>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 7 ஜனவரி, 2017

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?


 இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!
நம் முன்னோர்கள் நமக்கெல்லாம் முன்னோடிகள்.

 இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!
நம் முன்னோர்கள் நமக்கெல்லாம் முன்னோடிகள்.

4 நாட்களில் 4 கிலோ எடை மற்றும் 14 செ.மீ இடு4 நாட்களில் 4 கிலோ எடை மற்றும் 14 செ.மீ இடுப்பளவைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க...

4 நாட்களில் 4 கிலோ எடை மற்றும் 14 செ.மீ இடு4 நாட்களில் 4 கிலோ எடை மற்றும் 14 செ.மீ இடுப்பளவைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க...



உடல் பருமனால் அவஸ்தைப்படுகிறீர்களா? இங்கு  4 நாட்களில் 4 கிலோ எடை மற்றும் 14 செ.மீ இடுப்பளவைக் குறைக்க உதவும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.


உடல் எடை பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளதுஅந்த உடல் எடையைக் குறைக்க ஏராளமானவழிகள் இருந்தாலும்ஒருசில வழிகளே நல்ல தீர்வைக் கொடுக்கும்மேலும் எடையைக்குறைக்க நினைப்போர் பலரும் எளிதில் உடல் எடையைக் குறைக்கும் வழியைத் தான்நாடுவார்கள்அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் இந்த கட்டுரையில் 4 நாட்களில் 4 கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர்அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளதுமுக்கியமாக இந்த பானத்தை 4 நாட்களுக்குமேல் குடிக்கக் கூடாதுசரிஇப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் அந்த பானத்தைஎப்படி செய்வதென்று காண்போம்.


தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 8 டம்ளர்
வெள்ளரிக்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சிப் பொடி - 1 டீஸ்பூன்
புதினா இலைகள் - 12
உலர்ந்த புதினா இலைகள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1 (துண்டுகளாக்கப்பட்டது)


தயாரிக்கும் முறைஒரு கண்ணாடி பாட்டிலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துபொருட்களையும் போட்டுஇரவு முழுவதும் ஊற வைக்க வைக்க வேண்டும்மறுநாள்காலையில் அதை வடிகட்டினால்பானம் குடிக்க தயார்!
குடிக்கும் முறைதயாரித்து வைத்துள்ள பானத்தை நாள் முழுவதும் 4-5 டம்ளர் குடிக்கவேண்டும்முக்கியமாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரைக்குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி இந்த பானத்தைக் குடிக்கும் 4 நாட்களும்மிதமான அளவில்உடற்பயிற்சியை செய்து வர வேண்டியது அவசியம்இதனால் இடுப்புவயிறு மற்றும்உடலின் மற்ற பாகங்களில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

குறிப்பு இந்த பானத்தை தொடர்ந்து 4 நாட்கள் குடித்த பின், 1 வாரம் இடைவெளி விட்டுதான் மீண்டும் குடிக்க வேண்டும்

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் - ஆசிரியர்களின் ஊதியம், இதர பணபலன்கள் மற்றும் பணிப்பதிவேடு உள்ளிட்ட அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் உத்தரவு...

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் - ஆசிரியர்களின் ஊதியம், இதர பணபலன்கள் மற்றும் பணிப்பதிவேடு உள்ளிட்ட அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் உத்தரவு...

You Tube-ல் கலக்கும் கணக்கு டீச்சர்!

You Tube-ல் கலக்கும் கணக்கு டீச்சர்!

அரசுப் பள்ளி என்றால் கேட்குற விஷயத்தில் சுருதி குறையும் இந்த காலத்தில், கணிதத்தை வெகு எளிதாக சொல்லிக்கொடுத்து அதை தன் செல்போனில் பதிவுசெய்து பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூபில் பதிவேற்றம் செய்து அசத்தி வருகிறார் திர

