>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 18 பிப்ரவரி, 2017

TNTET -2017: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பங்களை திருப்பி அனுப்ப உத்தரவு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில்  நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு  விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பவிநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும்என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.

SSA - CRC TRAINING PROCEEDING COPY

CRC TRAINING PROCEEDING COPY -SSA - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை குறுவள மைய பயிற்சி- மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி* குறுவள மையஅளவில்பயிற்சி நாள் : 04.03.2017 Topic: primary - physical education upper primary - adolescence 

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களைக் கண்டு நாம் வியந்ததற்கு காரணம் அதன் கிராஃபிக் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பம் கொண்டு வேறு உலகத்துக்கு நம்மைப் பல இயக்குநர்களும் அழைத்து சென்றுள்ளனர் என்பதை மறுக்க
முடியாது. உதாரணமாக ஜுராசிக் பார்க், அவதார், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், என பல்வேறு திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் . இவை அனைத்தும் நாம் நேரில் காண முடியாத ஒரு உலகினை நம் கண்முன்னே கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியவை என்பதே உண்மை.
எனவே நாம் காண விரும்பும் சில அதிசயமான காட்சிகளை தொழில்நுட்பத்தை கொண்டு நேரில் காண உதவியாக ஜப்பான் புதிய 7D தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. நேற்று வெளியான ஒரு வீடியோ ஒன்றில் ஜப்பானில் புதிதாக அமைத்துள்ள 7D தொழில்நுட்ப பூங்கா பற்றிய தகவலை வெளியிட்டனர். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஊக்க ஊதியம் - ஆசிரியர்கள்- பணிக்கு வருவதற்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது சார்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு; வந்தது வினாத்தாள்!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு; வந்தது வினாத்தாள்!!!
தமிழகம் முழுவதும், மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன.
கோவை கல்வி மாவட்டத்தில், 101 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், 72 மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும் நடக்கின்றன.
இங்கு, 65 ஆயிரத்து 708 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு, வினாத்தாள் வினியோகித்தல், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒருங்கிணைக்க, 13 இடங்களில், நோடல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக, நோடல் மையங்களுக்கு, வினாத்தாள் பகிர்ந்தளிக்கும் பணிகள் நடக்கின்றன.
கோவை கல்வி மாவட்டத்திற்கான வினாத்தாள், அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், நேற்று பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. வினாத்தாள் பாதுகாக்க, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப்பள்ளியில் இருந்து, 13 நோடல் மையங்களுக்கும், வினாத்தாள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தெரிவித்தார்.

மார்ச் 2 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச் 2. விடுமுறை !!
மேல்மலையனூர் அங்காளம்மன்கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக எதிர்வரும் மார்ச் 11 ஆம் தேதி பணி நாளாக.
*மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு,  பொதுத்தேர்வு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்கும் பட்சத்தில் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும்*

எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது..

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள்

அச்சடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.

New IT excel format 2016-17

ஆசிரியர்கள் மூன்று ரகம் இதில் நீங்கள் எந்த ரகம்..

ஆசிரியர்கள் பல விதம் !!
ஆசிரியர் பணியென்பது பல பேர்களுக்கு லட்சியப் பணி. அதுவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சவாலானது.

     இத்தகைய அரிதான பணி வாய்ப்பை பெற்ற நம் ஆசிரியர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லையென்பதே உண்மை.

*முதல் ரகம்*
      மாணவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்டு தங்களது பணியை சிறப்பாக செய்பவர்கள். கற்பித்தல் பணியை திறம்பட செய்வதோடு, மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஊட்டுபவர்கள். சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றுபவர்கள்.

     சில நேரங்களில் மாணவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டு பொருளாதார ரீதியாக பல்வேறு உதவிகளைச் செய்வதோடு மட்டுமில்லாமல் உயர்வான நிலைக்கு ஏற்றிவிடும் ஏணிபோல் செயல்படுபவர்கள்.

