>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை...

இந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்  உள்ளது.
வங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதத்தில் குறைந்தபட்சம் 2  முறை சனி, ஞாயிறு என்று ெதாடர்ச்சியாக விடுமுறை நாட்களாக  வருகிறது. இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறை விட்டாலே பெரும்பாலான  ஏடிஎம்கள் இயங்காத நிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. மறுபடி  திங்கட்கிழமை வங்கிகள் திறந்த பிறகுதான் ஏடிஎம்கள் சரியாகும்  நிலை உள்ளது.
இந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது. அதாவது, வருகிற 12ம் தேதி இரண்டாவது  சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ெஜயந்தி, 15ம் தேதி செவ்வாய் கிழமை சுதந்திர தினம் என  தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும். மறுபடியும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ம் தேதி 4வது  சனிக்கிழமை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள். 
வங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்கூட்டியே பொதுமக்கள் வங்கிகளுக்கோ, ஏடிஎம்  மையங்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி நிர்வாகமும்  ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

CPS : ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவுக்கு புதிய தலைவர்...

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான, சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே அமலில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில், 2016 பிப்., 22ல், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
குழுவும், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, ஏழு நாட்கள் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. இந்நிலையில், மத்திய அரசானது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான, சாத்தியக்கூறுகளை ஆராய, 2016 அக்., 21ல், ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து, வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்தது. ஆனால், குழுவின் தலைவராக இருந்த, சாந்தா ஷீலா நாயர், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். 
இதையடுத்து, வல்லுனர் குழுவின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, தமிழக அரசு நியமித்துள்ளது. குழுவானது, ஓய்வூதியம் குறித்த அறிக்கையை, நவம்பர் இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது. 

5,8ம் வகுப்புக்கு பொது தேர்வு?: செங்கோட்டையன் விளக்கம்...

''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். இது பற்றி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு முறையாக எந்த தகவலும் வரவில்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் நேற்று நடந்த, தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவித்தார். குளம், குட்டைகளை துார்வாரி, மண்ணை, விவசாயிகளே எடுத்துக் கொள்ள அறிவித்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, முதற்கட்டமாக, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளை துவங்க செய்துள்ளார். இத்தனை பணிகளை செய்து வரும் நிலையில், இந்த ஆட்சி நிலைக்குமா என, பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். இன்னும் நான்காண்டு மட்டுமல்ல, 400 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி நிலைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டியில், ''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். ''இது பற்றி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு முறையாக எந்த தகவலும் வரவில்லை. அவ்வாறு வந்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு: தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு...

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்  என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 
தொடக்க  கல்வித்துறையில் ஆசிரியர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் பணியில் காணப்பட்ட குறைபாடுகள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை  சேகரிக்கவேண்டும். தொகுப்பு அறிக்கை தயாரிக்கும்போது தமிழ்நாடு குடிமுறைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17, 17அ,  17ஆ, 17இ-யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரங்களும் பணியில் ஒழுங்கீனம் காரணமாக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட  ஆசிரியர்களின் விவரங்களும் சேகரிக்க வேண்டும்.
எவ்வித விவரங்களும் விடுபடாமல், தனித்தனியாக மாவட்ட அளவில் தொகுத்து 2012-2013 முதல் 2016-2017ம் ஆண்டுகளின் விவரங்களை சேகரித்து  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த அறிக்கை எவ்வளவு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும், இதன்மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்கு பணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி....

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 4 லட்சம் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதற்கு
எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை தமிழக அரசு தெரியப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில், எஸ்.வி.ஐ. கல்வியியல் கல்லூரி கடந்த 2007 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2017 -18-ஆம் கல்வியாண்டில் இளங்கலை கல்வியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், புதிதாக முதுகலை படிப்பை தொடங்கவும் அணுமதி கோரப்பட்டது.
அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழகத்தில் கல்வித் தரம் குறைவதற்கு 'லெட்டர்பேடு' கல்லூரிகளும், அங்கு பயின்ற ஆசிரியர்களுமே காரணம் எனக் கூறி, இதுதொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
திருச்சி கல்வியியல் கல்லூரிக்கு எதிராக, பெங்களூருவில் உள்ள தேசிய கல்விக் கழகத்தின் மண்டல இயக்குநர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரியில் 2 வாரத்தில் ஆய்வு நடத்தி உரிய உத்தரவுகளை தேசிய கல்விக் கழகம் பிறப்பிக்க வேண்டும்.
இதேபோன்று இந்த வழக்கில், தமிழகத்தில் எத்தனை ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்ளன?
அவற்றில் பயிலும் ஆசிரியப் பட்டதாரிகளின் தற்போதைய நிலை என்ன?
எத்தனை பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன?
என பல கேள்விகளை எழுப்பி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டும், இதுவரை பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில் , 2015 -18 காலகட்டத்தில் சுமார் 4 லட்சம் ஆசிரிய பட்டதாரிகள் படிப்பை நிறைவு செய்வர் என தெரிவித்துள்ளது. 4 லட்சம் பேர் ஆசிரியர் படிப்பை நிறைவு செய்யும்போது அவர்களில் எத்தனை பேருக்கு, எத்தனை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை வழங்க தயாராக இருக்கிறது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
குறைந்தது 5 ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும்? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்? என்ற விவரங்களை தமிழக அரசு ஆண்டு வாரியாக தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இந்த 4 லட்சம் பேருக்கும் எத்தனை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 10 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடக்க கல்வி - 6 முதல் 8 வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி - பெயர்பட்டியல் கேட்டு இயக்குனர் உத்தரவு....