அரசுப் பள்ளி என்றால் கேட்குற விஷயத்தில் சுருதி குறையும் இந்த காலத்தில், கணிதத்தை வெகு எளிதாக சொல்லிக்கொடுத்து அதை தன் செல்போனில் பதிவுசெய்து பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூபில் பதிவேற்றம் செய்து அசத்தி வருகிறார் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  கணக்கு டீச்சர் ரூபி கேத்தரின் தெரசா.
இவர் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள் என்பது வாவ் தகவல்.
1986-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து அதன்பிறகு  2007-ம் ஆண்டில் சேலம் அருகிலுள்ள சின்ன சீரகங்கபாடி அரசு பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குள்ள குழந்தைகள் படிக்க சிரமப்படுவது தெரிந்தது அதை போக்க வழிகளை தேடினேன். பிள்ளைகளுக்கு வித்தியாசமாக சொல்லி கொடுப்பது எப்படி என்று இணையத்தில் தேடினேன். அதைவைத்து எனக்கிருந்த அனுபவத்தோடு சேர்த்து எளிதாக சொல்லிக் கொடுக்க, பிள்ளைகள் 98, 99 வாங்க ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து ஆரம்பித்தது என் கற்பித்தலின் உற்சாக பயணம்” என்றவரின் வார்த்தைகளில் அத்தனை வாஞ்சை, அவரது வீடியோவைப் போல்.
‘‘பொதுவாக நான் வகுப்புக்குள் நுழைந்தவுடன் பிள்ளைகளிடம் “என்னை ஆசிரியரா நினைக்காதமா. உன்னுடைய அம்மாவாகவோ அல்லது உனக்கு யாரைப் புடிக்குமோ அவங்களா நினைச்சுக்கோடா கண்ணு. அப்படினா நீ நல்லா படிச்சுருவ” என்பேன். பொதுவாக அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் இல்லாமல், அல்லது பெற்றோரில் ஒருவர் இல்லாமல் படிக்க வருகின்ற குழந்தைகள்தான் ஏராளம். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் கண்ணீரில் கரைக்க வைக்கும். அதனாலேயே பாப்பு, செல்லம் என்பது போன்ற வார்த்தைகளை உபயோகித்து பாடங்கள் சொல்லி கொடுப்பேன். கண்டிக்கும்போது ‘பாப்பு’ என்கிற சொல்லை தவறவிடமாட்டேன்” என்கிறவர் தான் வாட்ஸ்அப்பில் வந்த கதையைச் சொன்னார்.
ஆரம்பத்தில் இணையத்தளத்தில் வீடியோ போடாலாமா வேண்டாமா என்ற பயம் இருந்துக்கொண்டே இருந்தேன். பிறகு, எளிய வகையில் வாய்பாடு கற்றுக்கொள்வதற்கு உதவியாகவும், காது கேட்காத குழந்தைகளும் பார்த்து புரிவது போல அனிமேஷன் செய்திருந்த அந்த வீடியோ அதிக வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து பேஸ்புக்கில் ‘வர்க்கப்படுத்துவது எப்படி?’ என்பதை வீடியோவாக பதிவேற்றம் செய்தேன். 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது இந்த வீடியோ. மூன்று வழிகளில் பெருக்கல் செய்வது எப்படி என்கிற வீடியோவை 63 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்” என்று சொல்லி வாயடைக்கிற ரூபி, இதுவரை 200 வீடியோக்களுக்கு மேல் எடுத்து அப்லோட் செய்திருக்கிறார்.
‘‘என்னோட வீடியோவ பார்த்துட்டு டீச்சர் இதைப் பத்தி போடுங்க, அந்த கணக்கு கஷ்டமா இருக்கு, அந்த முறை சொல்லி கொடுங்கனு பசங்க, அம்மாக்கள் ஆர்வமா கேக்க ஆரம்பிச்சாங்க. பத்தாம் வகுப்பு படிக்கின்ற குழந்தைகளுக்காக என்னுடைய பிளாக்கில் (http://rubitheresa.blogspot.in/) பல பகுதியில் இருந்தும் டீச்சர் இதைப்போடுங்க, இதை சொல்லிக்கொடுங்க என்று அழைத்து சொன்னார்கள். குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு என்னுடைய வீடியோ உதவியாக இருக்கிறது என்று சொல்லும்போது மகிழ்வாக இருக்கிறது.