 *இத்தகைய ஆசிரியர்களை தங்களது வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் மிக அதிகம்*

*இரண்டாம் ரகம்*
     தங்களுக்கு ஆசிரிய பணி கிடைத்துவிட்டது. வேலை செய்கிறோம்,  ஊதியம் பெறுகிறோம் என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

     கற்பித்தல் பணியிலும் எத்தகைய தேடுதலும் இல்லாதவர்கள். தானுண்டு, தன் பணியுண்டு என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

 *இவர்களைப் போன்ற ஆசிரியர்களால் பள்ளிக்கூடத்திற்கும், மாணவர்களுக்கும்  மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படாது.*

*மூன்றாம் ரகம்*
     இவர்கள் தான் மிக முக்கியமானவர்கள். தாங்கள் ஆசிரியர் பணிக்கு வந்ததையே மறந்துவிட்டு தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தி பள்ளிக்கூடங்களில் பாதிப்பை உண்டாக்குபவர்கள்.

    பள்ளிகளில் ஜாதி ரீதியாகவும், வேறு ஏதேனும் வகையிலும்  குழுக்களை ஏற்படுத்தி பிற ஆசிரியர்களுக்கு தொல்லை தருபவர்கள்.
              *தலைமையாசிரியருக்கு ஜால்ரா போடுவதும், மற்ற ஆசிரியர்களைப் பற்றி மற்றவர்களிடம் போட்டுக் கொடுப்பது, ஏதேனும் காரணத்தைக்கூறி பள்ளிக்கூடத்திலிருந்து Escapeஆகி விடுவது, தனியார் பள்ளிகளுக்கு ஏஜெண்ட் போல செயல்பட்டு ஆதாயம் பெறுபவர்கள்*

     மக்களிடையே அரசு பள்ளிகள் பற்றிய அவநம்பிக்கை ஏற்பட்டதற்கு இந்த மூன்றாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முழுக் காரணம்.

     *எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதனையும் மீறி அரசு பள்ளிக்கூடங்களில் மிக இயல்பாக சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் முதல் ரக ஆசிரியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.*

    . *ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் முதல் ரக ஆசிரியர்கள் நிறைய உருவாகி வருகிறார்கள். அவர்களின் ஆசிரியர்களை வழிகாட்டியாகக் கொண்டு*
என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.*

எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது..

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள்

அச்சடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.

ஒரே நேரத்தில் 104 செயற்கை கோளை செலுத்தி சாதனை : புதிய வரலாறு படைத்தது 'இஸ்ரோ


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' நேற்று, 'பி.எஸ்.எல்.வி., - சி ௩௭' ராக்கெட் மூலம்,104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, புதிய சாதனை படைத்தது. இஸ்ரோ வரலாற்றில், இது புதிய மைல் கல்லாகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' வர்த்தக ரீதியாக, செயற்கை கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'பி.எஸ்.எல்.வி., - சி 37' என்ற ராக்கெட் மூலம், பூமி ஆய்விற்காக, இந்தியாவின், 'கார்டோசாட் - 2' செயற்கை கோளை, நேற்று, 9:28 மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.


இந்த செயற்கை கோளுடன், இந்தியா - 2, அமெரிக்கா - 96, இஸ்ரேல் - 1, கஜகஸ்தான் - 1, நெதர்லாந்து - 1, சுவிட்சர்லாந்து - 1, ஐக்கிய அரபு எமிரேடு - 1 என, ஏழு நாடுகளின், ௧௦௩ செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன.

இந்த ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட்ட, 17வது நிமிடத்தில், 'கார்டோசாட் - 2' செயற்கை கோள், பூமியில் இருந்து, 510 கி.மீ., உயரத்திலும், மற்ற செயற்கை கோள்கள், 18, 28வது நிமிடங்களில், 524 கி.மீ., உயரத்திலும் நிலை நிறுத்தப்பட்டன. பூமி ஆய்வு : இதற்கு முன், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஒரே முயற்சியில், 37 செயற்கை கோள்களை அனுப்பியது சாதனையாக இருந்தது. தற்போது, ஒரே முயற்சியில், 10௪ செயற்கை கோள்களை அனுப்பியதன் மூலம், 'இஸ்ரோ' அந்த சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே, 2015 ஜூனில், ஒரே முயற்சியில், 23 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, இஸ்ரோ சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

'கார்டோசாட் - 2' செயற்கை கோள், 714 கிலோ எடை உடையது. பூமியில் இருந்து, 510 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பூமி ஆய்வு, நதி நீர் மேம்பாடு, நில பயன்பாட்டு வரைபடங்கள் தயாரித்தல், சாலை இணைப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். திறமை : இது குறித்து, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது: இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றொரு முறை, தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர்.

