>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 30 அக்டோபர், 2017

கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு

நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ராணுவம், துணை ராணுவம் உட்பட, பணி இடமாற்றம் செய்யப்படும் பணியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே கல்வி முறையை வழங்கும் வகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்தப்பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றை தரவரிசை அடிப்படையில்பட்டியலிட, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
 அடுத்த ஆண்டு ஜூன் முதல், இந்த தவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.பள்ளியின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள், பள்ளி நிர்வாகம் உட்பட ஏழு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. மதிப்பெண்களின் அடிப்படையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நான்கு வகைகளாக தரம் பிரிக்கப்பட உள்ளன. அதனடிப்படையில், இந்தப் பள்ளிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்..

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., 15  வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளில், 1௦ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 படிக்கும், வீட்டில் ஒரே பெண் குழந்தையாக உள்ள மாணவியருக்கு, சி.பி.எஸ்.இ., சார்பில்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2௦19ல், பத்தாம் வகுப்பு முடித்த மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, www.cbse.nic.in என்ற இணையதளத்தில், நவ., 15 வரை பதிவு செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அதற்கான சான்றிதழ்களை, நவ., 3௦க்குள் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்

அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்கு தயாராவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, தமிழக பள்ளிக்கல்வித் துறையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், பிளஸ் ௧க்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும், முக்கியமானது. முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 1க்கு, மாவட்ட அளவில் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மேலும், 10ம் வகுப்பில் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள், இடைவெளி இன்றி அடுத்த ஆண்டிலும், பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வு முதல் முறையாக அறிமுகம் ஆவதால், மாணவர்களுக்கு வழிகாட்ட வினா வங்கி வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி, ஆறு மாதங்களை தாண்டியும், இன்னும் வினா வங்கி வெளியிடவில்லை; அரையாண்டு தேர்வும் நெருங்கி விட்டது. அதனால், மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவது தாமதமாகிறது. சரியான வழிகாட்டல் இன்றி, பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியுமா என, மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை, வினா வங்கியை விரைந்து வெளியிட வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்: வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதிசென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய்? எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம்? கப்பலோட்டிய தமிழன் யார்? நம்முடைய சுதந்திர தினம் எது? தேசிய சின்னம், பறவை, மரம் எது? என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது.ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது.இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவுபணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்’’ என்றனர்.
இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ‘‘இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல்.எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம்.இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்’’ என்றார்.

