>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 20 மார்ச், 2017


'TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்.

பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல்துவங்கி, வரும், 22ல் முடிகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஞாயிறு, 19 மார்ச், 2017


ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்!

சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம்கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும்.அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல்,சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
சென்னையில் மட்டும்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள, 1.90 கோடி கார்டுகளில், 38 சதவீதம் முன்னுரிமை கார்டுகள்; 62 சதவீதம், முன்னுரிமை அல்லாதவை.
முன்னுரிமை கார்டில், குடும்ப தலைவராக பெண் படம்; மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர், முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் அனைத்து பொருட்களும் தரப்படும்.ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.

டான்செட்' தேர்வு குவிந்தது விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., போன்ற படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வு, மார்ச், 25 மற்றும் 26ல் நடக்கிறது.இதற்கான விண்ணப்ப பதிவுகள், ஜன., 29 முதல், பிப்., 20 வரை நடந்தன. இதில், கடந்த ஆண்டை விட, அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.எம்.பி.ஏ., படிப்புக்கு, 17 ஆயிரத்து, 992; எம்.சி.ஏ., 6,448; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 16 ஆயிரத்து, 742 பேர் என, மொத்தம், 41 ஆயிரத்து, 182 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, 39 ஆயிரத்து, 930 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, அண்ணா பல்கலையின் டான்செட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, டான்செட் செயலர் பேராசிரியர், மல்லிகா தெரிவித்துள்ளார்.

நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

மதுரை, : உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடந்து வந்த நிலையில், நாடு முழுவதும் 'நீட்' நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்துமாறு, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த தேர்வு முறை பின் பற்றப்படவில்லை. ஆனால் இந்தாண்டு முதல், 'நீட்' தேர்வு முறையை அமல் படுத்த வேண்டும்.
இருப்பினும் தமிழக அரசு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. ஆனால் இதற்கு ஒப்புதல் கிடைக்காது என்றே மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி 
வருகின்றனர்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு, அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் டில்லி சென்று மத்திய அரசிடம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 'நீட்' தேர்வு முறையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., ஐ.ஐ.டி., பொறியியல் படிப்பு போன்றவற்றுக்கான தகுதித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., போன்ற கல்வி திட்டங்களுக்கு இணையாக, சமச்சீர் கல்வி திட்டத்தின் பாடத் திட்டங்கள் இல்லை என்பதே இதற்கான காரணம்.அக்கல்வி திட்டங்களை, பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் கொண்டு வந்
திருந்தால், தற்போது இந்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
குழப்பும் மசோதா'நீட்' தேர்வு கிராமப்புற மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 
பெரிதும் பாதிக்கும் என்பது உண்மையல்ல. மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களான 5500ல், அரசு பள்ளியில் படித்து சேர்ந்த மாணவர்கள் 250 பேர் மட்டுமே. இவர்களும் தங்கள் திறமையினால் தேர்வானார்களே தவிர சமச்சீர் கல்வியினால் அல்ல.
தமிழக அரசின் எதிர்ப்பு மசோதா பெற்றோர், மாணவர்களை குழப்பும் வகையில் உள்ளது. எந்த கல்வி திட்டத்தில் மாணவர்கள் பயில வேண்டும் என்ற தெளிவு இல்லை.எனவே அரசு 'நீட்' தேர்வை முற்றிலும் புறக்
கணிக்க நடவடிக்கை எடுக்காமல், ஓரிரு ஆண்டுகள் மட்டும் விலக்கு கேட்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வுக்கு 'நீட்'டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தை, தமிழ் வழியில் முதற்கட்டமாக 10 சதவீத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் துவக்க வேண்டும், என்றார்

சனி, 18 மார்ச், 2017


அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி!

