>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 3 மே, 2017

Special TET :நனவாகுமா தகுதி தேர்வு : எதிர்பார்ப்பில் 50 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்

தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன.
அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில் தேவை கருதி, 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், 11 ஆண்டுகளாக கல்வித்துறையில் இவ்வகை ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் நடக்கவில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்த முடிவான போது சிறப்பாசிரியர்களுக்கான, தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், சிறப்பாசிரியர் தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செயலாளர் கவனிப்பாரா
இசை ஆசிரியர் கழக செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: மாநிலத்தில் 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில், நிரந்த நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பில்லாததால் பலர், பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு தினக் கூலிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்களாக இருந்தவர்கள் சிறப்பாசிரியர் விஷயத்தில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. செயலாளர் உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், மூன்று ஆண்டுகளாக நடக்காமல் இருந்த டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதைபோல் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வையும் நடத்த செயலர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Whatsapp New Update -இனி மேனேஜர் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ் மிஸ் ஆகாது..!

தனது பயனாளர்களின் வசதிக்காக எப்போதும் ஏதேனும் ஒரு அப்டேட் கொடுத்து, ஹிட் அடிப்பதில் வாட்ஸ்அப் கில்லி. வாட்ஸ்அப்பில் gif அனுப்பும் வசதி, புதிய ஸ்டேட்டஸ் மாற்றங்கள், எழுத்துருக்களை மாற்றும் வசதி என சமீப காலங்களில் நிறைய அப்டேட்ஸ் கொடுத்திருக்கிறது வாட்ஸ்அப்.
தற்போது தனது புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் உங்களின் வாட்ஸ்அப் 'சாட்'களை எளிதாக 'Pin' செய்து வைத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி கூகுளின் மின்னஞ்சல் சேவை என்பது அலுவலகத் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் போலவே வாட்ஸ்அப்பும் தற்போது அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உரையாடல்கள், அலுவலக விஷயங்கள் எனப் பல முக்கியமான தகவல்கள் வாட்ஸ்அப் மூலமாகவே தற்போது பெருமளவில் நடக்கின்றன. இது எப்படி வாட்ஸ்அப்பிற்கு ப்ளஸ் ஆக இருக்கிறதோ, அதைப் போல இதுவே மைனஸ் ஆகவும் இருக்கிறது. அறிமுகம் இல்லாத, அவசியம் இல்லாத பல க்ரூப்களின் தகவல்கள், ஃபார்வர்டு மெசேஜ்கள் ஆகியவை வந்து முக்கியமான மெசேஜ்களைக் கூட கீழே தள்ளிவிடும்.
இதனால் நமக்குத் தேவையான தகவல்களைக் கூட நீண்ட தூரம் ஸ்க்ரோல் செய்தே படிக்கவோ, பார்க்கவோ முடியும்.
மேலும் இவற்றால் மிக முக்கியமான க்ரூப்களில் இருந்துவரும் மெசேஜ்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. அப்படி தவறவிடாமல் இருக்க உதவுவதுதான் இந்த 'Pin' ஆப்ஷன். இதன் மூலமாக தனி நபருடனான சாட் அல்லது க்ரூப் சாட் இரண்டையுமே 'Pin' செய்துவைத்துக்கொள்ள முடியும்.
எப்படி 'Pin' செய்வது?
இந்த வசதியைப் பெற முதலில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் வெர்ஷன் 2.17.162 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்களில் இந்த அப்டேட் கிடைக்கும். அப்டேட் செய்த பிறகு இந்தப் புதிய வசதியை நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் 'Pin' செய்து வைக்கவேண்டிய "Individual Chat' அல்லது 'Group chat' மீது சில நொடிகள் அழுத்திப் பிடித்தால், 'chats' பகுதிக்கு மேலே புதிதாக 'Pin' குறியீடு காட்டப்படும். இதன்மூலம் உங்களுடைய முக்கியமான க்ரூப் அல்லது நபருடைய 'Chat'-களை 'Pin' செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் எவ்வளவு மெசேஜ்கள் உங்களின் வாட்ஸ்அப்பில் குவிந்தாலும் நீங்கள் 'Pin' செய்த 'Chat'-கள் மேலேயே இருக்கும். எனவே நீங்கள் குறித்து வைத்தவற்றை நீண்ட தூரத்திற்கு ஸ்க்ரோல் செய்து தேட வேண்டாம். முக்கியமான க்ரூப்களின் தகவல்களைத் தவறவிடவும் மாட்டோம். இந்த வசதி வாட்ஸ்அப் web-லும் கிடைக்கிறது. இதன் மூலமாக நீங்கள் மொபைலில் 'Pin' செய்துவைக்கும் 'Chat'-களை, டெஸ்க்டாப்பிலும் 'Pin' செய்து வைக்கமுடியும்.
இந்த 'Pin' ஆப்ஷனுக்கு ஒரே ஒரு கண்டிஷன் வைத்திருக்கிறது வாட்ஸ்அப். அதாவது நீங்கள் ஏதேனும் மூன்று 'chat'-களை மட்டுமே 'pin' செய்து வைக்க முடியும். அதற்கு மேல் 'pin' செய்ய முடியாது. அதேபோல நீங்கள் 'pin' செய்தவற்றை பழையபடியே 'unpin' செய்யவும் முடியும். மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் இதனை நீங்கள் செய்யலாம். தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும் இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கலாம்.