உங்களுடைய வீடியோக்களை டவுன்லோடு செய்தே செல்போன் மெம்மரி தீர்ந்துவிடும் போலிருக்கிறதே, வீடியோ அதிகமாக இருப்பதால் செல்போன் ஹேங்க் ஆகுதே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் என்னுடைய முறையினை கடைப்பிடிப்பதாகவும், எங்களுக்கு பயிற்சி கொடுங்கள் என்கிறார்கள். வெளிநாட்டினர் என்னுடைய வீடியோவைப் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்”  என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
நீங்கள் வீடியோவில் பாடம் நடத்தும்போது சொல்லுடா கண்ணு, கவனிடா கண்ணு என்று சொல்கிறீர்களே?
“பாடம் நடத்தும்போது சொல்லுடா கண்ணு, பாருடா கண்ணு என்று குழந்தையை அழைக்கும் விதத்தை நிறைய பேர் பாதித்திருக்கிறது. எப்படி டீச்சர் இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள். பொதுவாக குழந்தைகளிடம் அன்பாகப் பழகும்போது தான் அவர்களுடைய குணாதியசங்களும் மாறும். வெறும் படிப்பு மட்டுமல்ல, அவை பண்பையும் வளர்க்க வேண்டும். பாடம் சொல்லிக்கொடுக்கும் முறையிலேயே பண்பையும் சொல்லிக்கொடுக்க முடியும். என்னடா கண்ணு, என்னடா பாப்பு என்று பேசும்போது தான் என் மீது ஆசிரியர்கள் மீது பிடிப்பு ஏற்பட்டு. எந்த வளமும் இல்லாம அதே நேரம் படிக்கவும் சிரமப்படுற குழந்தைங்களுக்குத் தான் நான் தேவை. 
வீடியோ டெக்னாலஜி எப்படி கையாளுகிறீர்கள்?
“வகுப்பில் கடைசி பத்து நிமிடம் வீடியோவுக்காக செலவழிக்கிறோம். இதற்காக சிம் போடாத போனைத் தான் உபயோகிக்கிறேன். வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே யூடிப் மற்றும் வாட்ஸ்அப்பில் அப்லோடு செய்து விடுவேன். இதற்கு என் மகனும், மகளும் உதவி செய்வார்கள்."
அரசு பள்ளியில் இருந்துகொண்டு இதனை எளிதாக செய்ய முடிகிறதா?
“தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு நிறைய வசதிகள் அரசுப் பள்ளிகளில் இருக்கிறது. நாம் எந்தளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் இருக்கிறது. டெக்னாலஜி மூலமாக குழந்தைகளுக்கு எப்படி கல்வி கற்றுக்கொடுப்பது என ஒவ்வொரு மாவட்ட அளவிலும் பயிற்சி வழங்கி வருகிறார்கள். நல்ல அங்கீகாரமும் இருக்கிறது. எங்கள் பள்ளிக்கு இயக்குநரே நேரடியாக வந்து பாராட்டி இருக்கிறார்.
உங்களுடைய குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?
“என் அப்பாதான் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தார். அம்மா மனநிலை பாதிக்கப்பட மிகுந்த சிரமத்துக்கு இடையில் அப்பாவின் உதவியோடு படித்து முன்னேறினேன். எனக்கு ஏற்பட்ட சிரமம், மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்திருக்கிறேன். மாரடைப்பு என்கிற கொடிய நோயால் என் கணவரும் பிரிந்துவிட என் மகன், மகள் துணையால் நான் இன்று நடமாடிக் கொண்டிருக்கிறேன். மகன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். என் மகளுக்கு சென்னையில் படிக்க வாய்ப்பு கிடைத்து, எனக்காக இங்கேயே கல்லூரியில் படிக்கிறாள். இப்படிப்பட்ட தங்கமான பிள்ளைகள் இருப்பதாலேயே என் பள்ளி வாழ்க்கை நிறைவாக போய்க்கொண்டிருக்கிறது" என்றபடி வகுப்பறைக்குச் செல்கிறார் ரூபி டீச்சர்.
வாழ்த்துகள் டீச்சர்...