தற்போது, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள்களில், 77 செயற்கை கோள்கள் செயல்பட துவங்கி விட்டன. இதுவரை, இஸ்ரோ செலுத்திஉள்ள, 229 செயற்கை கோள்களில், 179 செயற்கை கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நம் விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். தங்களின் திறமையை, மற்றொரு முறை நிரூபித்துள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், 'இஸ்ரோவின் சாதனை மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டு மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.

ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்





ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய அப்டேட் மூலம் சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி வாடிக்கையாளர்கள் ஜியோ ஹேப்பி ஹவரில் திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்
ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் துவங்கப்பட்டதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அதன் செயலிகளை பயன்படுத்தும் வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜியோ சினிமா எனும் ஆப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு மொழிகளை சேர்ந்த திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க வழி செய்கிறது. ஆன்லைனில் பார்ப்பதோடு மட்டுமின்றி அவற்றை டவுன்லோடு செய்யும் வசதியும் சில திரைப்படங்களில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஜியோ சினிமா செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் டவுன்லோடு வசதி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஜியோ ஹேப்பி ஹவர் நேரத்தில் திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம். ஜியோ ஹேப்பி ஹவர் அதிகாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆகும்.
ஜியோசினிமாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. முன்னதாக இவற்றில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சில திரைப்படங்களை டவுன்லோடு செய்ய முடியும். இம்முறை புதிய அப்டேட் மூலம் திரைப்படங்களை ஸ்மார்ட் டவுன்லோடு மூலம் இரவு உறங்கும் முன் டவுன்லோடு நேரத்தை செட் செய்து காலை எழுந்ததும் டவுன்லோடு ஆன திரைப்படத்தை பார்க்க முடியும்.
புதிய வசதியின் மூலம் திரைப்படங்களை பார்க்க ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான திரைப்படத்தை தேர்வு செய்து டவுன்லோடு பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு கிளிக் செய்ததும் உடனடி டவுன்லோடு மற்றும் ஸ்மார்ட் டவுன்லோடு என இரண்டு ஆப்ஷன்கள் திரையில் தெரியும். இதில் ஸ்மார்ட் டவுன்லோடு ஆப்ஷனை தேர்வு செய்தால் திரைப்படம் தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் டவுன்லோடு ஆகும்.
இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் திரைப்படத்தை தங்களுக்குத் தேவையான தரத்தில் டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்?


உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவை, முதல்வர் பதவிக்கு வரவிடாமல், திறமையாக முறியடித்த, கவர்னர் வித்யாசாகர் ராவ், மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய அனுபவம் உள்ளவர்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில், தெலுங்கானா பகுதி, கரீம் நகர் மாவட்டம், நகரம் ஊரில், 1942 பிப்., 12ல் பிறந்தவர் வித்யாசாகர் ராவ். ஐதராபாத்தில் பள்ளிப்படிப்பும், புனேயில் பட்டப்படிப்பும், ஐதராபாத் உஸ்மானியா பல்கலையில், சட்ட படிப்பும் முடித்தவர்.
1973 முதல், வழக்கறிஞராக இருந்தார். மாணவ பருவத்தில், அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஜன சங்கத்தில் பணியாற்றியுள்ளார். உஸ்மானியா பல்கலை மாணவர் தலைவர் தேர்தலில், வெற்றி பெற்றுள்ளார். 1975ல், நெருக்கடி காலத்தில் சிறை சென்று உள்ளார்.
கடந்த, 1985 முதல், 1998 வரை, ஆந்திர சட்டசபையில், மேட்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.,-வாகவும், 1998ல், ஆந்திர மாநில பா.ஜ., தலைவர், பின், கரீம் நகர் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
பின், 1999 முதல், 2004 வரை, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில், உள்துறை இணை அமைச்சராக இருந்தார். வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பதவிகளையும் வகித்தார்.பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வந்ததும், மஹாராஷ்டிரா கவர்னராக, 2014 ஆக., 30ல் நியமிக்கப்பட்டார்.

