>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஆசிரியர் தினம்" எப்படி கொண்டாடாடுவது என எங்களுக்கு தெரியும் - மத்திய அரசின் சுற்றறிக்கையயை நிராகரித்தது மேற்குவங்க அரசு

ஆசிரியர் தினம் தொடர்பாக சுற்றறிக்கை மத்திய அரசுக்கு மேற்கு வங்கம் எதிர்ப்பு
ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஆசிரியர் தினம் தொடர்பாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையை எங்களால் பின்பற்ற முடியாது.
ஒரு குறிப்பிட்ட அம்சம் தொடர்பாக கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளை ஆசிரியர் தினத்தன்று நடத்த வேண்டும் என்று அந்த அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பது நகைப்புக்குரியது.
ஆசிரியர் தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பது மேற்கு வங்க அரசுக்குத் தெரியதா? இத்தனை ஆண்டுகளாக அந்த தினம் எப்படி கொண்டாடப்பட்டு வந்ததோ அதைப் போலவே கொண்டாடுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு ஏற்கெனவே சுற்றறிக்கையை அனுப்பிவிட்டது. ஆசிரியர் தினமான, முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது மேற்கு வங்க அரசுக்குத் தெரியும் என்று பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அனுப்பிய சுற்றறிக்கையில், "தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளை ஆசிரியர் தினத்தில் நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாணை எண்:536 நாள்:13.04.1966- அரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து பணிதுறப்பு செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம்....

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் காரணமாக இன்று காலை 8.00 மணிக்குள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அலுவலகம் வர இயக்குனர் உத்தரவு !!

தமிழகத்தின் புதிய அமைச்சரவை,

தமிழகத்தின் புதிய அமைச்சரவை
சென்னை : தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்.
1. எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாடு முதல்வர்
2. ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை
3. மாஃபா பாண்டியராஜன்
தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
4. திண்டுக்கல் சி.சீனிவாசன்
வனத்துறை அமைச்சர்
5. கே.ஏ.செங்கோட்டையன்
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்
6. செல்லூர் கே ராஜூ
கூட்டுறவுத்துறை அமைச்சர்
7. பி.தங்கமணி
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
8. எஸ்.பி.வேலுமணி
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப் பணிகள், செயலாக்கத்துறை அமைச்சர் 9.டி.ஜெயக்குமார்(பகிர்ந்தளிப்பு)
மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர்
10. சி.வி. சண்முகம் (கூடுதல் துறை)
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் கூடுதலாக கனிமவளத்துறை ஒதுக்கீடு
11. கே.பி.அன்பழகன்
உயர்கல்வித்துறை அமைச்சர்
12. டாக்டர் வி.சரோஜா
சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர்
13.எம்.சி.சம்பத் (பகிர்ந்தளிப்பு)
தொழில்துறை அமைச்சர்
14. கே.சி.கருப்பணன்
சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
15.ஆர்.காமராஜ்
உணவுத்துறை அமைச்சர்
16. ஒ.எஸ்.மணியன்
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்
17. உடுமலை ராதாகிருஷ்ணன் (மாற்றம்)
கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
18.டாக்டர் சி.விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
19. இரா.துரைக்கண்ணு
வேளாண்மைத்துறை அமைச்சர்
20. கடம்பூர் ராஜு
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
21.ஆர்.பி.உதயகுமார்
வருவாய்த்துறை அமைச்சர்
22. வெல்லமண்டி என்.நடராஜன்
சுற்றுலாத்துறை அமைச்சர்
23.கே.சி.வீரமணி
வணிகவரித்துறை அமைச்சர்
24.கே.டி.ராஜேந்திரபாலாஜி
பால்வளத்துறை அமைச்சர்
25.பி.பெஞ்சமின்
ஊரகத் தொழில்துறை அமைச்சர்
26.மருத்துவர் நீலோபர் கபீல்
தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
27. எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்
28. டாக்டர் எம். மணிகண்டன்
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
29. வி.எம்.ராஜலட்சுமி
ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
30.ஜி.பாஸ்கரன்
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்
31.சேவூர் எஸ்.இராமச்சந்திரன்(பகிர்ந்தளிப்பு)
இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்
32. எஸ்.வளர்மதி
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
33. பி.பாலகிருஷ்ணா ரெட்டி (மாற்றம்)
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2017)

TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2017) !!
Nodal Agency - Mother Teresa Women's University-Kodaikanal

தேசிய திறனாய்வு தேர்வுக்கு (NTSE) 28-8-17 முதல் 1-9-17 வரை விண்ணப்பிக்கலாம்...

நவோதயா பாணியில் சிறுபான்மையினருக்கு 100 பள்ளி; மாணவிகளுக்கு 40% ஒதுக்கீடு...

சிறுபான்மையின மாணவர்களுக்காக 100 நவோதயா பாணி பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 40 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
டெல்லியில் பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர்
நலத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
சிறுபான்மையின மாணவர்களுக்காக நவோதயா பாணியிலான 100 பள்ளிகள், 5 உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த பள்ளிகள் அமைக்கப்படும். சிறுபான்மையினருக்கு மரியாதையுடன் கூடிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களது கல்வியில் கவனம் செலுத்துகிறோம்.
இந்த பள்ளிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு 40 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். இந்த பள்ளிகள் அடுத்த ஆண்டு அமைக்கப்படும். ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்க ஆர்வம் காட்டியுள்ளன.
இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு சமீபத்தில் அரசிடம் அறிக்கை அளித்தது. அதில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாகவும் அவர்களின் கல்வியறிவை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களில் மாணவர் சேர்க்கை; மருத்துவ கவுன்சில் கெடுபிடி

’நீட்’ தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள்
மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், ’கெடு’ விதித்து உள்ளது
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, ’நீட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இந்தத் தேர்வின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. 
தமிழகத்தில் மட்டும், இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.’நீட்’ தேர்விலில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தர, உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது. அதனால், ’நீட்’ தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக அரசு புதிய அவசர சட்டம் நிறைவேற்றி, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில்,மருத்துவ மாணவர் சேர்க்கையை தாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில், புதிய வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில்,மத்திய - மாநில அரசுகள் பதில் தர, உச்சநீதிமன்றம் .
இதற்கிடையில், வரும், 31க்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கும்படி,தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உத்தர விட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன், அனைத்து மாநிலங்களிலும், மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதால், தமிழகத்திலும்,மாணவர் சேர்க்கையை உரியகாலக்கெடுவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதனால், இன்னும், 10  நாட்களில் மாணவர்சேர்க்கையை முடிக்க வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில், ’நீட்’ தேர்வு வழக்கு, உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் சார்பில், கூடுதல்அவகாசம் கேட்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

குழந்தைநேயப் பள்ளி திட்டத்தில் ஆயிரம் அரசு பள்ளிகள் இணைப்பு....

விதிமீறல் இன்றி நல்லாசிரியர் விருது : தேர்வுக்குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவு....