தமிழகத்தில் ஓட்டுநர் உரிம கட்டணம் உயர்வு.

தமிழகத்தில் ஓட்டுநர் உரிம கட்டணம் உயர்வு.

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.350-ஆக இருந்து தற்பொது ரூ.650-ஆக உயர்த்தபட்டுள்ளது.
மேலும் வாகன தகுதிச்சான்று கட்டணம் ரூ.550-ல் இருந்து ரூ.1,050-ஆக உயர்ந்துள்ளது. தவணை கொள்முதல் ரத்து சான்றுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் பாண்டியராஜன்.

புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் பாண்டியராஜன்.

சென்னை அமைந்தகரையில் 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் 19–ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இதன் ஏற்பாடு செய்துள்ளது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்.
இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் புத்தக கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலே தமிழகத்தில் தான் அதிக நூலகங்கள் உள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா புத்தகங்கள் மீது அதிக அளவில் அக்கறை கொண்டிருந்தார் என்றார்.

பி.ஆர்க்., நுழைவுத்தேர்வில் அதிரடி மாற்றம் : ஆன்லைன் பதிவு துவக்கம்.

பி.ஆர்க்., நுழைவுத்தேர்வில் அதிரடி மாற்றம் : ஆன்லைன் பதிவு துவக்கம்.

பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கட்டட வடிவமைப்பு மற்றும் மாதிரி கட்டமைப்பை உருவாக்குவதற்கான, ஆர்க்கிடெக்ட் படிப்பான, பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., நாடு முழுவதும், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் உள்ளன.
இந்த படிப்புகள், தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றன.
பிளஸ் 2வில், கணிதப் பிரிவு படித்தோர், பி.ஆர்க்., படிப்பில் சேரலாம். இதற்கு, 'நாட்டா' எனப்படும், தேசிய திறன் மற்றும் நுழைவுத் தேர்வு, ஏப்., மே மாதங்களில் நடத்தப்படும். இதில், பல முறைகேடுகள் ஏற்படுவதாகவும், மாணவர்களின் தகுதி சரியாக நிர்ணயிக்கப்படுவது இல்லை என்றும் புகார் எழுந்தது. எனவே, இந்த ஆண்டு முதல், ஒரே நாளில், எழுத்து மற்றும் வரைபடத் தேர்வையும் நடத்தும் மாற்றத்தை, தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும், ஏப்., 16, காலை, 11:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம், 200 மதிப்பெண்களில், ஏ பிரிவில், கணிதம் குறித்து, 40 மதிப்பெண்களுக்கு, 20 கேள்விகள்; பொது திறன் குறித்து, 80 மதிப்பெண்களுக்கு, 40 கேள்விகள்; பி பிரிவில், 80 மதிப்பெண்களுக்கு, இரண்டு வரைபடங்களும் இடம் பெறும். தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு
முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, http://www.nata.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து துணைவேந்தர்களிடம் கவர்னர் ஆலோசனை.

உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து துணைவேந்தர்களிடம் கவர்னர் ஆலோசனை.

உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, பல்கலை துணைவேந்தர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சார்பில், கவர்னர் அலுவலக முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:
புத்தாண்டு பிறந்த பின், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஜன., 4, இரவில் சென்னைக்கு வந்தார். புத்தாண்டை ஒட்டி, அதிகாரிகள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், கவர்னரை சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
அதன்படி, ஜன., 5ல், பல்கலைகளின் வேந்தரான, தமிழக கவர்னரை, பல்கலைகளின் துணைவேந்தர்கள் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, ராஜ் பவனின் காலண்டர் வெளியிடப்பட்டது.தமிழக பல்கலைகளின் மேம்பாடு, உயர்கல்வி தரத்தை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும், துணைவேந்தர்களிடம், கவர்னர் ஆலோசித்தார். இதை, அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவை, பல்கலைகளின் துணைவேந்தர்கள் சந்தித்தது குறித்து, கவர்னர் விசாரணை நடத்தினார் என கூற முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்கள் இடமாறுதலுக்கு தடை இல்லை.

ஊழியர்கள் இடமாறுதலுக்கு தடை இல்லை.