 பதவியேற்ற ஒரு மாதத்தில், மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் பிரிதிவிராஜ் சவான், செப்., 26ல், ராஜினாமா செய்தார்.
அதை வித்யாசாகர் ஏற்று, ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார். 2016, செப்., 2 முதல், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக, நியமிக்கப்பட்டார். வித்யாசாகர் ராவுக்கு, வினோதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
 மூன்று சகோதரர்கள், எட்டு சகோதரிகள் உள்ளனர். இவரது சகோதரர் ராஜேஷ்வர் ராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலர்.மற்றொரு சகோதரர் ஹனுமந்த ராவ், திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் மற்றும் ஐதராபாத் மத்திய பல்கலையின் முன்னாள் துணை வேந்தராக, பதவி வகித்துஉள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு, சட்டமன்றத்தில் 15 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

RAJ BHAVAN PRESS RELEASE COPY -


31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

*எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர்.*


*திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை.*

*செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை.*

*செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை.*

*தங்கமணி - மின்சாரத்துறை*

*பெஞ்சமின் - ஊரக தொழில்துறை*

*நிலோபர் - தொழிலாளர் துறை*

*எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை*

*மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை.*

*பாஸ்கரன் - காதித்துறை.*

*ராமச்சந்திரன் - இந்து அறநிலையத்துறை.*

*பெஞ்சமின் - ஊரக தொழில்துறை.*

*வேலுமணி - உள்ளாட்சித்துறை.*

*ஜெயக்குமார் - மீன்வளத்துறை.*

*சி.வி.சண்முகம் - சட்டத்துறை.*

*அன்பழகன் - உயர்கல்வித்துறை.*

*சரோஜா - சமூக நலத்துறை.*

*எம்.சி.சம்பத் - தொழில்துறை.*

*கருப்பண்ணன் - சுற்றுச்சூழல்.*

*காமராஜ் - உணவுத்துறை.*

*ஓ.எஸ்.மணியன் - கைத்தறி துறை.*

*உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை.*

*விஜயபாஸ்கர் - நல்வாழ்வுத்துறை.*

*துரைகண்ணு- வேளாண் துறை*

*கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் மக்கள் தொடர்பு.*

*உதயகுமார் - வருவாய்துறை.*

*நடராஜன் - சுற்றுலாத் துறை.*

*கே.சி.வீரமணி - வணிவரித்துறை.*

*ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை.*

*ராஜலட்சுமி - ஆதி திராவிடர் நலத்துறை.*

*எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.*

*பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடைத்துறை.*




அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்

புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் உள்ளது.
ஆனால், இது சில நேரங்களில் எதிர்மறையாக அமைந்து விடுகிறது.
பாஸ் செய்து அடுத்தடுத்த வகுப்புகளில் காலடி எடுத்து வைத்தும், மாணவர்கள் குறைந்தபட்ச கற்றல் திறன்கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வந்தும்கூட மாணவ, மாணவியரில் சிலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர்.தமிழ் மொழியை வாசிக்கத் திணறும் இந்த மாணவர்கள் கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களைப் படிப்பது கடினமாகும்.எனவே, தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும், கணிதம் கற்றுத் தருவதும்அவசியமாகிறது.இதற்காக, புதுச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வாசிப்புடன் கூடிய 'மேத்ஸ் கார்னர்' துவங்க, திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய அரசின் சர்வ சிக்க்ஷா அபியான் திட்டத்தின் துணை திட்டமான 'பதே பாரத்; படே பாரத்' (படிக்கும் இந்தியா; முன்னேறும் இந்தியா) திட்டத்தின் கீழ், ரொக்கமில்லாத பரிவர்த்தனை முறையில் 5 ஆயிரம் ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் சுகாதார துாதர் திட்டம் அறிமுகம் செய்து, கழிப்பறை சுகாதாரம் குறித்து கண்காணிக்கப் பட்டது.
இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. அதேபோன்ற நடைமுறையை 'மேக்ஸ் கார்னர்' விஷயத்திலும் நடைமுறைப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு துாதர் என, ஒரு மாணவர் நியமிக்கப்பட உள்ளார்.இந்த 'ஹைக்டெக்' திட்டத்தின் மூலம், புதுச்சேரி பிராந்தியத்தில் 5117 மாணவர்கள், காரைக்கால்- 1859, மாஹி-505, ஏனாம்-775 என, ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8,256 பேர் பயனடைய உள்ளனர்.அதன்படி, 3,993 மாணவர்கள், 4,263 மாணவிகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிதத்தில் சாதிக்கவும் கற்றுக்த் தரப்பட உள்ளது. இதற்காக, 2 ஆயிரம் புத்தகங்கள் கதைகளுடன் கூடிய கல்வி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.என்.சி.இ.ஆர்.டி., புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் ஆய்வு நடத்தியது.

