அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி!
250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு .அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி
வரும் கல்வியாண்டில் 250 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைக்கும்.
2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், 2017-18-ம் ஆண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) உருவாக்கப்படும். அதேபோல், ஓர் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 9 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல்) தோற்றுவிக்கப்படும்.

அந்த அடிப்படையில் 150 நடு நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் கள் வீதம் மொத்தம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும்போது ஒருபள்ளிக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம் மொத்தம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாகும். 50 சதவீத இடங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமன முறை யிலும் (ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித் தேர்வு மூலம்) நிரப்பப் படுகின்றன. எனவே, புதிதாக உருவாக் கப்படும் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது, 375 இடங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது 450 இடங்கள் (மொத்தம் 900)ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.
பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையிலும், முதுகலை பட்டதாரிஆசிரியர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
அதேபோல், ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போது புதிதாக உருவாகியுள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களும் இந்த தேர்வுகள் மூலமாக நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.