செவ்வாய், 29 நவம்பர், 2016
உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம்: தமிழக தேர்தல் ஆணையம்.
உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்
உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்து செயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில் பேணுதல் அவசியம்.
பள்ளிக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்கு ஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன் நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும் தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம் புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
இதற்காக பள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளை பதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்த கருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல புற மதிப்பீட்டாளர்
களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன் மூலம் புற மதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினை உருவாக்கலாம்.
அவ்வாறு மதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும் மூன்று என பள்ளிகள் தர அந்தஸ்து (கிரேடு) வழங்கப்
படுகிறது.
முதல் தரம் அந்தஸ்து என்றால் சுமார், 2-வது சாதாரணம், 3-வது தர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்த பள்ளி ஆகும்.
2016-2017 ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக கல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீரான தரத்துடன் கல்வி வழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.
அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம் புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
இதற்காக பள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளை பதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்த கருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல புற மதிப்பீட்டாளர்
களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன் மூலம் புற மதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினை உருவாக்கலாம்.
அவ்வாறு மதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும் மூன்று என பள்ளிகள் தர அந்தஸ்து (கிரேடு) வழங்கப்
படுகிறது.
முதல் தரம் அந்தஸ்து என்றால் சுமார், 2-வது சாதாரணம், 3-வது தர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்த பள்ளி ஆகும்.
2016-2017 ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக கல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீரான தரத்துடன் கல்வி வழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.
தரங்கள் மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக் காரணிகள்
1. பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின் சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.
2. ஆசிரியர்கள் கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல் அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகும்.
3. கற்போரின் வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின் வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின் முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.
4. புதிய ஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின் வருகை, செயல் இலக்குகளை வரையறுத்து பொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.
5. தொலைநோக்குச் சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை உள்ளடக்கிய பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மையாகும்.
6. உள்ளடங்கிய கற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.
7. பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளி முன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயம கற்றல் வளம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.
அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு
அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
திங்கள், 28 நவம்பர், 2016
பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ:-*(ஸ்வைப் மிஷின்,நெட் பாங்கிங்,போன் முலம் பணப் பாிவா்தனைகள்)...
*1.ஆள் கடத்தல் இருக்காது;
மணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது*
மணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது*
*2. அரிசி கடத்தல் இருக்காது*....
*3. கஞ்சா அபின் கடத்தல் இருக்காது.....*
*4. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது.......?*
*5. அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை இருக்காது....*
*6. கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது....*
*7.காசுக்காக மத மாற்றம் இருக்காது......*
*8. தினம் தினம் காசு கொடுத்து அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது!......*
*9. கந்து வட்டி இருக்காது.
*10. ரியல் எஸ்டேட் ஏமாற்று புரோக்கர்கள் இருக்காது....*
*11. அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது....*
*12. ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது....*
*13. பணத்திற்கு அரசு அதிகாரிகள் வளைய மாட்டார்கள்.....*
*14. நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று என இருக்காது....*
*15. ஒரு பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது...*
*16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது......*
*18. மீட்டர் வட்டி, கந்து வட்டி கொடுமை என தற்கொலை இருக்காது....*
*19. இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது.....*
*20. பணக்காரங்க - ஏழை வித்தியாசம் இருக்காது....*
*21. வரவு செலவை பொய்யாக கணக்கு காட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது. எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்...*
*23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....*
*23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....*
*24. அரசியல் கட்சிக்கு வாழ்க கோஷமிடும் தொண்டர் படையே இருக்காது.....*
*25. புனித அரசியலுக்கு பணதிற்காக வராமல் உண்மையான தேச அபிவிருத்திக்கு பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்.....*
*26. பொருளாதார குற்றங்கள் இருக்காது.....*
*27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது.....*
*28. செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்க மாட்டார்கள்......*
*29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது.அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படையும் இருக்காது.....*
*30. பணத்திற்காக நாட்டை ஆளும் கேவல அரசியல்வாதிகள் இனி இருக்க மாட்டார்கள்....*
* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......
* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......
*31. பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் லட்சமாக கருப்புப் பணம் வாங்க முடியாது....*
*32. கல்வி கட்டணம் குறையும்.எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்.....*
*33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞ்சினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்.....*
*34. தனியார் மருத்துவமனைகளில் தற்போது டாக்டர்கள் வாயில் வருவதுதான் பில். இனி இது மாறும்.....*
*35. இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் என இருக்காது.இனி அனைத்தும் வங்கி பரிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது......*
*36. சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் இது தேச வளர்ச்சியின் நல்ல அறிகுறி!......*
*37. பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை .மக்களின் கூட்டம் முன் வரிசையில் நிற்க அரசியல்வாதிக்கு கர்வம் தடுக்கிறது.*
*இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் *காலி*
*38. இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது....*
*39. அரசு பதவிக்கும் புரமோசனுக்கும் விலை விலை அல்ல.தகுதி மட்டுமே.....*
*40. அரசு மருத்துவமனை,அரசுப்பள்ளிகள் வஞ்சகமின்றி சிறப்பாக செயல் படும்....*
*41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேடியாக வேண்டும்....*
*42. வீட்டுக்கு வாடகை குறையும்.....*
*43. திருமண மண்டபத்தில் வாடகையாக கருப்புப் பணத்தை லட்சக் கணக்கில் வசூலிக்க முடியாது.....*
*44. இயற்கை விவசாயிக்கும் உண்மையான விலை கிடைக்கும்.....*
*45. ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது....*
*46 இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்....*
*47. அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்....*
*48. இரண்டு பில் புக் இருக்காது*.