DEE PROCEEDINGS-தமிழகத்தின் வட பகுதி 6 மாவட்டங்களில் AEEO அலுவலகங்கள் கட்ட கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்திரவு...

திருச்சி ஆசிரியருக்கு அமெரிக்காவில் சிறந்த ஆசிரியர் விருது...

தமிழ், லூயிசியானா மாகாணத்தில் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வழி படித்து பட்டம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த ஜோசுவா ஜான் பால், அமெரிக்கா
இவர், 2014ம் ஆண்டு முதல் இங்கு ஒரு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட இவர், லூசியானா மாகாண கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்ட 9 சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக தேர்வானார். லூசியானா மாகாணத்தில் உள்ள 200 ஆசிரியர்களில் சிறந்தவர்களாக 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 9 பேரில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லூசியானா மாகாணம் , புனித ெஹலனா பள்ளி மாவட்ட சார்பில் சிறந்த ஆசிரியர் தேர்வில் இவர் பங்கேற்றார். லூசியானா, பேடன் ரவுஜ் கிரவுன் நடைபெற்ற 11வது வருடாந்திர செசில் ஜெ.பிகார்டு கல்வியாளர் சாதனை கருத்தரங்கில் இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது

11 லட்சம் ஆசிரியர்கள் தகுதி பெற கால அவகாசம் நீட்டிப்பு!! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 11 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019ம்  ஆண்டிற்குள் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் புதிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட திருத்த மசோதா கடந்த மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இது தற்போது ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த இச்சட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தபட்ச கல்வியை தகுதியை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த காலக்கெடு 2019ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
''இச்சட்டம் அமல்படுத்தப்பட்டபோது தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் பட்டம் மட்டுமே பயின்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டனர். இதன் மூலம் தற்போது தனியார் பள்ளிகளில் 7 லட்சம் தகுதியற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2.5 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்'' என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ''1.5 லட்சம் ஆசிரியர்கள் ஓராண்டு பயிற்சியை முடித்துள்ளனர். இதன் மூலம் 11 லட்சம் ஆசிரியர்கள் தற்போது தகுதி பெறாமல் பணியாற்றி வருகின்றனர். அதனால் இந்த ஆசிரியர்கள் பி.எட் மற்றும் இதர தொழில் முறை பட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்'' என்றார்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

CPS RELATED NEWS

CPS - ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழு தலைவராக ஓய்வுபெற்ற IAS அதிகாரி  திரு.ஸ்ரீதர் தியமனம்!! 


1 முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடங்களை vedio வடிவில் பெற....

1 முதல் 12 வகுப்பு வரை உள்ள
 பாடங்களை vedio வடிவில் பெற
நமது SCERT  YOUTUB CHANNEL 
 click செய்க
SCERT TN CHANNEL  SCERT TN CHANNEL

சர்வர் முடக்கம்: ஆதார் - பான் இணைப்பில் சிக்கல்....

ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைக்க ஏராளமானோர் முயன்றதால், வருமான வரித்துறை இணையதள, 'சர்வர்' முடங்கியது. வருமான வரி அலுவலகத்தில், காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஜூலை, 31, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, காலக்கெடு, ஆக., 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஏமாற்றம் : முன்னதாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்தது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், ஆதார் - பான் எண்களை இணைக்க, நேற்று, கவுன்டரில், கூட்டம் குவிந்தது. எனினும், ஒரே நேரத்தில், பலரும் வருமான வரித்துறை இணையதளத்தில் நுழைந்ததால், 'சர்வர்' பல மணி நேரம் செயல் இழந்தது.
இதனால், வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆதார் - பான் இணைப்பதில், பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னை, வருமான வரி தலைமை அலுவல கத்தில், 'பயோ மெட்ரிக்' கருவி வைக்கப்பட்டுள்ளது.