250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு .அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி
வரும் கல்வியாண்டில் 250 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைக்கும்.
2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், 2017-18-ம் ஆண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) உருவாக்கப்படும். அதேபோல், ஓர் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 9 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல்) தோற்றுவிக்கப்படும்.
அந்த அடிப்படையில் 150 நடு நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் கள் வீதம் மொத்தம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும்போது ஒருபள்ளிக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம் மொத்தம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாகும். 50 சதவீத இடங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமன முறை யிலும் (ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித் தேர்வு மூலம்) நிரப்பப் படுகின்றன. எனவே, புதிதாக உருவாக் கப்படும் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது, 375 இடங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது 450 இடங்கள் (மொத்தம் 900)ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.
பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையிலும், முதுகலை பட்டதாரிஆசிரியர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
 அதேபோல், ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போது புதிதாக உருவாகியுள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களும் இந்த தேர்வுகள் மூலமாக நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் சிக்கல் - சுகாதாரத் துறை

மீசல்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்று ரத்து செய்யப்படவுள்ளது.
தமிழகத்தில், பிப்., 6 முதல் 28 வரை, மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
'இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்' என, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், பெற்றோர் பலரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர்.பெரும்பாலான தனியார் பள்ளிகளில், சுகாதாரத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை.
பெற்றோர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் ஒருவரை ஒருவர் காரணம் காட்டி, தடுப்பூசி போட ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில், 1.77 கோடி பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, 44 சதவீதம் பேர் மட்டுமே, தடுப்பூசி போட்டனர். எனவே, தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்றினை ரத்து செய்ய, சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு சுகாதாரச்சான்றுரத்து செய்யப்பட்டால், நடப்பாண்டு, பள்ளி களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்க இயலாது.சுகாதாரத் துறையினர் கூறுகையில், 'குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட காலகட்டங்களில், பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
'இது, 1939ன், பொது சுகாதார திட்டத்தின், பிரிவு, 76, சட்டப்படி, கட்டாயமாகும். எனவே, தட்டம்மை தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச்சான்று ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றனர்

பிஎச்.டி., மாணவர்களுக்குயு.ஜி.சி., கட்டுப்பாடு

பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சி விபரங்களை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களில் பதிவு செய்யும்படி, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது. பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., கட்டுப்பாட்டில், பல்கலைகள், கல்லுாரிகள் செயல்படுகின்றன. எனவே, யு.ஜி.சி., விதிகளை பின்பற்றாத கல்லுாரி மற்றும் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, யு.ஜி.சி.,யால் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேபோல், ஆராய்ச்சி படிப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு, ஒவ்வொரு பல்கலைக்கும், யு.ஜி.சி., மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, ஆராய்ச்சி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, பல்கலைகள் கணக்கு காட்டுகின்றன. இந்த பட்டியலில், பல போலி விபரங்கள் இடம்பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.
எனவே, அனைத்து பல்கலைகளும், ஆராய்ச்சி படிப்பு விபரங்களை, தங்கள் பல்கலை இணையதளத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்ய, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பல்கலை மாணவர்களும், தங்களின் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது

பிஎச்.டி., மாணவர்களுக்குயு.ஜி.சி., கட்டுப்பாடு

பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சி விபரங்களை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களில் பதிவு செய்யும்படி, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது. பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., கட்டுப்பாட்டில், பல்கலைகள், கல்லுாரிகள் செயல்படுகின்றன. எனவே, யு.ஜி.சி., விதிகளை பின்பற்றாத கல்லுாரி மற்றும் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, யு.ஜி.சி.,யால் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேபோல், ஆராய்ச்சி படிப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு, ஒவ்வொரு பல்கலைக்கும், யு.ஜி.சி., மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, ஆராய்ச்சி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, பல்கலைகள் கணக்கு காட்டுகின்றன. இந்த பட்டியலில், பல போலி விபரங்கள் இடம்பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.
எனவே, அனைத்து பல்கலைகளும், ஆராய்ச்சி படிப்பு விபரங்களை, தங்கள் பல்கலை இணையதளத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்ய, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பல்கலை மாணவர்களும், தங்களின் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது

ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வுக்குழு அறிவுறுத்தல்

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது. ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த, துறை ரீதியாக குழுக்கள் அமைத்து, கருத்து கேட்கப்படுகிறது. இன்ஜி., கல்லுாரிகளிடம் ஆலோசனை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. நேற்று, சென்னையில், ஏ.ஐ.சி.டி.இ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மண்டல அதிகாரி பாலமுருகன் ஏற்பாட்டில், ஊதியக் குழு ஆய்வு கமிட்டி தலைவரும், கர்நாடகா விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலை துணை வேந்தருமான ராஜசேகரய்யா தலைமை வகித்தார்.
குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ஏ.ஐ.சி.டி.இ. உறுப்பினர் செயலருமான ஏ.பி.மிட்டல், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலை துணை வேந்தர் ஐசக், அண்ணா பல்கலை சார்பில், பேராசிரியர் வெங்கடேசன், தமிழ்நாடு தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், அதன் செயலர், திருச்சி ஷிவானி கல்லுாரிகள் தலைவர் செல்வராஜ், ஜெயா கல்வி குழும தலைவர் கனகராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்த, ஏ.ஐ.சி.டி.இ., குழுவினர் அறிவுறுத்தினர். அப்போது, கல்லுாரிகள் சந்திக்கும், பல்வேறு பிரச்னைகள் பற்றி, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாணவர் - ஆசிரியர் விகிதத்தை, 1:15ல் இருந்து, 1:20 ஆக மாற்ற வேண்டும்; பேராசிரியர்களை பதவி உயர்த்துவதற்கான, சி.ஏ.எஸ்., திட்ட குறைகளை தீர்க்க வேண்டும்; எம்.இ., முடித்தவர்களை, உதவி பேராசிரியராக பணியில் சேர்த்தல்.
உதவி பேராசிரியருக்கு, பிஎச்.டி., கட்டாயம் என்ற அம்சத்திலிருந்து விலக்கு அளித்தல்; ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கைப்படி, தமிழக கல்லுாரிகளில் கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் போன்றவை குறித்து, கருத்துகள் தெரிவித்தனர்.
அடுத்த ஆலோசனை கூட்டம், ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. சென்னையில் உள்ள தென்மண்டல, ஏ.ஐ.சி.டி.இ., மண்டல அதிகாரி பாலமுருகன், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