ஆசிரியர் தின நல்லாசிரியர் விருதுக்கு, முதற்கட்ட பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர். விதி மீறல் இன்றி ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளும், பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதும், இதையொட்டி வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விண்ணப்பம் பெற்று, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்கின்றன. தமிழகத்தில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி ஆதரவு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளால் சிபாரிசு செய்யப்படுவோருக்கே, மாநில அரசின் விருது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஜாதி, மத பின்னணியிலும், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
இந்தாண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, ஆக., 5ல் விண்ணப்பங்கள் வழங்க, இயக்குனரகம் உத்தரவிட்டது. பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள், அனைவருக்கும் விண்ணப்பங்களை வழங்கவில்லை என்றும், அதனால், மாவட்ட கல்வி அதிகாரிகளே, ஆசிரியர்களின் பெயர்களை தேர்வு செய்ததாக, தகவல்கள் வெளியாகின. சில மாவட்டங்களில் விண்ணப்பிக்கவே, ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆக., 20ல், இதற்கான அவகாசம் முடிந்ததால், மாவட்ட கல்வி அதிகாரிகள், தங்கள் தேர்வு பட்டியலை, இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளனர். அந்த பட்டியல், சரியான பட்டியலா, தகுதி பெற்ற யாராவது விடுபட்டுள்ளனரா; விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்காதோருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என, ஆசிரியர் சங்கத்தினர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.
இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'யாராவது விடுபட்டிருந்தால், அவர்கள், நேரடியாக பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்தை அணுகலாம். 'விதி மீறலுக்கும், சிபாரிசுக்கும் இடமின்றி, தகுதியானவர்களுக்கு மட்டுமே, நல்லாசிரியர் விருது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இன்று வெளியாகிறது Android ‘O’ இயங்குதளம்!!!


ஸ்மார்ட்ஃபோன் இயங்குதளமான ஆன்ட்ராய்ட் தமது அடுத்த பதிப்பை ஆன்ட்ராய்ட் ஓ என்ற பெயரில் வெளியிடுகிறது.
ஆன்ட்ராய்ட் தனது இயங்குதளப் பதிப்புக்களுக்கு ஜிஞ்சர் பிரெட், கப்கேக், டோனட், எக்லெய்ர்ஸ், ஐஸ் கிரீம் சேண்ட்விச், ஜெல்லி பீன், லாலி பாப், கிட்கேட், மார்ஸ்மல்லோ, நோகட் என்று உணவுப் பொருட்களின் பெயரையே வைத்துள்ளது.
புதிய பதிப்புக்கு ஓரியோ, ஆக்டோபஸ், ஆர்பிட் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய இயங்குதளத்தில் வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே பிற ஆப்களை இயக்கும் வசதியும், பின்னணியில் இயங்கிக் கொண்டு பேட்டரியைக் குறைக்கும் ஆப்களை நீக்கும் வசதியும் உள்ளது. கூகுள் பிக்ஸல், நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களில் முதலாவதாக அறிமுகமாவதாகவும், பிற ஸ்மார்ட்போன்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆன்ட்ராய்ட் அறிவித்துள்ளது

One Day Strike - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் காலை 09.30 மணிக்குள் அனுப்பிட உத்தரவு!! பள்ளிக்கல்வி - 22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு!! 

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை !!

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .
முக்கிய தகவல்  2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை அறிவித்திள்ளது.
பதிவுதாரர்கள் இந்த ஆண்டு தங்களது பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இன்று அறிவித்துள்ளார்.
Renewal செய்ய தவறிய நண்பர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் இருப்பின் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும்.
என்றாவது எம்ப்ளாயிமெண்ட் கார்டு தேவைப்படும் . அதனால் இதை பயன்படுத்தி கொள்ளவும்.

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பில் போராடும் இயக்கங்களின் பெயர்கள் தொடர்பு எண்கள் !!






68 ஆண்டுகள் பாலம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு!

