>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 21 நவம்பர், 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்

மத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.
ரூ.10 ஆயிரம் ரொக்கம்
பிரதமர் மோடி கடந்த 8–ந் தேதி 500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்திய அரசின் குருப்–சி ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
இதன்படி சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காக ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:–
பணத்தட்டுப்பாடு
பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாக பணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள் செயல்படாததால் அதை எடுக்க முடியாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.
முன்பணம்
இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய ஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23–ந்தேதி வரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர் அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கிய பிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடு குறையும்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களில் பயிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:2016-17ம் கல்வி ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி, பல் கலைக்கழகங்களில் பயிலும்தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கான ஊக்கத் தொகை (SDAT) வழங்கப்பட உள்ளது.உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வீரர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப் பட உள்ளது.2015 ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஜூன் 30-ம் தேதி வரையிலான காலங்களில், தேசிய அளவிலான பள்ளி விளை யாட்டு குழுமம், அங்கீகரிக்கப் பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள்,இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள் மற்றும் அகில இந்திய பல் கலைக்கழகங்களுக்கு இடையே யான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற விளை யாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் இந்த ஊக்கத் தொகையை பெற விண்ணப் பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள லாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம்பதிவிறக்கமும் செய்துக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்ப படிவங்களை வரும் 30-ம் தேதிக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில், தகுந்த அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகிய வற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

DEE - 2017-18:விலையில்லா சீருடை வழங்குவதற்கான உத்தேச தேவைப்பட்டியல் கோரி உத்தரவு

NMMS-2016-2017 -எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு 28.01.2017 அன்று நடைபெறும்-தேர்வு துறை இயக்குநர் அறிவிப்பு

ஞாயிறு, 20 நவம்பர், 2016

மாநில ஓவியப் போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்; தேசிய போட்டிக்கு தகுதி

மத்திய நிலத்தடி நீர் வாரியம், மத்திய நீர் வள, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில ஓவியப் போட்டியை புதுச்சேரி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடத்தியது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு

முளையிலேயே கிள்ளவேண்டிய குழந்தைகளின் பிடிவாதம் - விகடன்


‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..
‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.

இன்று 20/11/16 உலகளாவிய குழந்தைகள் தினம்


👶 உலகளாவிய குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வறுமை, எட்ய்ஸ் போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில்

அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்

காலியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் பாலச்சந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். வணிகவியல், பொருளியல் படித்தவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி காலியிடங்களை, தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பதவி உயர்வில் கல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது 'கிராஸ் மேஜர்', 'சேம் மேஜர்' பிரச்னை.

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் டி.ஆர்.பி., தேர்வு மூலமாகவும், மீதம் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வு மூலம் நிரப்புவதில் வரலாறு, புவியியல் பாடங்களுக்கு முதுநிலை ஆசிரியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை இருந்தது.இதையடுத்து 2000 அக்., 18 ல் இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோர் (கிராஸ் மேஜர்) 3 பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோர் (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது.தற்போது அந்த பாடங்களில் 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் பழைய அரசாணைப்படியே
முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது. இதனால் 'சேம் மேஜர்' முடித்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து பாதிக்கப்பட்டோர் போராடி வந்தனர். இதையடுத்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் 1:3 என்ற விகிச்சார முறையை மாற்றியமைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை நவ., 30 க்குள் அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டு கொண்டுள்ளது.
தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் பலர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்றனர். 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது, என்றார்.

EMIS' விபரங்கள் மாயம் : ஆசிரியர்கள் கோபம்

தமிழகத்தில், அனைத்து மாணவர்களுக்கும், தனித்தனி அடையாள எண் கொடுக்கப்பட்டு, அதையே பொதுத் தேர்வு சான்றிதழ்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, மத்திய

கற்றலில் குறைபாடு:டிச.2 -இல் தேசிய மாநாடு.

கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) குறித்த தேசிய மாநாடு சென்னையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 
 மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் சென்னை ஐஐடியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கற்றலில் குறைபாட்டை சிறு வயதிலேயே

ஆசிரியர் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா? – நீதிமன்றம் காட்டம்!

அரசு பள்ளிகளில் போதிய கழிவறை வசதி ஏற்படுத்தக் கோரிய வழக்கில், ஆசிரியர்களின் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், கல்விச் செயலரின் அறிக்கையையும் நிராகரித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2014ஆம் ஆண்டு தாக்கல்செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய கழிவறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் சரிவர நடக்கவில்லை. இன்னும், கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே, பள்ளிகளில் போதிய கழிப்பறை, தண்ணீர் வசதிகளை செய்து தர உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது பள்ளி கல்வித்துறை இணைச்செயலர் நரேஷ், செயலர் சபிதாவின் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள்,செயலரின் அறிக்கையில் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. இந்த அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்தனர். அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணம் போதுமானதாக இல்லை. வணிக பயன்பாட்டு மின்சாரம் யூனிட் ரூ.5, பள்ளிக்கான கட்டணம் ரூ.5.75 என வசூலிக்கப்படுகிறது. வணிக பயன்பாட்டை விட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள். இதை ஏன் இன்னும் சரி செய்யவில்லை? இதனால், ஒதுக்கீடு செய்யும் நிதி போதுமானதாக இல்லாததால், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து செலுத்தப்படுகிறது. வேண்டுமானால் ஆசிரியர்களின் சம்பளத்தையும் மாணவர்களிடமே வசூலித்து கட்டலாமா? நீதிமன்றத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் பயமில்லாமல் தைரியமாக தகவல்களை தெரிவிக்கலாம்.செயலரின் அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை. அதை படிக்கும்போது சோர்வும், கண்ணீரும்தான் வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளாகியும் திறந்தவெளியில் கழிவறையை பயன்படுத்தும் நிலை உள்ளது’’ என்று நீதிபதிகள்
இதனைத் தொடர்ந்து இந்த மனுவின் விசாரணையை வரும் நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சனி, 19 நவம்பர், 2016

2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியீடு

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி 2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக post-truth என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது.

          கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியிட்டு வருகிறது.

தமிழ்நாடு பல்கலையில் டிச., 2ல் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல் நடக்கிறது. இதில், 11 ஆயிரத்து 181 பேர் பட்டம் பெறுகின்றனர்.
இது குறித்து, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2 காலை, 11:30 மணிக்கு, சென்னை பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. இதில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் பங்கேற்கின்றனர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலையின் துணைவேந்தர் பாஸ்கரன் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வழங்குகிறார்.
விழாவில், 3,522 முதுநிலை, 7,659 இளநிலை மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். 2,725 டிப்ளமோ மற்றும் 154 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 14 ஆயிரத்து 60 மாணவர்கள் சான்றிதழ் பெறுகின்றனர்.பல்கலை அளவில் முதலிடம் பெற்று, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடமும் பெற்று, சான்றிதழ் பெறுகின்றனர். கனடாவின் காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழ், பரிசுத்தொகை, 25 ஆயிரம் ரூபாய், இளநிலை மாணவி முத்துவுக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சித்தா 2ம் கட்ட கலந்தாய்வு: 23ல் துவக்கம்

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 23ல் துவங்கி, 25 வரை நடைபெற உள்ளது.
முதல் நாளில், முதற்கட்ட கலந்தாய்வில் சேர்ந்த மாணவர்கள், இடமாறிக் கொள்ளவும், அடுத்தடுத்த நாட்களில், புதிய சேர்க்கைக்கான கலந்தாய்வும் நடக்கும். மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.