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்களுக்கு பணி ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 வணிகவரி உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுக்கு வருவாய் ஈட்டித்தருவதில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வணிகவரி உதவி ஆணையர் பணியானது, வணிகர்கள் செலுத்தும் மாதாந்திர கணக்குகளை சரிபார்த்தல், வரி ஏய்ப்பை தடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. மாவட்ட பதிவாளர் பணி நில ஆவணங்களை பதிவு செய்தல், நிலத்துக்கான விலையை மதிப்பீடு செய்தல், வில்லங்க சான்று வழங்கல், பதிவு ஆவணங்களை பராமரித்தல், திருமண பதிவு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிகள் தொய்வின்றி நடக்க, காலிப்பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தவகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 21 வணிகவரித் துறை உதவி ஆணையர், 8 மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும்அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வணிகவரித்துறை செயலர் ச.சந்திரமவுலி, பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த  ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல்  செய்திருந்தார். அதில் ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் 1986ல் ஜவஹர்  நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
உண்டு உறைவிட பள்ளியான இப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.  இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.  எனவே, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இம்மனு விசாரணையின்போது, நவோதயா பள்ளிகள் தரப்பில் ‘நவோதயா பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்பில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் முதன்மைப்  பாடமாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படும்’ என தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணையின் இறுதியில்  நீதிபதிகள் வழங்கிய உத்தரவில் ‘நவோதயா பள்ளிகள் வந்தால் இந்தி திணிக்கப்படும் என கருதப்பட்டதால், தமிழகத்தில் இப்பள்ளிகளுக்கு அனுமதி  வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ் விருப்பப் பாடமாக  இருக்கும் என்றும் நவோதயா வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு இடம் உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களிலும் சேர்த்து 660 நவோதயா பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு மாணவர்  சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு நவம்பர் மாதம் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் ஒரு மாத காலம் கூட  இல்லாத நிலையில் அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களில் இருந்து மட்டுமே 6 ம் வகுப்பு தகுதியானவர்களை தேர்வு செய்ய பிப்ரவரி மாதம்  நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
ஜவஹர் நவோதயா வித்யாலயா தரப்பில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில்  இவ்விஷயத்தில் தமிழக அரசு மவுனமாக இருந்து வருவதால் பெற்றோர் மத்தியில் குழப்பமான நிலை உள்ளது.
 இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த குமரி மகாசபா அமைப்பின் தலைவர் ராவின்சன் கூறுகையில், ‘குமரி மகா சபா சார்பில் தமிழகத்தில் நவோதயா  வித்யாலயா தொடங்க மதுரை உயர்நீதிமன்ற கிளையிடம் இருந்து உத்தரவை பெற்றுள்ளோம். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால்  இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாமல் போய்விடும். மாவட்டம் தோறும் மாணவர் சேர்க்கைக்கு வசதிகளை ஏற்படுத்தி தற்காலிக  கட்டிட வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக அரசு உத்தரவுப்படி, மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) ஆகியன  இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தனி பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி திட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் w‌w‌w.‌f‌i‌s‌h‌e‌r‌i‌e‌s.t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அல்லது மீன் துறை அலுவலகங்களிலிருந்து நேரில் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து,  உரிய சான்றாவணங்களை இணைத்து, தொடர்புடைய மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக அக். 23-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு நாகை மீன்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை 04365-253009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான 366 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான வேலைத் தேடும் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 366
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. State Level Consulatnt - 04
2. Assistant District Manager- 23
3. District Manager – Micro Enterprise Development - 30
4. District Manager – Skill Upgradation & Employment - 27
5. District Project Manager - 23
6. Assistant State Project Manager (HRD) - 01
7. State Project Manager - 01
8. The District Manager – Agriculture - 23
9. District Manager – Monitoring & Evaluation -28
10. The Dist Manager – Micro Finance - 30
11. Community Mobiliser -176
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை, எம்பிஏ, பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சைக்மெட்ரிக் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற www.iifm.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் -பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பு 2015-16ஆம் ஆண்டுக்குமுன்பு வரை ஓராண்டுப் படிப்பாக இருந்து வந்தது. இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுஅறிவுரைப்படி 2015-16ஆம் ஆண்டு முதல் பி.எட். படிப்பு இரு ஆண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்டது. பி.எட். படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் விருப்பப் பாடங்களாக இருந்தன. ஆனால், பி.எட். படிப்பு ஈராண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்ட பின்னர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.
இளநிலைப் பட்டப்படிப்பு முடித்து பி.எட் பயிலும் அனைவரும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு விருப்பப் பாடங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகும். தமிழகத்தில் பி.எட். பட்டம் படிப்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் மொழியை தேர்வு செய்வதே வழக்கமாகும். ஆனால், பி.எட். ஈராண்டு படிப்பாக மாற்றப்பட்ட பின்னர் பட்டப்படிப்பில் எதை முதன்மைப் பாடமாக படித்தார்களோ அதை மட்டும் படித்தால் போதுமானது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மிகக் கடுமையாக பாதித்து விடும். இது வருங்கால தலைமுறையினரின் கல்வியை பாதிக்கக்கூடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் தவிர மீதமுள்ள அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில் தான் கற்பிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தமிழாசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. இதனால்அறிவியல், கணிதம் படித்த ஆசிரியர்களும் பல நேரங்களில் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழ் மொழிப் பாடத்தை நடத்துவதாக இருந்தாலும், பிற பாடங்களை தமிழ் வழியில் நடத்துவதாக இருந்தாலும் பி.எட். படிப்பில் தமிழ் மொழியை விருப்பப்பாடமாக படித்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில், பொதுத் தமிழ் எனப்படும் அப்பாடத்தில் தான் தமிழையும், தமிழ் மொழிவழியில் பிறப்பாடங்களையும் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடம் நீக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழையும், தமிழ் மொழிப் பாடங்களையும் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார்.
உண்மையில் ஜெயலலிதாவின் அரசும், ஜெயலலிதா வழியில் நடப்பதாகக் கூறப்படும் பினாமி அரசும் தமிழைஅழிப்பதற்கான நடவடிக்கைகளில் தான் ஆர்வம் செலுத்துகின்றனர். முந்தைய திமுக ஆட்சியில்கடந்த 2010 ஆண்டில் முதன்முறையாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 2011-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 5189 அரசு பள்ளிகளில் 1.03 லட்சம் மாணவ, மாணவியருக்குஆங்கில வழிக் கல்வி வழங்கப்படுகிறது. 2014-15 ஆம் ஆண்டில் மேலும் சில ஆயிரம் பள்ளிகளுக்கு ஆங்கில வழிக்கல்வி விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின் மீதமுள்ள பள்ளிகளில் எவ்வளவு பள்ளிகளில் முடியுமோ, அவ்வளவு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
இவ்வாறாக தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வரும் அதிமுக அரசு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம் தமிழுக்கு எதிராக மீண்டும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரி தஞ்சையில் 2ம் தேதி மாநாடு தமிழ்நாடு மாணவர் இயக்கம் அறிவிப்பு!!