பாடத்தோடு குழந்தைகளுக்கு விளையாட்டு:உடுமலை அருகே அசத்தும் அரசுப்பள்ளி

காலையில் படிப்பு; மாலை முழுதும் விளையாட்டு என்ற பாரதியின் கூற்றை, பின்பற்றி, குழந்தைகளுக்கு பாடத்தோடு, உடல்நலத்தை மேம்படுத்தும் விளையாட்டுகளையும் பயிற்சியளித்து வருகிறது குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
உடுமலை பெதப்பம்பட்டி ரோட்டிலுள்ள குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 51 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு, செயல்வழிக்கற்றல், எளிமையான கற்றல் என கற்றலுக்கான வழிமுறைகள் பலவகைகளில் மாற்றப்பட்டுள்ளன.
ஆனால், ஓடி ஆடி விளையாட இடவசதியில்லாதது, சில பள்ளிகளில் வகுப்பறையே பற்றாக்குறையாக இருப்பது போன்ற காரணங்களால், பல பள்ளிகளில் வகுப்பறை பாடம் மட்டுமே என்ற நிலை உள்ளது.இதனால், குழந்தைகளின் விளையாட்டுத்திறன் முடங்குவதோடு, அவர்களின் உடல்நிலையும் புத்துணர்ச்சி பெறுவதில்லை. 
இதனால், விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பினும், அந்த குழந்தை பருவத்தில் அதற்கான வாய்ப்பில்லாமல் போவதால், அடுத்தடுத்து வரும் நடுநிலை மற்றும் உயர்நிலைகளில் அக்குழந்தைகளுக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் குறைகிறது. இத்தகைய பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாய் துவக்க நிலையிலிருந்தே குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி வருகிறது குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் மட்டுமே இப்பள்ளியில் உள்ளனர். 
இருப்பினும், இங்குள்ள குழந்தைகளை பன்முகத் தன்மை கொண்டவர்களாக விளையாட்டு, கலை, என அனைத்திலும் மேம்படுத்தி வருகின்றனர். அழகாய் தலையசைத்து ஆங்கில உச்சரித்து பாடம் படிக்கின்றனர் அக்குழந்தைகள். நாடகம் நடிப்பது, கற்பனை கதாபாத்திரங்களாக மாறி கதை சொல்வது என அனைத்துமே பாடவேளையின் ஒரு பகுதியாக பின்பற்றுகின்றனர். 
ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணங்களை கூறி பல பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த தயங்குகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியரோடு சேர்த்து இரண்டே ஆசிரியர்கள் இருந்தாலும், ஆங்கில வழியின் மீது பெற்றோருக்கு ஆர்வம் இருப்பதால், கூடுதல் முயற்சி எடுத்து, தற்போது மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழி முறையையும் நடத்துகின்றனர். 
புத்துணர்ச்சியோடு பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளை காலையில் படிப்பு, மாலையில் விளையாட்டு என உற்சாகத்தோடு அனுப்புகின்றனர். கேரம், செஸ் விளையாடுவது, இடைவேளைகளில் யோகா, மாலை நேரத்தில், கால்பந்து, கையுந்துபந்து, என உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சியோடு இருக்க பயிற்சியளிக்கின்றனர் ஆசிரியர்கள். ஆரம்பக்கல்வியோடு, அடிப்படை விளையாட்டு பயிற்சியும் அவசியம் என்பதை வெளிப்படுத்தி வருகிறது, குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. 

பிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய 'நேரம்

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாத்தாளில் தேர்வு எழுதும் 'நேரம்' தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் நேற்று குழப்பம் அடைந்தனர். 
இத்தேர்வில் மொத்தம் 150க்கு 75 மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாகவும், 75 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் 'தியரி'யாகவும் கேட்கப்படும். முதல் 75 வினாக்கள் ஒரு மதிப்பெண் வகை. அதற்கான விடைகளை தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு மை பால் பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும். இப்பகுதியை மாணவர்கள் எழுதுவதற்கு கடந் தாண்டு முதல் 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் நேற்று நடந்த தேர்வில் 'ஓ.எம்.ஆர்., ஷீட்'டில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு '75 நிமிடங்கள்' என குறிப்பிடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.இத்தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அனுப்பிய சுற்றறிக்கையிலும், 'ஒரு மதிப்பெண் பகுதிக்கு 90 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்,' என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், '75 நிமிடங்கள்' என அச்சிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர்.
சென்னை தேர்வுத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, 'நேரம் தவறாக அச்சிடப்பட்டதாகவும், 90 நிமிடங்கள் தான் வழங்க வேண்டும். அதன் பின் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்களிடம் அறை கண்காணிப்பாளர் பெற வேண்டும்,' என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கணினி அறிவியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இத்தேர்வுக்கு 2015-16ல் ஒரு மதிப்பெண் பகுதிக்கு 75 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு, நேரம் குறைவாக இருப்பதாக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2016-17ல், இப்பகுதி எழுத 90 நிமிடங்களாக நேரம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு '75 நிமிடங்கள்' என தவறாக அச்சிடப்பட்டதால்குழப்பம் ஏற்பட்டது. மாணவர்கள் பாதிக்கவில்லை," என்றார்.
மாணவர்கள் எதிர்பார்ப்பு
மாணவர்கள் கூறுகையில், "ஒரு மதிப்பெண் பகுதியை எழுதி முடித்த 90 நிமிடங்களில், ஓ.எம்.ஆர்., ஷீட்டை அறை கண்காணிப்பாளர் வாங்கிக்கொள்கிறார். இதன்பின் தியரி பகுதி எழுத அனுமதிக்கப்படுகிறது. பிற தேர்வுகளில், அனைத்து வினாக்கள் பகுதியும் எழுதி முடித்த பின், விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைப்பது போல், இத்தேர்விலும் தியரி எழுதி முடிக்கும் வரை ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்கள் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்," என்றனர்.

அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா?

அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் ஜெயக்குமாருக்கு அப்பா இல்லை. அம்மா பட்டாசு ஆலைக் கூலித் தொழிலாளி. சொந்தங்கள் ஒவ்வொருவரும் வெடிவிபத்தில் இறக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் அவர் முடங்கவில்லை.
தொடர்கதையான வெடி விபத்தின் ஆபத்தை எப்படிப் போக்கலாம் என்று யோசித்தார். விருதுநகர், நாரணாபுரம் அரசுப்பள்ளியில் படிக்கும் ஜெயக்குமாருக்கு ஆசிரியர் கருணைதாஸ் ஊக்கம் அளித்தார்.
வந்தபின் பார்ப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது என உணர்ந்த மாணவர் ஜெயக்குமார், தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கினார்.
இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் கருணைதாஸ், ''ஆலைகளில் வெடிபொருட்கள் கிடங்கு அறைகளில் இந்த இயந்திரத்தைப் பொருத்திவிட வேண்டும். வெடிபொருட்கள் தீப்பிடித்தால் ஏற்படும் வெப்பத்தினை உணரும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அறை வெப்பநிலையை விட சூடு அதிகமாகும்போது, அதை உணர்ந்து தானியங்கி இயந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
உடனே அலாரம் ஒலிப்பதோடு, சிவப்பு விளக்கும் எரியும். அத்துடன் தீயை அணைப்பதற்காக மணல் தொட்டியும் இயந்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறியின் உதவியால் பரவும் நெருப்பின் மீது மணலை வீசி, தீயை அணைக்கலாம்.
இந்த செயல்திட்டம் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. ஜெயக்குமாரை இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவசுப்ரமணியம், இங்கர்சால், உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெக்டே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனம் இவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கியுள்ளது. இதன்மூலம் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
அதே நிறுவனம் மூலம் ஜெயக்குமாருக்கு ரஷ்யா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும். அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார். ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்படுகிறது. இந்நிலையில் உதவும் உள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'' என்கிறார்.
இது எதையும் அறியாமல் சிரித்த முகத்துடன் படித்துக்கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். நம்மிடம் பேசும்போது, ''எங்க ஊருல மாசத்துக்கு ரெண்டு வெடி விபத்தாவது நடந்துரும். எத்தனை லட்சம் குடுத்தாலும் ஒரு உயிர வாங்க முடியாதுல்ல? உயிரைக் காப்பாத்துறக்காண்டி ஏதாவது பண்ணலான்னு யோசிச்சேன்.

சாரோட சேர்ந்து, தீயணைப்பான கண்டுபிடிச்சேன். எல்லாரும் பாராட்டுறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அம்மா இன்னும் நிறைய கண்டுபிடிக்கணும்னு சொனாங்க. சாலை விபத்தத் தடுக்கற கருவி பத்தி யோசிச்சிட்டு இருக்கேன். சீக்கிரத்திலேயே அதையும் பண்ணிடுவேன்'' என்பவரின் முகத்தில் ஒளிர்கிறது தன்னம்பிக்கையும், சாதிக்கும் ஆசையும்.
ஆசிரியர் கருணைதாஸின் தொடர்பு எண்: 9655816364

TET : நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் !!

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும் TET தேர்வு களில், தேர்ச்சி பெற வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் நியமனம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் பெறுகின்றனர். இதனால், சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை சேர்ந்த 3௦00 ஆசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சி இல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில் தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும் பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரென இப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

வெள்ளி, 17 மார்ச், 2017

பால.ரமேஷ்.

