>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 13 மே, 2017

'பான்' கார்டுடன் 'ஆதார்' இணைப்புக்கு புதிய வசதி

புதுடில்லி: வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, புதிய மற்றும் எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தத் தின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. மேலும்,ஜூலை, 1 முதல், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. 

இதுவரை, வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விபரங்களுடன், 1.18 கோடி பேர், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். வரு மானவரி கணக்கு தாக்கல் செய்யும் நட வடிக்கை துவங்கியுள்ளதால், மீதமுள்ளவர்களும் தங்கள் விபரங்களை தாக்கல் செய்வதற்காக, புதிய, எளிமையான வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, வருமான வரித் துறை வெளியிட்டு உள்ள செய்தி:

வருமான வரித்துறையின் இணையதளத்தில், தங்கள்பான் கார்டு, ஆதார் எண், ஆதாரில் குறிப் பிடப்பிட்டுள்ள பெயர் ஆகியவற்றை பதிவு செய் தால் போதும். உடனடியாக, பான் கார்டுடன், ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். ஆதார்விபரங்களில் சிறு தவறுகள் இருந்தால், ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப் படும். அதை பதிவு செய்தால், இணைக்கப்பட்டு விடும்.

பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டிலுமே, ஒரே பாலினம் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டி ருக்கிறதா என்பதை மட்டும் சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 ரிசல்ட் : பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்

சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். மொழிப்பாடத்தில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. மற்ற பாடங்களின் விபரம்...

இயற்பியல் - 187 
 பேர்வேதியல் - 1123
 பேர்உயிரியல் - 221
 பேர் தாவரவியல் - 22
 பேர்விலங்கியல் - 4 
பேர்கணிதம் - 3,656 
பேர்புள்ளியல் - 68 
பேர்நுண் உயிரியல் - 5 
பேர்கம்யூட்டர் சயின்ஸ் - 1,647 
பேர்வணிகவியல் - 8,301 
பேர்கணக்கு பதிவியல் - 5,597
 பேர்வணிக கணிதம் - 2,551
 பேர்வரலாறு - 336 
பேர்பொருளாதாரம் - 1,717

வழக்கம் போல் மாணவர்களை முந்திய மாணவிகள்

சென்னை : இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்ச்சி விபரம் :

* மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.1 சதவீதம்
* மாணவிகள் எண்ணிக்கை - 477930. இவர்களில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* தேர்வு எழுதிய 415331 மாணவர்களில் 89.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.7 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* மாணவர்களை விட மாணவிகள் 5.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* மொத்தமுள்ள 6732 மேல்நிலை பள்ளிகளில் 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
* 292 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

292 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி!

No automatic alt text available.

வெள்ளி, 12 மே, 2017

CPS ல் உள்ளோர் கவனத்திற்கு....


Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: text

H.S.E MARCH 2017 - STATE WIDE SCHOOL WISE PERFORMANCE


மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மே 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியவேலைவாய்ப்பு சேவை மையம் மாற்றுத் திறனாளிகளுக்கு குறுகிய கால பயிற்சி முகாமை நடத்த உள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வித் தகுதி பெற்ற தகவல் தொழிநுட்பம், வெளி திறன் பெரும் நிறுவனங்கள் சார்ந்த பார்வைத் திறன், செவித் திறன் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.கைபேசி பழுது நீக்குதல், தையல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், ஸ்க்ரீன் பிரிண்டிங் மற்றும் புத்தகக் கட்டமைப்பு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தை 2017 மே 15-ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.மே 22, 2017 முதல் பயிற்சி தொடங்கும். 
மேலும் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், கிண்டி, சென்னை – 32. தொலைபேசி044 – 22501534 தொடர்பு கொள்ளவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித விபரம் !!!



மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித விபரம்
1.கன்னியாகுமரி – 94.64.2.
2.திருநெல்வேலி – 93.043.
3.தூத்துக்குடி – 93.054.
4.ராமநாதபுரம் – 95.395.
5. சிவகங்கை – 94.396.
6. விருதுநகர் – 95.977.
7. தேனி – 93.858.
8. மதுரை – 89.379.
9. திண்டுக்கல் – 88.0210.
10.ஊட்டி – 87.4811.
11. திருப்பூர் – 93.8212.
12 கோவை – 91.1013.
13 ஈரோடு – 94.7514.
14 சேலம் – 89.1615.
15 நாமக்கல் – 92.6216.
16 கிருஷ்ணகிரி – 82.6717.
17.தர்மபுரி – 88.7018.
18. புதுக்கோட்டை – 90.5219.
19.கரூர் – 91.6620.
20. அரியலூர் – 83.7821.
21. பெரம்பலூர் – 88.0422.
22.திருச்சி – 92.1923.
23. நாகப்பட்டினம் – 83.4224.
24.திருவாரூர் – 8325.
25. தஞ்சாவூர் – 88.5126.
26. விழுப்புரம் – 82.5827.
27. கடலூர் – 78.1028.
28. திருவண்ணாமலை – 89.3129.
29.வேலூர் – 80.3230.
30. காஞ்சிபுரம் – 81.6931.
31.திருவள்ளூர் – 74.3632.
32.சென்னை – 90.27

பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?



தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.
*#கிரேட் விபரம் :*
*ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171*
*பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283*
*சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806*
*டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750*
*இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906*
*எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849*
*ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489*
*எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070*
*ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938*

விரைவில் 5G ??

4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?
4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலையில் ஸ்கோர்கார்டை ஸ்க்ரோல் செய்த இளைஞர்கள், இன்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலிலேயே மேட்ச் பார்த்து ட்வீட் தட்டுகின்றனர். வீடியோ கால், மிகப்பெரிய ஃபைல்களையும் நிமிடங்களில் டவுன்லோடு செய்வது என பலரின் இணையப் பயன்பாடே மாறியுள்ளது.
4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களை மட்டுமே அனைவரும் தேடி வாங்குகின்றனர். இந்நிலையில், 2G, 3G, 4G வரிசையில் அடுத்ததாக வரவிருக்கும் 5G பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 5G நெட்வொர்க் சேவையில் என்னென்ன வசதிகள் இருக்கும் எனப் பார்ப்போமா!
4G நெட்வொர்க்கை மிஞ்சும் 5G!
1G, 2G, 3G, 4G போன்றவற்றில் குறிப்பிடப்படும் G என்பது தலைமுறையைக் (Generation) குறிக்கும். அது இணையத்தையோ அல்லது இணையத்தின் வேகத்தையோ குறிப்பதில்லை. 4G நெட்வொர்க் சேவையில் உள்ள வசதிகளை விடவும் மேம்பட்ட, அடுத்த தலைமுறை வசதிகளை உள்ளடக்கியது தான் 5G. ஒவ்வொரு தலைமுறை நெட்வொர்க் சேவையிலும் இருக்க வேண்டிய வசதிகளைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன் (International Telecommunications Union) தான் வரையறுக்கிறது. அந்த வரையறையின் அடிப்படையில் தான் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியையும், சேவையையும் வழங்குகின்றன. இந்நிலையில், 5G நெட்வொர்க் சேவையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில வசதிகள் பற்றி சமீபத்தில் ஐ.டி.யூ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தடையற்ற தொலைத்தொடர்பு :
தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு சேவையே 5G-யின் முக்கிய நோக்கமாகும். ஒரு டவர் இருக்கும் பகுதியைக் கடந்து, மற்றொரு டவர் இருக்கும் பகுதிக்குப் பயணிக்கும்போது சிக்னல் கட் ஆகும் பிரச்னை தற்போது இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படும் 'கால் ட்ராப்' பிரச்னை கண்டிப்பாக 5G-யில் இருக்கக்கூடாது என்கிறது ஐ.டி.யூ. ஒரு மணி நேரத்தில் 500 கி.மீ வேகத்தில் பயனாளர் வெவ்வேறு டவர்களைக் கடந்து ரயிலில் பயணிக்கும்போது கூட சிக்னல் கட் ஆகக்கூடாது என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.
இணைய வேகம் :
ஓர் இணைப்பிலிருந்து மற்றொரு இணைப்புக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் குறையக்குறைய இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும். 5G நெட்வொர்க் சேவையில் இந்த நேரமானது 4 மில்லி செகண்ட் முதல் 1 மில்லி செகண்ட் அளவுக்குள்தான் இருக்க வேண்டும். அதிவேகமாக செயல்படும் 4G சேவையில் கூட, டேட்டாவை பரிமாறிக்கொள்ள 50 மில்லி செகண்ட்கள் ஆகின்றன.
பேட்டரி திறன் :
4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மொபைல் பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்னை இருக்கும். இதை ஈடுசெய்வதற்காகவே முன்பை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை மொபைல் உற்பத்தியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 5G நெட்வொர்க் சேவையிலும் நீடித்த பேட்டரித் திறன் அவசியம் என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.
எப்போது அறிமுகமாகும்?
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டுக்குள் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து, 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 5G அறிமுகமாக எப்படியும் 2020-ம் ஆண்டு ஆகலாம்.
5G
பயன்கள் :
5G நெட்வொர்க் சேவையில் மின்னல் வேகத்தில் இணையம் செயல்படும் என்பதால், முழுநீளத் திரைப்படத்தையும் கூட சில நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும். டவுன்லோடு மற்றும் அப்லோடு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக இருக்கும்.
வீடியோ கால் செய்யும்போது எதிரே இருப்பவர் பேசுவது சில நொடிகள் தாமதமாகத்தான் நமக்குக் கேட்கும். வீடியோவும், ஆடியோவும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். 5G நெட்வொர்க்கில் இணையத்தின் வேகம் அபரிமிதமாக இருக்கும் என்பதால், தாமதம் ஏதும் இன்றி வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ரியல் டைமில் ஆக்மென்டட் ரியாலிட்டி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும். உதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது, ஓர் இடத்தைப் பற்றிய முழு விவரமும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நொடிப்பொழுதில் லோட் ஆகும்.
பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள், தற்போது இருப்பதைவிட 5G நெட்வொர்க் சேவையில், அதிக அளவில் பயன்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்தபடியே ஸ்மார்ட் ஸ்டவ் மூலம் சமையல் மேற்கொள்ள முடியும்.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பத்திரப்பதிவு: மீண்டும் தடையை தளர்த்திய உயர்நீதிமன்றம்!