8 ஆயிரம் RMSA ஆசிரியர்கள் பரிதவிப்பு

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,742 பட்டதாரி ஆசிரியர்கள், 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படும். அதனை கருவூலங்களில் சமர்ப்பித்த பின்பே சம்பளம் வழங்கப்படும்.
இந்த முறையால் ஆணை மற்றும் ஊதியம் வழங்குதலில் சில சமயங்களில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் முறையாக சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி சம்பளம் பெறுகின்றனர்.இந்த ஆண்டுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால், ஏப்ரல் மாத சம்பளம் ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத்தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிவேக பிராட்பேண்ட் சேவை BSNL அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.675 கட்டணத்துக்கு அதிக வேகத்துடன் செயல்படும் பிராட் பேண்ட் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் குறைந்த பட்ச பதிவிறக்க வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
இதுதவிர, பல்வேறு திட்டங்களில் பதிவிறக்கம் செய்யும் அளவு 250 சதவீதம் அதிக ரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 20 ஜிபியில் இருந்து 70 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.1199 காம்போ திட்டத்தில் பதிவிறக்க வேகம் 2 எம்பிபிஎஸ்-ல் இருந்து 4 எம்பிஎஸ் ஆக 20 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு ஜிபிக்கான கட்டணம் ஒரு ரூபாய்க்கு குறை வாகவே உள்ளது.இத்திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ள வாடிக்கையாளர் களுக்கு இந்த புதிய பிராட்பேண்ட் சேவை மே 1-ம் தேதி முதல் வழங் கப்படும். இதற்காக மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும், இத்திட்டத்தில் குடும்ப நண்பர்கள் இடையே 3 தரைவழி தொலைபேசி எண்களுக்கு அளவில்லா அழைப்பு வசதியும் உண்டு. இதுகுறித்து கூடுதல் விவரங்களை 1800-345-1500என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது www.chennai.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 2 மே, 2017

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!! "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் பள்ளிக் கல்வித்துறைஅமைச்சரிடம் வலியுறுத்தல்!!






📕📘ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

📘📗14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் - செங்கோட்டையன்.

♦🔷ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்காக  பள்ளிக்கல்வித்துறை

வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

🔷🔶ஜூன் மாதம் முதல் தினம்தோறும் இறை வணக்க கூட்டம் பள்ளி வளாகத்திலேயே நடைபெறும்..

🔷🔶பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

🔶🔷ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

🔶விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்..

அவற்றில் ஆசிரியர் மாணவர் விவரம் குறிப்பிடப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருக்கும்.

