>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 7 நவம்பர், 2019

பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்.


Thursday, November 7, 2019


30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.

உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100= 22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24 ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100= 18100பென்ஷனாகக் கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்

முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.
 

30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
 
அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
 
பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,

இதை 6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும். (அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
   (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)

 30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
  
ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 5333×120=63996 0ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
 
நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
  
பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 17%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.
  
40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.

நன்றி
  P.செல்வமணி்.

.........................