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடைஉத்தரவை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீ ட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் முன்னரே சில உத்தர வுகளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததாவது:
அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம்.  ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின் கீழும் பத்திரப்பதிவு செய்யலாம்.
மேலும் 21.04.2017 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைப் பதிவுகள் சட்டவிரோதம் ஆகும்.  அத்துடன் 09.09.206 முதல் 28.03.2017 இடையிலான அனைத்து பத்திரப்பதிவுகளும் சட்டவிரோதமே ஆகும். . இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பத்திர பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டதாகும்.
இதன் அடிப்படையில் பத்திரவு பதிவு செய்தவற்கான தடை தளர்த்தப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

TNPSC GROUP - I RESULTS PUBLISHED

POSTS INCLUDED IN GROUP-I SERVICES (MAIN WRITTEN EXAMINATIONS)
Date of   Written Exam : 29.07.2016, 30.07.2016 & 31.07.2016

சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

* சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது  இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
* Rank முறை மாற்றி Grade முறை அமல் படுத்தி உள்ளதற்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.
* CBSE பாட  திட்டம் போல் தமிழக பாடத்திட்டமும் மாற்ற கல்வியாளர்கள் ஆலோசணை செய்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது -

தமிழகம், புதுவையில் 92.1 % பேர் தேர்ச்சி தமிழகம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 92.1% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை: 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 92.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வி துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவுகள் செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

 அமைச்சர் செங்கோட்டையன் -செய்தியாளர் சந்திப்பு 

 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 92.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 15ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும் முக்கிய 09 நிகழ்வுகள்:

1. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையைப் பயன்படுத்தி இருந்தால்,

2. நிரந்தரப் பதிவில் 10ம் வகுப்பு பதிவு எண்ணை (Reg. number) தவறாக கொடுத்து இருந்தால் (நன்றாக கவனிக்க: பதிவு எண், சான்றிதழ் எண் (Certificate number ) அல்ல) 

குறிப்பு: இந்தப் பிரச்சினையின் காரணமாக இது வரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஆனல் நினைத்தால், நிராகரிக்க இடம் உண்டு. 
 Image result for reject images

3. சாதி, மதம் மற்றும் சாதி உள் பிரிவு தொடர்பான தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க போதிய அவகாசம் கொடுத்தும் சமர்ப்பிக்க வில்லை என்றால்

4. சான்றிதழ் சரி பார்ப்பிற்கு வரவில்லை என்றால்.

5. தேவையான கல்வி மற்றும் தொழில் நுட்பத் தகுதியை தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே (Before notification) முடிக்காமல், அறிவிப்பு க்கு பின் முடித்து இருந்தால் (After notification).

7. கல்வித் தகுதியில் தவறான தகவல்கள் மற்றும் போலியான சான்றிதழ்களை அளிக்கும் பொழுது.

8. தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பித்து விட்டு பின்னர் அதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருந்தால்.

9. அரசு ஊழியராக இருப்பின், தடையின்மைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இருந்தால்.

இது தவிர விண்ணப்பம் மற்றும் சான்றிதழில் உள்ள எழுத்துப் பிழை, மற்றும் எண் பிழைகளுக்கு எல்லாம் கடிதம் எழுதிக் கேட்பார்கள். அதனால் பெரிய பாதிப்பு இல்லை.

இவை தவிர வேறு எதனாலும், எந்த பிரச்சினையும் வராது.

கவலையின்றி படியுங்கள்.

வாழ்த்துக்கள்.

கலந்தாய்வு: தம்பி ஐயாசாமி.

+2 RESULT - 2017 ANNOUNCEMENT | WEBSITE LINK,RE TOTALING,ANSWER SCRIPT REGARDING - DGE - DIRECTOR PROCEEDING..