🔹♦ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைப்பெறும்.

அஞ்சல்துறையின்‘மை ஸ்டாம்ப் திட்டம்


‘தபால் துறையின் வருமானத்தை அதிகரித்து அத்துறையை நிலை நிறுத்தவும், அதன் பாரம்பர்ய பெருமையில் மக்களை
இணைத்துக் கொள்ளவும் 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ‘மை ஸ்டாம்ப்’ திட்டம். மாவட்டங்களில் உள்ள தலைமை அஞ்சலக தபால்தலை சேகரிப்பு மையத்தில் தன் புகைப்படத்தை கொடுத்து ரூ. 300 செலுத்தி தன் உருவத்துடன் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று விண்ணப்பித்தால் உடனே ரூ. 5 மதிப்பிலான 12 அஞ்சல் தலைகள் கொண்ட ஒரு சீட் அச்சடித்து தரப்படும். அதை விண்ணப்பித்தவர் ஆவணமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது தன் நண்பருக்கு அந்த ஸ்டாம்ப்பை பயன்படுத்தி தபால் அனுப்பி மகிழ்விக்கலாம்.
ஏற்கனவே அஞ்சல் அட்டைகள் அச்சடித்து வெளியிடுவதில் ஒரு அட்டைக்கு ரூ. 3 செலவாகிறது. எனவே 1 லட்சம் அட்டைக்கு ரூ.2 லட்சம் செலுத்தினால் அவர்களின் விளம்பரம் அஞ்சல் அட்டையின் ஒரு பகுதியில் இடம் பெறுகிற மாதிரி திட்டம் அஞ்சல்துறையால் அறிவிக்கப்பட்டது.

              2017 - ஆசிரியர் கலந்தாய்வு விளக்கம்!!

*ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு...
✍01. 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதியவிண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
✍02. மாறுதல் கோரும் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
✍03. பட்டதாரி / இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க ஒரே படிவத்தில் தேவையான மாறுதல் இனங்களில் ✔ (டிக்) குறியீடு இட்டு விண்ணப்பித்தல் வேண்டும்.
✍04. மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
✍05. சிறப்பு முன்னுரிமை கோருபவர்கள் உரிய சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அசல் சான்றிதழை உ.தொ.க.அலுவலரிடம் காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
✍06.ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டும். அதன்பின் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த ஆசிரியர்கள் 13.05.17 காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு நேரில் வந்து கையொப்பமிட்டு பெற்றுச் செல்ல வேண்டும். இந்த விண்ணப்பத்தையே ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது பயன்படுத்த இயலும்.
✍07. மனமொத்த மாறுதல் பெற 01.06.16 க்கு முன்னர் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும். 01.06.16 க்குப்பின் பணியேற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
✍08. ஏற்கனவே மனமொத்த மாறுதலில் சென்றவர்கள் மீண்டும் தான் பணிபுரிந்த பள்ளிக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்க இயலாது.
✍09. கடந்த ஆண்டில் மனமொத்த மாறுதல் பெற்றவர்கள் இக்கல்வியாண்டில் விண்ணப்பிக்க இயலாது.
✍10. கணவர் அல்லது மனைவி 01.06.16 க்குப் பின் விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அதற்கான ஆதாரத்துடன் கலந்தாய்வு விதிகளைப் பின்பற்றாமல் சிறப்பு நிகழ்வாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
✍11. மாறுதல் கோருபவர்கள் 01.06.16 க்கு முன்பு தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். எனினும் 2016-17 இல் பணி நிரவல் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.16 க்குப் பிறகு பணியில் சேர்ந்திருந்தாலும் தற்போதைய கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
✍12. முற்றிலும் கண்பார்வையற்றவர்கள், இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்றவர்கள், டயாலிசிஸ் மேற்கொண்டவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள், இராணுவ வீரரின் மனைவி, விதவைகள் மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்யாதவர்கள், 40 % மற்றும் அதற்கு மேலும் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டியதில்லை. 01.06.16 க்குப் பின்னர் பணியில் சேர்ந்திருந்தாலும் இப்போது விண்ணப்பிக்கலாம்.
✍13. மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் spouse certificate வைப்பவர்கள் கணவர் அல்லது மனைவி 30 கி.மீதூரத்திற்கு அப்பால் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
✍14. கடந்த ஆண்டு spouse certificate மூலம் மாறுதல் பெற்றவர்கள் நடப்பாண்டில் spouse certificate மூலம்மாறுதல் கோர இயலாது. மாறுதல் பெற்று மூன்றாண்டுகளுக்குப் பின்னரே spouse certificate அடிப்படையில் மாறுதல் கோர இயலும்.
✍15. மத்திய / மாநில அரசு மற்றும் அதைச்சார்ந்த அலுவலர்கள்/ பணியாளர்கள் , அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் மட்டும் உரிய அலுவலரிடம் பணிச்சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
*மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் 05.05.17 மாலைக்குள் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