தஞ்சை, அக். 27: மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு 
மாற்ற வலியுறுத்தி தஞ்சையில் 2ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாநாடு நடக்கிறது. இதுகுறித்து தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்க பொது செயலாளர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு உட்பட அனைத்து அகில இந்திய நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விளைபொருட்களின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அறிவியல் பூர்வமான இலவச கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தாய்மொழி வழி கல்வியை போதிக்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் கல்வி உரிமை, காவிரிப்படுகை என்ற தலைப்பில் மாணவர் மாநாடு வரும் 2ம் தேதி நடக்கிறது.
அன்றைய தினம் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து ஜான் வின்சன்ட் தலைமையில் பேரணி நடக்கிறது. இதைதொடர்ந்து தஞ்சை ராமநாதன் பஸ்ஸ்டாப் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கல்வி எமது சிறப்புரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. பின்னர் காவிரிப்படுகை எமது தாய் நிலம் என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடக்கிறது என்றார்.

மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கொடுத்து அரசுப்பள்ளிகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்....

பத்து ரூபாய்தான்... ஆனால் மதிப்போ பல மடங்கு...
ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான்...
கவிஞர் வாலி தன் மாணவப் பருவத்தில் எழுதிய புகழ்பெற்ற கவிதை இது. எந்தவொரு நற்செயலுக்கும்  ஊக்கம் மிக முக்கியம். குறிப்பாக மாணவப் பருவத்தில் இருப்பவர்களுக்கு சரியான அங்கீகாரமும், ஊக்கமுமே அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்க ஏதுவாக இருக்கும். பாராட்டும், பரிசளிப்புமே அவர்களை உற்சாகப்படுத்தும். இதனை நன்கு உணர்ந்தவர்தான் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் பழனிக் குமார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் கடமைக்குப் பணியாற்றிவிட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு தன்னிடம் பயிலும் மாணவர்களிடத்தில் எந்த அக்கறையும் இருக்காது. அரசுப் பள்ளிகளின் தரமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்காது என்ற சிலரின் எண்ணத்தை உடைத்தெறிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பழனிக் குமார்.
ஸ்மார்ட் கிளாஸ், யோகா போன்ற தற்காப்புப் பயிற்சி(சிலம்பம்) வண்ணங்கள் தீட்டப்படட வகுப்பறை, வட்ட வடிவிலான மேஜை இருக்கைகள், இலவச யோகா ஆடைகள், காலணி என தான் பணிபுரியும் அரசு உதவி பெறும் பள்ளியை தனியார் பள்ளி அளவிற்கு Thirunavukkarasu PS என்ற முகநூல் ஒன்றை ஆயுதமாக்கி அதன் மூலம் பல உதவிகள் பெற்று பள்ளியை தரம் உயர்த்தியவர். இவரது செயல்கள், இவர் உருவாக்கிய மாணவக் கண்மணிகள், பணிபுரியும் பள்ளி குறித்து நிறையை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டுச் சிறப்பித்தன.
