மரபுவழி விளையாட்டான ‘பாயும் புலி’ விளையாட்டில் பங்கேற்றுள்ள மாணவர்கள்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழகத்தின் மரபுவழி விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர்களின் மரபு வழி விளை யாட்டு என்பது குழு உணர்வை மையப்படுத்தியதாகும். கபடி, கிட்டிப்புல், ஓடி ஒளிந்து விளை யாடு தல் என்று நீண்டு செல்கின்ற தமிழர்களின் விளையாட்டு மரபு களைப் பட்டியலிட்டாலே அதுபுரி யும். நாகரிகம், பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செஸ், கேரம் போர்டில் தொடங்கி தொலைக்காட்சி, இணையதள வசதி, ஆண்ட்ராய்டு செல்போன் களின் வருகை என்று பல கார ணிகள் நம் மரபுகளைச் சிதைத்து வருகின்றன.
அதனால், குழந்தைப் பருவத் தில் விளையாடும்போது கிடைக்க வேண்டிய தன்னம்பிக்கை கிடைப் பதில்லை. தோல்வியை, விமர் சனத்தை ஏற்றுக்கொள்கின்ற மனவலிமையும் தற்போதைய மாணவர்கள், இளைஞர்களுக்கு குறைந்துவருகிறது. வாழ்க்கையை எளிமைப்படுத்துகிற பல்வேறு வசதிகள் கிடைத்துள்ள இக்கால கட்டத்திலும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கும், குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளதற்கும் இதுவே மூலகாரணமாக உள்ளது.
இந்நிலையை மாற்ற வேண்டு மானால் நாம் மறந்துபோன மரபு வழி விளையாட்டுகளை மீட்டெடுப் பதுதான் ஒரே வழி என்று உணர்ந்து, இதனை முன்னிறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக. திரு வாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள மேலராதா நல்லூர் அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மணிமாறன் தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து மரபுவழி விளையாட்டுகளை நடத்தி வருகிறார். பள்ளியில், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று நடை பெற்ற நிகழ்ச்சிகளில் மரபுவழி விளையாட்டுகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிர் எழுத்துகளில் குறில் எழுத் துகளை மாணவர்கள் சத்தமாக வும், நெடில் எழுத்துகளை சிரித் துக்கொண்டே வேகமாகவும் கூற வேண்டும். சப்த விளையாட்டு என்ற இதை விளையாடும்போது 247 தமிழ் எழுத்துகள், அவற்றுக் கான மாத்திரை அளவு, சரியான உச்சரிப்பு போன்றவற்றை விளை யாட்டுடன் சேர்த்தே பயிற்றுவிக்க முடியும்.
மாணவர்களை 10 பேர்கொண்ட குழுக்களாகப் பிரித்து 2 குழுக் களுக்கு இடையே போட்டியை நடத்த வேண்டும். முதல் 10 பேரில் 5 பேர் குனிந்துகொண்டும், மீத முள்ள 5 பேர் குனிந்தவர்களைத் தாங்கிக்கொண்டும் இருக்க வேண் டும். அடுத்த குழுவில் உள்ள 10 பேரும் ஒருவர்பின் ஒருவராக ஓடிச்சென்று குனிந்தவர்களின்மீது பாய்ந்து அமர வேண்டும். 5 பேர் வரை சரியாக அமர்ந்துவிட்டால் அல்லது குனிந்தவர்கள் சாய்ந்து விட்டால் உட்காரும் அணிக்கு வெற்றி. உட்கார முடியாவிட்டால் குனிந்தவர்களுக்கு வெற்றி. பாயும் புலி எனப்படும் இந்த விளையாட் டின் மூலம் உடல் வலிமை அடைவ துடன் கூட்டுறவு மனப்பான்மை யும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
மாணவர்கள் ஒவ்வொரு சொற் களாகக்கூறி ஒரு கதையை உரு வாக்கும் போட்டி கதை விளை யாட்டு. கற்பனை யுடன் சேர்த்து கதைகளின் மையக் கருத்தை மட்டுமே உள்வாங்கும் திறன் அதிகரிக்கிறது.
விளையாடுபவர்களை இரு அணிகளாக பிரித்து எதிரெதிரே நிற்க வைத்து மையத்தில் ஒரு வட்டம் வரைந்து, ஒரு குச்சியை வட்டத்தில் குத்தி வைக்க வேண்டும், அதை எடுக்க இரு தரப்பிலும் இருந்து ஒருவர் முயலும் விளையாட்டு, எலும்புத்துண்டு விளையாட்டு. இந்த விளையாட்டு சுறுசுறுப்பு, கூடுதல் கவனம் ஆகியவற்றை மாணவர்களிடம் வளர்க்கிறது.
இன்றளவும் கிராமப்புறங்களில் விளையாடப்பட்டுவரும் விளை யாட்டு தாத்தா குச்சி என்பது. இந்த விளையாட்டில், சிதறிய குச்சி களை ஒவ்வொன்றாக, ஒன்று மற் றொன்றின் மீது மோதிவிடாமல் எடுக்க வேண்டும். நரம்புத் தளர்ச்சி யின்மை, சிந்திக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு வளர்க்கிறது.
இதுகுறித்து ஆசிரியர் மணி மாறன் கூறியது: இந்த மரபுவழி விளையாட்டுகள், எதிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க உதவும். ஆசிரியர் மாணவர்கள் இடையே யான இடைவெளி குறைந்து கற் பித்தல் எளிதாக நடைபெற இத் தகைய விளையாட்டுகள் உதவும். மேலும், மாணவ, மாணவிகள் கூடி விளையாடுவதால் பாலின சமத்துவம் பிறக்கும்.
மணிமாறன்
எங்கள் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் அனுபவத்தின் வாயிலாக மரபுவழி விளையாட்டுகளின் மகத்துவத்தை நன்றாக உணர்கிறோம். இந்த முயற்சிக்கு ‘பல்லாங்குழி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனியன், பள்ளி தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு காரணம் என்றார்.