PGTRB தேர்வுக்கு தயார் ஆவது எப்படி ?

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வர இருக்கிறது. தேர்வுக்கு எப்படி தயார் ஆவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வானது 150 மதிப்பெண்களை கொண்டது.
150 மதிப்பெண்களில் 110 மதிப்பெண்கள் உங்கள் பாட சம்பந்தமான கேள்விகளை கொண்டு இருக்கும். மீதம் உள்ள 40 மதிப்பெண்களில் 30 கேள்விகள் சைக்காலஜி மற்றும் கல்வியியல் சம்பந்தப்பட்டவை. இன்னும் இருக்கும் 10 மதிப்பெண்கள் பொது அறிவு சம்பந்தமானவை.
தேர்வை பற்றி பார்த்தோம். இனி பாடத்திட்டம் பற்றி பார்ப்போம்.
கீழ்காணும் லிங்கை பயன்படுத்தி தேர்வுக்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் பாடத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பள்ளி புத்தகம் முதல் இளநிலை மற்றும் முதுகலை புத்தகங்கள் அனைத்தும்(உங்கள் முக்கிய பாட சம்பந்தமானவை) தேவை.
பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்தாகிவிட்டது. புத்தகங்கள் எடுத்து வைத்தாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறிர்களா...
பாடதிட்டத்தில் உங்கள் முக்கிய பாடமானது பத்து Unit ஆக இருந்தால் அதற்கு ஏற்ப பத்து நோட்களை வாங்குங்கள். பாடத்திட்டத்தில் முதல் யூனிட்டில் முதல் தலைப்பை பாருங்கள். அந்த தலைப்பு ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இருப்பின் அந்த தலைப்பில் புத்தகங்களின் அடிப்படையில் குறிப்புகளை எடுத்து உங்கள் நோட்களில் எழுதி வைத்து கொள்ளுங்கள். இப்படி எடுக்கப்படும் குறிப்புகள் தேர்வு நெருங்கும் நேரத்தில் மீண்டும் திருப்புதல் செய்யவும் மற்றும் எளிதாக நினைவில் நிறுத்தவும் உதவும். மேலும் குறிப்பட்ட தலைப்பை இணையத்தில் தேடி அதில் இருந்தும் குறிப்புகளை எடுத்து கொள்ளுங்கள்.
உங்களிடம் போதுமான புத்தகங்கள் இல்லையா... கவலையே வேண்டாம். உங்கள் மாவட்ட பொது நூலகங்களை நாடுங்கள். அங்கு அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும். அவற்றில் இருந்து முக்கிய பகுதிகளை நகல் எடுத்து கொள்ளலாம்.
இப்படி தரமான பாட குறிப்புகளை நீங்களே தயார் செய்து படிப்பது உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதுடன், அதிக மதிப்பெண்களை பெறவும் உதவும்.
Courtesy : Alla Baksh

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே குறைதானா??