சூளகிரி ஒன்றியம் செக்காருலு உள்ளிட்ட நான்கு கிராமங்களில்
60 ஆண்டுகளாக ஆற்றின் குறுக்கே பாலம் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
சூளகிரி ஒன்றியம், அங்கொண்டப்பள்ளி பஞ்., உள்ள செக்காருலு மற்றும் செம்பரசனப்பள்ளி பஞ்., சின்னபாப்பனப்பள்ளி, பெரியபாப்பனப்பள்ளி, ராமசந்திரபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செக்காருலு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதனால், நான்கு கிராம மாணவர்களும், மூன்று கிலோ மீட்டர் தூரம், பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சாலை வசதியும் இல்லை. பேருந்தில் செல்வதற்கும் கிராமத்திலிருந்து இரண்டு கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேல்நிலை கல்வி கற்க சுமார் 10 கிலோ மீட்டர் கடந்து சுளுரில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு செல்லவேண்டியுள்ளது. மாணவர்கள் மட்டும் அல்லாமல் வேலை நிமித்தமாக செல்லும் மக்களும், செக்காருலு அருகே உள்ள சின்னாற்றை கடந்து, பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படுவதால் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக, சூளகிரி சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால், சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்போது, 60க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளாக, சாலை மற்றும் பாலம் வசதி கேட்டு, பலமுறை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், மக்களுக்கு அந்த வசதிகள் ஏற்படுத்தவில்லை. அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜியோ ரீசார்ஜ் செய்பவர்களா நீங்கள்... உங்களுக்கு ஜியோ வழங்கும் புதிய கேஷ்பேக் சலுகைகள்!!


ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி  சலுகையை தொடர்ந்து பெற இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த ரீசார்ஜ் செய்யும் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளன.


இதற்காக ஜியோ மொபைல் ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களை குறிவைத்து கவரும் விதமாக ஆன்லைன் பேமெண்ட் போர்ட்டல்கள். பேடிஎம், மொபி க்விக், அமேசான் பே என அனைத்து ஆன்லைன் பேமெண்ட் நிறுவனங்களும் கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளித் தருகின்றன.

வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முன் ப்ரோமோ கோடினை தெளிவாக படித்து அதன்பின் பதிவிட வேண்டும். ரீசார்ஜ் செய்யப்பட்டதும் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் பேடிஎம் கணக்கில் சேர்க்கப்படும்.

இதுதவிர போன் பெ (PhonePe app) செயலி மூலம் ரிலையன்ஸ் ஜியோ எண்ணிற்கு ரூ.300க்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகைகள் அந்நிறுவன இணையப்பக்கம் மற்றும் மைஜியோ செயலியில் பார்க்க முடியும். ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் திட்டங்கள் விலை ரூ.19 முதல் துவங்குகிறது. போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலை ரூ.309 முதல் துவங்குகிறது.

பேடிஎம் (Paytm):
பேடிஎம் மூலம் ஜியோ ரீசார்ஜ் செய்தால் 15 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் அல்லது அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 76 ரூபாய் கேஷ்பேக் தருகிறது பேடிஎம். வழக்கம்போல, ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்தில் உங்கள் பேடிஎம் கணக்கில் கேஷ்பேக் தொகை வந்துவிடும்.

ஃபோன்பே (PhonePe): ஃபோன்பே மூலம் ஜியோ ரீசார்ஜ் செய்தால் 75 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் 300 ரூபாய் அல்லது அதற்கு மேல் ஜியோ ரீசார்ஜ் செய்தால் இந்த ஆஃபர் கிடைக்கும். ஆகஸ்ட் 21 வரை மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்.

மொபி க்விக் (MobiKwik): மொபிக்விக் மூலம் 399 ரூபாய்க்கு ஜியோ ரீசார்ஜ் செய்தால் 59 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் (இதற்கான கோட் JIOMBK). இதுவே நீங்கள் செய்யும் முதல் ஜியோ ரீசார்ஜ் என்றால் 159 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் (இதற்கான கோட் NEWJIO).

அமேசான் பே (Amazon Pay): அமேசான் பே மூலம் ரூ.309 அல்லது அதற்கு மேலான தொகைக்கு ஜியோ ரீசார்ஜ் செய்தால் 99 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். நவம்பவர் 30 ஆம் தேதி வரை ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.20 கிடைக்கும். இப்படியே 300 ரூபாய் வரை மட்டுமே கேஷ்பேக் பெறலாம். ரீசார்ஜ் செய்த 7 நாள்களுக்கு இந்த கேஷ்பேக் அக்கவுண்டுக்கு வரும்.