இரண்டு வகுப்புகளிலும், தேசிய சராசரியை காட்டிலும் புதுச்சேரி துவக்கப் பள்ளி மாணவர்கள் மேலோங்கியே இருந்தனர்.மூன்றாம் வகுப்பில் தேசிய அளவில் மொழிப்பாட கற்றல் திறன் 64 மதிப்பெண் ஆக இருந்தபோது, புதுச்சேரி மாணவர்களின் கற்றல் திறனில் 73 மதிப்பெண் ஸ்கோர் செய்து சாதித்தனர். கணிதத்தில், தேசிய சராசரி 60 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 75 மதிப்பெண் பெற்று, முத்திரை பதித்தனர்.ஐந்தாம் வகுப்பிலும் கணித பாடத்தில் தேசிய சராசரி 241 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 246 மதிப்பெண் ஸ்கோர் செய்திருந்தனர்.தற்போது, ஒன்றாம், இரண்டாம் வகுப்பில் வாசிப்புடன் கூடிய 'மேக்ஸ் கார்னர்' விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

How to pay Tax via Online - Tips....


Tax Payment அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் online மூலம் தங்களது account இல் இருந்து எப்படி செலுத்துவது என்பதை பார்ப்போம் ....online tax payment Tips..



1.CLICK HERE ONLINE TAX E - PAYMENT ....


2.FOLLOW EACH STEPS WHEN YOU FILLING TAX PAYMENT .......


3.FILL UP ALL THE COLUMN AS SHOWN IN THE FIGURES....


4.TAX PAYER SHOULD VERIFY THE ACCOUNT DETAILS AFTER FILLING THE APPLICATIONS....

5.AFTER COMPLETION THE FORMS CLICK PROCEED ....

6.IN THIS CHALLAN 280 E-TAX PAYMENT YOUR NAME WILL BE DISPLAYED AND ALL OTHER DETAILS YOU HAVE GIVEN DISPLAYED ....THEN YOU CLICK YOUR BANK NAME WHICH YOU USE TO PAY .....

7.TAX PAYER CHOOSE NET BANKING OR ATM CARD TO PAY THERE ADVANCE TAX....

THEN TAKE A PRINT OUT CHALLAN AND SUBMIT YOUR OFFICE

தமிழக அரசின் புதிய அமைச்சரவை

TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு

TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு..
தேர்வு தேதியும் மாற வாய்ப்பு.. 
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை, மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து, தேர்வு மையங்களை இறுதி செய்திருந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான், ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். அப்போது, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேதி, தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது தேர்வு நிறைவு பெறும் வரை, தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த அனுமதிக்க இயலாது. எனவே, நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்த தேவையான, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் (டேபிள், சேர், குடிநீர், விளக்கு, பேன், கழிவறை வசதிகள்) இருப்பது குறித்து, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தகுதியான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விடும்.
இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியும், விரைவில் மாற்றம் செய்யப்படும். புதிய அமைச்சரவை அமைய இருப்பதால், தேர்வு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tamil nadu Govt - New Cabinet