அதிக கூட்டம் : இணையதளத்தில், ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், 'பயோ மெட்ரிக்' கருவியை பயன்படுத்தலாம். இதில், கைவிரலை பதித்தால், அது, ஆதார் அட்டையின் போது, பதித்த ரேகையுடன் ஒப்பிட்டு, உடனே, இரு எண்களையும் இணைத்து விடுகிறது. அதனால், இங்கும் அதிக கூட்டம் குவிகிறது.

How to Verify Teacher S.R Details?

பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணிப்பதிவேட்டினை சரிபார்க்க வேண்டிய விவரங்கள்

'டிஜிட்டல்'மயத்திற்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பில்லை...

சிவகங்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' மயமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடிக்குமாறு, கலெக்டர்களை கருவூல கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது. கருவூலகங்களில் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் பணிப்பதிவேட்டின் பக்கங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு வருகின்றன. கணினியில் ஏற்றியவுடன் 'பிரின்ட்' எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்கப்படும். அதில் ஏதேனும் பதிவு விடுதல் இருந்தால், அவற்றை வரைவு அலுவலர் மூலம் சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும். பலரது பணிப்பதிவேட்டில் ஊக்க ஊதியம், விடுப்புகள் போன்ற பதிவுகள் கூட விடுபட்டுள்ளன. இதனால் அவற்றை சரி செய்து தர, சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கருவூலகத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் விடுபட்ட பதிவு களை சரிசெய்து கொடுக்காமல், ஊழியர்கள் தாமதப்படுத்தி வருகின்றனர். சில துறைகளில் பதிவுகளை சரிசெய்து கொடுக்க, வரைவு அலுவலர்கள் மறுத்து வரு
கின்றனர். இதனால் 'டிஜிட்டல்'
மயமாக்கும் பணி தொய்வு
அடைந்துள்ளது.
இதையடுத்து ஒத்துழைப்பு தராத துறை அலுவலர்களுக்கு, தக்க அறிவுரை வழங்குமாறு, கலெக்டர்களை கருவூலக கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்களின் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' செய்ய வேண்டாமெனவும் தெரிவித்துள்ளது.
கருவூலக கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
மாவட்டம்தோறும் கருவூலகங்களில் 'டிஜிட்டல்'
மயமாக்கும் பணி நடக்கிறது. இதனை செப்டம்பருக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டு
உள்ளது. அதன்பின் சென்னை தலைமையகத்தில் தான் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்'
மயமாக்க முடியும். ஆனால் பலமுறை வலியுறுத்தி யும் அரசு ஊழியர்கள், 
ஆசிரியர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றார்.

பாடத்திட்ட குழு : வரும் 5ம் தேதி ஆலோசனை....

தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பாடங்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாகவும் ; ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்கள் ஆறு ஆண்டுகளாகவும் மாற்றப்படவில்லை.
 அதனால், பாடத்திட்டத்தை மாற்றும்படி, பல்வேறு தரப்பிலும் அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.

இதற்காக, கலைத்திட்டக்கழு, பாடத்திட்ட உயர்மட்டக்குழு என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் ஜூலை 25ல் சென்னையில் நடந்தது. இரண்டாவது கூட்டம், வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. ஒரு மாதத்தில் முதற்கட்ட பாடத்திட்ட உருவாக்கம் முடியும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான TNTET லிருந்து முழு விலக்கு தொடர்பான அரசாணை தமிழக அரசு விரைவில் வெளிவிடும்" என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை.

23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் சுமார் ஒன்பதாயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் வெளிவந்தது.
 RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது.
ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் TET கட்டாயம் ஆக்கப்படுதல் தொடர்பான 28/03/2012 தேதியிட்ட அரசாணை எண் 90 சற்றே தாமதமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளிகள் வழியாக ஆசிரியர்களுக்கும் பகிரப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் நான்கு TET தேர்வுகள் முறையே நடத்தப்பட்டன.
இந்த இடைப்பட்ட காலங்களில் நீதிமன்றங்கள் வாயிலாக பல ஆசிரியர்கள் TET லிருந்து முழு விலக்கு பெற்றனர்.அவர்களில்
1) 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்றவர்கள்
2) 15/11/2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள்
3) அனைத்து வகை சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள்
-- உள்ளிட்ட 90% ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு கொடுக்கப்பட்டு விட்டன.
தற்போது மிகக் குறைந்த அளவிலான (சுமார் 10%) TET நிபந்தனை ஆசிரியர்கள் மட்டுமே தமிழகத்தில் மீதம் உள்ளனர். இவர்களின் பெரும்பாலான ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியலில் இருந்து பணி நியமனம் பெற்றவர்கள்.
இவர்களின் TET முழு விலக்கு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருந்தனர்.
பல்வேறு ஊடகங்கள் இவர்களின் துயரங்களை எடுத்துக் காட்டின.
இந்த நிலைக்கு தீர்வு கேட்டு பல முறை தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தனர்.
இந்நிலையில் கடைசியாக TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரை ஈரோடு மாவட்டம் சென்று மனு கொடுத்து உள்ளனர். அப்போது இது சார்ந்த கோப்புகள் ஏற்கெனவே மாண்புமிகு அமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வழி செய்யப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வளரூதியம், ஊக்க ஊதியம், பணிப்பதிவேடு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு தடைகளுக்கும் நிரந்தர தீர்வு இதன் மூலமாக கிடைக்கும் மேலும் இந்த பிரச்சினை தொடர்பான நீதிமன்ற அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் விரைவில் இந்த TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது
என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

