மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கொடுத்து அரசுப்பள்ளிகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்....
பத்து ரூபாய்தான்... ஆனால் மதிப்போ பல மடங்கு...
ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான்...
கவிஞர் வாலி தன் மாணவப் பருவத்தில் எழுதிய புகழ்பெற்ற கவிதை இது. எந்தவொரு நற்செயலுக்கும் ஊக்கம் மிக முக்கியம். குறிப்பாக மாணவப் பருவத்தில் இருப்பவர்களுக்கு சரியான அங்கீகாரமும், ஊக்கமுமே அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்க ஏதுவாக இருக்கும். பாராட்டும், பரிசளிப்புமே அவர்களை உற்சாகப்படுத்தும். இதனை நன்கு உணர்ந்தவர்தான் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் பழனிக் குமார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் கடமைக்குப் பணியாற்றிவிட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு தன்னிடம் பயிலும் மாணவர்களிடத்தில் எந்த அக்கறையும் இருக்காது. அரசுப் பள்ளிகளின் தரமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்காது என்ற சிலரின் எண்ணத்தை உடைத்தெறிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பழனிக் குமார்.
ஸ்மார்ட் கிளாஸ், யோகா போன்ற தற்காப்புப் பயிற்சி(சிலம்பம்) வண்ணங்கள் தீட்டப்படட வகுப்பறை, வட்ட வடிவிலான மேஜை இருக்கைகள், இலவச யோகா ஆடைகள், காலணி என தான் பணிபுரியும் அரசு உதவி பெறும் பள்ளியை தனியார் பள்ளி அளவிற்கு Thirunavukkarasu PS என்ற முகநூல் ஒன்றை ஆயுதமாக்கி அதன் மூலம் பல உதவிகள் பெற்று பள்ளியை தரம் உயர்த்தியவர். இவரது செயல்கள், இவர் உருவாக்கிய மாணவக் கண்மணிகள், பணிபுரியும் பள்ளி குறித்து நிறையை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டுச் சிறப்பித்தன.
இவரது முன்மாதிரி செயல்திட்டங்களில் மெச்சப் போற்றத்தக்க திட்டம்தான் பத்து ரூபாய் ஊக்கப் பரிசு. பத்து ரூபாய் ஊக்கப் பரிசு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது? திருநாவுக்கரசு பள்ளி முகநூல் கணக்கில் இணைந்துள்ள அரசுப் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களைப் பற்றிய பதிவை இட வேண்டும். அதனைக் காணும் பழனிக் குமார் தானே அஞ்சலகம் சென்று மணியார்டர் படிவத்தை நிரப்பி அந்த குறிப்பிட்ட மாணவரின் பெயருக்கே மணியார்டர் அனுப்புவார். தங்களது பெயரில் வந்துள்ள மணியார்டர் பணத்தை தானே கையொப்பமிட்டு வாங்கும் போது அந்த சிறார்களின் மனதில் ஏற்படும் குதூகலமும், சந்தோஷமும் ஒப்பற்றது. பத்து ரூபாய் ஊக்கப் பரிசு பெற்ற மாணவர் பத்து ரூபாயோடும், மலர்ந்த முகத்தோடும் காட்சி தரும் புகைப்படங்களின் மதிப்பு பல மடங்கு. அப்புகைப்படங்கள் அந்ததந்த பள்ளியின் முகநூல் கணக்கில் பதிவேற்றப்படும். இதுவரை பல பள்ளிகளுக்கு பல பத்து ரூபாய் ஊக்கப் பரிசுகள் சென்றுள்ளது.
நடைமுறையில் இது சாதாரண செயலாகத் தெரிந்தாலும் மாணவர்கள் மத்தியில் இந்த ஊக்கப் பரிசுத் திட்டம் மிகப்பெரிய மகிழ்வையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. இதனை செயல்படுத்த Thirunavukkarasu PS முகநூல் நண்பர் கனிந்த இதயம் மற்றும் பல்வேறு முகநூல் நண்பர்களிடம் நிதியுதவி பெற்று கடந்த 1 வருடமாக தொடர்ந்து பணம் அனுப்பி வழங்கிவந்த நிலையில் தற்போது மாணவர்களின் மனமகிழ்வையும் உற்சாகத்தையும் கண்டு பல முகநூல் நண்பர்கள் பழனிக்குமார் ஆசிரியருக்கு பணம் அனுப்பி வருகின்றனர் பல்வேறு மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக....பலர் பணம் அனுப்பி வந்தாலும் முகநூலில் மாணவர் திறமையைப் பார்த்து குறிப்பேட்டில் எழூதி மணியார்டர் படிவம் நிரப்பி அஞ்சலகம் சென்று யாருக்கு பணம் அனுப்புகிறோமா அதனையும் முகநூலில் பதிவு செய்கிறார்.தினமும் 20 மணியார்டர் அனுப்புகிறார். தமிழகம் முழூவதும் 5 வயது குழந்தை முதல் ஊக்குவிக்கிறார். மணியார்டர் மாணவர்களுக்கு வந்ததும் ஆசிரியர் ஊக்கப்பரிசுக்கான காரணத்தை கூறும் போதும் மணியார்டர் படிவத்தில் கையெழூத்திடும் போது மாணவர் மனதில் நாம் இன்னும் திறமையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.ஊக்கப்பரிசு பெற்ற விருதுநகர் மாவட்ட 1 ம் வகுப்பு மாணவன் ரூ 10 ஊக்கப்பரிசு பெற்றதை என்ன செய்வாய் என்று ஆசிரியர் கேட்ட போது மிஸ் நான் 5 ரூ அம்மாட்ட காய்கறிஅ வேங்க கொடுத்திட்டு நான்அ ரூ2 மற்றும் தம்பிக்கு ரூ 2 கொடுத்திட்டு ரூ 1 உண்டியலில் சேமிப்பேன் என்றான்.... அந்த மழலை மாணவன். நமக்கு ரூ 10 சிறியது தான் ஆனால் மாணவர்களை பொறுத்தவரை இது பெரிது தான். இவரது Thirunavukkarasu PS முகநூலில் தினமும் தவறாமல் மணியார்டர் ரூ 10 மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதை தினமும் புது புது பதிவுகளுடனும் பல்வேறு பள்ளிகளுக்கும் அனுப்புவதை தினமும் காணலாம்.குறிப்பேட் நாமும் நம்மால் முடிந்த ஊக்கத்தைத் தர முயல்வோமே... Thirunavukkarasu primary school krishnapuram kadayanallur cell 9976804887