>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

NAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு, 50க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர். இந்த நிலையை மாற்றி, தமிழக மாணவர்கள், உயர் கல்வியில் எளிதாக இடங்களை பெறும் வகையில், நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
இதன் முதற்கட்டமாக, 14 ஆண்டு பழமையான பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை மாற்றவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, போதிய பலன் தரவில்லை. மேலும், கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர்களில் பலர், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறவில்லை.
எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, துறையில் சிறந்த வல்லுனர்கள் சார்பில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
தேசிய கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள், அனுபவம் பெற்ற அறிவியலாளர்கள், நுழைவு தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் இடம்பெறும் ஆசிரியர்கள் ஆகியோர், சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது

'அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. 
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்த நாளான, அக்., 15, குழந்தைகளின் படைப்புத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கான நாளாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது. இந்த துறையின் கீழ் செயல்படும், தேசிய புதிய கண்டுபிடிப்புக்கான அறக்கட்டளை, அப்துல் கலாம் பெயரில், அறிவியல் விருது வழங்குகிறது. 
இந்த ஆண்டுக்கான விருதுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தினசரி வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான கண்டுபிடிப்புகள்; கலாசார ரீதியாக, முன்னோரிடம் புதுமையானவற்றை கற்று, அவற்றை பின்பற்றும் முறை; தங்களுக்கு தெரிந்த, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவோர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை அனுப்பலாம்.இந்த விருதுக்கு, ignite@nifindia.org என்ற, இ - மெயில் முகவரிக்கு, வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ஜனாதிபதி விருது வழங்குவார். இதன் விபரங்களை, nif.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'

சத்துணவு மையங்களுக்கு, 'பிரஷர் குக்கர்' வாங்க, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 230 சத்துணவு மையங்களுக்கு வழங்க, 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட, அலுமினியம் அல்லது, 'இண்டோலியம் பிரஷர் குக்கர்' வாங்க, அரசு முடிவு செய்துள்ளது. 
இதற்காக, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பிரஷர் குக்கர் வாங்க, சமூக நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க, செப்., 11ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'

தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், டிப்ளமா ஆசிரியர் படிப்பான, டி.டி.எட்., நடத்தப்படுகிறது. இதில், மாணவர்களை சேர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 12 ஆயிரம் இடங்களுக்கு, இதுவரை, 1,200 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து 800 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதி வரை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன கல்லுாரிகளில், மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுவர் என, பள்ளிக் 
கல்வித்துறை அறிவித்துள்ளது.
'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக, தங்கள் சான்றிதழ்களை எடுத்து சென்று, ஆசிரியர் டிப்ளமா படிப்பில் சேரலாம்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தெரிவித்துள்ளார்.

EMIS : Website will be Opened After August 21 - 2017

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்!!!


உ.பி.,யில், அரசு பள்ளியை தத்தெடுத்ததுடன், வாரந்தோறும் சனிக்கிழமையன்று , பள்ளிக்கு வந்து வகுப்பெடுக்கும் கலெக்டரை, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
உ.பி.,யில், உள்ள வாரணாசியில், எல்.டி., கல்லுாரி வளாகத்தில் துவங்கப்பட்ட மாதிரி பள்ளியில், சுவாமி விவேகானந்தர், இரு மாதங்கள் தங்கியிருந்தார். இந்த பள்ளியை, வாரணாசி கலெக்டர், யோகேஷ்வர் ராம் மிஸ்ரா தத்தெடுத்துள்ளார். சனிக்கிழமைதோறும், மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் பாடம் நடத்துகிறார். இவரது வகுப்பில், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர், பாபுலால் யாதவ் கூறியதாவது:கலெக்டர், இந்த பள்ளியை தத்தெடுத்த பின், மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர், நுழைவாயில் அமைக்கப்பட்டு உள்ளன. வாட்டர் கூலர், டேபிள், நாற்காலிகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அதிகாரியும், ஒரு பள்ளியை தத்தெடுத்தால், பள்ளி மற்றும் கல்வியின் தரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களின் மகிழ்ச்சியே சிறந்த கல்வியைக் கொடுக்கும்" - குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி!

அந்தக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் ஆடலும் பாடலும் நிரம்பி வழிகிறது. சுவர் முழுக்க அழகழகான ஓவியங்கள்... இது ஏதோ பெரிய அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. ஒரு அரசுப் பள்ளியின் ஒரு வகுப்பறைதான். அங்கே ஆடிப் பாடிக்கொண்டிருந்தவர்கள் ஆசிரியரும் மாணவர்களும்! பள்ளி என்பது மகிழ்ச்சியுடன் கற்கும் இடம் என மேற்கோள் காட்டப்படும் அல்லவா, அதற்கு சிறந்த ஓர் உதாரணமாக அந்தப் பள்ளி காட்சியளித்தது.
புதுக்கோட்டை, வடக்கு ராஜவீதியில் இருக்கிறது அந்தப் பள்ளி. 1958-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்தப் பள்ளியில் 126 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியரும் 8 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கே ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வகுப்பறையின் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் தாவரங்கள், விலங்குகள், போக்குவரத்து, விவசாயம், சாலைவிதிகள் போன்றவற்றை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையுடன் ஜொலிக்கிறது இந்தப் பள்ளி.

