் பான குடிநீர், சிறு உணவு, போக்குவரத்து வசதி களை, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
* குடிநீர், கழிப்பறை வசதி, நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை, பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும்
* சுகாதாரத் துறை சார்பில் போதிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ முதல் உதவி வசதி ஏற்படுத்தவேண்டும்; ஆம்புலன்ஸ் வசதியிருப்பது கட்டாயம்
* உரிய உரிமம் பெற்ற வாகனங்களையும், டிரைவர் களையும் மட்டுமே, மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்த வேண்டும். முன், பின் பகுதி யில் மாணவர் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி வாகனத்தில் கட்டாயம்
* அரசு தனியாகவும், தனியாருடன் இணைந்தும் 
நடத்தும் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், மாணவர்களை பங்கேற்க வைக்கலாம். 
* மாணவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், சமூக ரீதியாக பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அனுமதி அளிக்கலாம்
* விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப் படுத்தகூடாது. பெற்றோருக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால், அனுமதிக்க வேண்டும்
* வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வு களால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும். மோசமான வானிலை இருந்தால், அனுமதி கூடாது 
* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து, இட வசதிகள் தேவை. மாணவர் களுடன் செல்லும் ஆசிரியர்கள், மாணவர் களின் தொடர்பு எண்களை வைத்திருப்பது அவசியம்
* மாணவியருக்கு, 20க்கு ஒன்று என, பெண் ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம்
* நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை, சம்பந் தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் இன்றி, தனியே வெளியே விடக்கூடாது. மாலை, 6:00 மணிக்கு மேல், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மாணவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் - CM CELL REPLY

SSA , SPD PROCEEDINGS : STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்



SG TEACHERS COURT ORDER - 2009 பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமீட்பு போராட்டக்குழு தொடுத்த வழக்கில் 10.11.2017 அன்றைய விசாரணையின் நீதிமன்ற இடைக்கால ஆணை...

என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை

விடைத்தாள் திருத்தும்பணியில் மெத்தனமாக செயல்பட்டதால், என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்ய 1,070 பேராசிரியர்களுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த விடைத்தாள்களை பேராசிரியர்கள் சரியாக திருத்துவதில்லை என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பருவத்தேர்வு விடைத்தாள்களை சரிவர திருத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா ஆகியோரிடம் சிலர் புகார் செய்தனர். இதற்கிடையே பல மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
இதனையடுத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் ஏற்கனவே மதிப்பீடு செய்த பேராசிரியர்களிடம் கொடுக்கப்படவில்லை. வேறு பேராசிரியர்களை கொண்டு இந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. மறுமதிப்பீட்டில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் பழைய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் கிடைத்தது.முதலில் விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் சரியாக திருத்தாததால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து போட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த பேராசிரியர்களுக்கு தண்டனை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.அதன்படி 1,070 பேராசிரியர்கள் 1 முதல் 3 வருடங்கள் வரை விடைத்தாள்களை திருத்தம் செய்ய தடை விதித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் உமா உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை மண்டலத்தில் 680 பேர், திருச்சி மண்டலத்தில் 271 பேர், கோவை மண்டலத்தில் 119 பேர் அடங்குவர்.

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்கநிர்வாகிகள்

உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில், நீதிபதியை விமர்சித்து, செய்திகள் வந்தன. ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சிலரும், நீதிபதியை விமர்சித்தனர். இவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, வழக்கறிஞர்கள், செந்தில்குமார், சூரியபிரகாசம் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
இந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நீதிமன்றத்தில், நிர்வாகிகள் ஆஜராகும்படி, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று சங்க முன்னாள் தலைவர், மாயவன், தலைவர், பக்தவத்சலம், பொதுச்செயலர், கோவிந்தன், முன்னாள் பொருளாளர், சொர்ணலதா ஆகியோர் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். 'நீதிமன்றத்தை அவதுாறு செய்யும் நோக்கம் இல்லை' எனவும், அவர்கள் தெரிவித்தனர்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, கூடுதல் அட்வகேட் - ஜெனரல், வெங்கட்ரமணி தெரிவித்தார். 'தற்போதைய நிலையில், இந்த வழக்கை முடிக்கக் கூடாது' என, வழக்கறிஞர், செந்தில்குமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, 'அவசரப்பட்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை' எனக் கூறிய, நீதிபதி கிருபாகரன், விசாரணையை, டிச., ௬க்கு தள்ளிவைத்தார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் நூலகர் பதவி உயர்வு பாதிப்பு

மாவட்ட நுாலக அலுவலரை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், 30 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி பதவி உயர்வை எதிர்பார்த்த நுாலகர்களுக்கு, அந்த வாய்ப்பு பறி போயுள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் 4200-க்கும் மேற்பட்ட நுாலகங்கள் உள்ளன. இவற்றில் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு, ஊர்புற நுாலகர், 3-ம் நிலை நுாலகர், 2-ம் நிலை நுாலகர், இருப்பு சரிபார்ப்பு அலுவலர், முதல் நிலை நுாலகர், நுாலக ஆய்வாளர் என்ற நிலையில் அளிக்கப்பட்டு, பின்பு மாவட்ட நுாலக அலுவலர் பதவி வழங்குவது 1984 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.சமீப காலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட நுாலகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில் திடீரென 6 மாவட்ட நுாலக அலுவலர் பதவிக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் போட்டி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பதவி உயர்வை எதிர்பார்த்துள்ள நுாலகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
பள்ளிநேரம் போக, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வகுப்புகளின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் காலையில் சிற்றுண்டி, மாலையில் தேனீர் வழங்கப்படுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்களே மாலை நேர சிற்றுண்டி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமங்களை உள்ளடக்கிய நகர பள்ளிகளில், மாலை நேர சிறப்பு வகுப்பு, இரவு, 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. அதே போல், அதிகாலையில், 6:00 மணிக்கு சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படுகிறது. மாணவியர், அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வருவதும், மாலை இருள் சூழ்ந்த பின், பள்ளியிலிருந்து பஸ்களில் வீட்டுக்கு வருவதும், பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளை காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் முடித்துக் கொள்ள, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மட்டும் இந்த உத்தரவு உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதை அமல்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3,500 ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விடஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரக அனுமதியின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனங்கள் செய்வதோ, இடமாறுதல் வழங்குவதோ கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

+1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை.

2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை. தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை. தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 90 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் தனித்தேர்வர்களின், மொத்த மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கு மாற்றி கணக்கிடப்படும். அகமதிப்பீடு தனித் தேர்வர்களுக்கு மட்டும் ரத்து செய்யப்படுகிறது.