CLICK HERE TO DOWNLOAD - PRESS RELEASE COPY..

பிளஸ் 2: விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டணம் எவ்வளவு?


பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:

பகுதி-1 மொழி ரூ.550,
 பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550,
 ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275. 

மறுகூட்டல் கட்டணம்: பகுதி- 1 மொழி, பகுதி- 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205.

பணம் செலுத்தும் முறை: 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணைபயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.

விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மே 12-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு தேர்வுத் துறை அறிவிப்பு: 
தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு, ஜூன், 28ல் துவங்குகிறது. அன்றைய தினம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, இந்திய கல்வி முறை; ஜூன், 30ல், கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்தலும் பாடத்தில் தேர்வுகள் நடக்கும்.
ஜூலை, 3ல், மொழி கற்பித்தல்; 5ல், கணிதம்; 8ல், ஆங்கிலம்; 10ல், அறிவியல்; 12ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன. முதலாம் ஆண்டுக்கு, ஜூன், 29ல், கற்கும் குழந்தை; ஜூலை, 1ல், ஆங்கிலம்; 4ல், கற்றலை எளிதாக்குதல், மேம்படுத்துதல்; 6ல், மொழி கற்பித்தல்; 11ல், கணிதம்; 13ல், அறிவியல் மற்றும், 14ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு

ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்த அதிர்ச்சி குறைவதற்குள், ஜூன் மாதம் முதல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று (மே-11)அறிவிப்புகள் வெளியானது.
மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் வாலட்டுக்கு கட்டணம்
இது குறித்து எஸ்.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ரூ.25 சேவைக் கட்டணம் வசூலிப்பு என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி பொது தேர்வுகளில் 'ரேங்கிங்' முறை ரத்து! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை: 'இன்று வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவில், 'ரேங்கிங்' முறை கிடையாது' என, தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை:
மாணவர்களுக்குள் கற்றலில், ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என, ரேங்கிங் முறை அறிமுகமானது. ஆனால், இந்த போட்டி, தற்போது பள்ளிகள் அளவிலான போட்டியாகி , உள்ளது. மாணவர்கள் கடும் நெருக்கடி, அழுத் தத்திற்கு ஆளாகின்றனர். முதல் மாணவர்களை பாராட் டும் போது, இடை மற்றும் கடைசி மாணவர்கள், தாழ்வு மனப்பான் மைக்கும், 

புறக்கணிப்புக்கும் ஆளாகின்றனர். இதில், தாக்குப் பிடிக்க முடியாத பல மாணவர் கள், மன இறுக்கம், சோர்வுக்கு ஆளாகின் றனர்.கற்றல் என்பது அறிதல், புரிதல்பயன்படுத்துதல், வினவு தல், புதியன படைத்தல் என, அழகிய செயல்பாடா கும். இதில், எழுத்துப்பூர்வ மதிப்பெண் மட்டுமே, அதிக முக்கியத்துவம் பெற்று, ஒரு சில மாணவர் களை போற்றும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, சி.பி.எஸ்.இ., போன்ற பிற கல்வி வாரியங் கள், ஆரோக்கியம் இல்லாத இந்த போட்டி சூழலை தவிர்க்க,ரேங்கிங் எனப்படும், தேசிய, மாநில முதன்மை நிலைகளை தவிர்த்து விட்டது.

அதன்படி, தமிழக கல்வித் துறையின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்தது; பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு சிலரை மட்டும் மாபெரும் வெற்றி யாளர்களாகக் கருதும் தரப் பட்டியல் முறையை, நடப்பு ஆண்டு முதல் கைவிட முடிவானது. அதற்கு பதில், தனித் திட்டத்தை வடிவமைக்க, கருத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, தரவரிசை முறையை கைவிட, அரசு தேர்வு மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. பிற தனித்திறன் மாணவர் களை ஊக்குவிக்க, தனித் திட்டம் கொண்டு

வரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் வழிக்கு உதவித்தொகை!

பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், இந்த முறை பின் பற்றப்படுகிறது. ரேங்கிங் வரும் போது, மாணவர்களிடையே, ஒரு மதிப்பெண் குறைந்தாலும், மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே, ரேங்க் முறை கைவிடப்படு கிறது. தமிழ் வழியில், சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். 

பெற்றோர், தங்கள் குழந்தை முதலிடம் பெறவில்லை என்ற ஏக்கத்தை தீர்க்கவும், எதிர்காலத்தில், தமிழக மாணவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற தனித்திறன் அடிப்படையில், சிறந்த மாண வர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப் படும். பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, உயர்மட்டக் குழு ஆலோ சித்து வருகி றது. இது குறித்து, முதல்வரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் சில கருத்துக் களை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.