காலை வணக்கம்.


தினம் ஒரு திருக்குறள்.


குறள். 318   தேதி. 17.03.2017.



தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

விளக்கம் :

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன்  அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

அல்லது :

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.


நன்றி பால.ரமேஷ். சார்.



2016-2017 - பத்தாம் வகுப்பு - கணக்கு SCERT கற்றல் கையேடு NEW - TM & EM.

2016-2017 - 10th SCERT MLM Notes - MATHS. T/M & E/M.

      NEW     NEW     NEW     NEW     NEW

                            2016 - 2017

Click here to Download 👇

    தமிழ் வழி  👉 T/M - PDF File (86 Pages)


ஆங்கில வழி 👉 E/M - PDF File (56 Pages)




1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்களை கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' அகராதி: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ’நற்றமிழ் அறிவோம்' தூய தமிழகராதி!!!
தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த அகராதியை தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகத முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.செழியன் புதன்கிழமை கூறியது: அகர முதலித் திட்டத்தின் தனித்திட்டப் பிரிவாகச் செயல்படுவது தமிழ்க் கலைக் கழகமாகும். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை வழங்கப்பட்டது.
வல்லுநர் குழு: இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கென இயக்ககத்தின் இயக்குநர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர், பதிப்பாசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியல் தமிழறிஞர்கள், சொல்லாக்க வல்லுநர்கள், மொழிபெயர்ப்பு அறிஞர்கள், தமிழ் அகரமுதலி வல்லுநர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டதாகும்.
தாய்மொழிப் பற்றை வளர்க்க...: பிற மொழியை எழுதுவதும், பேசுவதும் பெருமை என்ற எண்ணம் அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களின் தாய்மொழிப் பற்றை வளர்ப்பதற்காக எங்களது இயக்ககம் சார்பில் புதிய நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே மாணவர்களுக்கு பிறமொழிக் கலப்பில்லாத வகையில் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' என்ற தூய தமிழ் அகராதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வண்ணப் படங்களுடன் தமிழ்ச் சொற்கள்: இன்றைய தலைமுறையினர் ஆப்பிள், பலூன் உள்ளிட்ட வார்த்தைகளை தமிழ் என்று நினைத்து உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தக்கூடிய சொற்களைக் கொண்டு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் அரத்தி (’ஆப்பிள்'), ஊதாம்பி (’பலூன்'), ஒளிப்படம் (’போட்டோ'), கூராக்கி (’ஷார்ப்னர்'), கவ்வி (’கிளிப்'), சொடுக்கி (’பொத்தான்'), சேணியக்கி (’ரிமோட்'), சாளரம் (’ஜன்னல்') ஆகியவை உள்பட மொத்தம் 150 தூய தமிழ்ச் சொற்கள் அதற்குரிய வண்ணப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் வரும் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதையடுத்து தலைமை ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் குறிப்பிட்ட பாட வேளைகளில் மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்கள் குறித்து ஆசிரியர்கள் கற்றுத்தருவர். இந்தத் திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்த கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நூலைத் தொகுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தமிழக பட்ஜெட். ....நிதி அமைச்சர் ஜெயக்குமார்அவர்கள் உரையில் இருந்து.....

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
* காவல்துறைக்கு ரூ 1,483 கோடி
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
*  கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
*  தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
*  உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
*  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
*  ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஐடி துறைக்கு ரூ.116 கோடி
*  போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
*  வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
*  நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.
* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.
* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும்
* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.
* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.
* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.
* 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.

குரூப் - 4 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 20 முதல், ஏப்., 13 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
குரூப் - 4ல் அடங்கிய, இளநிலை உதவியாளர் பதவிக்கு, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள், பிப்., 21ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 20 முதல், ஏப்., 13 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும், பணி நியமனம் வழங்கப்படும் என்பதை, உறுதி கூற இயலாது என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.