*49. அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது.....*
50.பாக்கிஸ்தான்,சீனாவின் கூலிப்படைகள் இந்தியாவுக்கு எதிராக இருக்காது.
51. *DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம் எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும்.
52.நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்.*
53.*மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது*.....
54.*தேர்தலில் நிற்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அத்தனையும் பினாமி பெயரில் வைத்து விட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை.வீடு இல்லை. தோட்டம் இல்லை.என் பெயரில் எதுவுமே இல்லை என கப்சா விட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக் கட்டளையும் இனி காலி....*
இன்னும் நாம் அறியாத மேலும் பல பல நண்மைகள்..😀😀😀
ரொக்கப் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்: வானொலி உரையில் பிரதமர் மோடி
ரொக்கப்பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாக மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்றைய வானொலி உரையில் அவர் பேசியதாவது:
‘எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். கடந்த மாதங்களில் நாம் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும் தீபாவளியின் போது, நான் மீண்டும் ஒரு முறை படை வீரர்களோடு தீபாவளியைக் கொண்டாடி மகிழ, சீன எல்லைப் பகுதிகளுக்குச் சென்றேன். ITBP, இந்திய திபேத்திய எல்லைப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோருடன் நான் இமயத்தின் சிகரங்களில் தீபாவளியைக் கொண்டாடினேன்.
நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு
'அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
● மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும்
● திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும்
● பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும்
● நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்
CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.
CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.
CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016
CLICK HERE TO DOWNLOAD - CCE 3 rd WEEK - TAMIL
CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016
CLICK HERE TO DOWNLOAD - CCE 3 rd WEEK - TAMIL
ஞாயிறு, 27 நவம்பர், 2016
வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?
வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நாட்டில் பெரும்பாலான மக்கள் அன்றைய பொழுதை வங்கிகளிலேயே செலவழிக்கத் தொடங்கிவிட்டனர்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும்.நாட்டில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர்.செல்லாது என்று அறிவித்த நாளில் இருந்து வங்கிகள் நாளுக்கொரு அறிவிப்பும் பொழுதொரு விதிமுறைகளையும் கடைபிடிக்கச் சொல்லி ரிசர்வ் வங்கி கூறி வருகிறது.
முதல் நாள் அறிவிப்பை நாளிதழிலோ அல்லது ஊடகங்களிலோ அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மறுநாள் வங்கி செல்லும் போது வேறு ஒரு புதிய அறிவிப்பு அவர்களை வரவேற்கிறது. அந்த அறிவிப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால் வங்கி ஊழியர்களுடன் பொதுமக்கள் சண்டைபோட்டுக் கொள்கின்றனர். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் இல்லாத நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து கூட அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணம் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அன்றாடம் மாறும் ஆர்.பி.ஐ-யின் புதிய உத்தரவுகளால் திணறுகின்றனர். வங்கிகளுக்குச் செல்வதற்கு முன் சில தகவல்களையாவது தெரிந்துகொண்டு சென்றால் ஓரளவு குழப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.
வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?
1. 25.11.2016 முதல் வங்கிகளில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.
2. அடுத்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி வரை தங்களுடைய வங்கி கணக்குகளில் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்.
3. ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
4. ஒரு முறைக்கு 24 ஆயிரம் ரூபாய் எடுத்தால் அதற்கு அடுத்த வாரம் தான் உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும்
5. ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க முடியும்.
6. பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவைகளுக்குப் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 14 -ம் தேதி வரை ஏற்பார்கள். 1000 ரூபாய் தாள்களை எங்குமே செலுத்த முடியாது. வங்கிக் கணக்கில் மட்டுமே போட முடியும்
7.வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுப் பணத்தை வாரத்துக்கு 5 ஆயிரம் என்கிற நிலையில் மாற்றிக் கொள்ளலாம் . வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் போது அவர்களது விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட் தகவலுடன் பதிவு செய்யப்படுகிறது.
8. 2000 ரூபாய் தாளில் வெள்ளைப் பகுதியில் எழுதப்பட்டால் சொல்லாது என்ற தகவல் உண்மையல்ல.
9. உங்கள் கணக்கில் இருந்து ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்க மறுத்தால் அது குறித்து நீங்கள் ரிசர்வ் வங்கிக்குப் புகார் தெரிவிக்கலாம்.
10.புதிதாக வந்துள்ள 500 ரூபாய் தாளில் சில தவறுகள் உள்ளது என்றும், எனினும் அது செல்லும் என்றும் வங்கிகள் தரப்பில் கூறுகின்றனர். அதேபோன்று வாடிக்கையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான பணத்தை மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால் வங்கி ஊழியர்கள் பணத்தை ஏற்க மாட்டார்கள். இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருமானவரித்துறை விசாரணை நடத்தும்.
கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்
● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்
● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும். பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்
● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்
● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்
● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்
● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்
● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்
● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவு பணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்
● பெண்கள் பள்ளியில், 'நாப்கின்'களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்
● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.
CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.
CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016
CLICK HERE TO DOWNLOAD - CCE 3 rd WEEK - TAMIL
CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016
CLICK HERE TO DOWNLOAD - CCE 3 rd WEEK - TAMIL
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)