இவரது முன்மாதிரி செயல்திட்டங்களில் மெச்சப் போற்றத்தக்க திட்டம்தான் பத்து ரூபாய் ஊக்கப் பரிசு. பத்து ரூபாய் ஊக்கப் பரிசு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது? திருநாவுக்கரசு பள்ளி முகநூல் கணக்கில் இணைந்துள்ள அரசுப் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களைப் பற்றிய பதிவை இட வேண்டும். அதனைக் காணும் பழனிக் குமார் தானே அஞ்சலகம் சென்று மணியார்டர் படிவத்தை நிரப்பி அந்த குறிப்பிட்ட மாணவரின் பெயருக்கே மணியார்டர் அனுப்புவார். தங்களது பெயரில் வந்துள்ள மணியார்டர் பணத்தை தானே கையொப்பமிட்டு வாங்கும் போது அந்த சிறார்களின் மனதில் ஏற்படும் குதூகலமும், சந்தோஷமும் ஒப்பற்றது. பத்து ரூபாய் ஊக்கப் பரிசு பெற்ற மாணவர் பத்து ரூபாயோடும், மலர்ந்த முகத்தோடும் காட்சி தரும் புகைப்படங்களின் மதிப்பு பல மடங்கு. அப்புகைப்படங்கள் அந்ததந்த பள்ளியின் முகநூல் கணக்கில் பதிவேற்றப்படும். இதுவரை பல பள்ளிகளுக்கு பல பத்து ரூபாய் ஊக்கப் பரிசுகள் சென்றுள்ளது.
நடைமுறையில் இது சாதாரண செயலாகத் தெரிந்தாலும் மாணவர்கள் மத்தியில் இந்த ஊக்கப் பரிசுத் திட்டம் மிகப்பெரிய மகிழ்வையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. இதனை செயல்படுத்த Thirunavukkarasu PS முகநூல் நண்பர் கனிந்த இதயம் மற்றும் பல்வேறு முகநூல் நண்பர்களிடம் நிதியுதவி பெற்று கடந்த 1 வருடமாக  தொடர்ந்து பணம் அனுப்பி  வழங்கிவந்த நிலையில் தற்போது மாணவர்களின் மனமகிழ்வையும் உற்சாகத்தையும் கண்டு பல முகநூல் நண்பர்கள் பழனிக்குமார் ஆசிரியருக்கு பணம் அனுப்பி வருகின்றனர் பல்வேறு மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக....பலர் பணம் அனுப்பி வந்தாலும் முகநூலில் மாணவர் திறமையைப் பார்த்து குறிப்பேட்டில் எழூதி மணியார்டர் படிவம் நிரப்பி அஞ்சலகம் சென்று யாருக்கு பணம் அனுப்புகிறோமா அதனையும் முகநூலில் பதிவு செய்கிறார்.தினமும் 20 மணியார்டர் அனுப்புகிறார். தமிழகம் முழூவதும் 5 வயது குழந்தை முதல் ஊக்குவிக்கிறார். மணியார்டர் மாணவர்களுக்கு வந்ததும் ஆசிரியர் ஊக்கப்பரிசுக்கான  காரணத்தை கூறும் போதும் மணியார்டர் படிவத்தில் கையெழூத்திடும் போது மாணவர் மனதில் நாம் இன்னும் திறமையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.ஊக்கப்பரிசு பெற்ற விருதுநகர் மாவட்ட 1 ம் வகுப்பு மாணவன் ரூ 10 ஊக்கப்பரிசு பெற்றதை என்ன செய்வாய் என்று ஆசிரியர் கேட்ட போது மிஸ் நான் 5 ரூ அம்மாட்ட காய்கறிஅ வேங்க கொடுத்திட்டு நான்அ ரூ2 மற்றும் தம்பிக்கு ரூ 2 கொடுத்திட்டு ரூ 1 உண்டியலில் சேமிப்பேன் என்றான்.... அந்த மழலை மாணவன். நமக்கு ரூ 10 சிறியது தான் ஆனால் மாணவர்களை பொறுத்தவரை இது பெரிது தான். இவரது Thirunavukkarasu PS முகநூலில் தினமும் தவறாமல் மணியார்டர் ரூ 10 மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதை தினமும் புது புது பதிவுகளுடனும் பல்வேறு பள்ளிகளுக்கும் அனுப்புவதை தினமும் காணலாம்.குறிப்பேட் நாமும் நம்மால் முடிந்த ஊக்கத்தைத் தர முயல்வோமே... Thirunavukkarasu primary school krishnapuram kadayanallur cell 9976804887


