ரூ.309 முதல் ரூ.9,999 வரையிலான அனைத்து ப்ரிபெய்ட் டேட்டா பிளான்களுக்கும் வேலிடிட்டி நாள்கள் மற்றும் டேட்டா சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாக ஜியோ ப்ரைம் வாடிக்கையாளராக, ஆண்டு கட்டணமாக ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. ஆனால் அதன்பின் ஜியோ ப்ரைம் உறுப்பினராக ஜியோ மணி என்ற இ-வாலட் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கும் செய்து அதன் மூலம் ரூ.99 மற்றும் ரூ.303 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்-பேக் சலுகை அளிக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.


இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS.’

சி.பி.எஸ். என்றால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அலறியடித்து ஓடுகிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது சி.பி.எஸ்.சில்.

சி.பி.எஸ். என்றதும் ஏதோ ஒரு கல்வித்திட்டம் என்று நினைக்க வேண்டாம். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம்தான் சி.பி.எஸ்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ‘கான்ட்ரிபியூட்டரி பென்சன் ஸ்கீம்’ என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

சி.பி.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், இதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அமல்படுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் இந்த புதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லை.

சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து உள்ளது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியபோது இந்த கோரிக்கை முதலிடத்தை பிடித்து இருந்தது. தற்போது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டமும், 22-ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடத்த இருக்கும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திலும் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்பதே முக்கிய கோரிக்கையாக கூறப்பட்டு உள்ளது.

தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த சில விமர்சனங்கள் இருந்தாலும், ஊழியர்களிடம் அதற்கான எதிர்ப்பு எதுவும் இல்லை.

இந்தநிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, பணியில் இருந்தபோது உயிரிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே முதல் அதிர்ச்சிகரமான தகவலாக இருந்தது.

விபத்தில் இறக்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று யாருக்கும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.

எனவே ஜேக்டோ-ஜியா போன்ற அமைப்புகள் இதுபற்றிய ஆய்வினை நடத்தியபோது, 2004-ம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகைக்கான கணக்கு என்னவானது என்றே தெரியவில்லை என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டம் அளித்த பல்வேறு கொடைகள், பண பலன்கள் எதுவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

முன்பு அரசு பணியில் சேர்ந்துவிட்டால் ஓய்வுக்குப்பிறகு வாழ்நாள் முழுவதும் ஒரு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது ஓய்வுக்கு பின்னர் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் மட்டுமே ஒரு அரசு ஊழியரின் வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது. அதுவே இல்லை என்கிறபோது பணியில் பிடிப்பு இல்லாத நிலையில் இருப்பதாகவே பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தெரிவிக்கிறார்கள்.

எத்தனையோ போராட்டத்துக்கு பின்னரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படாமல், ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும்போதும் சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்வதை பார்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அலறுகிறார்கள்.

இயற்கையைப் பாதுகாக்கும் 'விதை விநாயகர்!'