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி செப்., 1 ல் துவங்கியது. இந்த பணியில் ஈடுபட்ட கலெக்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர், தாசில்தார், துணை தாசில்தார், இளநிலை உதவியாளர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர், அங்கன்வாடி ஊழியர், வி.ஏ.ஓ.,க்களை இடமாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இதனால் தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்றபின்பே மாற்றப்பட்டனர்.
தற்போது சுருக்கத் திருத்தப்பணி முடிவடைந்து, நேற்றுமுன்தினம் (ஜன., 5) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து இடமாற்றம் செய்வதற்கான தடையை ஆணையம் விலக்கி கொண்டது. மேலும் தேர்தல் பிரிவில் பணிபுரியும் தாசில்தார், துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்வதற்கு மட்டும் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமென, தெரிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் கலெக்டர்கள் இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

DEE - 1 MONTH "RIESI" TRAINING FOR PRIMARY TEACHERS

DEE - 1 MONTH "RIESI" TRAINING FOR PRIMARY TEACHERS

பேச்சு நடத்த அமைச்சரை அழைத்த ஆசிரியர்கள் கைது

பேச்சு நடத்த அமைச்சரை அழைத்த ஆசிரியர்கள் கைது

தமிழக பள்ளிக் கல்வி துறையின், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்,தொகுப்பூதியத்தில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரி, சென்னை, சேப்பாக்கத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு, காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திடீரென, அமைச்சர் பாண்டியராஜன், நேரில் பேச்சு நடத்த வரும் வரை, ஆர்ப்பாட்டம் தொடரும் என, அவர்கள் அறிவித்தனர். அனுமதி நேரத்தை தாண்டி, ஆர்ப்பாட்டம் நடத்தியதால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமையுமா:ஓய்வூதியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமையுமா:ஓய்வூதியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்திலுள்ள 42 ஆயிரம் ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும்,' என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசின் பல்வேறு துறைகளில் 2003க்கு முன்பாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாவட்ட மற்றும் சார் நிலை கருவூலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சென்னை ஓய்வூதியர்களுக்கான அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதனால் நிலுவை தொகை உட்பட பல்வேறு சலுகைகளை உடனடியாக பெற முடிகிறது.
மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஓய்வூதியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான ஓய்வூதியம் மாவட்ட கருவூலம் மற்றும் நான்கு சார்நிலை கருவூலகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. உயிர்சான்று சரிபார்ப்பு, நிலுவை தொகை மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்காக தினமும் ஏராளமான ஓய்வூதியர்கள் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். 
இந்த அலுவலகங்களில் அரசு துறையினருக்கான சம்பளம் மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்படுவதால் பணி சுமையும் கூடுதலாக உள்ளது. ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது.இதை கருத்தில் கொண்டு மதுரையில் மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
மண்டல கருவூலத்துறை இணை இயக்குனரகமும் ஓய்வூதிய அலுவலகம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் காளிதாஸ் கூறியதாவது: மதுரை பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது அனைத்து அலுவலகங்களும் இங்கு இருந்தன. இதனால் எல்லா அரசு அலுவலர்களும் இங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்றனர்.மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போதும் கூட மதுரையிலிருந்து சென்று வந்தனர். இதனால் மதுரையில் 42 ஆயிரம் ஓய்வூதியர்கள் வசிக்கின்றனர். 
உ.பி., மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஓய்வூதிய அலுவலகங்கள் இரண்டு, மூன்று மாவட்டங்களில் உள்ளன. எனவே மதுரையிலும் ஓய்வூதிய அலுவலகம் திறக்க வேண்டும், என்றார்.

TNPSC சிறை அதிகாரி பணி தேர்வு அறிவிப்பு.

TNPSC சிறை அதிகாரி பணி தேர்வு அறிவிப்பு.

தமிழக சிறைத் துறையில், அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறைத் துறையில், மூன்று சமூக வழக்கு பணி அதிகாரிகள் பதவி காலியாக உள்ளது.
அதை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கான எழுத்துத் தேர்வு, மே, 21ல் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; பிப்., 2 வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

DEO பதவி 19ல் நேர்காணல்

DEO பதவி 19ல் நேர்காணல்

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., பதவிக்கான, 11 காலியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஆகஸ்டில் நடந்தது; 2,432 பேர் பங்கேற்றனர். மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வான, 30 பேருக்கு நேர்காணல், வரும், 19ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்.

நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி'- சந்திரபாபு நாயுடு !!

நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி'- சந்திரபாபு நாயுடு !!

ஆந்திராவில் நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி பரிசு என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'பல திறமைசாலிகள் இருந்தும், நோபல் பரிசு வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
எனவே, ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்கும், விஞ்ஞானிகளுக்கு ரூ.100 கோடி வழங்கப்படும். இளைஞர்கள் இதை சவாலாக எடுத்துக் கொண்டு அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் மூலம் நோபல் பரிசு பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்

அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன.,
25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன.
அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 

22 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!!!

22 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!!!

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும், 22 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரிவர மேற்கொள்ளாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
இவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சாமுண்டிபுரம் மற்றும் ஓடக்காடு மகாகவி துவக்கப்பள்ளி, ஈடன் கார்டன் பள்ளி, வலையங்காடு பிரேமா பள்ளி,
அனுப்பர்பாளையம் கலைமகள் பள்ளி, காந்திநகர் காருண்யா பள்ளி, சக்திதேவி பள்ளி, குமரானந்தபுரம் ஸ்ரீ கலைமகள் பள்ளி, போஸ்டல் காலனி பிருந்தாவன் பள்ளி. கணக்கம்பாளையம் ஸ்ரீ சக்தி பள்ளி, எம்.எஸ்., நகர் ஸ்டெல்லா மேரி பள்ளி, பழவஞ்சிபாளையம் விமலாபள்ளி, யூனியன் மில் ரோடு ஆதர்ஷ் பள்ளி, முத்தணம்பாளையம் கே.ஜி., பள்ளி, பழவஞ்சிபாளையம் சாம்யூ பிளே, வாவிபாளையம் அட்சயா சரஸ்வதி, பாண்டியன்நகர் மேகலை பள்ளி, போயம்பாளையம் காமாட்சியம்மன் பள்ளி, அனுப்பர்பாளையம் புதூர் நேரு பள்ளி, பெருமாநல்லூர் வாசவி பள்ளி, மகாலட்சுமிநகர் வெனீஸ்மகான் பள்ளி, 15 வேலம்பாளையம் இந்து வித்யாலாயா பள்ளி உள்ளிட்ட, 22 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளை உடனடியாக மூட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால், தங்கள் குழந்தைகளை, இப்பள்ளிகளில் சேர்ப்பதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.

BHIM-Bharat Interface for Money |ஸ்மார்ட்போன் கொண்டு பணம் அனுப்பவும் பெற...

மாணவர்களுக்கு இன்ஸ்பயர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.

பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.

பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதிய பிறகு அனைத்து விடைகளையும் அடித்துவிட்டு விடைத்தாள் கொடுக்கும் மாணவ, மாணவியர் அடுத்த 2 தேர்வுகளை எழுத முடியாது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் ெதாடங்க உள்ளது. மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகிறது.பொதுத் தேர்வை குளறுபடிகள் இல்லாமல் நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளையும் தேர்வுத்துறை வழங்கியுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும், தேர்வு மையங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சில தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கில் சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேர்வுத்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் 100 சதவீதம் காட்டினால்தான் அடுத்த ஆண்டு அதிக அளவில் அந்த பள்ளியில் சேர வருவார்கள் என்ற வணிக நோக்கில் செயல்படுகின்றன. அதற்காக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல ஆலோசனைகளை தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றன.குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புக்கு உரிய பாடத் தேர்வில் இடம்பெறும் கேள்விகள் குழப்பமாக இருந்தாலோ, மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அந்த மாணவர்கள் குறிப்பிட்ட அந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். அதனால்,மதிப்பெண் குறையும் என்று தெரிந்தால், விடைகளை அடித்துவிட்டு விடைத்தாளை கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றும், பின்னர் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம் என்றும் ஆலோசனை கூறி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுதிய பிறகு விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் பேனாவால் அடித்து விட்டு கொடுத்தால், அப்படிப்பட்ட மாணவர்கள் குறித்து விவரங்களை அறைக் கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உடனடியாகதேர்வுத் துறை இயக்குநருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்தடுத்து நடக்கும் 2 தேர்வுகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.