TET : 2012க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் திருவேற்காடு சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடந்த 2010 முதல் குழந்தைகளுக்கான கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வைக் கொண்டு வந்தது.
இதன்படி தமிழக அரசு  ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிட்டது. தமிழகத்தில் இதற்கான 28.3.2012-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பாணை வெளிவரும் முன்பாகவே பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விதிலக்கு அளிக்கப்படவில்லை. 
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் மற்றும் அறிவிப்பாணைப்படி, தமிழகத்தில் கடந்த 2012 முதல் தற்போது வரை ஆண்டுக்கு 2 முறை என மொத்தம் 10 ஆசிரியர் தகுதித்தேர்வுகளை தமிழக அரசு நடத்தியிருக்க வேண்டும்.  ஆனால் தமிழகத்தில் இதுவரை கடந்த 2012 ஜூலை, 2012 அக்டோபர் (துணைத் தேர்வு), 2013 ஜூலையில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 
அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது 2017 ஏப்ரலில் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடத்தப்படவில்லை.  ஆனால் ஏற்கெனவே பணியில் உள்ள நாங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற இதுதான் கடைசி வாய்ப்பு என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இத்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல 2012க்கு முன்பாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் தற்போது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், நாடு முழுவதும் உள்ள 11 லட்சம் ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் காலக்கெடுவை வரும் 31.3.2019 வரை நீட்டித்துள்ளது. எனவே அதுவரை ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்தாண்டு நடந்த தேர்வு தான் கடைசி வாய்ப்பு எனவும், தேர்ச்சி பெறாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் எனவும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். 
அதுபோல இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.  
இந்த மனுக்கள் நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.  மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரக அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 3வது வாரத்திற்கு தள்ளி வைத்தார். அதுவரை மனுதாரர்களை இந்தாண்டே ஆசிரியர் கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தடை-ஆசிரியர் அமைப்புக்கள் கோரிக்கை

திங்கள், 1 மே, 2017

C-TET - தேர்வு முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு

மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்காண் தேர்வு (சி-டெட்) முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வு, இனிமேல் ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தைச் (சிபிஎஸ்இ) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சி-டெட் தேர்வு ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சி-டெட் தேர்வை சிபிஎஸ்இ அமைப்பு நடத்தவுள்ளது. இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சிபிஎஸ்இ அமைப்பு தெரிவித்துவிட்டது.
அதில், ஜேஇஇ-மெயின் தேர்வு, நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால், தனக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் சி-டெட் தேர்வை ஒருமுறை மட்டுமே நடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிபிஎஸ்இ, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சில் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிபிஎஸ்இ நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
சி-டெட் தேர்வு தற்போது ஆண்டுதோறும் பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 9 லட்சம் பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட போதிலும், எந்த மாதத்தில் அதை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.
முன்னதாக, துணை பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தேசிய அளவில் நடத்தப்படும் தகுதிக்காண் தேர்வை (நெட்) இனிமேல் நடத்துவதில்லை என்று சிபிஎஸ்இ முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

*ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான  EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.

எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .

🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது  ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.

இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.

🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து ELகணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.

 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.

கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.

எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,

ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.

🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று(மே 1) துவங்குகிறது. 

அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படும், ஒற்றைசாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூன், 27ல், துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில், பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மே, 31 வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான அறிவிக்கை மற்றும் விதிகள், நேற்று வெளியிடப்பட்டன. 

ஆன்லைன் வழியே, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்தோர், அதன் பிரதியை நகல் எடுத்து, செயலர், தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை, அண்ணா பல்கலை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

AEEO VACANCY NEWS :உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் வெளியீடு!!

தலைமை இன்றி தத்தளிக்கும் எஸ்.எஸ்.ஏ., திட்டம்! தட... தடக்குது தொடக்க கல்வித்தரம்

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால், தொடக்க கல்வி மாணவர்கள் கல்வித்தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் அல்லது ஓய்வு பெற்ற பின் இரண்டு ஆண்டுகளாக இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மாறாக, அந்தந்த மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் இத்திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.

தவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் என மூன்று பெரும் பொறுப்பையும் ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் கண்காணிப்பதால் கடும் பணிச்சுமையில் தவிக்கின்றனர்.
'கவலை' கல்வித்தரம்: தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை கண்காணிப்பது, மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது போன்ற முக்கிய பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 'தலைமை' இல்லாததால் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், பல கோடி ரூபாய் திட்டங்களில் நடக்கும் வகுப்பறை கட்டடப் பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிகள் குறித்து அத்திட்ட அலுவலர் காட்டும் ஆவணங்களில் மட்டும் கையெழுத்திடும் பணியை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது.

மறுக்கப்படும் சி.இ.ஓ., வாய்ப்பு: 

இப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிமூப்பு பட்டியலில் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே 40 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் மே யில் ஓய்வுபெற உள்ளனர்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 

இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவை தொடர்ந்து காலியாக இருக்கக்கூடாது. சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களையும் அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கமான கல்வி பணிகளில் 'ரெகுலர்' சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குவதற்கு முன் இப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயச்சந்திரன் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

4% *DA Arrear Software Download (Excel File )

TET தேர்வெழுத வந்த பெண்ணுக்கு சுக பிரசவம்

தியாகதுருகம் அரசு பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, அந்தோணிராஜ் என்பவரின் மனைவி, நோயல் ரோஸ்மேரி, 24. நிறைமாத கர்ப்பிணியான இவர், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்காக, நேற்று காலை, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வந்திருந்தார்.காலை, 10:00 மணிக்கு, தேர்வு துவங்கியது. 10:15 மணியளவில், ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

எனினும், 25 கேள்விகளுக்கு பதில் எழுதிய நிலையில், வலி கடுமையானதால், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் நிலைமையை கூறினார்.முதன்மை கண்காணிப்பாளர் சசிகலாதேவி, உடனடியாக, 108 ஆம்புலன்சை வரவழைத்து, ரோஸ்மேரியை, தியாகதுருகம் வட்டார சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தார்.அங்கு, ரோஸ்மேரிக்கு, காலை, 11:00 மணியளவில், சுக பிரசவத்தில், அழகான பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்து, கணவர் அந்தோணிராஜ் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், தேர்வை முழுமையாக எழுத முடியாமல் போனது, ரோஸ்மேரிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ரோஸ்மேரிக்கு இது, இரண்டாவது பிரசவம்.

TRANSFER NEWS : பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடு.

தொடக்கக் கல்வித்துறை பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கவுன்சிலிங் மே 19 ல் துவங்கி மே 29 வரை நடக்கிறது. 

இதற்கான விண்ணப்பங்கள் ஏப்., 24 முதல் மே 5 வரை பெறப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சிலிங் மட்டும் இணையதளம் வழியாக நடந்தது. இந்த ஆண்டு அனைத்து மாறுதல்களும் இணையதளம் வழியே நடக்க உள்ளன.

கடந்த காலங்களில் ஒருவர் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என, மூன்று மாறுதல்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ஏதாவதொன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் கடந்த காலங்களில் பொதுமாறுதல் கவுன்சிலிங் அன்று முன்னுரிமை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தால்போதும். இதில் சிலர் சமர்ப்பித்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஆவணங்களை முன்கூட்டியே ஆய்வு செய்யும் வகையில், விண்ணப்பிக்கும்போதே அவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNTET 2017 Exam - Paper I | ORIGINAL QUESTION PAPER WITH ANSWER KEY | TNTET 2017 Exam - Paper I


TET Paper 1 Exam Date - 29.04.2017


TNTET 2017 - Paper I - Answer Key - Vellore Vidiyal
TNTET 2017 - Paper I Maths Answer Key - Mr K.Pratheep


TNTET 2017 - Paper I - Answer Key - Kanchi TNPSC Academy 



TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre

TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Tamil - Cick here

TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - English - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Maths - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Science - Click here (soon)


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Social Science - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Psychology (soon)


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre -maths - work sheet-01 - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - maths - work sheet-02 - Click here