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. புதிய வடிவங்களில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் இப்போது கடைவீதிகளில் கண்ணைப்பறிக்க துவக்கிவிட்டன. இனி, 'ஸ்பீக்கர்' சத்தம் முழங்க, மூன்று நாட்களுக்கு வீதியெங்கும் ஒரே ஆரவாரம்தான்.
அதே சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று அருகிலுள்ள குளம், குட்டைகளில் கரைத்துவிட்டு அடுத்த வேலையை நோக்கி அனைவரும் நகரத்துவங்கி விடுவர். ஆனால், அதன்பிறகு ஏற்படும் பாதிப்பைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை.
கவர்ச்சிக்காக, பல கெமிக்கல்கள் சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் நீர் மாசைத் தவிர்க்கும் வகையில், 'கிரீன் கணபதி' எனும் விதை விநாயகர் சிலையை தயாரித்து அசத்தியுள்ளனர் கோவையை சேர்ந்த, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தினர்.
சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத, அதேசமயம் வருங்கால தலைமுறையை மனதில் கொண்டு, விதைகளை அவர்கள் கையால் விதைக்கும் வகையில், இயற்கை விதைகளை இணைத்து வடிவமைத்த விதம் அட்டகாசம்.தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றியபடியே இந்த தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் சுவரஜித் நம்மிடம் பகிர்ந்தவை...
அனைத்து விதமான சமூகத்தாக்கத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காகவே, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து துவங்கினோம். இதன்மூலம், கல்வி, உணவு, மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.
தற்போது, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, ரசாயன சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் தீமைகள் எடுத்துக்கூறும் விதமாக, பசுமை விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளோம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக்
கொண்டு இந்த விநாயகர் சிலைகளை வடிவமைக்கிறோம்.
கூடவே, இயற்கை விதைகளையும் சிலைகளில் நடுவில் இணைந்து தயாரித்து வருகிறோம். இதில், இரண்டு வகைகள் உள்ளன. அபார்ட்மென்ட்டில் வாழும் நகர வாசிகளுக்கு ஏற்ப, சிலையில், தக்காளி, துளசி, வெண்டை, பச்சைமிளகாய், முருங்கை, பப்பாளி உள்ளிட்ட விதைகளை இணைத்துள்ளோம்.
இதுபோன்று இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் தயாரிக்கப்படும் சிலையைக் கரைப்பதற்கு நீர் நிலைகளைத் தேடி அலைந்து சிரமப்படத் தேவையில்லை. சதுர்த்தி முடிந்தவுடன் வீட்டின் வெளியே வாலி அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வைத்தால் மட்டும் போதும்.அதில் இருக்கும் களி மண் கரைந்து விடும். பின் அதனைச் சூரிய வெளிச்சத்தில் வைத்தால் போதும் ஒரு வாரத்திலேயே அதனுள் இருக்கும் விதை முளைக்கத் தொடங்கிவிடும். வீட்டு தோட்டத்திலும் கரைக்கலாம்.
ஆறு, குளம், குட்டைகளில் கரைக்க விரும்புவோருக்காக பிரத்யேக சிலைகள் உள்ளன. இதில், விதைகள், மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன்பெறும் வகையில், மக்காச்சோளம், கோதுமை, ரவை, அவல் உள்ளிட்டவைகளை இணைத்துள்ளோம்.
பளீச்சிடும் வண்ணங்களில் இந்த விநாயகர் சிலைகள் இருக்காது. இயற்கை களிமண் நிறத்திலே கலைநுட்பத்துடன் வடிவமைத்துள்ள சிலைகள், 3 இன்ச் முதல், 2 அடி வரையில் உள்ளன. குறைந்தது, 24 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரையில் விற்பனைக்கு கிடைக்கும்.பாரம்பரிய கலாசாரத்தை பாதிக்காத, அதேசமயம் இயற்கையை தீங்கு விளைவிக்காத இந்த விதை விநாயகர் சிலைகளுக்கு பலதரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
விரும்புவோர் 96556 67775 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்த்துக்கள் .
தமிழ் மண்ணே வணக்கம்.

பள்ளிகளில் தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம்!

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் வரை தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‘இந்தத் திட்டத்தில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தூய்மை குறித்த நிகழ்ச்சிகள், பேரணிகள் ஆகியவற்றை நடத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து தங்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு விழிப்பு உணர்வு ஏற்படுத்த பேரணி மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தலாம். தங்கள் பள்ளிகளில் நிகழ்த்திய பிரசாரம் மற்றும் தூய்மை நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம் குறித்த தரநிலைகள் மதிப்பிடப்படும். பள்ளிகளுக்கு தரவரிசையும் வழங்கப்படும்’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் தூய்மை குறித்த விழிப்பு உணர்வை இரண்டு வாரங்களுக்குள் நடத்த வேண்டும். ஓர் உணர்வுடன் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.