புன்னகையுடன் வரவேற்ற பள்ளியின் ஆசிரியை பவுலின் ஜெயராணி, "இந்தப் பள்ளி இருப்பது குறைவான இடத்தில்தான். எனினும் சொற்ப இடத்திலேயே மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களுக்கு மரம் நடுதல் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். இங்கே படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள், ஏழைகள் மற்றும் படிக்காதவர்கள். அதனால், கூடுதல் அக்கறையுடன் அந்த மாணவர்களைச் சமுதாயத்தில் உயர்த்தும் கடமை எங்களுக்கு உள்ளது. படிக்கவரும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாகச் சுழலும், தேவையான வசதியும் இருக்க வேண்டும் என விரும்பினோம். எனவே, பழமையான இந்தப் பள்ளியை முன்மாதிரியான ஒரு பள்ளியாக மாற்றும் பணியில் இறங்கினோம். தன்னார்வலர்கள், கொடையாளர்களின் உதவியுடன் குளிர்சாதன வசதி செய்தோம். தொங்கு கூரை, ஓவியங்கள், மின்விளக்குகள் என ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்து பல்வேறு வசதிகளை உருவாக்கினோம்.
மாணவர்கள் மகிழ்ச்சியோடுப் படிக்கும்போதே அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்பதாக இந்த முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதற்காக மிகவும் அயராது பாடுபட்டவர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் சிவசக்திவேல் மற்றும் தமிழ் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். இந்தக் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறையை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் தொடங்கிவைத்தார். மாணவர்கள் மகிழ்வுடன் கல்வி கற்று, சமுதாயத்தின் சிறந்த குடிமகன்களாக உயர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை" என்கிறார்.
அரசுப் பள்ளிகளின் தரம் என்பது தனியார் பள்ளிகளை விட கொஞ்சமும் குறைந்தது இல்லை என நிருபிக்கும் விதத்தில் பல ஆசிரியர்கள், அதிகாரிகள் உழைத்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பே அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களின் கவனத்தை முழுமையாகத் திருப்பியுள்ளது. அதனால், பல அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். அதற்காக பணியாற்றும் அத்தனை பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்வோம்.

அரசு பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது -உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு
அரசு பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.

# சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.
# ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு பதில் மனுவில் தகவல்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்....

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். 
அனைத்து பள்ளிகளிலும் மாதிரி வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  மேலும், சிறந்த கல்வியாளராக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பிளஸ் 2 வில் சேர்ந்த பின்னர் தேர்வெழுத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்வித்துறைக்காக பல்வேறு மாற்றங்களை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்டமைப்பு, கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொது தேர்வை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், பிளஸ் 1 காலாண்டு தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால் மாதிரி வினாத்தாள் வௌியிடப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்....

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 20 முக்கிய கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பினார். இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகளை, அவர்கள் அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என கட்டயப்படுத்த முடியாது என குறிப்பிட்டது. கட்டமைப்பு வசதிகளுக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பெற்றோர் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் அவர்களது குழந்தைகளை தாமாகவே முன்வந்து அரசு பள்ளியில் சேர்ப்பார்கள். பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்ற உரிமை அவர்களுக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, கடந்த 4 ஆண்டில் உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்பது என்பது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தொடக்ககல்வி பட்டயப்படிப்பு கலந்தாய்வு ஆக 31வரை நீட்டிப்பு

கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (எஸ்இஆர்டி) க.அறிவொறி புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு ஒற்றைச் சாளரமுறை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதால் கிராமப்புற ஏழை மக்களின் குழந்தைகள் இந்தப் பயிற்சியில் சேர வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் பயன்பெறத் தக்க வகையில் மீண்டும் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இது ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படவுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தங்களது உண்மைச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உரிய கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கை ஆணை பெறலாம்

DEE PROCEEDINGS- Child Friendly Toilet- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பு!

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.....

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கடலூர் வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமரை நான்கு முறை சந்தித்திருக்கிறோம்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள்தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம்.பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆய்வின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் வரையறைப்படி, உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாடத்திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும் என்று கூறினார்.
ஆசிரியர் பற்றாக்குறை இல்லை
தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம்.கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை’’என்று அமைச்சர் தெரிவித்தார்.

JACTTO GEO : 22.08.2017 STRIKE - TEACHERS INDIVIDUAL LETTER FORMAT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு...

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,
பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. இத்தேர்விற்கு 'ஆன்லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் வல்லுனர்கள் மூலம், வாரத்தில் 2 நாட்கள் (சனி,ஞாயிறு) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி ஆக.19 முதல் செப்.23 வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கும்.மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில்,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க இயலாது. மாணவர்களுக்கு பயணப்படியும், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாவட்டத்திலும் பயிற்சி மையங்கள் செயல்படும்.
''இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'', என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா பயஸ் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை....

மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி, மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛நீட்' அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆஜராகவில்லை. மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
முடியாது:
‛நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின.
சட்டச் சிக்கல்ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
தடை:
இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் எங்கே என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய கோர்ட், அவசர சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும் கூறினர்....


INSPIRE AWARD - Online nomination for the year 2017-18 has been extended till 15 September 2017.



INSPIRE AWARD - Online nomination for the year 2017-18 has been extended till 15 September 2017.


உங்கள் பள்ளியில் நீங்கள் உபரி ஆசிரியரா? உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் (Surplus) கணக்கிடுவது எப்படி ?

உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள். 

உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம். 

160 மாணவர்களுக்கு 5 பட்டதாரிகள். 


அடுத்து 30 மாணவர்களை தனித்தனியாக சேர்த்து ஒவ்வொரு பாடமாக கொடுக்க வேண்டும். 

190க்கு அடுத்து 2வதாக அறிவியல் 

220க்கு அடுத்து 2 வதாக  கணிதம் 

250க்கு அடுத்து 2 வதாக ச.அறிவியல் 

280க்கு அடுத்து 2வதாக தமிழ் 

310க்கு அடுத்து 2வதாக ஆங்கிலம். 

340க்கு அடுத்து 3வதாக அறிவியல். 

370க்கு அடுத்து 3வதாக கணிதம் . 

400க்கு அடுத்து 3வதாக சமூக அறிவியல் 

430க்கு அடுத்து 3 வதாக தமிழ்   

460க்கு அடுத்து 3வதாக ஆங்கிலம் 

490க்கு அடுத்து 4வதாக அறிவியல். 

இப்போது பள்ளியில் எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையை பின்னால் இருந்து கழித்தம் செய்யவும். 

உதாரணமாக 3 பேர் என்றால் 1ஆங்கிலம்...,1தமிழ்,1சமூக அறிவியலை கழித்து விடவேண்டும். 

அதே வேளையில் 6-8 மாணவர் எண்ணிக்கை 105 இருக்கிறதா என பார்க்கவேண்டும்.அப்பொழுதுதான் அந்த 3 இடைநிலை ஆசிரியர்கள் தக்கவைக்க முடியும்.ஒரு வேளை 6-8 எண்ணிக்கை 70 பேர்தான் என்றால் பட்டதாரி எண்ணிக்கையை கழிக்காமல் 1 இடைநிலை ஆசிரியர் உபரி என அறிய வேண்டும்...

DEE,DSE-தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் - வழிமுறைகள்

DEE,DSE-தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் - வழிமுறைகள்
USER NAME: DISE CODE
PASSWORD: EMIS PASSWORD
Direct to login page👆
உங்கள் பள்ளியின் இணையதள பக்கத்தில் காண்பிக்கப்படவேண்டிய படங்கள் மற்றும் செய்திகளை பதிவேற்றலாம்.
பதிவேற்றிய படங்கள் மற்றும் செய்திகள் சரியாக உள்ளனவா என்பதை உங்கள் பள்ளியின் முகப்பு பக்கத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
பதிவேற்றிய படங்கள் மற்றும் செய்திகள் சரியாக உள்ளனவா என்பதை Reports பக்கத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களுக்கு தாங்களே முழு பொறுப்பு என்பதால் கவனத்துடன் பதிவேற்றம் செய்யவும்.பதிவேற்றப்படும் தகவல்கள் தமிழில் பதிவேற்றவும்
முக்கிய குறிப்புகள்
1.அனைத்து வகை புகைப்படங்களும் 50kb க்கு குறைவாக இருக்கவேண்டும்.
2.Gallery Images இல் 20 புகைப்படங்களுக்கு மேல் பதிவேற்ற வேண்டாம்.
2.Gallery Video இல் 1 வீடியோ மட்டும் பதிவேற்றவும் 3MB-க்குள் இருக்க வேண்டும் .
3.Address ஒருமுறை பதிவு செய்யவும். தவறு ஏற்படின் மீண்டும் புதியதாக பதிவு செய்யவும்.
4.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
அ) S.மகேஷ் -9444322538
ஆ) S.தாமரைச்செல்வன்- 9444414417
இ) M.ரவிக்குமார்- 9788268911.....

TRB : சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு -- ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்குஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு..

தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆசிரியர் தேர்வு வாரியம் 4வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் அரசுப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஓவிய ஆசிரியர், உடற்கல்வி, இசை, தையல் உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 20-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசின் தொழிற்கல்வி இயக்குநரகம் அளித்து வரும் கவின்கலை டிப்ளமோ படிப்பு அல்லது சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் அளித்து வரும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓவிய ஆசிரியர் பணிக்கு இந்த கல்வித்தகுதி அதிகபட்சமானது. பள்ளிக்கல்வித் துறை சிறப்பு விதிக்கு புறம்பாக நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிறப்பு விதிகளின்படி போதிய கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பெற்றுள்ள என்னைப் போன்றவர்கள் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சிறப்பு விதிகளின்படி போதிய கல்வித்தகுதியை பெற்றவர்களுக்கும் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதி பதி எஸ்.எம்.சுப்ரமணியம், இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை 4 வாரத்தில் பதிலளிக்கஉத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.