CEO/DEEO, DIET, ADPC SCHOOL TEAM VISIT - QUESTION & REPORTING FORMAT


இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ; மாஸ்டர் பிளான்...


5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும்
முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ தொலைத்தொடர்பு சேவை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளியது. பின்னர் படிப்படியாக சேவைக் கட்டணத்தை நிர்ணயித்தது.
இதன் அதிவேகம் இணையச் சேவைக்காக ஏராளமானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், விரைவில் 5ஜி நெட்வொர்க்காக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, அதனை கையகப்படுத்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ளார்.
இது அமல்படுத்தப்படும் போது, ஜியோவின் 4ஜி சேவை, தானாக 5ஜி ஆக மாறும். ஆனால் அதற்காக 5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு மாற வேண்டும். சமீபத்தில் குவால்கம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தனது டிவிட்டரில் 5ஜி ஸ்மார்ட்போனை பதிவிட்டுள்ளார்.
அதுவே உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும். ஆனால் அவர்களின் ஜியோ முந்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாநகராட்சி ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது_ஆணையர் உத்தரவு!!

மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

அரசு கடித எண்:64435/FR-V/94-5  நாள்:27/03/1995

மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறைநாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.

மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

FLASH NEWS : G.O 319 APPLICABLE OF 7 th PAY COMMISSION - ORDERS ISSUED


G.O Ms.No. 319 Dt: October 27, 2017  -State Public Sector Undertakings/Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pay, Allowances etc., to Government employees - Applicability to the employees of State Public Sector Undertakings/Statutory Boards - Orders - Issued.



FLASH NEWS : G.O 313 - TN 7th PAY COMMISSION - PENSIONERS G.O PUBLISHED

FLASH NEWS : G.O 313 - TN 7th PAY COMMISSION - PENSIONERS G.O PUBLISHED


G.O.Ms.No.313 Dt: October 25, 2017  OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits - Orders - Issued

NMMS ALL NEW STUDY MATERIALS & MODEL QUESTION PAPERS

THANKS : MR.MOHAN., M.Sc., M.Phil.,B.Ed, 
Ramnad.

         SAT MODEL QUESTION PAPER


சனி, 28 அக்டோபர், 2017

'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு

அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.
பிளஸ் ௨ முடித்த மாணவர்கள், உயர் கல்வியில் சேர, மத்திய அரசு, பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துகிறது.
இவற்றில், மருத்துவத்துக்கான, நீட்; இன்ஜினியரிங்குக்கான, ஜே.இ.இ., ஆகிய தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் போன்ற, மாநில பாடத்திட்ட மாணவர்கள், அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், நீட், ஜே.இ.இ., தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதன்படி, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 20 கோடி ரூபாய் செலவில், 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், அக்., 26 வரை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 'ஆன் - லைன்' பதிவு அவகாசத்தை, அக்., 31 வரை நீட்டித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

ரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயருகிறது. புதிய சர்க்கரை விலை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது ரூ.13.50 விலையில் விற்கப்படும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.25 ஆக விலை உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.