How to link PAN card with Aadhaar online..

If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:
On the website, click on the link on the left saying Link Aadhaar.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.This should link the PAN and Aadhaar, but if there is any discrepancy in your details, you'll receive an Aadhaar OTP to confirm the linkage. Enter the OTP and click on Save to continue.You can also link the details after logging in to the income tax website. Log in as you normally would and then click on Profile Settings in the top menu.Next, find Link Aadhaar.Enter your Aadhaar number and click on Save to continue.
This will only work if the details on the PAN and the Aadhaar card match. In case of any discrepancies, you can upload a scan of your PAN card, or register via OTP on your linked mobile number as mentioned above.

கேரளா: ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு....

கேரளாவில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தலையாய பிரச்னையாய் இருப்பது மாதவிடாய். இதனை கருத்தில் கொண்டு பல தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கதொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி ஆசிரியைகளுக்கு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது கேரள தனியார் பள்ளி சங்கம் (All Kerala Self-Financing Schools Federation).இந்த சிறப்பு விடுப்பு நேற்றைய தினமான ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இதனால் 1200 பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கு மேலான ஆசிரியைகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்த அணைத்து கேரள தனியார் பள்ளிகள்சங்க முதல்வர் ராமதாஸ், கேரள தனியார் பள்ளிகளில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள இந்த மாதவிடாய்கால விடுப்பு இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

JACTTO - GEO அவசரக் கூட்டம் இன்று 10 மணிக்கு நடைபெறுகிறது.

கையடக்கத்தில் 33 கோடி புத்தகங்கள்!

ஐ.பி.எம் நிறுவனம் கண்டறிந்த புதிய சேமிப்பு கருவி உலக சாதனை படைத்துள்ளது.
சுமார் 330 டெரா பைட் அளவுள்ள பைல்களை சேமிக்கும் வண்ணம் இந்த புதிய சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கையளவுக்கும் குறைவான அளவில் உள்ள இந்த கருவியில் ஒரு சதுர அங்குலத்தில் 201 ஜிகாபைட் அளவுள்ள டேட்டாக்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதுவரை கண்டறியப்பட்ட கருவிகளில் குறைந்த அளவுள்ள இடத்தில் அதிக பைல்களை சேமிக்க உதவும் கருவி இதுவாகும். இந்த புதிய கருவி மூலம் 33 கோடி (330 மில்லியன்) புத்தகங்களை டிஜிட்டல் பைல்களாக மாற்றம் செய்து சேமிக்கமுடியும்.
இந்த கருவியானது புதிய தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் கருவிகளை ஒப்பிடும்போது இந்த கருவியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என IBM நிறுவனம் தெரிவித்துள்ளது. 60 வருடங்களுக்கு முன்னதாக கண்டறியப்பட்ட வன் தட்டுக்கள் (CD) முதன்முதலாக பல முக்கிய தகவல்களை சேகரிக்க கண்டறியப்பட்டன. அதிலும் மிக முக்கியமான, பழமையான பல்வேறு நூல்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க தான் இந்த வன் தட்டுக்கள் கண்டறியப்பட்டன. தற்போது அதன் நவீன வளர்ச்சியாக இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்திய கருவியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழங்கால குறிப்புகள் மற்றும் முக்கியம் வாய்ந்த புத்தகங்கள் அழிந்து வருவதாலும், ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்படும் எனில் அதிலிருந்து அந்த தகவல்களை பாதுகாத்து வைக்க இந்த புதிய டிஜிட்டல் முறை பயனுள்ளதாக அமையும் என்றும் IBM நிறுவனத்தை சேர்ந்த Evangelos தெரிவித்தார். அதனுடன் IBM நிறுவனத்தின் முந்தைய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.